இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Monday, July 21, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 21

விடைகள்

1.கணவன் இறந்துவிட்டால் மனைவி எத்தனை நாள் இத்தா காலம் என அல்லாஹ் கூறுகின்றான்.

 2:234உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்; (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும்அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்பதங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லைஅல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

2.காஃபிர்களுக்கு உதாரணமாக அல்லாஹ்  யாரை சொல்கின்றான் ?

66:10நிராகரிப்பவர்களுக்குநூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில்இருநல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்எனவேஅவ்விருவரும் (தம் மனைவியரானஅவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்தடுக்க இயலவில்லைஇன்னும், “நீங்களிருவரும் (நரகநெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்கூறப்பட்டது.


3.எந்த நேரத்து தொழுகை முனாஃபிக்களுக்கு கஷ்டமாக இருக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

3)சுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகள் 

ரமலான் பிறை 21  சரியான பதில் எழுதியவர்  சகோதரர் அஜீம் அகமது மட்டுமே.அவரே பரிசுக்குரியவர் ஆவார்.

(பிறை 21 பரிசு வழங்குபவர் முகம்மது தாஹா அவர்கள்)


ரமலான் பரிசுப்போட்டி பிறை 22
கேள்விகள்
1.மலையை எதற்காக படைத்ததாக அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

2.எந்த ஐந்து விஷயங்களை அல்லாஹ்வை தவிர வேறுயாரும் அறிய முடியாது என அல்லாஹ் கூறுகின்றான்.

3.ரமலானில் செய்யப்படும் உம்ரா எதற்கு நிகரானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(பிறை 22 பரிசு வழங்குபவர் முகம்மது தாஹா அவர்கள்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...