அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, August 31, 2013

நிக்காஹ் திருமண வாழ்த்து


மணமக்கள்


J.மதார்கான்                                                                       S.ஷிபானா
(த/பெ P.M.ஜபருல்லா )                                                 (த/பெ H.சாகுல் ஹமீது)
 

J.ராவுத்தர்ஷா                                                                    M.ரிபாயா பீவி
(த/பெ
A.M.ஜபருல்லா )                                        (த/பெ மர்ஹும் M.முகம்மது ரபீக்)
 

K.பைசல் அகமது                                                          A.பர்ஹானா பர்வீன்
(த/பெ A.K.M.காதர் முகைதீன்)                            
த/பெ.M.K.அப்துல் கறீம்)

                                                             மணநாள்

ஷவ்வால் மாதம் பிறை 24 (01.09.2013) ஞாயிற்றுக்கிழமை)

                                                           மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    

Friday, August 30, 2013

"மாற்றம் தேவை தான் "மதுக்கூருக்கு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து உள்ள ஊர்களில் ஒன்று மதுக்கூர்.
மதுக்கூரில் செயல்படும் பழமைவாய்ந்த  முஹல்லாகள் உள்ளது.கீழவீதி,மேலவீதி என நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்டு அவைகள் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் என சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.இந்த இரு சங்கங்களில் செயற்குழு உறுப்பினர்களால் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலை தலைமைவிடமாக கொண்டு செயல்படும் ஜாமியா மஸ்ஜித் பரிபாலனகமிட்டி செயல்படுகின்றது.

தற்போது ஜமாத் நிர்வாகத்திற்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என சிலர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.சிலர் குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யக்கூடாது என தங்கள் பக்க கருத்துக்களை சொல்லியும் வருகின்றார்கள்.எவை எப்படி இருந்தாலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியில் மாற்றம் தேவை தான்.அந்த மாற்றம் எப்படி இருக்க வேண்டும்.

1.ஜமாத் மற்றும் சங்கங்களில் உறுப்பினர்கள் தொழுகையினை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
 

2.மதுக்கூரில் ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள இறை இல்லங்களில் பாரமரிப்பு  பணிகளை தொய்வின்றி செய்யவேண்டும்.
 

3.ஜமாத் மற்றும் சங்கங்களில் உறுப்பினர்கள் அவர்களின் பெயரில் அல்லது பினாமிகள் பெயரில் உள்ள கடைகளில் யார் பெயரில் கடை உள்ளதே அவர்களே வியாபாரம் செய்யவேண்டும்.உள்வாடகைகைக்கு விடுவது.பள்ளிவாசல் கடைகளை ஒத்திக்கு வைப்பது தவீர்க்கப்படவேண்டும்.
தங்களின் கட்டுப்பாட்டியில் கடை இல்லை என்றால் கடையினை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடவேண்டும்.உள்வாடகைக்கு விடுபவர்களை குறிப்பிட்ட கால அவாகசத்தில் காலி செய்யவேண்டும்.தவறுபவர்களின் பெயர் விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.அவர்கள் ஜமாத்,சங்க உறுப்பினர்களாக இருந்தால் பதவி நீக்கம் செய்யவேண்டும்.

4.மதுக்கூர் ஜமாத்துக்கு பெரிய அளவில் சொத்துக்கள் உள்ளது.அவற்றில் முக்கிய பகுதியான கீற்றுச்சந்தையில் உள்ள சாமில் வைத்து இருப்பவர்களை காலி செய்துவிட்டு மேற்படி இடத்தில் ஜமாத் சார்பாக வாய்ப்பு இருந்தால் வக்ப் வாரியத்தில் நிதி உதவி பெற்று நமது சமுதாயத்திற்கு தகுந்தது போன்று திருமண மண்டபம் ஒன்று நிறுவ வேண்டும்.

5.ஜமாத்துக்கு சொந்தமான சந்தையில் பொதுமக்களின் அவசியம் கருதி கழிவறை வசதி ஏற்படுத்தப்படவேண்டும்.அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

6.கிராமத்துமக்கள் தங்களின் விலைபொருட்களை நமதூர் சந்தையில் விற்க குறைந்த் பட்சம் ஒரு வருடத்திற்கு வந்த கமிஷன் தொகையும் (சந்தைகாசு) வாங்ககூடாது.


