அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Tuesday, January 28, 2014

மஸ்கட்டிற்கு சென்ற மகனை மீட்க தாய் மனு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி ஊராட்சி வடபாதி கள்ளிக்காடு கிராமத்தை சார்ந்த வீராச்சாமி,சந்திரா தம்பதியரின் வசித்து வருகின்றார்கள்.நேற்றைய முன் தினம் மதுக்கூர் தமுமுக அலுவலகத்திற்கு வந்த சந்திரா தனது மகன் மஸ்கட் சென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுவரை எந்த தகவலும் இல்லை இதன் காரணமாக எனது கணவர் மனநிலைப்பாதிக்கப்பட்டுள்ளார்.ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றோம் என கண்ணீர் நிறைந்த கண்களுடன் கூறினார்.மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் இது குறித்து ஆலோசனை செய்து நேற்று 27/01/2014 சகோதரி சந்திரா அவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அழைத்து சென்று மகனை மீட்ககோரி மனு கொடுக்கப்பட்டது.மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனுசந்திரா சார்பாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மனுவில் சந்திரா கூறியிருப்பது எனது மகன் முத்துக்குமார் கடந்த 2002 ஆம் ஆண்டு மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.பின்னர் இரண்டு முறை தபாலில் தொடர்பு கொண்டார்.எனது மகன் கடைசியாக கடந்த 07/05/2002 தேதி வந்தது.அதன் பின்னர் இன்றுவரை எனது மகனை பற்றி எந்தவித தகவலும் இல்லை.எனது மகனை இந்திய தூதரகம் மூலமாக மீட்டுத்தாருங்கள் என கூறியிருந்தார்.

மனுக்களை கொடுத்துவிட்டு சந்திரா வெளியில் வரும் போது நான் எல்லோரிடமும் எனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கச்சொல்லினேன்.யாரும் காது கொடுத்து கேட்கவில்லை இந்த முஸ்லிம் பாய்கள் இன்று முதற்கட்டகளை கலெக்டர் ஐயாவிடம் மனு கொடுக்க செய்து இருக்கின்றார்கள்.என பத்திரிக்கையாளர்கள் முன்னால் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.அவருடன் மதுக்கூர் நகர தமுமுக தலைவர் சகோதரர் ஜபருல்லா,மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளர் KTM நிஷார் அகமது,நஸாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அன்பான மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்களே! முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்கள் சந்திரா என்ற தாயின் மகனை மீட்க.
பெயர் :MUTHU KUMARAN/VEERASAMY

PASSPORT NO :A3949059

Sunday, January 26, 2014

இந்திய குடியரசு தினம்

இந்திய தேசத்தின் 65 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) அதன் தலைமை,மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை அலுவலங்களில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பு செய்கின்றது.மதுக்கூர் நகர தமுமுக சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக மதுக்கூர் கிளை அலுவலகத்தில் சுகந்திர மற்றும் குடியரசு தினங்களில் மதுக்கூர் நகர அலுவலகத்தில் தேசியக்கொடியினை பலதரப்பட்டவர்களையும் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து தேசியக்கொடியினை ஏற்றி வைப்பது வழக்கமாக கொண்டு உள்ளது.இன்று காலை 8:15 மணிக்கு குடியரசு தினத்தில் மதுக்கூர் நகர அலுவலகத்தில் அமீரக மதுக்கூர் தமுமுக பொறுப்பாளர் சகோதரர் A.அப்துல் ரெஜாக்,சகோதரர் லக்கி அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் அமீரக மதுக்கூர் தமுமுக பொறுப்பாளர் சகோதரர் M.பஷீர் அகமது தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு விருது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தமிழகமெங்கும் சிறப்பான சேவைகளை செய்து வருகின்றது.தமுமுக மதுக்கூர் நகர ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சிறப்பாக சேவை செய்யும் சகோதரர் M. நஸாருதீன் அவர்களுக்கு மதுக்கூர் ஜுனியர் சேம்பர் இண்டர்நேசனல் (ஜேசிஐ) அமைப்பின் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.(அல்ஹம்துலில்லாஹ்)

(குறிப்பு : கடந்த ஆண்டு சகோதரர் நஸாருதீன் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது ரோட்டரி சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)


Sunday, January 19, 2014

நிக்காஹ் வாழ்த்து

இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

L.பயாத் அஹமது (S.S.M.A.லியாக்கத் அலி)
B.இர்ஃபானா பர்வீன் (A.S.M.பஷீர் அகமது)

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டுரபியுல் அவ்வல் பிறை 18 (20/01/2014) திங்கள்கிழமை

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்

(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

Wednesday, January 15, 2014

மரண அறிவிப்பு


அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு பட்டுக்கோட்டையார் வீடு மர்ஹும் ஜாகீர் உசேன் ,அப்துல் மாலிக் ஆகியோரின் தந்தையும்,அப்துல் கறீம் அவர்களின் அண்ணனுமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று 15/01/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மதுக்கூர் கீழக்காடு (இராமம்பாள்புரம்)A.அக்பர் அலி அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 16/01/2014 வியாழக்கிழமை நடைபெறுகின்றது.சகோதரர் அக்பர் அலி மற்றும் குடும்பத்தினருக்கு ஏக நாயன் அல்லாஹ் பரக்கத் செய்வனாக !

