அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Wednesday, May 27, 2015

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர் மதுக்கூர் ஜபருல்லா அவர்களின் தந்தையுமான முகம்மது உசேன் அவர்கள் இன்று 27/05/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Monday, May 25, 2015

சாதனை மாணவிக்கு சமுதாய பேரியக்கம் பாராட்டு

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷஃபா 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.தொடர்ந்து மாணவி ஷஃபா அவர்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமுள்ளது.மதுக்கூர் தமுமுக பேரூர் கழகம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் சகோதரர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,TMMK மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,பேரூர் கழக செயலாளர் ஃபவாஸ்,
பெருளாளர் முகம்மது இல்யாஸ்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார்,முன்னாள் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா முகைதீன் ஆகியோர் மாணவி ஷஃபா அவர்களை சந்தித்து பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.உடன் மாணவியின் தந்தை ஆபிதீன் மரைக்காயர் இருந்தார்.
 

Thursday, May 21, 2015

மதுக்கூர் பள்ளிகளின் 10 வகுப்பு பொது தேர்வு முடிவுகள்

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (மதுக்கூர் வடக்கு)
முதல் மதிப்பெண்
ஷஃபா 498
இரண்டாம் மதிப்பெண்
ரீட்டா 492
மூன்றாமிடம்
சஃப்ரினா பேகம் 490

99 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 5 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 64பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 28 பேர் 100% மதிப்பெண்
மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 305 பேர்.

காந்தி மெட்ரிக் ஸ்கூல்

முதல் மதிப்பெண்
மோனிகா  497 (மாநிலத்தில் மூன்றாமிடம்)
இரண்டாம் மதிப்பெண்
ஜெயஃபிர்த்தீ 496
சிந்துஜா 496
மூன்றாமிடம்
ராகவி 493

100 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 19 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 36பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 16 பேர் 100% மதிப்பெண்
மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 145 பேர்.பாத்திமா மேல்நிலைப்பள்ளி
முதல் மதிப்பெண்
மேசிகா 492
சமிந்திரா 492

இரண்டாமிடம்
அப்துல் ஜாசிம் 491
மூன்றாமிடம்
மெளரியா 490

99 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 6 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 17பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 7 பேர் 100% மதிப்பெண்அரசு மேல்நிலைப்பள்ளி
முதல் மதிப்பெண்
நடராஜான் 490
இரண்டாமிடம்
ஹமீத் 489
மூன்றாமிடம்
மதன் குமார் 483

88 % சதவீதம் தேர்ச்சி
கணிதம் 1 பேர் 100% மதிப்பெண்
அறிவியல் 29பேர் 100% மதிப்பெண்
சமூக அறிவியல் 8 பேர் 100% மதிப்பெண்


மதுக்கூர் மாணவி மாநிலத்தில் இரண்டாமிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் ( வடக்கு) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷஃபா 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமும்,மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார்.வாழ்த்துக்கள்.மாணவியின் பெற்றோர் பெயர் ஆபிதீன்மரைக்காயர்,பாத்திமா பீவி.
மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கபார் மாணவி சபா க்கு நேரில் சென்று வாழ்த்து.

Monday, May 18, 2015

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
இனிதாய் முடிந்தது....இஸ்லாமிய மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக நேற்று 16/05/2015 சனிக்கிழமை ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இனிதே நிறைவுபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

முதல் அமர்வு இஸ்லாமிய கண்காட்சி

காலை 10:30 மணியளவில் மெளலவி ரிபாய் ரஷாதி அவர்கள் காயல்பட்டிணம் தாவா சென்டர் மாணவிகள் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாமிய கண்காட்சியினை திறந்துவைத்தார்கள்.தொடர்ந்து சகோதரி ஆலிமா பர்வீன் பானு அவர்கள் இறைவசனத்துடன் நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கியது.மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு மாநாட்டு குழுத்தலைவர் சகோதரர் கபார் தலைமையேற்று நடத்தினர்.சகோதரர் ஜபருல்லா வரவேற்புரை நிகழ்த்தினர்.


சகோதரர் முஜிபுர் ரஹ்மான்,முகம்மது இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் மெளலவி முகம்மது மைதீன் உலவி அவர்கள் சின்ன சின்ன அமல்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்,மெளலவி ரிபாய் ரஷாதி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பின் கீழ்  உரை நிகழ்த்தினர்.லுஹர் தொழுகை,மற்றும் உணவு இடைவேளை விடப்பட்டது.முதல் அமர்வு நிறைவு பெற்றது.


