அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Tuesday, May 18, 2010

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?
விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,
42/25,ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ்,இரண்டாவது தளம்
(வி.ஜி.பி. அருகில்),அண்ணா சாலை,
சென்னை -600 002.
தொலைபேசி:044- 2852 7579,2841 4736,98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர்,
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,

Monday, May 17, 2010

முஸ்லிம் ஃபோபியா:தேவ்பந்த் மார்க்க அறிஞரை விமானத்திலிருந்து இறக்கி கைதுச்செய்த போலீஸ்

முஸ்லிமாக இருந்தால் விமானத்தில் வைத்து மொபைல் போனில் கூட பேசக்கூடாது போலும். அதுவும் தாடியும், தொப்பியும் வைத்திருந்தால் விமானத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு கிலிதான் போங்க.

டெல்லியிலிருந்து துபாய் வழியாக லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறி அமர்ந்தார் உ.பி.மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் மார்க்க அறிஞர் மவ்லானா நூருல் ஹுதா.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் இவர் தனது மொபைல் போனில் தனது ஊரிலிலுள்ள உறவினரிடம் 'ஜஹாஸ் உட்னே வாலா ஹெ, ஹம் உட்னே வாலா ஹெ' (விமானம் இப்பொழுது புறப்படப் போகிறது) என்று கூறியுள்ளார்.

இதனை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் 'மவ்லானா விமானம் இப்பொழுது வெடித்துச் சிதறப் போகிறது' என மொபைல் போனில் கூறியதாக விமான பணியாளர்களிடம் கூற அவர்கள் பைலட்டிடம் கூறி விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

போலீஸில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் உடனடியாக வந்தனர், மவ்லானா நூருல் ஹுதா தான் பேசியது அவ்வாறல்ல எனக்கூறி புரியவைத்த போதிலும் 50 வயதான மவ்லானாவை தீவிரவாதி என சந்தேகமடைந்து கைதுச் செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்து திஹார் ஜெயிலில் அடைத்துள்ளனர். பின்னர் உள்துறை அமைச்சகத்துக்கு இவ்விபரம் தெரியவந்து அவர்கள் தலையிட்டு மவ்லானா ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் ஒரு இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொள்ள செல்லவிருந்தார் மவ்லானா. இதனைக் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.தட்வால் கூறுகையில், "அப்பெண்மணிக்கு ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு தான் பிரச்சனைக்கு காரணம்" என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Thursday, April 29, 2010

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கு! குஜராத் அரசுக்கு காலக்கெடு விதித்தது உயர்நீதிமன்றம்!

இந்தியாவின் பெருமையினை குலைக்கும் விதமாக குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் கிடைக்க வில்லை. வீடிழந்து, வாழ்விழந்து வானமே கூரையாக வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் களின் அவலக்குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆயிற்று.

2002ல் மாபெரும் இனப்படு கொலை நிகழ்த்திய மோடி அரசு உலகெங்கும் கடும் கண்டனத்திற்கு இலக்கானது. மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போதும் உள்நாட்டில் சில சக்திகள் மோடிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தன.

கருணை காட்டப்பட வேண்டிய அப்பாவி ஜீவன்களின் நிலை தொடர்ந்தபடியே இருந்தது.

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரண உதவிகள் வழங்கப்படாத நிலையைத் தொடர்ந்து இரண்டு சமூகநல ஆர்வலர்கள் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனக்கூறி காலக்கெடு விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

தலைமை நீதிபதி எஸ். முகபோத்யாயா, நீதிபதி அகீல் குறைஷி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பில், எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நீதியும் நிவாரணமும் கிடைக்காத அவலநிலையில் ஏராளமான மக்கள் தவித்து வருவது ஒரு தேசிய அவமானம் அல்லவா?

தீஸ்தா செதல்வாட், முகுல் சின்ஹா, ஜாகியா ஜாஃப்ரி என நீதிக்காகப் போராடும் பெருமக்கள் முனைப்புடன் சட்ட யுத்தத்தை நிகழ்த்திய போதும் நீதி வெல்ல இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

மோடிக் கூட்டத்திற்கு தண்டனை எப்போது?

- TMMK.in

Sunday, April 25, 2010

குணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டித்து தமுமுக கண்டன பேரணி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பொருளாளருமான குணங்குடி ஆர்.எம். அனிபா அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார். அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர் விடுதலைப் பெற்றிருந்தாலும் ஒரேயொரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இவருக்கு எதிராக காவல்துறையினர் நிறுத்திய இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து பல மாதங்களாகிய பிறகும் எவ்வித காரணமுமின்றி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. பின்னர் ஒரு வழியாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் சாட்சிகள் விசாரணை என்ற கேலிக் கூத்து நடை பெற்றுள்ளது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அளிக்காமல் நீதிபதியை மாற்றும் வேலையும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 நிதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு யாரும் விடுதலையாகி விடக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறதோ என்ற கருத்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

குணங்குடி அனிபாவிற்கு பிணையும் மறுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட சிறைவாசத்தின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் குணங்குடி அனிபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகவும் கொடூரமான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இந்த அநீதியை கண்டித்தும், உடனடியாக குணங்குடி அனிபா தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் மே 5ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் நோக்கி கண்டன பேரணி நடைபெறவுள்ளது.

Tuesday, April 13, 2010

ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட களங்கத்தை, "மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்தோடு பதவிக்கு வந்திருக்கும் அதிபர் பராக ஒபாமா துடைக்க முயலுவதாகத் தெரிகிறது.

'அமெரிக்காவின் பாதுகாப்புத் தொலைநோக்கு' எனும் திட்ட வரைவுகளிலிருந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" எனும் சொல்லை நீக்குவதற்கு அண்மையில் ஒபாமாஆணை பிறப்பித்திருக்கிறார்.

"அமெரிக்கா போரிடப் போவது பயங்கரவாதிகளுடனே அன்றி, இஸ்லாத்துடனோ முஸ்லிம்களுடனோ அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் எனும் கண்ணோட்டத்தோடு அமெரிக்கா பார்க்காது" என்று அதிபர் பதவி ஏற்றவுடன் ஒபாமா செய்த அறிவிப்பு, இப்போது அரசு ரீதியான செயல்பாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறது என எதிர்பார்கலாம்.

மேற்காணும் ஆணை செயலுக்கு வந்தால், அரசின் உயர்மட்ட அளவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'யூத லாபி'யிலும் பெருத்த 'மாற்றம்' ஏற்படுத்தும் என நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முந்தைய புஷ் நிர்வாகம், தனது பாதுகாப்புக் கொள்கையில், "21ஆம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனான கொள்கைப்போரையே அமெரிக்கா கருதுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் நாடுகளைக் குறித்து ஒருமுறை "ரவுடி நாடுகள் (Rogue States)" என்றும் "சாத்தானின் அச்சு (Axis of Evil)" என்றும் வர்ணித்த புஷ், இஸ்லாத்தை, "கொடூரமான தீய மதம் (Evil and Wicked Religion)" என்றும் குறிப்பிட்டவராவார்.

"இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய ஜிஹாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற, தீவிரவாதத்துடன் மதத்தை இணைக்கும் சொல்லாட்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு முந்தைய அரசுக்கு நான் பலமுறை பரிந்துரைத்தேன்; ஆனால் பயனில்லாமல் போனது. ஏனெனில், மேற்காணும் சொற்களைச் செவியுறும் ஒரு முஸ்லிம், தம் மதத்தின் மீதான தாக்குதலாகவே அவற்றைக் கருதுவார். அப்படிக் கருத வேண்டும் என்றுதான் உஸாமா பின் லேடன் விரும்புவார்" என்று கூறுகிறார் காரன் ஹ்யூகஸ். இவர் முன்னாள் அதிபர் புஷ்ஷின் அரசில் முஸ்லிம் உலகினரோடு உறவு கொண்டாடுவதற்கான மேல்மட்ட அதிகாரியாக இருமுறை பதவி வகித்தவராவார்.

அணுஆயுதக் குறைப்பு, குவாண்டனாமோ சிறை மூடுவிழா போன்ற புஷ் நிர்வாகத்துக்கு எதிரான தனது கொள்கையைப் படிப்படியாகச் செயலுக்கு கொண்டு வரும் ஒபாமாவின் திட்டங்களில், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடைவிதித்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


உலகளாவிய முஸ்லிம்களுடனான நேசக்கரம் நீட்டலின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிபரின் ஆணை பார்க்கப் படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "அமெரிக்கா முஸ்லிம்களின் எதிரி இல்லை என்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மட்டுமே அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றும் ஒபாமா வலியுறுத்தி வருவதன் ஓர் அங்கமே இது என்றும் கூறுகிறார்கள்.