மதுக்கூர் தமுமுக சார்பாக எங்களின் நல்வாழ்த்துக்கள்.மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் இராமம்பாள்புரம் யூனியன் ஆபீஸ் ரோடு நம்மங்குறிச்சியார் வீட்டு மர்ஹும் முகைதீன் பிச்சை அவர்களின் சம்மந்தியும்,மர்ஹும் முகம்மது யூசுப் அவர்களின் மனைவியும்,அல்லாப்பிச்சை அவர்களின் தாயாருமான அகமது நாச்சியா அவர்கள் நேற்றிரவு 14/01/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, January 14, 2014

மதுக்கூர் இடையக்காடு ராவுத்தர்ஷா என்கின்ற M.M.A.அக்பர் அலி அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 15/01/2014 புதன்கிழமை நடைபெறுகின்றது.சகோதரர் அக்பர் அலி மற்றும் குடும்பத்தினருக்கு ஏக நாயன் அல்லாஹ் பரக்கத் செய்வனாக !

மதுக்கூர் தமுமுக சார்பாக எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Saturday, January 11, 2014

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்கள்
 A.அப்துல் ரெஜாக்,A.அசாருதீன் இல்லத்திருமணம்.

நிக்காஹ் வாழ்த்து

இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

A.அசாருதீன் (த/பெ A.அப்துல் வாஹீது)
J.ஷாஃபான் பர்வீன் (த/பெ A.S.M.A.ஜெகபர் அலி)


மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ரப்புய்யுல் அவ்வல் மாதம் பிறை 11 (12/01/2014 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்

(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

அன்பான சகோதரர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நேற்று 10/01/2013 முகநூல் வாயிலாக ஒரு சகோதரர் பகிர்ந்து கொண்ட புகைப்படத்துடன் கூடிய செய்தி.பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் லாரியில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள் என இருந்தது.அருமையான சகோதரர்களே எங்கு சென்றாலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள்.அன்பு கூர்ந்து அவைகளை தவீர்த்துவிடுங்கள்.உங்களை நம்பி உங்களின் பெற்றோர்.உங்களை நம்பி உங்களின் மனைவி,உங்களை நம்பி உங்களின் குழந்தைகள்,இப்படி உங்களை நம்பி உங்களை நம்பி என கூறிக்கொண்டே செல்லலாம்.(அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவான்)

எனவே வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக,நிதானமாக,முன்,பின் பார்த்து,வலது,இடது புறங்களை பார்த்து சாலை விதிகளை பின்பற்றி செல்லுங்கள்.இது போன்ற விபத்துங்களிலிருந்து அல்லாஹ் எல்லாரையும் காப்பாற்ற துவா செய்வோம்.

அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒட்டகத்தை கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட சொன்னார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்.(இன்ஷா அல்லாஹ்)நிக்காஹ் வாழ்த்து


இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

A.அப்துல் ரஹ்மான் (த/பெ.M.அப்துல் காதர்)
S.சஹானாபர்வீன் (த/பெ A.M.சஹாபுதீன்)

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ரப்புய்யுல் அவ்வல் மாதம் பிறை 11 (12/01/2014 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்


(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)
மதுக்கூர் இந்திரா நகர் சகோதரர் N.S.N.நத்தர்ஷா அவர்களின் வீடு 

குடிபுகும் நிகழ்ச்சி  12/01/2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

Friday, January 10, 2014

மின்சார வாரிய அறிவிப்பு

மதுக்கூர் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் தங்களின் மொபைல் எண்ணையும் பதிவு செய்து கொள்ளவும்.இவைகள் கேட்பதற்கு காரணம் தங்களுடைய மின் கட்டணம் கட்டக்கூடிய கடைசி தேதியினை குறுச்செய்தி(SMS) மூலமாக தெரிவிப்பதற்காக பெறப்படுகின்றது.

மக்கள் சேவை முகாம்

இந்த சிறப்பு முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக நாளை 11/01/2014 மதுக்கூர் பள்ளிவாசல் தெரு மதீனா சூப்பர் மார்க்கெட் அருகிலும்,சூரியத்தோட்டம் பள்ளிவாசல் அருகிலும் நடைபெறுகின்றது.மற்ற பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.(இன்ஷா அல்லாஹ்)

(குறிப்பு : மின்கட்டண இணைப்பு எண் மற்றும் மொபைல் எண் ஆகியவை கொண்டு வரவேண்டும்)