இரண்டாவது அமர்வு
மந்திரமா ? தந்திரமா ? மேஜிக் நிகழ்ச்சி

மதியம் 3:00 மணியளவில் திருச்சியை சார்ந்த அகமது அவர்களின் மந்திரமா ? தந்திரமா ? மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது.அஸர் தொழுகைக்கு பின்னர் மெளலவி இக்பால் ஃபிர்தவ்ஸி அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.
எங்களை கவர்ந்த இஸ்லாம்
இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்ட "காயல்பட்டிணம் தாவா சென்டர்" மாணவிகளின் உள்ளம் நெகிழும் உரைகள் நடைபெற்றது.

மூன்றாம் அமர்வு
மகஃரிப் தொழுகைக்கு பின்னர் மூன்றாம் அமர்வு தொடக்கியது.சகோதரர்கள் பெளசூல் ரஹ்மான்,தீன் முகம்மது,அப்பாஸ்,நஸாருதீன் ஆகியோர் முன்னிலையில் தொடக்கியது.மெளலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பிலும்,மெளலவி அப்துல் மஜீது மஹ்ளர் அவர்கள்  பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.
சகோதரர் ஃபவாஸ் அவர்களின் நன்றி உரையுடன் மாநாடு இனிதே நிறைவு பெற்றது.இம்மாநாட்டில்சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.பெண்கள் அதிகமாக கலந்து கொண்டர்கள்.இஸ்லாமிய் பிரச்சாரப்பேரவை சார்பாக நடத்தப்பட்ட இம்மாநாட்டிற்கு பொருளாதார உதவி அளித்த அனைவருக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.அல்லாஹ் அவர்களின்  இரு உலக  வாழ்வையும் சிறப்பாக்கி தர துவா செய்கின்றோம்.

ம்மாநாடு http://tmmkmadukkur.blogspot.in/,www.tmclive என்ற இணையத்தளங்களில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.இதன் மூலமும் பலர் பயனடைந்துள்ளார்கள்.மாநாட்டு பந்தலில் டி.வி மற்றும் அகன்ற திரை முலமாகவும் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பபட்டது.

Tuesday, May 12, 2015

நிதி உதவி தாரீர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் வருகின்ற 16/05/2015 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடைபெற இருக்கின்றது.இம்மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இம்மாநாட்டிற்கு தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.மதுக்கூரில் மின் தடை
மதுக்கூர் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்.நாளை 13/05/2015 புதன் கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூரில் மின் வினியோகம் இருக்காது.( கரண்ட் இருக்காது)
விருப்பமுள்ள சகோதரர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் இத்தகவலை பகிர்ந்து கொள்ளவும்.Saturday, May 9, 2015

நிக்காஹ் வாழ்த்து

மணமக்கள்

S.சேக் தாவூது (த/பெ H. செய்கு நசுருதீன்)

J.சாபிரா (த/பெ M.M.ஜாகீர் உசேன்)

M.சேக் அப்துல் ரஹ்மான் (த/பெ மர்ஹும் A.முகம்மது அலியார்)
A.சர்மிளார் (த/பெ K.S.M.அல்லாப்பிச்சை)

N.பைசல் அகமது (த/பெ மர்ஹும் A.நாகூர் பிச்சை)
J.சர்ஜா பர்வீன் (த/பெ M.ஜாகீர் உசேன்)

மண நாள்
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ரஜப் மாதம் பிறை 20 (10/05/2015) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