கடந்த ஜூன் 4, 2009இல் கெய்ரோவில் உரையாற்றிய ஒபாமா, "புதிய தொடக்கம்" எனும் தலைப்பில் இதே கருத்தை வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

"உலகின் இரண்டாவது பெரும்பான்மையினர் பின்பற்றும் இஸ்லாத்தைப் பழித்துக் கொண்டு முஸ்லிம்களுடன் நேசக்கரம் நீட்டுவதாகக் கூறுவது ஒன்றுக்கும் உதவாது" என்று ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதீப் ராமமூர்த்தி உருப்படியாக ஆலோசனையைக் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க யூத லாபியை மீறி, 'மாற்றம்' மாறாமல் செயலுக்கு வந்தால், அமெரிக்காவைப் பற்றிய உலக முஸ்லிம்களின் மனதில் உள்ள வெறுப்பு, படிப்படியாக நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை வழங்குவதில் ஒபாமா உறுதியுடன் இருப்பாரா?

எதிர்காலம் பதில் சொல்லும்!

-நன்றி சத்தியமார்க்கம்.காம்

Wednesday, April 7, 2010

மார்க்கம் பேணும் விளையாட்டு வீரர் யூஸுஃப் பதான்!

இன்றைக்கு காசுதான் பிரதானம். மற்றவை சர்வசாதரணம் என்ற எண்ணுடத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில், என்ன திறமை இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் இன்றைய காலத்தில், அதிலும் ஒரு முஸ்லிம் தனது திறமையால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இளைஞன் யூஸுஃப் பதான், மதுபானம் தொடர்பான விளம்பர "லோகோ' அணிவதில்லை என்று துணிச்சலாக முடிவு எடுத்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி மட்டை பந்து வீரர் யூஸுஃப் பதான். தற்போது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதம் அடித்த பெருமைமிக்க இவர், மதுபானம் தொடர்பான விளம்பரங்களை தனது சட்டையில் அணிவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதற்கேற்ப டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, தனது சட்டையில் இருந்த "கிங்பிஷர்' நிறுவன "லோகோவை' துணியால் மறைத்து களமிறங்கினார். "கிங்பிஷர்' நிறுவனம் "பீர்' போன்ற மதுபானங்களை தயாரித்த போதும், கிரிக்கெட்டிலும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு அணிகளுக்கு "ஸ்பான்சராக' உள்ளது. தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது.

இந்நிலையில் அணியின் மற்ற வீரர்கள் "கிங்பிஷர்' லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம். இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இது குறித்து யூசுப் கூறுகையில்,""கிங்பிஷர் என்பது மதுபான வகையை சேர்ந்தது. இதனை உட்கொள்வதோ அல்லது அதற்காக விளம்பரம் செய்வதோ எனது மதநம்பிக்கைக்கு எதிரானது,''என்றார்.

இது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""யூசுப் சிறப்பாக ஆடி வருகிறார். "லோகோ' தொடர்பான இவரது முடிவு பெரிய விஷயம் இல்லை. இதற்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காது,''என்றார்.

கிரிக்கெட் அரங்கில், இதற்கு முன் தென் ஆப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா "கேசில் லேகர்' என்ற மதுபானத்தின் "லோகோவை' சட்டையில் அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டும் அனுமதி அளித்தது. இவரது வழியில் யூசுப் பதானும் மதுவுக்கு எதிரான தனது கொள்கையில் உறுதியாக உள்ளார்.

Sunday, April 4, 2010

புர்காவை தடை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் -ஃபிரான்ஸ் அரசுக்கு ஸ்டேட் கவுன்சில் அறிவுரை

பாரிஸ் பொது இடங்களில் முஸ்லீம்கள் புர்கா அணிவதை முழுவதுமாக தடைசெய்வது சட்ட விரோதம் என்றும், அப்படி செய்தால் அது ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என்றும், ஆதலால் இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் புர்கா தடையை விசாரித்து வரும் ஃப்ரன்ஸ் ஸ்டேட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


பிரான்சின் உச்ச நீதிமன்றம் போல் கருதப்படும் இந்த தீற்பாயம், மேலும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, புர்கா முறையை பாதியளவு தடைச் செய்தாலும் அது பெறும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் புர்கா தடையை அமல்படுத்துவது ஃபிரெஞ்ச் மற்றும் ஐரோப்பிய வரைமுறைகளின் மனித உரிமை மீறலாகும் என்றும் விமர்சித்துள்ளது. முன்னதாக,பிரான்ஸ் பிரதமர் புர்கா முறையை தடைசெய்வது குறித்து ஸ்டேட் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்டிருந்ததை தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்தது.


பிரான்சின் பார்லிமென்ட் கமிட்டி புர்கா முறையை பாதியளவாவது தடை செய்ய வேண்டும் என்று முன்னதாக அரசை கேட்டு கொண்டது. ஒரு பக்கம்,பிரான்சின் ஜனாதிபதி சர்கோஸி முழு தடையை வலியுறுத்தியும், புர்கா முறையை தடைசெய்வதின் மூலம் பிரான்ஸ் அரசு பெண்களின் எதை வேண்டுமானாலும் அணியலாம் என்ற ஜனநாயக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் மற்றொரு பக்கம் மக்கள் குரல் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், ஸ்டேட் கவுன்சிலின் இந்த அறிவுரை வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருப்தப்படுகிறது.

இவ்விவகாரத்தில், பிரான்ஸ் அரசு தன் நிலைபாட்டை மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, April 3, 2010

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு , 01-04-2010 முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயணத்திற்கான தற்காலிக பதிவு விண்ணப்பங்களை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக ஹஜ் குழு நிர்வாக அலுவலரிடம் சென்று, ஏப்ரல் 1ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.hajcomittee.comஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனை கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு நடப்பு கணக்கில்(எண்:30683623887) செலுத்தி, அதற்கான வங்கி ரசீது நகலுடன் தமிழக ஹஜ் குழுவிடம், ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச பாஸ்போர்ட் இருப்பின், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்திருந்தால், இருப்பிட முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும். பரிசீலனை கட்டணமாக அளிக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 1, 2010

அயோத்திக்கு போனேன்! மனம் கலங்கினேன்! பாபர் மஸ்ஜித் நிலத்தில் தமுமுக தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் பேரா சிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உத்தரபிர தேசத்தின் தலைநகர் லக்னோவில் கடந்த மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் 21வது பொதுக் குழுவில் அவர் கலந்து கொண்டார். பிறகு மார்ச் 22 அன்று அயோத்திக்கும் மார்ச் 23 அன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் மார்ச் 24 மற்றும் 25 அன்று டெல்லிக்கும் சென்று விட்டு தமிழகம் திரும்பினார். தமுமுக தலைவர் தனது வட இந்திய பயணம் குறித்து மக்கள் உரிமைக்கு அளித்த சிறப்பு பேட்டி:

பாபரி மஸ்ஜித் பற்றிய கேள்வி: தங்களின் அயோத்தி பயணம் குறித்து சொல்லுங்களேன்...!

பேராசிரியர்: பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு 1980&களில் சென்றிருக்கிறேன். இப்போது மீண்டும் இடிப்பிற்கு பிறகு சென்றேன். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றம் நியமித்துள்ளவர்களில் ஒருவரான பைசாபாத்தைச் சேர்ந்த காலிக் அஹ்மது என்னை ‘சர்ச்சைக்குரிய” பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் நான் வருவது குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார். செல் போன், கேமரா, பேனா, காகிதம் என்று எதுவும் எடுத்துச் செல்லாமல் சென்றோம்.

பல இடங்களில் பலத்த சோதனைக்குப் பிறகு இரும்பு வேலிகளுக்கு நடுவே நடந்து 450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமாக இருந்த பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தை நெஞ்சில் பெரும் துயரத்தை சுமந்தவனாக பார்த்தேன். நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வர உள்ளது என்றும் பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நடத்தும் வழக்குரைஞர் ஜபர்யாப் ஜெய்லானி லக்னோவில் என்னிடம் சொல்லியிருந்தார்.