Wednesday, January 8, 2014

மதுக்கூர் தமுமுக வின் மக்கள் சேவைகள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தமுமுக சார்பாக மதுக்கூர் நகர அனைத்து சமுதாயமக்களுகாக மதுக்கூர் நகர தமுமுக செயல்வீரர்களால் முடிந்த அளவு மக்கள் பணிகளை செய்து வருகின்றனர்.இச்சேவை திட்டத்திற்கு "மக்கள் சேவை"என பெயரிடப்பட்டுள்ளது.குடும்ப அட்டையில் பெயர் நீக்கல்,சேர்த்தல்,முகவரி திருத்தம் போன்ற பணிகள் செய்து கொடுக்கப்படுகின்றது.கேஸ் சிலிண்டர் மானியவிலை பெற ஆதார் எண் பதிவு முகாம் மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்பட்டு இம்முகாமில் சுமார் 1500 நபர்கள் பயனடைந்தார்கள்.மேலும் மின்சார கட்டணம்,தொலைப்பேசி கட்டணங்கள் கட்டிக்கொடுப்பது என மக்கள் நலபணிகளை மேற்கொண்டு உள்ளோம்.தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday, January 7, 2014வாழ்வதார உதவி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மதுக்கூர் நகர கிளையின் மூலமாக சென்ற வருடம் (ஹிஜிரி 1434) குர்பானி பிராணிகளின் தோல் வசூல் செய்யப்பட்டது.குர்பானி பிராணிகளின் தோல் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையினை கொண்டு மதுக்கூர் வாழ் ஏழை,எளிய மக்களின் வாழ்வதாரத்திற்கு வேண்டிய சிறு உதவிகள் செய்யப்படுகின்றது.அதன் ஒரு பகுதியாக கடந்த 03/01/2014 அன்று மதுக்கூருக்கு வருகை புரிந்த தமுமுக மாநில தலைவர் மெளலவி ரிபாய் அவர்கள் பயனாளி ஒருவருக்கு மாவு அரைக்கு இயந்திரம் (கிரைண்டர் )வழங்கினார்.உடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அகமது ஹாஜா,மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன்,மதுக்கூர் நகர நிர்வாகிகள் இலியாஸ்,ஜபருல்லா,பவாஸ்கான்.
எல்லா புகழும் அல்லாஹ்கே !


Saturday, January 4, 2014

மதுக்கூரில் கேஸ் சிலிண்டர் மானியத்திற்காக ஆதார் எண் பதிவும் முகாம்-மதுக்கூர் தமுமுக

மக்கள் சேவை முகாம்

மதுக்கூர் தமுமுக சார்பாக  கடந்த இரு தினங்களாக மதுக்கூரில் மானிய விலையில் சிலிண்டர் பெற ஆதார் எண்களை பதிவு செய்யும் முகாம் நடைபெறுகின்றது.இன்டேன் கேஸ் வைத்திருப்பவர்கள் அதன் முகவர்  அலுவலகமான அதிராம்பட்டிணத்தில் உள்ள பாலு கேஸ் ஏஜென்ஸியின் மானிய விலையில் கேஸ் பெற ஆதார் எண்களை மதுக்கூரிலிருந்து அதிராம்பட்டிணம் சென்று பதிவு செய்யவேண்டும்.மதுக்கூரில் இன்டேன் கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் தான் அதிகம்.இதன் காரணமாக அதிகமான தாய்மார்கள் அதிராம்பட்டிணத்திற்கு சென்று தங்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய தொடங்கினார்கள்.இதனால் அதிகமான தாய்மார்களின் காலம்,பணம் செலவு ஆனது.இதை உணர்ந்த சமுதாய சகோதரர்கள் அதிராம்பட்டிணம் பாலு கேஸ் ஏஜன்ஸி உரிமையாளர் சகோதரர் பாலு என்கின்ற பாலசுப்ரமணியம் அவர்களிடம் பேசி மதுக்கூரில் உள்ள இன்டேன் கேஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மதுக்கூரிலேயே முகாம் நடத்தி ஆதார் எண்களை பெற்றுத்தருகின்றோம் என கூறினோம்.அன்புடன் பாலு கேஸ் ஏஜென்ஸி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தார்.
 அதனடிப்படையில் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக ஆதார் எண் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.சூரியத்தோட்டம்,பள்ளிவாசல்தெரு,சந்தைப்பேட்டை,இந்தியன் வங்கி அருகில் என நான்கு இடங்களில் நடைபெற்றது,இன்டேன் கேஸ் இணைப்பு வைத்திருக்கும் பலர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பள்ளிவாசல் தெரு முகாம்:
பவாஸ்கான்,அப்பாஸ்,ஆம்புலன்ஸ் நாசரூதீன்,தாஜுதீன்,லுக்மான்,அசாருதீன்,

சூரியத்தோட்டம்
ஜபருல்லா,ராசிக் அகமது,அசீன்,சேக்

சந்தைப்பேட்டை
முகம்மது ராசிக்,முஜிபுர் ரஹ்மான்,S.K.நிசாரூதீன்,நத்தர்ஷா

இந்தியன்வங்கி அருகில்
புரோஸ்கான்,செய்யதுமுகம்மது,நிஷார் அகமது,அப்துல் ஹமீது,

மற்றும் அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் எஸ்.கே.சேக் கலிபா அவர்கள் மேற்பார்வையில் சகோதரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.எல்லா புகழும் அல்லாஹ்கே !


கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...