இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, April 26, 2020

பேரன்பு தம்பி கீழை ஜமீல் நம்மை விட்டுப் பிரிந்தார் ( இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் )
கீழக்கரை ஜமீல் முஹம்மது. 1980 களின் தொடக்கத்தில் சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள எங்கள் மாணவர் இயக்க தலைமையகத்தில் ரமலான் இரவுகளில் தொடர்ந்து நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தின் விளைவாக தங்களை இணைத்துக் கொண்ட கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர். எஸ்எம் பாக்கர், எஸஎம் புகாரி, முஸம்மில் முதலியோர்களும் அதில் அடங்கும்.
துணிச்சலாகக் கருத்து சொல்வதில் அவர் தனி ரகம். இடைவிடாத சமூகப் பணி. தமுமுகவின் தொடக்கம் முதல் சிறப்பான பணியாற்றியவர் பின்னர் அவர் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்கொண்டாலும் அதிலிருந்து விலகி மீண்டும் நம்முடன் இணக்கமாக பணியாற்றியவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் போதெல்லாம் பாச மழை பொழிந்தவர்.
இன்று அதிகாலை நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற அதிர்ச்சி செய்தியைச் சகோதரர் ஜீல்பிகார் தெரிவித்த போது மனம் பொறுக்கவில்லை.
ஜமீலுடன் பழகிய நினைவுகள் எண்ண அலைகளில் என்றும் மறையாது.
எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனம் வழங்கவும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழகிய பொறுமை அளிக்கவும் வல்லவன் இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
தலைவர் தமுமுக

Saturday, April 25, 2020


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
*மதுக்கூர் தமுமுக சார்பாக இரண்டாம் ஆண்டில் நோன்பு வைக்கக்கூடிய ஏழைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டது*.
(நோன்பு வைக்க இயலாத சகோதர,சகோதரிகள் அதற்கு பகரமாக தந்த பொருளாதார உதவிகளை கொண்டு கீழ்கண்ட பொருள்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உணவு பொருள்களின் மதிப்பு ரூ 3000 /=
*வழங்கப்பட்ட உணவு பொருள்களின் விபரம்* :
அரிசி 25 கிலோ
பூண்டு 250
து.பருப்பு 1 கிலோ
உளுந்து 1 கிலோ
க.பருப்பு 100
ப.பருப்பு 250
சமையல் ஆயில் 2லிட்டர்
சீனி 1 கிலோ
சேமியா 2 பாக்கெட்
டீ தூள் 100
வருகடலை 250
சின்ன பல்லாரி 1 கிலோ
மல்லி 1 கிலோ
மிளகாய் அரை கிலோ
மஞ்சள் 100
கடுகு 100
சோம்பு 200
மிளகு 50
சிரகம் 200
புளி அரை கிலோ
ஜவ்வரசி 250
நெய் 50
டால்டா 200
திரட்சை முந்திரி 20 ரூபாய்
கிராம்பு பட்டை 10 ரூபாய்
பேரிச்சை பழம் அரை கிலோ
கடல்பாசி 2 பாக்கெட்
மைதா 1 கிலோ
பல்லாரி 2 கிலோ
உப்பு 1 பாக்கெட்
அப்பளம்
தேங்காய் 10
மற்றும் நோன்பு அன்று காய்கறிகள் உட்பட்
இவை அனைத்தும் அல்லாஹ்வின் கிருபையாலும் உங்களின் மேலான ஆதரவிலும் நோன்பு வைக்க கூடிய ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது
இப்பணிக்காக உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.அல்லாஹ் அருள்புரிய பிரார்த்திக்கின்றோம்.
இதுவரை 52 பங்குகள் வந்துள்ளது.பயனடைந்தவர்களின் விபரம் இரகசியம் காக்கப்படும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ( தமுமுக)
மதுக்கூர்.






படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...