தீர்ப்பு சாதகமாக அமைந்து அடுத்த முறை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ஏக இறைவனை தொழும் வாய்ப்பு எனக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணமாக அந்த இடத்தை பார்த்தேன். நானும் என்னுடன் லக்னோவில் இருந்து வந்த எனது நண்பர் மட்டுமே அங்கு தாடியுடன் இருந்தோம். பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில் அமைந்திருந்த தற்காலிக கோயில் அருகே நடுநிலையுடன் இருக்க வேண்டிய காவல்துறையினர் ராம் லாலாவை தரிசனம் செய்யுங்கள் என்று அனைவரையும் பார்த்து (எங்களையும் சேர்த்து தான்) கூறிக் கொண்டிருந்தனர். மொத்த இடத்தையும் பார்ப்பதற்கு அரை மணிநேரம் எடுத்தது. தற்போது போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு டிசம்பர் 6, 1992&க்கு முன்பு போடப்பட்டிருந்தால் பள்ளிவாசலை காப்பாற்றியிருக்கலாம். குதிரைகள் லாயத்தை விட்டு தப்பிய பிறகு லாயத்தை பூட்டி என்ன பலன் என்ற சிந்தனை திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது. அயோத்தி பண்டையக் காலங்களில் புத்தர்களின் வழிப்பாட்டு தலமாக, இந்துக்களின் வழிப்பாட்டுத் தலமாக இருந்தது போல் அது முஸ்லிம்களின் நகரமாக இருந்தது என்பதற்கான தடயங்கள் அங்கு ஏராளமாக உள்ளதை நேரில் பார்க்க முடிந்தது. அயோத்தியை சுற்றிய 12 கி.மீ. சுற்றுப்பரப்பில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இது தவிர இரட்டை நகரமான பைசாபாத் மற்றும் அயோத்தியை இணைக்கும் சாலையின் இரு புறத்திலும் ஏராளமான பள்ளிவாசல்களும் முஸ்லிம் அடக்கத்தலங்ளையும் பார்க்க முடிந்தது.

அயோத்தியின் மக்கள் தொகையான ஒன்னரை லட்சத்தில் 6 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் ஆவர். இங்கு 35 பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகின்றது. பாபரி மஸ்ஜிதை சுற்றி அரசு கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை சுற்றியும் பள்ளிவாசல்களை பார்க்க முடிந்தது. அனுமன்கிரி கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் 40 ஏக்கர் பரப்பளவு உள்ள முஸ்லிம் அடக்கத்தலம் உள்ளது. இங்கு 12 அடி நீளமுள்ள ஒரு அடக்கவிடம் (கப்ரு) உள்ளது. இது முதல் மனிதர் நபி ஆதமிற்கு பிறகு வந்த நபி ஷீத் அவர்களுடையது என்று உள்ளூர் முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர். (இங்கு படம் எடுத்துக் கொண்டோம்)

இன்னும் பல அடக்கவிடங்கள் உள்ளன. பாரசீக மொழியிலான கல்வெட்டுகளும் அதில் உள்ளன. இவையெல்லாம் அயோத்தி முஸ்லிம்களின் நகரமாகவும் தொன்மை தொட்டு விளங்கி யுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.

இறுதியாக பாபரி மஸ்ஜித் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் முதல் மனுதாரர் ஹாசிம் அன்சாரியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். இவருக்கு வயது 92. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர் தான் அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி. (பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர்). 1949ம் ஆண்டு டிசம்பர் 22 வரை பாபர் பள்ளிவாசலில் இரவு தொழுகை வரை நடை பெற்றது. பிறகு நள்ளிரவில் தான் பள்ளிவாசலுக்குள் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று முதல் இவர் வழக்காடிவருகிறார். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடுகிறார்.

காங்கிரஸ் ஆதரவு முஸ்லிம் தலைவர்களையும் இவர் வன்மையாக கண்டித்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பூட்டா சிங் பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்குமாறும் அதற்காக 3 கோடி ரூபாயும், பெட்ரோல் பங்கும், இவரது மகனுக்கு அரசு வேலையும் தருவதாக ஆசைவார்த்தை காட்டியதாகவும், ‘எடு பழைய செருப்பை' என்று கூறி அவரை விரட்டியதையும் ஆவேசத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். தென் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் பாபரி பள்ளிவாசலுக்காக காட்டும் ஆர்வம் தன்னை நெகிழ வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னை அயோத்திக்கு அழைத்துச் சென்ற நண்பர் காலிக்கிடம் என்னைப் போல் சாதாரண முஸ்லிம்கள் பாபரி வளாகத்திற்குள் சென்று பார்க்கலாமா என்று கேட்டேன். அது இயலாத காரியம் என்று அவர் பதிலளித்தார். முஸ்லிம்கள் வந்தால் அவர்கள் கடுமையாக சோதிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தென் இந்திய முஸ்லிம் தலைவர்களில் நீங்கள் தான் முதன் முதலாக இங்கே உள்ளே சென்று பார்த்து உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

பாபரி மஸ்ஜித் பற்றியும் அயோத்திப் பற்றியும் ஆய்வு செய் வதற்காக ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார் நண்பர் காலிக். பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அயோத்தியில் வக்ப் செய்யப்பட்ட இடங்களை, கப்ருஸ் தான்களை சில சுயநலமிகள் விலைக்கு விற்கும் அவலமும் நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்தார். என்னுடன் லக்னோவில் இருந்து கார் ஒட்டி வந்த இளைஞர் சில மாதங்களுக்கு முன்பு தான் பார்த்தபோது கப்ருஸ் தானாக இருந்த இடம், தற்போது கட்டிடமாக கட்டப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக அயோத்தி ரயில் நிலையத்தில் அலிகர் செல்வதற்காக கைபியத் எக்ஸ்பிரஸ் பிடிப்பதற்காக நின்ற போது லக்னோவில் இருந்து என்னுடன் வந்திருந்த எனது நண்பர் டாக்டர் அனீஸ் சொன்ன சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கரசேவை என்ற பெயரில் பாபர் பள்ளிவாசலை இடிப்பதற்கு கரசேவகர்கள் ரெயில் மூலம் தான் அயோத்திக்கு வந்தார்கள். அப்போது நரசிம்மராவ் அமைச் சரவையில் ரெயில்வே அமைச்சராக இருந்தவர் சி.கே. ஜாபர் ஷரீப். இவர் அயோத்திக்கு செல்லும் ரெயில்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிறுத்தி யிருந்தால் ஆயிரக்கணக்கில் கரசே வகர்கள் அயோத்திக்கு வந்திருக்க முடியாது.

இதேபோல் அவர் சொன்ன இன்னொரு செய்தி என்னை உறைய வைத்தது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அன்று பிரதமரை சந்தித்த குழுவில் நானும் இடம் பெற்றேன். அதற்கு முன்பு சுலைமான் சேட் சாஹிப் அவர்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுவோம் என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஆனால் அவரது ஆலோசனையை சையத் சகாபுதீன், ஜாபர் ஷரீப் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். இதைக் கேட்ட நான், சமூக நலனை விட பதவி பெரிது என்று இந்த இருவரும் எண்ணியதால் அதன் பிறகு அவர்கள் எம்.பி.களாக ஆகவே முடியவில்லை என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது கைபியத் எக்ஸ்பிரஸ் நிலையத்திற்குள் வந்து விட்டது.

மேலும் கேள்விகளுக்கு : www.tmmk.in

Monday, March 29, 2010

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்

இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு ​(என்.சி.ஏ.இ.ஆர்)​ நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்,​​ மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:

10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.​ 550க்கும் குறைவாகவே உள்ளது.

2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ​முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.

நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.​ தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.​ முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.​

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

Saturday, March 27, 2010

பாபர் மசூதி இடிப்பை அத்வானி வேடிக்கை பார்த்தார் - ஐபிஸ் அதிகாரி சாட்சியம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.​ இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா,​​ அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.


தற்போது டெல்லியில் 'ரா' பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

'சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார்.

ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது' என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.

ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில்,'அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.
கரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்' என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்

Thursday, March 25, 2010

ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு- தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆந்திர மாநில அரசு உருவாக்கியது. இதன் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டில் அரசாணையும் பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற பெஞ்ச் ஆந்திர அரசின் சட்டம் செல்லாது என அறிவித்து, அரசு உத்தரவுக்கு தடை விதித்தது.

உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 22ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், பி.எஸ்.சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டம் செல்லும் என குறிப்பிட்டனர்.

குஜராத் கலவரம் வழக்கு : சிறப்பு விசாரணைக்குழு முன் மோடி 27ம் தேதி ஆஜர்

குஜராத் வன்முறைகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க வரும்படி, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிய சம்மனுக்கு இணங்கி வருகிற 27ம் தேதி மோடி விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்.

குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில், ஏராளமானோர் பலியாயினர். இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இந்தக் குழு, குஜராத் முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பியது. அதில், மார்ச் 21ம் தேதி குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனவே 21ம் தேதி மோடி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று அவர் விசாரணைக்குழு முன் ஆஜராகாததால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுபற்றி நரேந்திர மோடியின் வக்கீல் மகேஷ் ஜெத்மலானியிடம் கேட்டதற்கு வருகிற 27-ந் தேதி நரேந்திரமோடி சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, நரேந்திரமோடி கடந்த 21-ந்தேதி ஆஜராகும்படி விசாரணை குழு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. 27-ந்தேதி ஆஜராகும்படிதான் சம்மன் வந்துள்ளது. எனவே 27-ந்தேதி அவர் ஆஜர் ஆவார். விசாரணை குழு கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பார் என்றார்.

குஜராத் வன்முறையின் போது, ஆமதாபாத்தில் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈஷன் ஜாப்ரே என்பவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா ஜாப்ரே கொடுத்த புகாரின் அடிப்படையில், மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 23, 2010

இஸ்ரேலுடனான உறவை இந்தியா கைவிட வேண்டும்

மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டும், ஃபலஸ்தீனில் முஸ்லிம்களை கொன்றொழித்தும் வரும் இஸ்ரேலுடனான உறவையும் ஒத்துழைப்பையும் இந்தியா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என முஸ்லிம் தனியார் சட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

'ஜவஹர்லால் நேருவின் காலத்திலிருந்த கொள்கைக்கு இந்தியா திரும்பிச் செல்ல வேண்டும். ஃபலஸ்தீன மக்களுக்கெதிரான இஸ்ரேலின் கொடூரத்தை இந்தியா எதிர்க்கவேண்டும்’ என மூன்று நாள் நீண்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் வருடாந்திர மாநாட்டில் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விவரித்துக் கொண்டு வாரியத்தின் துணைப் பொதுச்செயலாளர் மவ்லான அப்துற்றஹீம் குரைஷி தெரிவித்தார்.

அரபு நாடுகள் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து இஸ்ரேலுக்கு முன்பாக முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கவேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையுடன் அதிகரித்துவரும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கெதிராகவும், ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற் கெதிராகவும் போராட அரபு நாடுகள் தயாராக வேண்டும் என அப்துற்றஹீம் குரைஷி கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியின் கோரிக்கையை வாரியம் தள்ளுபடிச் செய்தது. பாப்ரி மஸ்ஜித் எந்தவொரு கோயிலையும் தகர்த்தோ அல்லது இடத்தை ஆக்கிரமித்தோ கட்டப்பட்டது அல்ல. ஷரீஅத் சட்டப்படி கட்டப்பட்ட மஸ்ஜிதை சொந்த விருப்பப்படி விட்டுக் கொடுக்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என மாநாட்டில் பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் பாப்ரிமஸ்ஜித் கமிட்டி கன்வீனர் எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கவும், சட்டத்தை அங்கீகரிக்கவும் பா.ஜ.க தயாராகவேண்டுமென்று இல்லியாஸ் கோரிக்கை விடுத்தார். லிபர்ஹான் கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள பாப்ரிமஸ்ஜிதை தகர்க்க திட்டமிட்டவர்களின் பெயர்களை பாப்ரி மஸ்ஜித் இடிப்புவழக்கில் உட்படுத்தவேண்டும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் நாளை அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனை நாளாக கடைப்பிடிக்கவேண்டும். காழ்ப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டங்களை தவிர்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் கலவரத் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர போராட்டத்தில் களமிறங்க வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பான போராட்ட நிகழ்ச்சிகளுக்கு உருக்கொடுக்க, ஒத்தக்கருத்துடைய அமைப்புகளின் கூட்டம் ஒன்று விரைவில் டெல்லியில் கூட்டப்படும். கலவரத் தடுப்பு சட்ட மசோதாவில் மாற்றங்களைக் கொண்டுவர ஆதரவைத் திரட்ட எம்.பிக்களான முஹம்ம்து அதீஃப், ஷஃபீக்குர்ரஹ்மான் பர்க் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்விற்கும், உதவிக்குமான நடவடிக்கைகளும், கலவரத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கான பிரிவுகளும் மசோதாவில் உட்படுத்தவேண்டுமென்று குரைஷி தெரிவித்தார்

ஈராக் ஆக்கிரமிப்பு 7 ஆண்டு முடிவடைந்த நிலையில்: அமெரிக்காவில் பிரம்மாண்ட போர் எதிர்ப்பு பேரணி.

வாஷிங்டன்:ஈராக்கை அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆக்கிரமித்து 7வது ஆண்டு நிறைவுறுவதையடுத்து அமெரிக்காவின் பல நகரங்களில் போர் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. ஈராக்கிலிருந்து உடனடியாக ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தினர். வெள்ளை மாளிகையின் வெளியிலுள்ள மதில் சுவரில் சவப்பெட்டிகளின் மாதிரிகளை வைத்த 8 போராட்டக்காரர்களை போலீஸ் கைது செய்தது.

ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வது வெட்கக்கேடு என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி மரியா ஆல்வின் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தவறாகும், ஈராக்கில் கொல்லப்படுவது அப்பாவிகளாகும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஒபாமா புஷ்ஷின் கொள்கைகளைத்தான் பின் தொடர்கிறார். அதிபர் எவராயினும், கொல்லப்படுவது அப்பாவி மக்களாகும் என போராட்டத்தில் பங்கேற்றோர் கூறினர். கலிஃபோர்னியாவிலும், நியூயார்க்கிலும் போர் எதிர்ப்பு பேரணிகள் நடைப்பெற்றன

Friday, March 19, 2010

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் பங்குக் கொள்ள தமுமுக தலைவர் வட இந்தியா பயணம்

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் ஆண்டு கூட்டம் உ.பி. மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மார்ச் 19 முதல் 21 வரை நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கட்டாய திருமண பதிவுச் சட்டம், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் வழக்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (மார்ச் 18) விமானம் மூலம் லக்னோ புறப்பட்டுச் சென்றார். இக்கூட்டம் முடிவடைந்த பிறகு உ.பி.யிலும் டெல்லியிலும் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களை தமுமுக தலைவர் சந்திக்கிறார். பிறகு டெல்லியில் மத்திய சிறுபான்மை நல அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் மார்ச் 25ம் தேதி கூட்டியுள்ள முக்கிய சிறுபான்மை சமூகத் தலைவர்களுடனான கலந்தாய்விலும் தமுமுக தலைவர் பங்கு கொள்கிறார். இந்த கலந்தாய்வில் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகின்றது.

Wednesday, March 17, 2010

அதிரையில் திரண்ட முஸ்லிம்கள்

அதிரையில் A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி செவ்வாய் 16/03/10 அன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டித்திற்கு ஹனீப் காக்கா அவர்கள் தலைமையேற்க, T M M K ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஷாகுல் ஹமீது T M M K, நியாஸ் அகமது (P F I ), மற்றும் ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிஜாம் (P F I ) நன்றியுறை நவிழ்ந்தார்கள். வீடியோ...

ஆந்திர முஸ்லிம்களின் ஒற்றுமை...

ஆந்திராவில், அரசுப் பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிற்ப்பித்த உத்தரவை சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக்கோரி, மார்ச் 13 ஆம் தேதிய்னறு ஐக்கிய முஸ்லிம்கள் பேரவையால் (Muslim United Front) ஹைதரபாத்திற்கு அருகில் நடத்தப்பட்ட இம் மாநாட்டிற்கு கட்சி – இயக்க – அமைப்பு வேறுபாட்டைக் கடந்து ஆந்திர முஸ்லிம்கள் அனைவரும் கலந்துக்கொண்டது ஆந்திர அரசியல் கட்சிகளிடம் பயத்தை கிளப்பியுள்ளது.

