அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Wednesday, May 28, 2014


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

மரியாதைக்குரிய சகோதர,சகோதரிகளே தங்களின் மீது அல்லாஹ்வின் அன்பும்,அருளும் நிலவட்டுமாக !
கடந்த மே 25 அன்று மதுக்கூர் மாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவைச்சார்பாக நடத்தப்பட்ட ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் வெற்றி பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மாநாட்டில் நாம் எதிர்பார்த்த அளவு ஆண்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும்,நாம் எதிர்பார்க்காத அளவு தாய்மார்கள் கலந்து கொண்டது.அதுவும் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை ஒரு நாள் முழுவதுமாக மாநாட்டு நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தது மாநாட்டிற்கு அல்லாஹ் தந்த ஓர் அருட்கொடை என வர்ணித்தால் அது மிகையன்று.
மார்க்கத்தின் பால் தங்களுக்கு இருந்த ஈடுபட்டை நமதூர் தாய்மார்கள் மாநாட்டின் இறுதி வரை கலந்து கொண்டு சிறப்பித்ததில் நிருபணம் செய்துள்ளார்கள்.தாய்மார்களுக்கும் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள துண்டு கோலாக இருந்த அத்தனை நபர்களுக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றி.

தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் கீழ் அனைவரும் மிகவும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.குறிப்பாக இலங்கை மெளலவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களின் உரை எதார்த்தமாகவும் ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சியாகவும் அமைத்தது அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருந்தது.சகோதரர் கோவை ஜாகீர் அவர்களின் உரையில் அதிகமான சகோதரிகள் கண்கலங்கியதை நம்மால் உணர முடிந்தது.
இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்த எங்கள் இளம் தோழர்களின் பணி மகத்தானது.அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்.

இம்மாநாட்டிற்காக பொருளாதார உதவிகள் செய்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களின் இனிய நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.விளம்பர உதவிகள் புரிந்த வியாபார சொந்தங்களுக்கும்,நாம் வீடு தேடி செல்லும்போதெல்லாம் இல்லை என சொல்லாமல் அள்ளிக்கொடுக்கும் அன்பான தாய்மார்களுக்கும்,கடைகளில் போய் கையோந்து சமயம் எல்லாம் கைநிறைய அள்ளிக்கொடுக்கும் வணிக பெருமக்களுக்கும்,பல வகைகளில் ஒத்துழைப்பு நல்கிய அன்பு சகோதர,சகோதரிகளுக்கும்,மாநாடுக்கு இடம் கொடுத்து உதவிய ஈகை குணம் கொண்ட சகோதரர்களுக்கும் எங்களின் இனிய நன்றியினை நெஞ்சம் நிறைவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல தாய்மார்களின்  அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமதூரில் நடத்தப்படவேண்டும் என்ற தங்களின் கருத்தை ஆணித்தரமாக நமக்கு பதிவு செய்து இருந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

நடைபெற்ற மாநாடு என்பது இது வரை மதுக்கூரில் வரலாற்றில் இதுபோன்ற ஓர் நிகழ்ச்சி நடந்ததில்லை இது போன்று உள்ளூர் பெண்களும் சற்றும் கலையாமல் காலை முதல் இரவு வரை கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும்.நாம் மிகைப்படுத்தி எழதவில்லை கலந்து கொண்ட தங்கள் குடும்பத்தின் சகோதரிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.அத்தனை நிகழ்ச்சிகளையும் அல்லாஹ் அருமையாக்கி வைத்தான்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

அன்புடன்
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை (IPP)
மதுக்கூர்

Monday, May 26, 2014


வாருங்கள் நன்மையை நாடி...

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக மே 25 ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
முதல் அமர்வு
மெளலவி அய்யுபுல் அன்சாரி சிராஜி அவர்களின் இறைவசனத்தோடு மாநாடு துவங்கியது.மெளலவி அன்சார் ஃஃபிர்தவ்ஸி அவர்கள் மறுமை வெற்றிக்கு வழிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மதரஸா மாணவர்களின் அல் புரூஜ் நாடகம் நடைபெற்றது

இரண்டாவது அமர்வு
மதியம் லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்கு பின்னர் 2:30 மணிக்கு தென்காசி சகோதரர் ஃபஸ்லுதீன் அவர்கள் நிகழ்த்திய மந்திரமா ? தந்திரமா ? நிகழ்ச்சி நடைபெற்றது

தொடர்ந்து ரமலானே வருக என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா ஷல் ஷபில் உரைநிகழ்த்தினர்.

