அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Thursday, December 27, 2012


மனிதநேய மக்கள் கட்சி தமிழகமெங்கும் மது மற்றும் மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.( இது மதுவுக்கு எதிரான மமக வின் இரண்டாம் கட்ட போராட்டம்)

இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 30 தேதி தழிழகத்திலுள்ள மது ஆலைகள்,குடோன்கள்,வினியோக மையங்களை முற்றுகைவிடும் போராட்டம் நடைபெற உள்ளது.(இன்ஷா அல்லாஹ்)

மதுக்கூரில் டிசம்பர் 30 தேதி அன்று தலைமை கழக பேச்சாளர் மெளலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் தலைமையில் முக்கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுபான கடைகள் முற்றுகைப்போராட்டம் நடைபெறும்.

மதுக்கூர் செட்டித்தெரு மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும்,மர்ஹும் சு.மு.அ.அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனுமான கறிக்கடை லியாக்கத்தலி அவர்கள் இன்று 27/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, December 26, 2012


மதுக்கூர் பேரூராட்சி 9வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியின் கவுன்சிலர் வார்டின் சுகாதாரம் கருதி வார்டின் முக்கிய பகுதிகளில்செய்துள்ள விளம்பரம்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

மதுக்கூரில் மதுவுக்கு எதிரான பரப்புரை யுத்தம்.


மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் சிறப்பான முறையில் நடந்தது.மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்சா தலைமையிலும்,நகர நிர்வாகிகள் சகோதரர் முஜிபுர் ரஹ்மான்.நிசார் அகமது,ராசிக் அகமது ஆகியோர் முன்னிலையிலும் மதுக்கூர் வடக்கு பெரமையா கோவிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மதுவுக்கு எதிரான பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

முன்னதாக மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கூர் நகர கவுன்சிலர் சகோதரர் கபார் அவர்கள் மதுவின் தீமைகளைப்பற்றி எடுத்துரைத்தார்.மதுக்கூர் ஆற்றாங்கரையில் நகர நிர்வாகி நிசார் அகமது அவர்களும்,சகோதரர் பவாஸ்கான் அவர்களும்  மதுவின் தீமைகளை விளக்கி பேசினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிராக வெளியிட்டு உள்ள குறுந்தகடு பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.மதுக்கூரில் நடைபெற்ற பரப்புரை யுத்த களத்தில் பேரூந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி ஐயா எனது மருமகன் தினமும் குடித்துவிட்டு வந்து எனது மகளை மிகவும் துன்புறுத்துகின்றார்.நீங்கள் எடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என மனதார வாழ்த்தினார்கள்.

இறுதியாக பேருந்து நிலையத்தில் சகோதரர் கபார் அவர்களின் உரையுடன் மதுவுக்கு எதிரான பிரச்சாரம் இனிதே நிறைவுபெற்றது.எல்லா புகழும் அல்லாஹ்கே.

சுமார் 1500 பிரசுரங்களும் நேற்று இரண்டு மணிநேரத்தில் வினியோகம் செய்யப்பட்டது.மேலும் நாளை மதுக்கூர் முக்கூட்டுச்சாலை,சிவக்கொல்லை பகுதிகளிலும் தொடர்ந்து கிராமபுறங்களிலும் பிரச்சாரம் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்)
Saturday, December 22, 2012


மதுக்கூர் சூரியத்தோட்டம் நிஜாம் சர்பத் அப்துல் சலாம் அவர்களின் மச்சான் டைலர் முகம்மது காசிம் அவர்கள் இன்று  (22/12/2012) வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்  என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மனிதநேயமக்கள் கட்சி இரண்டாம் கட்ட போராட்டக்களத்தை வகுத்து சிறப்பாக செயல்பட்டுவருகினறது.கடந்த 2010 மார்ச் மாதம் 7 ஆம் தேதி மதுவுக்கு எதிரான் போராட்டமான மதுக்கடை மறியலை அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடத்திமுடித்தது.