மாநிலத்தில் நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டையும்- மத்தியில் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டில் முஸ்லிம் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

சச்சார் கமிட்டி மற்றும் ஃபதாமி கமிட்டியின் பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு கல்வியில் ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்ததோடு மட்டுமல்லாது ரங்கநாத் கமிஷன் பரிந்துரையின் படி இந்திய முஸ்லிம்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைபடுத்த வலியுறுத்தியது.

கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகளை கடந்து எம்.ஐ.எம், (MIM) காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் – ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துக்கொண்டனர்.

Tuesday, March 16, 2010

சகோதரர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) - உம்ரா புகைபடங்கள்

அஸ்ஸலாமு அளிக்கும் வரஹ்மாதுல்லாஹ்..

சகோதரர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் உம்ரா பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைபடங்கள்..Wednesday, March 10, 2010

மொஸாத் எனும் பயங்கரவாதிகள் தண்டிக்கபடுவார்களா!

அண்டை நாடுகளில் புகுந்து விமான தாக்குதல்கள் மூலமாகவும் பாஸ்பரஸ் போன்ற எரிகொள்ளிகளை வீசியும் அப்பாவி மக்களை கொன்று ஒரு மிரட்சியை ஏற்படுத்துவது இஸ்ரேலின் ஒரு பயங்கரவாத செயல் எனில் மொஸாத் எனும் உளவுப்படை மூலமாக அயல்நாட்டு தலைவர்களை கொல்வது மற்றொரு செயல்.

1991ல் ஈராக் அதிபர் சதாம் ஹூஸைனை கொல்ல முயற்சி செய்தது, 1997 ல் அம்மானில் வைத்து ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை கொல்ல நடந்த முயற்சி, 1988ல் பாலஸ்தீன தலைவர் கலீல் வசீரை துனீசியாவில் வைத்து கொலை செய்தது. 1980 ல் எகிப்து நாட்டின் நியூக்ளியர் விஞ்ஞானி யஹ்யா அல் மசாதை கொலை செய்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதற்காகவே இஸ்ரேல் ஏராளமான அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்து உலக நாடுகளில் ஊடுருவ செய்துள்ளது. அதன் தலைவனாக இருப்பவன் மிர் தகான். ஹிஸ்புல்லா இயக்க தலைவரான முக்னிய்யாவை மிக சாமார்த்தியமாக கொன்றதற்காக இவனது பதவிக்காலம் முடிந்த பிறகும் மீண்டும் அவனை மொசாத் தலைவனாக இஸ்ரேல் அரசு நீடிக்க செய்தது.

ஹமாஸ் இயக்கத்தின் எதிர்ப்பை தாக்குபிடிக்க முடியாமல் திணறும் இஸ்ரேல், அதன் தலைவர்களை கொல்லும் பொறுப்பை இந்த மிர் தகானிடம் வழங்கியது. கடந்த மாதம் துபாய்க்கு வந்த ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் மப்ஹூஹை கொல்வதற்காக பல நாடுகளிலிருந்து கூலிப்படைகளை கொண்டு வந்து துபாயில் ஒரு ஹோட்டலில் வைத்து மப்ஹூஹை கொலை செய்துவிட்டு இயற்கை மரணத்தை போன்று ஒரு செட்டப்பையும் செய்துவிட்டு கொலையாளிகள் தப்பிவிட்டனர். ஆனால் அதை மிக சாமார்த்தியமாக துபாய் போலீஸ் கண்டுபிடித்து வெளியிட்டு விட்டது.

சூப்பர் மேன் என பெயர்பெற்ற இந்த மொஸாத் தலைவன் மிர் தகானால் தங்களுக்கு இத்தகைய ஒரு வெட்கக்கேடான நிலை ஏற்படும் என்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தாம் நினைத்தது போல இவன் ஒரு ஜேம்ஸ்பாண்ட் அல்ல என்று தற்போது புரிந்து இருக்கும்.

கொலை செய்து விட்டு தடயமில்லாமல் தனது சகாக்கள் தப்பி சென்ற போது வீரசாகசம் செய்துவிட்ட நிலையில் தகானும் எஜமானர்களும் துள்ளிகுதித்தனர். துபாய் போன்ற ஒரு சிறிய நாட்டில் நடக்கும் கொலைகளை அரசால் கண்டுபிடிக்க இயலாது என்றே மொஸாத் கருதியது. ஆனால் தடயமின்றி எங்கும் எதையும் செய்ய துணிந்த மொஸாத்தை விரல் சூப்ப செய்துவிட்டு துபாய் போலீஸ் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் தாஹி கல்ஹான் தமீமியை ஹீரோ ஆக்கி விட்டது இந்த நிகழ்ச்சி.

விமானநிலையத்தில் இறங்கியது முதல் குற்றவாளிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் கேமராக்களில் பதிவு செய்ததை பார்த்து இஸ்ரேலை விட பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் முதலான நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு போனது.

இந்நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தான் குற்றவாளிகள் துபாய்க்கு வந்தனர். பிரிட்டனில் இது பற்றிய சூடு பறக்க தொடங்கி விட்டது. ஆனால் பாஸ்போர்ட் போலியானது என்று பிரிட்டன் அரசு சொல்கின்றது. போலி பாஸ்போர்ட்டுகள் பரிசோதிப்பதில் ஐரோப்பிய யூனியனிடம் பரிசு பெற்ற பிரிட்டன் தான் இந்த பாஸ்போர்ட்டுகளை பரிசோதனை செய்தததென்றும் அவை ஒரிஜினல் பாஸ்போர்ட் தான் என்றும் துபாய் போலீஸ் கண்டிப்புடன் கூறியுள்ளது.

ஹாலோகிராம் நீரெழுத்துக்களும் பயோமெட்ரிக் முத்திரையுடன் கூடியது தான் பாஸ்போர்ட். அதுவும் போலி என பிரிட்டன் கூறுமானால் அதையும் குற்றவாளிகளால் தயாரிக்க முடியுமெனில் அரசு வழங்கும் பாஸ்போர்ட்டால் என்ன பயன் என்று பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ராபர்ட் ஃபிஸ்கி கேள்விp எழுப்பியுள்ளார்.

தீவிரவாத செயல்களுக்கு ஐரோப்பிய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. 1987 ல் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி மொஸாத் நடத்திய ஆபரேசனை தொடர்ந்து அன்றைய பிரதம மந்திரி மார்கரெட் தாச்சர் 13 இஸ்ரேலிய அதிகாரிகளை வெளியேற்றி பிரிட்டனிலுள்ள மொஸாத் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடுவிழா நடத்தியது.

இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதிமொழி கொடுத்ததால் மீண்டும் பிரிட்டனில் துவங்க அனுமதி வழங்கப்பட்டது. 1997 ல் அம்மானில் விஷம் தெளித்து ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலை கொல்ல திட்டமிட்ட மொஸாத் கூலிப்படையினர் நியூசிலாந்த் மற்றும் கனடாவின் பாஸ்போhட்டை தான் பயன்படுத்தினர்.

இரண்டு நாடுகளுடனும் பின்னர் மொஸாத் மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. மொஸாத் தலைவன் மிர் தகானை பொறுத்தவரை இது அவனுக்கு இரண்டாவது அடி. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு ஏழு வருடங்களுக்கு முன்பாக அவனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேலின் கனவு எதுவும் ஈரான் விஷயத்தில் பலிக்கவில்லை. அணுஆயுத தயாரிப்பில் ஈரான் தன்னிறைவு பெற்றுவிட்டது என நஜாதி அறிவித்த சில நாட்களிலேயே துபாய் கொலையில் அகப்பட்டு அதிலும் மொஸாத்தின் துணி அவிழ்த்தெறியப்பட்டுவிட்டது.

2004ல் செச்சனிய நாட்டின் முன்னாள் அதிபரான ஸலீம்கான் பாந்திரேயை கொன்ற ரஷ்ய உளவாளிகளை கத்தார் அரசு கண்டுபிடித்து விசாரணை செய்து தண்டனை கொடுத்தது என்றாலும் இறுதியாக தண்டனையை அனுபவிக்க ரஷ்யாவிற்கே விட்டுகொடுக்கும் நிலையே ஏற்பட்டது.

ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹை கொன்றவர்கள் விஷயத்தில் இதுபோன்றதொரு நடவடிக்கையை எவருமே விரும்பவில்லை. ஆனால் அதற்கு துபாய் அரசு இன்னும் துணிச்சல் பெறவேண்டும்.