7.முன்பு போல் ஆடு அறுக்கும் இடத்திற்கு பள்ளிவாசல் பணியாளர்களை (ஆலிம் பெருமக்கள்,மோதினார்)அனுப்பி ஆடுகளை அறுக்க செய்யவேண்டும்.

8.ஜமாத்துக்கு இருக்கும் சொத்துபற்றிய விபரங்களை(வாய்ப்பு இருந்தால்)அனைவரும் அறிந்து கொள்ளும் படி தெரியப்படுத்தவேண்டும்.

9.தகுதியான மாணவர்களுக்கு (படிக்க வசதியற்ற) கல்வி உதவி,ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் சிறப்பாக செயல்படுத்தப்படவேண்டும்.

இவை போன்று இன்னும் சில "மாற்றங்கள் தேவை தான்"..நமது ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு.

திருமண மஜ்லிஸ்கள் மட்டும் தான் நமது பணி என பொறுப்புகளை குறைந்து கொள்ளாமல் நமதூர் ஜமாத் நிர்வாகம் அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட துணை நிற்போம் (இன்ஷா அல்லாஹ்..)


Tuesday, August 27, 2013


வெல்டன் சகோதர எம்.கபார்.

மதுக்கூர் பேரூராட்சி 9 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சகோதரர் எம்.கபார்.எனது வார்டுக்கு உட்பட்ட முகம்மதியர் தெரு,பட்டாணியர் தெரு ஆகிய பகுதிகளில் தெருவின் ஓரங்களில் இருக்கும் செடி,கொடிகளை (உபயோகமற்றதை) குறிப்பிட்ட இடைவேளையில் தனது சொந்த செலவில்
சுத்தம் செய்வதை வாடிக்கையாக கொண்டு செயல்படுகின்றார்.கடந்த இரு தினங்களாக பணியாளரை கொண்டு தனது வார்டுக்கு உட்பட்ட தெருங்கள் சுத்தம் செய்யப்பட்டது.


(சுத்தம் செய்வதற்கு முன்பு இருந்த புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது)

வெல்டன் சகோதர எம்.கபார்.
 
 


                                                     சுத்தம் செய்வதற்கு முன்னர்                                                      சுத்தம் செய்வதற்கு முன்னர்
                                                         சுத்தம் செய்ததற்கு பின்ன்ர்
                                                         சுத்தம் செய்ததற்கு பின்ன்ர்
 

Friday, August 23, 2013

புதுமனை புகுநிகழ்ச்சி
 

மதுக்கூர் பெரியார் நகர் சகோதரர் S.A.அப்துல் நாசர் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இன்று 23/08/2013 நடைபெறுகின்றது.சகோதரர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் இனிய நல் வாழ்த்துக்கள்.
மதுக்கூர் பள்ளிவாசல் தெரு சகோதரர் A.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இன்று 23/08/2013 நடைபெறுகின்றது.சகோதரர் மற்றும் குடும்பத்தினர்களுக்கு எங்களின் இனிய நல் வாழ்த்துக்கள்.
Thursday, August 22, 2013

மரண அறிவிப்பு

(அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் இடையகாடு சத்தரத்தார் வீடு மர்ஹும் S.N.S. முகம்மதுஆரிப் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,  ஜெகபர் அலி,  சேக் ஜலாலுதீன்,  துரை (என்கின்ற) காதர்ஷா ஆகியோரின் தாயாருமான நூர்ஜஹான் அம்மாள் இன்று (22/08/2013)வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

(மறைந்த நூர்ஜஹான் அம்மாள் அவர்கள் இருமுறை மதுக்கூர் பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.சமுதாய இயக்கத்தில் பணியாற்றியவர்)

        துரை (என்கின்ற) காதர்ஷா MOB :9994006323

Tuesday, August 20, 2013

புதுமனை புகுவிழா 

மற்றும்
                                                                               
                                                     நிக்காஹ் திருமண வாழ்த்து

மதுக்கூர் முகம்மதியர்தெரு சகோதரர் A.புரோஸ்கான் அவர்களின் புதுமனை புகுவிழா நாளை 21/08/2013 புதன்கிழமை நடைபெற உள்ளது.(இன்ஷா அல்லாஹ்).சகோதரர் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
                                                      மணமக்கள்
                                              A.சேக் அப்துல்லா
                                        (த/பெ M.அப்துல் அஜீஸ்)
 

                                              J.சர்மிளா பானு
                                          (த/பெ A.ஜெஹபர் அலி)