Friday, May 8, 2015

ம.ம.க. பொதுச் செயலாளர் கடிதம்
பேரன்புக்குரிய மனிதநேய சொந்தங்களே... ஏக இறைவனின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக!
தரணியெங்கும் வாழும் மனிதநேய மக்கள் கட்சியின் சொந்தங்களை, இனி அடிக்கடி கடிதம் வாயிலாகவும் சந்திக்கப் போகும் பெருமகிழ்ச்சியோடு இம்மடலை வரைகிறோம். அலைகடலில் துள்ளிப் பாயும் மீன்களைப் போல; அரசியல் களத்தில் சீறிப் பாயும் மனிதநேய சொந்தங்கள் நாம்; புதிய உத்வேகத்தோடு இப்போது புறப்பட்டிருக்கிறோம்.
புதுக்குடித்தனம் செல்லும் பிள்ளையைப் போல; பொறுப்புகள் கூடிய உணர்வுகளோடும்; புது ரத்தம் பாய்ச்சப்பட்ட தெம்போடும்; நமது பயணம் திசைக் காட்டப்பட்டிருக்கிறது.
தனித்துவத்தோடும், புதிய அடையாளத்தோடும் பயணிக்கும் இவ்வேளையில் அணுகுமுறையில் நிதானம், முடிவெடுப்பதில் முதிர்ச்சி, களப்பணிகளில் துணிச்சல், வாக்குறுதிகளில் நேர்மை ஆகியவற்றை நெஞ்சில் ஏந்தி கவனமாக செயல்படுவது நமது கடமையாகும்.
சொந்தங்களே...
இந்தியா போன்ற பன்முக சமூகங்கள் வாழும் நாட்டில், சிறுபான்மையினர் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வழிநடத்துவது என்பது எளிதான காரியமில்லை. பன்முக அறிவும், பலவித அனுபவமும், அரசியல் நுட்பமும் கொண்ட தலைமையாலும்; அதற்கேற்ப பக்குவப்படுத்தப்பட்ட தொண்டர்களாலும் மட்டுமே அத்தகைய அரசியல் களத்தை வெற்றிகொள்ள முடியும். இதற்கு நேர்மாறான குணாதியங்களைக் கொண்டவர்களால் இக்களத்தில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.
மனம்போன போக்கில் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவது என்பது ஒரு சமூகத்தையே தற்கொலைப் பாதைக்கு அழைத்துச் செல்வது போலாகிவிடும். அந்தத் தவறை நாம் அனுமதித்து விடக்கூடாது.
எனவேதான் மனிதநேய மக்கள் கட்சியின் இலக்குகளைத் தீர்மானித்து அதை செயல்படுத்துவதில் மிகுந்த நுட்பங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. அவையாவும் வெற்றிகளைக் குறிவைத்து நகர்த்தப்படும் திட்டங்கள் என்பது ஒருபுறம். அதேசமயம் வெற்றிகளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நம்மை நம்பி வரும் மக்களுக்கு வீழ்ச்சிகளை ஏற்படுத்தாதவைகளாக அவை இருக்க வேண்டும் என்ற அக்கறை மறுபுறம் என்பதும் முக்கியமாகும்.
அதாவது கொள்கை உணர்வோடு செயல்படும் அதே வேளையில் அணுகுமுறைகளில் நுட்பங்களை கையாளவேண்டி இருக்கிறது. அவ்வாறு செயல்பட்டால் தான் லட்சியங்களை எளிதாக வென்றெடுக்க முடியும் இது ஒரு சவாலான பணி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை சாதிப்பதில் தான் நமது அரசியல் புத்திசாலிதனம் அமைந்திருக்கிறது.
சொந்தங்களே...
நமது இந்திய தேசம் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டைக் கொண்டது. நமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில், அது சமூக உறவுகளை சீர்குலைக்காத அளவுக்கு கவனமாக முன்னெடுக்க வேண்டியது நமது கடமையாகும். அதனால்தான் நமது அரசியல் முன்னோடிகள் ‘உரிமைக்கு குரல் கொடுப்போம் - உறவுக்கு தோள் கொடுப்போம்’ என்றார்கள்.
இதை ஏன் குறிப்பிடுகிறோம் எனில், பொறுப்பற்ற மேடைப் பேச்சுக்கள்; வெறுப்பேற்றும் எழுத்துப் பதிவு; பொது இடங்களில் பக்குவமற்ற அணுகுமுறைகள் என சிலரின் நடவடிக்கைகள் ஒரு கட்சியை மட்டுமல்ல; ஒரு சமூகத்தையே சந்தியில் நிறுத்திவிடும். அத்தகைய பாதகங்களைத் தடுத்து நிறுத்தி; வாழும் நாட்டின் சூழலுக்கேற்ப; வாழும் கலையைக் கற்றுக்கொடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெரும்பான்மை சமூகங்களின் அன்பையும், ஆதரவையும் தக்கவைக்கும் வகையில் சிறுபான்மையினரின் அரசியல் போக்குகள் இருந்தால்தான் நல்லிணக்கத்துடன் கூடிய வெற்றிகளை சாதிக்க முடியும். அதுதான் அரசியல் களத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வலிமை சேர்க்கும்.
‘அறிவாளிகளைக் கொண்ட கூட்டத்திற்கு ஆயுதங்கள் தேவை இல்லை’ என்றார் கவிஞர் இக்பால் அவர்கள். ஆசியாவின் மூளை என ரவீந்திரநாத் தாகூரால் பாராட்டுப்பெற்ற உலகக் கவிஞர் அவர். அவரது கூற்றை புரிந்து கொண்டு இந்திய சூழலில் தமிழக மனநிலையில் அரசியல் பணி புரிய ஏராளமானோர் நமக்கு தேவைப்படுகிறார்கள். சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற நம் கொள்கைகளை அரசியல் களத்தில் செயல்படுத்த அவர்களை நாம் தயார்படுத்த வேண்டும்.
சொந்தங்களே...