அமெரிக்காவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறி பின்லாடனை தண்டிக்க நினைக்கும் அமெரிக்காவும் பாகிஸ்தானியர்கள் மும்பையில் புகுந்து தாக்கியதாக கூறி அவர்களையும் தண்டிக்க விரும்பும் இந்திய அரசும் ஹமாஸ் தலைவரை இன்னொரு நாட்டில் புகுந்து கொலை செய்த இஸ்ரேலியர்களை தண்டிக்க கோருமா?

உலகின் எப்பகுதியிலுள்ளவர்களுக்கும் தண்டனை வழங்க சக்தி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் சபையும் சர்வதேச நீதிமன்றமும் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்குமா? அல்லது தண்டனை வழங்க இருக்கும் துபாய் அரசுடன் ஒத்துழைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, March 9, 2010

குஜராத்திலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய முயலும் மோடி

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.

இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.

இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

நன்றி:தி சண்டே இண்டியன்..

Saturday, March 6, 2010

மதுக்கூர் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மதுக்கடை மறியல் போர் விளம்பரங்கள்..

இன்ஷா அல்லாஹ் நாளை மதுக்கூர் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மதுக்கடை மறியல் போர் மதுக்கூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது...
போதையில் தடுமாறும் கணவனின் நிலைகண்டு கலங்கும் தாய்மார்களின் கண்ணீர் போக்க, அதைக் கண்டு கதறும் பிள்ளைகளின் துயரம் போக்க, மகன்களின் மது பழக்கத்தை கண்டு பதறும் பெற்றோர்களின் வாட்டம் போக்க... பொதுமக்கள் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றது..

***** மனிதநேய மக்கள் கட்சி ****
மதுக்கூர் நகரம்.

உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!

தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள்.

அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.

இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம். இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள். தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.

நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா

குணங்குடி அனீபா வழக்கு விசாரணை முடிவு& விடுதலைக்கு பிரார்த்திக்க வேண்டுகோள்

1997ம் ஆண்டு நடைபெற்ற இரயில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக சிறையில் வாடிவரும் குணங்குடி அனீபா அவர்களின் வழக்கு விசாரணை கடந்த 02-03-2010 அன்று முடிவடைந்தது. வழக்கறிஞர்கள் புகழேந்தி, பா.ப. மோகன், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிரேம் குமார் 19.03.2010 அன்று வழக்கை ஒத்தி வைத்தார். அன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.இந்நிலையில் தமுமுக வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் சிறையில சென்று குணங்குடி அனீபாவை சந்தித்தார். அப்போது த.மு.மு.க தனது விடுதலைக்காக எடுத்து வந்த முயற்சிகளை நினைவு கூர்ந்த அனிபா அவர்கள் தனது வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க கோரி தனது மனைவி மூலமாக தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளதாகவும், விரைவில் தீர்ப்பு வெளிவந்து தானும், மற்ற சகோதரர்களும் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அனைத்து சகோதரர்களையும் கேட்டுக் கொண்டார்.இடுப்பு வலியால் நடக்க சிரமப்பட்டு கைத்தடி மூலம் நடந்து வந்த அனீபா அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று விரைவில் விடுதலையாக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவழியாக நீண்டகால விசாரணை இழுத்தடிப்புக்கு பின் வழக்கு விசாரணை முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னே தற்போதுள்ள நீதிபதியை மாற்றுவதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே 6 நீதிபதிகள் மாறி 7வது நீதிபதியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு நீதிபதி வரும் பட்சத்தில் குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் தீர்ப்பு தாமதமாகலாம். இது ஏற்கெனவே வேதனையில் இருக்கும் அனீபா குடும்பத்தினரையும், முஸ்லிம் சமுதாயத்தையும் காயப்படுத்துவதாக இருக்கும்.உயர்நீதிமன்றத்தில் அனீபாவுக்கு பிணை கேட்டபோது இன்னும் ஒரு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம் என அரசு தரப்பு சொன்னது.

ஆனால் 4 மாதம் கழிந்துதான் விசாரணை நிறைவுபெற்றிருக்கிறது.தீர்ப்பு வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டால் அது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே இருக்கும். தமிழக அரசு இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்.

Wednesday, March 3, 2010

அமெரிக்கா ஏற்படுத்தும் செயற்கை பூகம்பங்கள்!

ஹைதியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை ரஷ்யாவின் கடற்படை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் தரப்பிலிருந்து எந்தவொரு நாட்டிலும் செயற்கையாகப் பூகம்பம் உண்டாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட நில நடுக்க ஆயுதம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்று வருணித்துள்ளது. அமெரிக்காவின் இந்நவீன ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த முடியும். இத்தகைய ஆயுதத்தின் சோதனைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.நில நடுக்க ஆயுதச் சோதனைப் பயன்பாட்டின் போது கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக பக்கத்து நாடான ஹைதியில் பெரும் விளைவுகளை உண்டாக்கிய பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொடுத்த ஹைதியின் தலை நகரை தற்போது அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ராணுவம் சுற்றி வளைத்திருக்கிறது. ஹைதியின் தலை நகர் போர்ட் அவ்பரன்ஸ் தெருக்களில் ராணுவத்தின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனத்தின்படி ரஷ்யாவின் கடற்படை வடக்குப்பிரிவு, பிரதமர் புதினுக்கு கொடுத்த ரகசியத் தகவலில் சில நாட்களுக்கு முன்பு ஹைதியில் ஏற்பட்ட பூகம்பம் அமெரிக்காவின் கடற்படை சோதித்து வந்த ஆயுதம், கட்டுப்பாட்டை மீறியதால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கேதர் நியூஸ் என்ற நிறுவனம் தொகுத்த ஆய்வறிக்கையில் ரஷ்யக் கடற்படை விஞ்ஞானிகளின் மேற்கோள்காட்டி சொல்லப்பட்டுள்ள செய்தியில் ரஷ்யாவின் வடக்கு கடற்படை பிரிவு 2008 ம் ஆண்டு கரீபியன் கடலில் அமெரிக்கக் கடற்படையின் சந்தேகமான செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளது. அப்போது அமெரிக்கா ஏதோ ஒரு முக்கிய ஆயுதத்தைச் சோதிப்பதற்காக இங்கு முகாமிட்டுள்ளது என்ற எண்ணம் ரஷ்யாவின் விஞ்ஞானிகளுக்கு உறுதியானது.

ரஷ்யாவின் கடற்படை விஞ்ஞானிகள் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளனர். 1950 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட கடற்படை பிரிவை மீண்டும் கடற்படையுடன் சேர்த்துக் கொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகள் ரஷ்யாவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
கேதர் நியூஸ் தகவலின்படி கடந்த காலத்தில் ஈரானை இதே ஆயுதம் கொண்டு தாக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. திசம்பர் 1978 ல் அமெரிக்க ஆதரவு ஷா மன்னர் ஈரானை ஆண்டுக்கொண்டிருந்தார். அவரை வீழ்த்தவே ரஷ்யா முயன்றது. வல்லரசு நாடுகளின் இவ்வகையான ஆயுதங்களால் சில நாடுகள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வந்துள்ளன.
கடந்த காலத்தில் வல்லரசாக விளங்கிய ரஷ்யா, அமெரிக்க ஆதரவு ஷா அரசை வீழ்த்துவதற்காக ஈரானின் எல்லைப்பகுதியில் பத்து மெகா டன் எடை கொண்ட குண்டை பூமியின் ஆழத்தில் வெடிக்கச்செய்தது. பால்ட் லயின் ஒன்று ஈரானின் பக்கம் போய்க்கொண்டிருந்தது. நவீன தொழில் நுட்பத்தின் மூலம் வெடிப்பின் அதிர்ச்சி திசையினை ஈரானின் பக்கம் திருப்பி விட்டார்கள். இதன் காரணமாக அமுங்கிக்கிடந்த பால்ட் லயின் செயல்பட்டு 7.4 அளவு பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டன.
ரஷ்யாவின் இச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ரஷ்ய ஆதரவு யூகோஸ்லாவியாவில் செயற்கை பூகம்பம் ஏற்படுத்தப்பட்டது. 7.2 அளவிற்கு அதிர்வுகள் ஏற்பட்டன. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி ரஷ்யா 1970ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. பூமிக்கு அடியில் அணு ஆயுத வெடிப்பின் மூலமாக செயற்கை பூகம்பத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அமெரிக்கா இதனைச் செய்து வருகிறது.
புதிய தகவல்களின்படி அமெரிக்கா இத்தொடரில் "டெஸ்லா எலக்ட்ரோ மேக்னடிக் பல்ஸ்" ,பிளாஸ்மா, சோனிக் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இம்மூன்று தொழில் நுட்பங்களில் ஒன்றின் மூலம் மார்ச் 2002 ஆம் ஆண்டு ஆப்கானிலும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு 7.2 அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டது.
ஆப்கன் மலைகளில் பதுங்கியிருக்கும் போராளிகளைக் கொல்லுவதற்காகவே அமெரிக்கா இத்தகைய ட்வைஸை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக இருபதாயிரம் அப்பாவி மக்கள் வீடிழந்தனர். சமீபத்தில் ஹைதியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு காரணம் அமெரிக்காவின் டெஸ்லா டெக்னாலஜியின் மூலம் கரீபியன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தோல்வியின் வெளிப்பாடு தான். இத்தகைய ட்வைஸ் 1995 ஆம் ஆண்டு ஜப்பானிலும் பயன்படுத்தப்பட்டது. அதன் அளவு 6.8 ஆக இருந்தது.