முன்றாவது அமர்வு
அஸர் தொழுகைக்கு பின்னர் சரியாக 4:15 மணிக்கு தொடங்கியது மெளலவி முகம்மது ரபீக் ஃபிர்தவ்ஸி அவர்கள் குர் ஆன் கூறும் குடும்ப வாழ்க்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்கள்.அவரை தொடர்ந்து சகோதரர் கோவை ஜாகீர் உசேன் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் மரண பயத்தை ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக உரைநிகழ்த்தினர்.
இலங்கையை சார்ந்த மெளலவி அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் தாய்மார்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பான " பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்,அதன் தீர்வுகளும் என்ற தலைப்பில் இலங்கைத்தமிழில் மிகவும் சிறப்பான உரையினை நிகழ்த்தினர். இறுதியாக மெளலவி ஜெ.எஸ்.ரிஃபாய் அவர்கள் மாநாட்டின் தலைப்பான வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி,இரத்த தானம் முகாம்,இரத்தம் கண்டறியும் முகாம்,மாற்று மத சகோதரர்களுக்கான தாவா முகாம் நடைபெற்றது.இம்மாநாட்டில் 13 யூனிட் இரத்த தானம் பெறப்பட்டது.
உள்ளூர் தாய்மார்கள் மட்டும் சுமார் ஆயிரத்திற்கு அதிகனோர் கலந்துகொண்டார்கள்.காலை முதல் மாலை வரை கலைந்து செல்லாமல் மாநாட்டின் நிகழ்ந்தப்பட்ட உரைகள கவனமுடன் கேட்டார்கள்.இம்மாநாட்டை அல்லாஹ் வெற்றி மாநாடாக மாற்றி வைத்தான் என்றால் அது மிகையல்ல: கோடை காலம் என்பதால் மாநாட்டு பந்தல் முழுவதும் சுமார் 50 மின்விசிறிகள் பொருந்தப்பட்டு இருந்தது.

எல்லா புகழும் அல்லாஹ்கே

Saturday, May 24, 2014

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் பட்டாணியர் தெரு மர்ஹும் M.A.அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,மைதீன் பிச்சை,செல்லப்பா என்கின்ற ஜாகீர் உசேன்,ஜெகபர் சாதிக்,சேத்தப்பா என்கின்ற தஜ்மல் உசேன்,அப்துல் ரஹீம் ஆகியோரின் தாயாருமான நூர்ஜஹான் அம்மாள் அவர்கள் இன்று 24/05/2014 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
.

Monday, May 19, 2014

மரியாதைக்குரிய ஜமாத் பெருமக்களே
சமுதாயத்தின் மானம் காக்கும் தாய்மார்களே
வீரத்தின் விளைநிலங்களான இளைஞர் நண்பர்களே
புரட்சிமிகுந்த மாணவ தோழர்களே

வாருங்கள் நன்மையை நாடி....

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில்

இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை(IPP) சார்பாக மே 25 ஆம் தேதி (வருகின்ற ஞாயிற்றுக்கிழமை)

ஒருநாள் இஸ்லாமிய மாநாடு

அழைக்கின்றது
இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை(IPP)
மதுக்கூர்

Sunday, May 4, 2014

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் முகம்மதியர் தெரு A.M.பாரூக் அவர்களின் தம்பி பாய்கடை மற்றும் சுமங்கலி கவரிங் உரிமையாளர் A.M.சதக்கத்துல்லா அவர்கள் இன்று 04/05/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
.

Friday, May 2, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் பள்ளிவாசல் தெரு தங்கத்தாய் காலணி மர்ஹும் அப்துல் ரகீம் அவர்களின் மனைவியும்,சேக்பரீது அவர்களின் தாயாருமான அஜீஸ் அம்மாள் அவர்கள் இன்று 02/05/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

(அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...