நமது கட்சியில் ‘புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் - 2015’ என்ற பெயரில் லட்சக்கணக்கானோரை உறுப்பினர்ளாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். உழைப்பாளர்களின் சர்வதேச தினமான மே 1 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளோம். மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் நமது ஓய்வறியா உழைப்பின் மூலம் நமது பலத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்ளப் போகிறோம்.சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், வாகன ஊர்வலங்கள், கொடியேற்று நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், வீடு-வீதி சந்திப்புகள், தனிநபர் உரையாடல்கள், சமூக இணையதளங்கள் வழியாகப் பரப்புரைகள், தொலைக்காட்சி - வானொலி விளம்பரங்கள், காணொலி காட்சிகள் என எல்லா வடிவங்களையும் பயன்படுத்தி ‘களங்கள் யாவையும் கையிலெடுப்போம் - பாயும் திசையைத் தீர்மானிப்போம்’ என்ற முழக்கத்தோடு இப்பணிகள் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதோ... எப்போது உத்தரவு வரும்? என காத்திருந்த படை வீரர்களைப் போல நம் மனிதநேய சொந்தங்கள் களத்தில் ஓடத் தொடங்கி விட்டார்கள். மே மாதம் முழுக்க இத்திட்டத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் திருவிழாக்களைப் போல நடத்தப்பட உள்ளன. தலைமை நிர்வாகிகள் அனைவரும் ‘எமர்ஜென்சி’ நிலையில் இயங்கத் தொடங்கி விட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்களது நேரம் நெருக்கடிகளால் நிரம்பி வழிகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்ட உற்சாகத்தில் மாவட்டச் செயலாளர்கள் தளபதிகளாக ஊர், ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாவட்டத்திற்கு 10 ஆயிரம் பேரைக் குறிவைத்து அவர்களது ஓட்டம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுவர்களில் விளம்பரங்கள் மின்னத் தொடங்கி விட்டன.
நமது உற்சாகமான செயல்பாடுகளைப் பார்த்து தாய்க்கழகமாம் தமுமுக பூரிப்படைகிறது. தாய்க்கழக மாவட்டச் செயலாளர்கள் நம்மைத் தொடர்புகொண்டு ‘உங்கள் பணிகளுக்கு எந்த மாதிரியான ஒத்துழைப்புகள் வேண்டும்? நாங்கள் பின்னால் இருந்து ஒத்துழைக்கிறோம்’ என கூறுகிறார்கள். நாம் அங்கு இல்லையே... நமது பெயர் இல்லையே... என்றெல்லாம் குறுகிய பார்வையோடு சிந்திக்காமல், நமது பிள்ளையான மமக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆவலை அவர்கள் வெளியிடுவதும், அதுபோல நடந்துகொள்வதும் நமது குடும்ப உறவை எடுத்துக் காட்டுகிறது. இதைப் புரிந்துகொண்டு பக்குவமாக செயல்படுவது நம் முதிர்ச்சியை வெளிக்காட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சொந்தங்களே...
யாரையெல்லாம் உறுப்பினர்களாக சேர்க்கலாம்? என நீங்கள் கேட்பது புரிகிறது. குடிகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மக்கள் விரோதிகள் ஆகியோரின் நிழலைக்கூட நாம் நெருங்கக்கூடாது. ஆம்! அவர்களெல்லாம் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
பென்குவின் பறவைக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அன்னப்பறவை எப்படி பாலையும், தண்ணீரையும் பிரித்தெடுத்து பருகுமோ, அதுபோல நல்ல தண்ணீரையும், உப்பு தண்ணீரையும் தனித்தனியே பிரித்துக் குடிக்கும் ஆற்றல் பென்குவின் பறவைக்கு உண்டு. அந்த அழகான பறவையின் ஆற்றலைப் போன்றே, நாமும் உறுப்பினர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
பொது ஒழுங்குகளுக்கு உரித்தான பொதுமக்கள் தான் நமது இலக்கு. அவர்கள் யாராகவும் இருக்கலாம். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் என நமது கவனம் விரிய வேண்டும். நமது நீச்சல், குளத்தில் அல்ல... நீலக்கடலில் என்பதை மறந்துவிடக் கூடாது. யாரெல்லாம் நமது சேவை அரசியலை விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரையும் வென்றெடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
ஒரு வளரும் கட்சிக்கு அதன் ஊழியர்கள்தான் தூண்களாக இருக்க முடியும். அவர்களின் உற்சாகமான செயல்பாடுகள்தான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இளமையும், புதுமையும் கைகோர்க்கும் போது பயணமும், பணிகளும் சிறப்பாக இருக்கும். அவற்றோடு முதிர்ச்சியும் இணையும் போது இறையருளால் வெற்றி உறுதிப்படும்.
சொந்தங்களே...
வாருங்கள்! விரைந்து ஓடுங்கள்!
பாறைகளை உடைத்து பாதைகளை அமைப்போம்!
பார்வைகளை விரிவாக்கி பயணங்களை நடத்துவோம்!
மாபெரும் இலட்சியங்களின் புதல்வர்களாய், மக்களை சந்தித்து மாற்றங்களுக்கு விதை விதைப்போம். சிவந்த விழிகளில் கனவுகளை சுமந்து, தலைமுறைகள் வாழ களங்களை வெல்வோம்!
உங்களில் ஒருவன்
மு. தமிமுன் அன்சாரி
மே 16 இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக நடத்தப்படும் வாருங்கள் நன்மையை நாடி.... ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு இடம் சுத்தம் செய்யும் பணிகள் நிறைவுபெற்றது.