மீண்டும் கூடுதல் வீரியத்துடன் டிசம்பர் 20 முதல் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிரான பரப்புரை யுத்தம் நடத்திவருகின்றது.தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றது.எல்லா புகழும் அல்லாஹ்கே.                                 .மதுக்கூரில் மதுக்கடை யுத்த போராட்டம் சுவர் விளம்பரம் 

Friday, December 21, 2012


மதுக்கூர் முகம்மதியர்தெரு மர்ஹும் மொந்தப்பா வீட்டு முகம்மது யாக்கூப் அவர்களின் மனைவி சுபைதா பீவி அவர்கள் இன்று 21/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, December 13, 201220 ஆண்டுகளாய் அடங்காத நெருப்பு... 18 ஆண்டுகளாய் பற்றி எரியும் போராட்டம்....


1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. பட்டப்பகலில், அதிகார வர்க்கம் உறங்க, கரசேவை பயங்கரவாதிகள் கடப்பாரைகளால் நிகழ்த்திய ஜனநாயக படுகொலை இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்தது.

தொடர்ந்து காவி பயங்கரவாதிகள் நாடெங்கிலும் முஸ்லிம்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களால் இந்தியாவே சிவந்தது.
இந்த டிசம்பர் 6 கருப்பு நாளை கடந்த 20 வருடங்களாக சமூக நீதி ஆர்வலர்களும், மனித உரிமை போராளிகளும், சிறுபான்மை மக்களும், கருப்பு நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.

1995 முதல் தமுமுக தொடர்ந்து 18 ஆண்டுகளாய் நீதி கேட்டு போராடி வருகிறது.
1995 முதல் 1998 வரை அடக்கு முறைகளை எதிர்கொண்டு, தடைகளை உடைத்து, சிறைகளை எதிர்கொண்டு, போர் பரணி பாடியது. இவர்களை அடக்க முடியாது என்பதை உணர்ந்த அரசுகள் அதன் பிறகு 1999 முதல் நெருக்கடிகளை தளர்த்தி போராட்டங்களை அனுமதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமுமுக இவ்வருடம் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்தது.
ஜமாத் முத்தவல்லிகள், உலமாக்கள், மதரசா ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல் முற்போக்கு இயக்கங்கள், சமூக நீதி அமைப்புகள் , ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.
இறைவனின் பெரும் கிருபையினால் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
மாவட்ட தலைநகரங்கள், பெருநகரங்களில் நடத்தப்பட்ட இந்த தர்ணா போராட்டத்திற்கு அலை அலையாய் மக்கள் குவிந்து விட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, பள்ளிவாசல் தோறும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, தமிழன் தொலைக்காட்சியிலும், மக்கள் உரிமையிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டு பெரும் எழுச்சி கட்டமைக்கப்பது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் வைக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பர தட்டிகள் பாபர் மசூதிக்கான நியாயங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறின.
நாகை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காவல் துறையின் இடையூறுகளை மீறி விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, VHP, உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த வன்முறை சக்திகள் போஸ்டர்களை கிழித்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய போதும் முஸ்லிம்கள் அமைதி காத்தனர்.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் என 54 மையங்களில் தர்ணா போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இவ்வருடம் கை குழந்தைகளுடன், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு பிறந்த புதிய தலைமுறை மாணவர்களும், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்றது அனைவருக்கும் புதிய நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.
பல இடங்களில் பள்ளிவாசல் உலமாக்களும், ஜமாத் நிர்வாகிகளும் கண்டன உரை ஆற்றி உள்ளனர். இது பாபர் மசூதி போராட்டம் புதிய பாதையில் நகர தொடங்கி இருப்பதை வெளிக்காட்டுகிறது.
சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களில் திரண்ட பல்லாயிரக்கனக்காநோரும், பெருநகரங்களில் 1500, 1200, 1000, 800 என மக்கள் பங்கேற்ற பேரார்வமும் தமுமுகவின் 18 ஆண்டு கால போராட்டம் உயிர் துடிப்போடு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
பாபர் மசூதி விவகாரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது தமுமுக (அல்ஹம்துலில்லாஹ்)
இதில் இவ்வருடம் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டது நீதிக்கான போராட்டத்தில் ஒரு புதிய நல்லிணக்கத்தையும் உருவாக்கியிருக்கிறது.