அமெரிக்கா செய்து வரும் இத்தகைய சோதனைகளைப் பற்றி அமெரிக்கர்களுக்கு முன்பே தெரியும்.ஹைதியின் தலை நகரம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் அமெரிக்காவின் ஹை கமான்டர் பூகம்பத்தின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தென்பகுதி கமாண்டரின் டெபுடி கமாண்டர் ஜெனரல் P.K. கீன் என்பவரை தீவின் பகுதியில் பணியமர்த்திவிட்டார். ஆச்சரியமான செய்தி என்னவெனில், ஜெனரல் கீன் அமெரிக்க ராணுவத்தினருடன் மீட்பு பணிகளுக்கான பெரியளவில் சாதனங்களை எடுத்துக் கொண்டு பணியமர்த்தப்பட்ட இடத்தின் அருகில் சென்று விட்டார். இப்படைத் தான் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்குப் பின் ஹைதியின் விமானத்தளம் மற்றும் துறைமுகத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இவர்கள் பூகம்பத்தை அளக்கும் கருவிகளையும் எடுத்து சென்று பல பகுதிகளில் பரிசோதித்துப் பார்த்துள்ளார்கள். இதற்கு முன் அமெரிக்க கடற்படை கலிபோர்னியாவின் சுற்றுப்புறத்திலும் இது போன்ற சோதனைகளைச் செய்து பார்த்துள்ளது. இதன் தாக்கம் 6.5 என்ற அளவிற்கு இருந்தது. எனினும் இதில் யாரும் கொல்லப்படவில்லை.

நன்றி : சமரசம்

தஞ்சை மாவட்டத்தில் மின் விநியோக நேரத்தில் மாற்றம்

தஞ்சாவூர்,​​ கும்பகோணம்,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு,​​ பேராவூரணி,​​ அதிராம்பட்டினம்,​​ பாபநாசம்,​​ திருக்காட்டுப்பள்ளி,​​ மதுக்கூர் ஆகியப் பகுதிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மின் விநியோக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.​ தங்கராஜு.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கும்பகோணம் பகுதி:​ மேலக்காவிரி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ மகாமகம்,​​ டி.எஸ்.ஆர்.​ பாபநாசம்,​​ ஆடுதுறை பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ அய்யம்பேட்டை பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ கும்பகோணத்தில் காந்திநகர்,​​ சுந்தரபெருமாள் கோயில்,​​ வாட்டர் ஒர்க்ஸ்,​​ திருபுவனம் பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை,​​ பட்டுக்கோட்டை,​​ ஒரத்தநாடு பகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ அதிராம்பட்டினம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ பேராவூரணி பகுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை,​​ மதுக்கூர் பகுதியில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்:​ திருவையாறு மற்றும் செங்கிப்பட்டி பகுதியில் காலை 6 முதல் 8 மணி வரை,​​ அன்னை சத்யா விளையாட்டு மைதானம்,​​ சுற்றுலா மாளிகை,​​ திருக்கானூர்பட்டி பகுதிகளில் காலை 8 முதல் 10 மணி வரை,​​ வல்லம் பகுதியில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை,​​ பூக்குளம் பகுதியில் பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை,​​ விளார்,​​ முனிசிபல்,​​ இண்டஸ்டிரியல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை,​​ கரந்தை,​​ வ.உ.சி.​ நகர்,​​ கீழவாசல்,​​ வண்டிக்காரத் தெரு பகுதிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

Monday, March 1, 2010

கோவையில் த மு மு க வின் பதினைந்தாம் ஆண்டு மாபொரும் எழுச்சி பொதுக்கூட்டம்

கோவையில் த மு மு க வின்
பதினைந்தாம் ஆண்டு மாபொரும் எழுச்சி பொதுக்கூட்டம்


தையல் இயந்திரம் வழங்குதல், மற்றும் நூலகம் திறப்பு விழா

இடம் : கோவை செல்வபுரம் நாள் : 28- 02- 2010 (ஞாயிற்றுகிழமை) மாலை: 6 - 30 மணி

தலைமை : காதர்ஹீசைன் ( தமுமுக செல்வபுரம் கிளை தலைவர் )

வரவேற்புரை : இப்ராஹிம் ( தமுமுக செல்வபுரம் கிளை துனைச் செயலாளர்)
முன்னிலை : மைதீன் சேட், மாநகர தலைவர், தமுமுக
அப்துல் பஷிர், மாவட்ட தலைவர், தமுமுக

சிறப்புரை
எஸ். ஹைதர் அலி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர், தமுமுக

கோவை இ. உமர் அவர்கள்
மாநில செயலாளர், தமுமுக

கோவை ஜாஹீர் அவர்கள்
மாநில பேச்சாளர், தமுமுக

நன்றியுரை
இப்ராஹிம்
தமுமுக செல்வபுரம் கிளை செயலாளர்

Saturday, February 27, 2010

ஹிஜாப்-வெற்றி

ஹிஜாப் எங்கள் வாழ்வின் எவ்வித முன்னேற்றத்திற்கும் தடையாக இல்லை என்பதை தங்களது சாதனைகள் மூலம் நிரூபித்து வருகின்றார்கள் முஸ்லிம் பெண்கள்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கி வருகிற பிப்ருவரி 28ஆம் தேதி வரை கனடா நாட்டின் வான்கோவரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்குத் தொடர்பான பல போட்டிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஜியண்ட் ஸ்லாலோம் மற்றும் ஆல்பைன் ஸ்லாலோம் போட்டிகளில் ஈரான் நாட்டு சார்பாக ஹிஜாப் அணிந்துக் கொண்டே பங்கேற்கிறார் மர்ஜான் கல்ஹோர் என்ற முஸ்லிம் பெண். இவர் ஈரானின் சார்பாக கலந்துக் கொள்ளும் முதல் பெண்மணியாவார்.

ஈரான் சார்பாக துவக்க விழாவில் கொடியை ஏந்தி வந்தவரும் இவரே. 21 வயது மருத்துவ பட்டப்படிப்பு மாணவியான கல்ஹோர் கூறுகையில், "இந்த ஒலிம்பிக் எனது கனவாகும். எனது இந்த பங்கேற்பு ஈரானிய பெண்களை ஊக்குவிக்கும். பெரும்பாலான பெண்கள் பனிச்சறுக்கு போட்டிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் ஒரு முன்மாதிரியாக திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எனது தலைமுடியை மறைப்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். எனது தலைமுடி குட்டையானது. ஆதலால் ஒரு தொப்பியை அணிந்துள்ளேன். அதன்மேல் ஹெல்மட் அணிந்துள்ளேன்." என்கிறார் கல்ஹோர்.

விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துக் கொண்டு கலந்துக் கொள்வதற்கு மேற்கத்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபிகளாரின் வரலாறு - சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு!

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய எல்லாம் வல்ல இறைவனின் திருப் பெயரால்...

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம்மனைவரின் மீதும் உண்டாவதாக!

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் மற்றுமோர் சிறந்த முயற்ச்சி!

உலகப் பெருந் தலைவர் அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றினை இனிய, எளிய தமிழில், ஆதாரங்களின் அடிப்படையில், ஆய்வு நடையில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ஒரு இலட்சம் பரிசு! 450 பக்கங்களில் கணிணி அச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 31.10.2010.