அன்பான சகோதரர்களே ! நமதூரில் நடைபெறும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டிற்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை அள்ளித்தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். Thursday, May 7, 2015

+2 தேர்வு முடிவுகள்
மதுக்கூர் காந்தி ஸ்கூல்
முதல் மதிப்பெண் 1153 எம்.ஜெயந்தி
இரண்டாம் மதிப்பெண் 1147 விஷாலினி
மூன்றாம் மதிப்பெண் 1146 சக்தி ஹேமா
காந்தி ஸ்கூலில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ,மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தேர்ச்சி வீதம் 100%

மதுக்கூர் (வடக்கு) பெண்கள் மேல்நிலைப்பள்ளி 
முதல் மதிப்பெண் 1127 செளந்தர்யா
இரண்டாம் மதிப்பெண் 1085 ஹேமலா தேவி
மூன்றாம் மதிப்பெண் 1079 நிவேதா
1000 மதிப்பெண்களுக்கு மேல் சுமார் 15 மாணவிகள் பெற்றுள்ளார்கள்
தேர்ச்சி வீதம் 95%
தேர்வு எழுதியர்களின் எண்ணிக்கை 309
தேர்ச்சி எண்ணிக்கை 292

மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
முதல்மதிப்பெண் -1109 ரஞ்சித்
இரண்டாம் மதிப்பெண்- 1100 மணவழன்
மூன்றாம் மதிப்பெண் -1045 சக்திவேல்
மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 175
தேர்ச்சி பெற்றவர்கள் 141
தேர்ச்சி வீதம் 77%

Wednesday, May 6, 2015

மரண அறிவிப்பு
மதுக்கூர் இடையகாடு (மரியம் நகர்) புதுக்குளம் மேல்கரை பூரான் வீட்டு சேக் அலாவுதீன்,ஹாஜா,ஜெகபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாரும்,ராஜா என்கின்ற அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாருமான அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று 06/05/2015 வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, May 2, 2015

நிக்காஹ் வாழ்த்து
மணமக்கள்
Dr.N.அப்துல்லா (A.நாகூர் பிச்சை (சைல்ஸ்)
Dr.M.H.ஜஸீமா (த/பெ N.முகம்மது ஹுசைன்,தஞ்சாவூர்)

மண நாள்
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ரஜப் மாதம் பிறை 13 (03/05/2015) ஞாயிற்றுக்கிழமை
மண இடம்
ஜெயராம் மஹால் ,தஞ்சாவூர்
மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

புதுமனை புகுவிழா

மதுக்கூர் மேலசூரியத்தோட்டம்(அம்மா குளம் அருகில்) பெரியவர் ம.செ.ஜக்கரியா அவர்களின் இளைய மகன் சகோதரர் சேக்தாவூது அவர்களின் புதிய வீடு குடிபோகும் நிகழ்ச்சி நாளை 03/05/2015 (இன்ஷா அல்லாஹ்) நடைபெறுகின்றது.
சகோதரர் சகோதரர் Z.சேக்தாவூது குடும்பத்தினருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...