                                                           மணநாள்
ஹிஜிரி 1434 ஷவ்வால்பிறை 13 (21/08/2013) புதன்கிழமை (இன்ஷாஅல்லாஹ்)

                                                        மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்


Saturday, August 17, 2013

நிக்காஹ் திருமண வாழ்த்து

மணமக்கள்


S.அப்துல்லா                                                                    J.சர்மிளா பானு
(த/பெ மர்ஹும் O.P.M.A.செய்யது அலி                (த/பெ A.ஜெகபர் சாதிக்)

A.ராசீத் தைமூர்                                                                 M.ஹஜ்நஸ்ரின்
(த/பெ A.S.M.அபுசாலிபு)                                                  (
த/பெM.முகம்மது உசேன்)

A.அப்துல் முனாப்                                                           N.ரோஸ்னா பேகம்
(த/பெ M.அப்துல் காதர்)                                               
(த/பெ.A.K.M.M.நஜிமுதீன்)

A.முகம்மது முஸ்தபா                                                    A.பர்ஷானா
(த/பெ S.அசன் குத்தூஸ் )                                                (த/பெ A.அஸ்ரப் அலி )                                                                 மணநாள்

ஷவ்வால் மாதம் பிறை 10 (18.08.2013- ஞாயிற்றுக்கிழமை)

                                                           மணவாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீஹைர்    
(மதுக்கூரில் மேலும் இரு திருமணங்கள் நாளை நடைபெறுகின்றது.(இன்ஷா அல்லாஹ்)
 

Thursday, August 15, 2013

மதுக்கூரில் சுகந்திரதின கொண்டாட்டங்கள்
இந்திய தேசத்தின் 67 சுகந்திர தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..மதுக்கூரில் நடைபெற்ற சுகந்திர தின கொண்டாட்டங்கள்.

பேரூராட்சி அலுவலகம்
மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியினை பேரூராட்சி பெருந்தலைவர் என்.எஸ்.எம்.பசீர் அகமது அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அதிகாரி மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,ஜோதிராஜன்,சுரேஸ்,கபார்,மணிவேல்,சுரேஸ்,மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,வர்த்தக பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


 மதுக்கூர் நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளிக்கூடம்)

மதுக்கூர் நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் (தெற்கு) சுகந்திரதின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் முதல்வர் திருமதி காந்திமதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த ஜாமியா மஸ்ஜித் தலைவர் சகோதரர் அமானுல்லா,பெற்றோர் ஆசிரியக்கழகத்தலைவர் பெரியவர் அப்துல் காதர்,கல்விக்குழுத்தலைவர் கபார் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சியின் தலைவர் சகோதரர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்கள்.நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


  மதுக்கூர் தமுமுக அலுவலகம்

மதுக்கூர் தமுமுக அலுவலகத்தில் சுகந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது.நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,மமக செயலாளர் E.S.M.ராசிக்,தமுமுக செயலாளர் E.S.M.ராசிக்,பொருளாளர் இலியாஸ்,மாவட்ட பேச்சாளர் பவாஸ்,பொருப்பாளர்கள் ராசிக்,ரியாஸ்,அமீரக பொருப்பாளர் பைசல் அகமது ஆகியோர் முன்னிலையில் அமீரக பொருப்பாளர் என்.சர்புதீன்  அவர்கள் கொடியேற்றி சிறப்பு செய்தார்.
பிஎப்ஐ அலுவலகம்

பிஎப்ஐ தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள மதுக்கூரில் நகர தலைவர் சகோதரர் சேக்பரீது அவர்கள் தலைமையிலும்,சகோதரர்கள் அப்துல் ரஹ்மான்,அப்துல் வாஹீது,அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சகோதரர் ஹாஜிசேக் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். 
காவல் நிலையம்

மதுக்கூர் காவல்நிலையத்தில் காவல்துறை ஆய்வாளர் திரு மனோகரன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.இதுபோல மதுக்கூரில் உள்ள அரசு அலுவலகங்கள்,அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.


Tuesday, August 13, 2013

புதுமனை புகுவிழா

மதுக்கூர் இராமம்பாள்புரம் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது அவர்களின் புதியவீடு குடிபுகும் நிகழ்ச்சி இன்று  13/08/2013 செவ்வாய் இரவு சிறப்பு பயான்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.புதிய வீடு குடிபுகும் சகோதரர் K.S.M.அப்துல் வாஹீது  மற்றும் குடும்பத்தினருக்கு எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...