ஆம். எமது நீண்ட நெடிய உரிமை போராட்டம் இறைவன் அருளால் அனைத்து மக்களையும் உள்ளடக்கி ஒருநாள் வெற்றி பெரும். இது இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு, அமைதி, நல்லிணக்கம், வரலாறு ஆகியவற்றை காப்பாற்றுவதற்கான அறப்போராட்டம் என்பதை பிரகடனப்படுதுகிறோம்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்தில் மாநில மாணவர்  அணி பொறுப்பாளர் டாக்டர் சர்வத் கான்,மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் சகோதரர் கலந்தர் மற்றும் மதுக்கூர்,அதிராம்பட்டிணம்,மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,தஞ்சாவூர்,வல்லம்,மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள்,ஜமாத்தார்கள்,பொதுமக்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.

Friday, December 7, 2012


டெல்டா மாவட்ட விவசாயிகள் பந்த்: மனிதநேய மக்கள் கட்சியினர் கைது


சம்பா பயிருக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த டெல்டா மாவட்ட பந்திற்க்கு மனிதநேயமக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது.இன்று 07/12/2012 மதுக்கூர் முக்கூட்டுச்சாலையிலிருந்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோதரர் ராவுத்தர்ஷா ஆகியோர் முன்னிலையில் பேருந்து நிலையம் நோக்கி சென்று மறியலில் ஈடுபட்டனர்.கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர்கள்.மறியல் செய்த அனைவரும் கைதுசெய்யப்பட்ட்டார்கள்.

மறியலில் ஈடுபட்ட மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,சிபிஎம் ஒன்றிய செயலாளர் காசிநாதன்,சிபிஐ மாநில குழு உறுப்பினர் வேதாசலம்,நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் பிரபாகர்,தமுமுக,மமக நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான்.மமக நகர செயலாளர் முகம்மது ராசிக்,தமுமுக நகர செயலாளர் நிசார் அகமது,முன்னாள் தலைவர் பெளசூல் ரஹ்மான்,பேரூராட்சி கவுன்சிலர் கபார்,மற்றும் ஜபருல்லா,ராசிக்,ரியாஸ்,ரமீஸ்,நஸாருதீன்,சாகுல்ஹமீது,பவாஸ்,மற்றும் தமுமுக,மமக ,சிபிஎம்,சிபிஐ,நாம்தமிழர் கட்சினர் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சிவக்கொல்லை எகேஎஸ் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்கள்.கைது செய்யப்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் ஜும் ஆ தொழுகையினை திருமண மண்டபத்தில் நிறைவேற்றினார்கள்.ஜும் ஆ உரையினை சகோதரர் ராவுத்தர்ஷா நிகழ்த்தினார்,கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டர்கள்.

Tuesday, December 4, 2012


மதுக்கூர் இடையகாடு,பெரியார் நகர் காசிராவுத்தர் வீட்டு P.S.K.M.அல்லாபிச்சை,P.S.K.M.அப்துல்ரஜாக்,மர்ஹும் P.S.K.M.அப்துல் ஹமீது ஆகியோரின் தம்பியும்,B.நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாரும்,பாப்பநாட்டார் வீட்டு கமாலுதீன் அவர்களின் மாமனாருமாகிய பகுருதீன் அவர்கள் இன்று 03/12/2012 வஃபாத்தாகிவிட்டர்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Sunday, December 2, 2012


மதுக்கூர் கொல்லைத்தெரு மர்ஹும் மு.ரா.முகம்மது காசிம் ராவுத்தர் அவர்களின் மகனும்,மு.ரா.அப்துல்வஹாப்,மு.ரா.பகுருதீன் ஆகியோரின் சகோதரரும்.மீன்கடை ஜாகீர் உசேன் அவர்களின் மாமனாருமான மு.ரா.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 02/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம் 


நாகூரர் விட்டு ஜமால் மைதீன் அவர்களின் மனைவியும்,செய்யது இபுராகீம்,அன்வர்தீன்.அசாரூதின் ஆகியோரின் தாயாருமான மெத்த வீட்டு பென்னரசி என்கின்ற ரெய்கானபீவி அவர்கள் இன்று 02/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Saturday, December 1, 2012


மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் கோத்தாஜ் வீட்டு N.S.N.முகம்மது எகியா,N.S.N.கலிபுல்லா,N.S.N.ஜெகபர் அலி ஆகியோரின் தகப்பனார் N.S.நைனா முகம்மது அவர்கள் இன்று 30/11/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...