முகவரி:
RAHMATH PATHIPPAGAM
RAHMATH BUILDING
No.6, IInd Main Road,
C.I.T. Colony, Mylapore,
Chennai 600 004.
Tamil Nadu, India.
Phone Number : + 91 44 24997373

தொடர்புக்கு: M.A.முஸ்தபா, கைபேசி: +91-95000 37000.

Thursday, February 25, 2010

சென்னையில் மாணவர்களின் உணர்ச்சிமிகு பேரணி! தமுமுக மாணவரணி பங்கேற்ப்பு !

மத்திய மனிதவள மேம்-பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் கபில்சிபல் கொண்டுவந்துள்ள தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா இந்தியாவில் உள்ள அனைத்து பிற்-படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவ சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளதை எதிர்த்து, திக,தமுமுக மாணவரணி,விடுதலை சிறுத்தைகள் உட்பட மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்.அனைத்து மாணவர் கூட்டமைப்பின் சார்-பில் மாபெரும் பேரணி சென்னையில் 23.2.2010 மாலை எழுச்சி-யுடன் நடைபெற்றது.


இந்தியாவில் மீண்டும் மனுதர்ம கல்வித் திட்டத்தை புகுத்தும் மத்திய அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும், உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை எதிர்த்தும் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அனைத்து மாணவர் பேரவை சார்-பில் மாணவர்கள் மன்றோ சிலை அருகில் கூடினர்.
ஒடுக்கப்பட்ட, கிராமப்-புற மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் உயர்கல்வி தேசிய ஆணைய மசோதாவை-யும், மத்திய மனுதர்ம அமைச்சர் கபில்சிபலைக் கண்டித்தும் அரை மணி நேரம் ஒலி முழக்கமிட்டனர்.


பின்னர் அனைத்து மாணவர் கூட்டமைப்பினரான திராவிட மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் மாணவர் பிரிவு, தமுமுக மாணவரணி, முஸ்லிம் லீக், சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்-கள், நந்தனம் கல்லூரி மாணவர்கள், பச்சையப்-பன் கல்லூரி மாணவர்-கள் என மாணவர்கள் பேரணி-யாகப் புறப்படத் தயாராக இருந்தனர்.


திராவிடர் கழக பொதுச்-செயலாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் மாணவர்களின் பேரணி தொடங்கி வைக்கும் முகமாக மாண-வர்களை வாழ்த்தியும், அனைத்து மாணவர் கூட்டமைப்பின் நோக்கத்தை விளக்கியும் பேசினார்.அவரது உரையில் கூறியதாவது:இன்றைக்குத் தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை எதிர்த்தும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்ச-ரைக் கண்டித்தும் மாண-வர்கள் பேரணியாகப் புறப்பட்டு அவர்களு-டைய கோரிக்கைகளை வலி-யுறுத்த உள்ளனர்.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அவர்கள் ஒரு புதிய கல்விக் கொள்கைத் திட்-டத்தை அறிவித்திருக்கிறார்.தாழ்த்தப்பட்ட, பிற்-படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறவிடாமல் தடுக்க ஒரு புதிய சட்டத்தை, திட்டமிட்டு ஒரு சதிச் செயலை கபில்சிபல் உருவாக்கியிருக்கிறார்.நீண்ட காலமாக நாம் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு, சமூகநீதி தத்-துவத்தை குழிதோண்டிப் புதைக்கக் கூடிய திட்டம்-தான் இந்த கல்வித் திட்டமாகும்.தமிழ்நாட்டில் இருபத்-திரண்டு ஆண்டுகளாக நாம் போராடி, விரட்டப்-பட்ட நுழைவுத் தேர்வு முறையை இந்தக் கல்வித் திட்டத்தின்மூலம் கொண்டு-வந்து ஒடுக்கப்-பட்ட மாணவர்களை கல்வியில் முன்னேற விடா-மல் தடுக்க ஒரு புதிய யுக்-தியைக் கையாண்டிருக்-கின்-றார். அனைத்து மாண-வர்களும் ஒன்று சேர்ந்து இந்தத் திட்-டத்தை இந்த ஆபத்தை முறியடித்தாக வேண்டும்.அன்று பெரியார் போராடினார்.மாணவர் சமுதாயம் இந்த பேரபாயத்தை உணர்ந்து இதை முறி-யடித்தாகவேண்டும். அப்பொழுதுதான் தாழ்த்-தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட, கிராமப்புற மாணவ-மாணவிகள் நம்முடைய உரிமைகளைப் பெற முடியும்.எனவே, அனைத்து மாணவர் அமைப்பின் சார்பில் இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கின்ற போராட்டம் இது ஒரு தொடக்கம்தான். வெற்றி கிட்டும்வரை இந்த மாபெரும் போராட்டம் தொடரும். இவ்வாறு கலி.-பூங்குன்றன் பேசினார்.மமக பொதுசெயலாளர் அப்துல் சமத் மற்றும் மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, பேசும்போது பெரியார் உருவாக்கிய சமூக நீதி போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.மத்திய அரசின் இந்த கயமைத்தனத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த பேரணி போராட்டம் வெறும் தொடக்கம்தான் இன்னும் முழு வீச்சில் இப்போராட்டம் எழுச்சி பெரும் என்றார்.விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து, திராவிடர் கழக மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் பேசினர். புரட்சிகர இளை-ஞர் முன்னணி அமைப்பைச் சார்ந்த வீராளன் தலைமையிலும் மாணவர்-கள் பங்கேற்றனர். மாணவர்கள் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை ஆவேசத்துடன் ஒலி முழக்கங்களுடன் சென்று பின்னர் மாலை 5.00 மணி அளவில் புதிய தலைமை செயலகத்தை அடைந்தது.உடனே கபில் சிபலின் கொடும்பாவியாக அட்டைகளை மாணவர்கள் கொளுத்த காவல துறை உடனடியாக மாணவர்களை கலைந்து செல்ல கோரியது.எனினும் மாணவர்கள் அங்கேயே ஆர்பாட்டத்தில் இறங்கினர்.மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றினர்.தமுமுக மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன்,விடுதலை சிறுத்தைகள் மாணவர் பொறுப்பாளர் இளங்கோ,புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சிவா ஆகியோர் எழுச்சியோடு பேரணியின் நோக்கத்தை எடுத்துரைத்து தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்று அறைகூவல் விடுத்தனர்.இறுதியாக மாணவர் கூட்டமைப்-பின் ஒருங்கிணைப்பாளர் ச. பிரின்ஸ் இறுதியாக நன்றி கூறினார்.

Wednesday, February 17, 2010

தலைமைச் செயலகம் முற்றுகை தமுமுக அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தலைமை செயலகத்தை தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் 17-02-2010 அன்று முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அ­ தலைமை தாங்குகிறார்.இதை எதிர்த்து செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கற்களால் தாக்கினார்கள். இந்த தகவல் தமுமுகவினருக்கு கிடைக்க, மாவட்ட நிர்வாகிகளும், சகோதர அமைப்பினரும் சம்பவ இடத்தில் கூடினர். இதற்கிடையில் பள்ளிவாசலை சுற்றி 100லிக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு போட்டப்பட்ட னர். இந்த சம்பவம் இரு சமுதாயத்திற்கும் இடையை மதக்கலவரம் உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின் அனைத்து முஸ்லிம் அமைப்பினரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில் 15.2.2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அடக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் கபரஸ்தானில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த உறுதி மீறல் செயல் முஸ்லிம்கள் மற்றும் பிற சமூக மக்களிடம் மிகுந்த அதிருப்தியும், வேதனையையும் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சமூக அமைப்புகளிடம் இருந்து தொடர் போராட்டங்களை உருவாக்கியுள்ளது.

Saturday, February 13, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... அன்பிற்கினிய மதுக்கூர் நண்பர்களே உங்கள் அனைவரயும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுக்கூர் கிளையின் சார்பாக இந்த பதிவின் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் இனி தினமும் மதுக்கூரில் நடை பெரும் சமுதாய மற்றும் பொதுவான நிகழ்ச்சிகள் இந்த வலை தளத்தில் பதியப்படும். எங்களது பணிகள் தொடர எப்போதும் போல உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்கிட வேண்டுகிறோம்...

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...