அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Friday, June 27, 2014


மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவரும்,சிறந்த சேவகருமான சகோதரர் பெளசூல் ரஹ்மான் அவர்களின் அன்பு சகோதரர்களின் புதுமனை புகு நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.

பெரியவர் அபுபைதா அவர்கள் குடும்பத்தினருக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

Thursday, June 26, 2014

அன்பான சகோதரர்களே ! நம் அனைவரின் மீது ஏக நாயன் அல்லாஹ்வின் அன்பும்,கருணையும் என்றும் நிலைத்து நிலவட்டுமா !

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்".

நம்மை நோக்கி சங்கைமிகு ரமலான் வந்து இதோ வந்துவிட்டது.சென்ற ரமலானில் நம்முடன் இருந்த நமது அன்புக்குரியவர்கள் இடம் மாறி சென்று இருக்கின்றார்கள்.இறந்தும் இருக்கின்றார்கள்.ஆனால் நமது செயல்பாட்டில் மாற்றமில்லை.காரணம் நாம் நமது மார்க்கத்தை முழுமையாக இன்னும் கடைபிடிக்கவில்லை...இன்னும் எத்தனை ஆண்டுகள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகின்றோம்.ஓர் நாள் கடுமையான வேதனைகள் நிறைந்த கப்ருவை காண இருக்கின்றோம்...நிரந்தரமானவாழ்க்கையினை உடைய மறுமையை நேசிக்க இருக்கின்றோம்.அர்ஷில் அல்லாஹ்வை காண இருக்கின்றோம் (இன்ஷா அல்லாஹ்) இவை எல்லாம் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நாம் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காட்டிதந்த போதனைகளை பின்பற்ற மறந்துவிட்டோம்.

இந்த தவறு இந்த ஷாபானுடன் போகட்டும்.வருகின்ற ரமலான் நம்மை உண்மையான முஸ்லிமாக பக்குவப்படுத்த வேண்டும் இதற்காக அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.நிச்சயமாக நமது நல்ல முயற்சி ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நம்முடன் துணைநிற்பான்.புறம் பேசுவதை புறந்தள்ளிவிடுவோம்.அவதூறுகளை அறவே இல்லாமல் ஆக்குவோம்.வீண் பேச்சுக்களை தவீர்ப்போம்.வம்பு சண்டைகளை விரட்டுவோம்.பொய் பேசுவதை முற்றிலுமாக ஒழிப்போம்.இறையச்சம் உடைய இறை விசுவாசியாக மாறுவோம்..இறையச்சமுடைய நல்ல அடியானாக மரணிப்போம்.இன்ஷா அல்லாஹ்..

(இதுநாள் வரை எங்களின் பதிவுகளில் யாரையும் மனம் வேதனையடையும்படி பேசியதாக,எழுதியதாக கருதி இருந்தால் அன்பு கூர்ந்த சகோதரர்களை மனப்பூர்வமாக எங்களின் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.

Monday, June 23, 2014


மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் அப்துல் குத்தூஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹும் H.R.ஹலீல் ரஹ்மான் (HR MAN),மர்ஹும் ஆரிபு (அண்ணா இல்லம்),சாகுல் ஹமீது,அல்லாப்பிச்சை ஆகியோரின் மாமியாரும்,HRHஅப்துல் ஹமீது,HRH அக்பர் அலி ஆகியோரின் பாட்டியாருமான (அம்மா வழி) முகம்மது பாத்திமா அவர்கள் இன்று 23/06/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Thursday, June 19, 2014

மதுக்கூர் சூரியத்தோட்டத்தில் (கமாலியா தெரு) கடந்த ஞாயிற்றுக்கிழமை 15/06/2014 அன்று எளிமையாக நடைபெற்ற திறப்பு விழாவில்சபுரா அம்மாள் பெண்கள் மதஸரா திறந்து வைப்பட்டது..இம்மதரஸா நாகூரார் வீட்டு சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் தனது தாயார் பெயரில் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 18, 2014

மதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிங்கள இனவெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. வன்முறையாளர்களை கண்டித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக் கோரியும் மதுக்கூர் நகர தமுமுக சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 18/06/2014 புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஃபவாஸ் அவர்கள் தலைமை ஏற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாச்சிக்குளம் தாஜுதீன்,மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மாவட்ட துணைச்செயலாளர் E.S.M. ராசிக்,மதுக்கூர் முன்னாள் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் சகோதரர் பழனி M.I.பாரூக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.முடிவில் அமீரக யு.ஏ.இ.தமுமுக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் ராவுத்தர்ஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


Saturday, June 14, 2014

 மதுக்கூரில் சபுரா அம்மாள் பெண்கள் தராவீஹ் பள்ளி & மதரஸா

மதுக்கூர் சூரியத்தோட்டம் (லக்கி ஹார்டுவேர்ஸ் பின்புறம்) நாகூரார் வீட்டு சகோதரர் அப்துல் ஜப்பார் (மலேசியா) அவர்கள் தனது தாயார் சபுரா அம்மாள் அவர்களின் பெயரில் புதிய பெண்கள் தராவீஹ் பள்ளி மற்றும் ஓர் ஆலிமாவை நியமனம் செய்து அல் குர் ஆன் கற்றுக்கொடுக்கும் மதரஸா திறப்பு நிகழ்ச்சி நாளை தினம் நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்..

சகோதரரின் இந்த முயற்சிக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியினை வழங்க துவா செய்கின்றோம்.
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் முகம்மதியர் தெரு ஜமால் மளிகை மர்ஹும் செய்யது உசேன் அவர்களின் மனைவியும்,மர்ஹும் சதக்கத்துல்லா,ஜமால் மளிகை உரிமையாளர் ஜமால் முகம்மது ஆகியோரின் தாயாருமான் பாத்திமா பீவி அவர்கள் இன்று 14/06/2014 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...