அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Friday, October 23, 2015

மதுக்கூரில் எழுச்சியுடன் நடைபெற்ற மமக கொடியேற்று நிகழ்ச்சி

22/10/2015 மாலை 5:45 மணிக்கு மதுக்கூர் நகர எல்லையான மூத்தாக்குறிச்சி பாட்டுவானாச்சி பாலத்திலிருந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான் பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ்,மாநில அமைப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் A.அஸ்லம் பாட்ஷா,மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை IM பாதுஷா ஆகியோர் மதுக்கூர் நகர நிர்வாகிகள்,செயல்வீரர்கள்,சமூக ஆர்வலர்கள் குடைசூழ பேரணியாக அழைத்துவரப்பட்டார்கள்.
பள்ளிவாசல் தெருவில் அமைக்கப்பட்ட கொடிகம்பத்தை நகர தமுமுக பொருளாளர் பொறியாளர் இலியாஸ் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அவர்கள் ஏற்றிவைத்தார்.சிவக்கொல்லை,கீற்றுச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்ட கொடிகம்பத்தை பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அஸ்லம் பாஷா அவர்கள் ஏற்றிவைத்தார்.ஓன்வே பகுதியில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை முன்னிலையில்,மதுக்கூர் நகர செயலாளர் ராசிக் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் ஏற்றிவைத்தார்.பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை  மாவட்ட பொருளாளரும்,பேரூராட்சி கவுன்சிலருமான கபார் தலைமையில் மாநில தலைவர் பேராசிரியர் ஏற்றிவைத்தார்.பின்னர் மதுக்கூர் நகர அலுவலகம் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அமீரக மதுக்கூர் பொறுப்பாளர்கள் சாதிக்பாட்சா அவர்கள் தலைமையில்,அமீரக பொறுப்பாளர்கள் பைசல்,ஜிபிரில்,ஹாலீத்,ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் கொடியினை ஏற்றிவைத்தார்.
கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்ததும் மதுக்கூர் மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியின் நகர அலுவலகத்தை அமைப்புச்செயலாளர்கள் அஸ்லம் பாஷா,பாதுஷா, ஆகியோர் முன்னிலையில் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் மமக அலுவலகத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
மதுக்கூருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது தொண்டர்கள் மத்தியில் எழுச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

"எல்லா புகழும் இறைவனுக்கு"
இறுதி வெற்றி MMK.மதுக்கூரில் மமக மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 22/10/2015 சுற்றுப்பயணம் மேற்கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும்,மாநில நிர்வாகிகளுமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,அஸ்லம் பாட்ஷா,மாநில அமைப்பு செயலாளர் பாதுஷாஆகியோர் நேற்று மதுக்கூருக்கு வருகை தந்தனர்.மதுக்கூர் நகர எல்லையான மூத்தாக்குறிச்சி பாலம் அருகிலிருந்து தமுமுக,மமக தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனங்கள் குடைசூழ பேரணியாக வந்தனர்.அப்போது மகரிப் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டதை அறிந்த பேராசிரியர் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி பெரியப்பள்ளிவாசலில் மகரிப் தொழுகைக்காக சென்றார்.மகரிப் தொழுகை முடிந்தது சட்டமன்ற உறுப்பினர்களை மதுக்கூர் பேராசிரியரும்,முன்னாள் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வரும்,மகான் சேக்பரீது டிரஸ்டிகளில் ஒருவருமான அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் கெளரவித்தார்கள்.மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் டிரஸ்டி அப்துல் காசிம் அவர்களும்,பொருளாளர் அப்துல்லா அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

Wednesday, October 21, 2015

மஸ்ஜித் நூர்
******************

தஞ்சாவூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர்களில் மதுக்கூரும் ஒன்று.மதுக்கூரில் பெரியப்பள்ளி என ஒன்று பல ஆண்டு காலமாக மதுக்கூரில் இருந்து வருகின்றது.அதன் பின்னர் 21/07/1978 ஆம் ஆண்டு மதுக்கூர் பேரூந்து நிலையம் அருகாமையில் ஓர் பள்ளி நிறுவப்பட்டது.அது மேலவீதியில் இருப்பதால் மேலப்பள்ளி என அழைக்கப்பட்டது.
32 ஆண்டுகளுக்கு பின்னர் மதுக்கூர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கத்தின் பெரும் முயற்சியில் புதுத்தெரு பகுதியில் ஓர் இறையில்லம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு  ஓர் அழகிய இறையில்லம் ஏற்படுத்தப்பட்டது.இந்த இறைஇல்லம் 26/03/2000 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல்,மேலப்பள்ளிவாசல் என பள்ளிவாசல்கள் இருந்தாலும் முதன்முதலில் மதுக்கூரில் பள்ளிவாசலுக்கு( " மஸ்ஜித் நூர் ")பெயர் வைத்து அழைக்கப்பட்டது என சிறப்பு பெற்றது இப்பள்ளி.மஸ்ஜித் நூர் பள்ளிவாசலை முன்னிற்று கட்டியவர் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கத்தின் பொருப்பாளர்களில் ஒருவரான பெரியவர் அப்துல் காதர் ஆவார்.இதற்கான பொறியாளர் அப்துல் கறீம் அவர்கள்.இப்பள்ளிவாசலுக்கான பெரும் பொருளாதார உதவியினை மதுக்கூர் பொதுநலக்கமிட்டி செய்து இருந்தது.          

முதல் நாள் இரவு 25/03/2000 பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மேலப்பள்ளியின் இமாம் அல்லாபகஷ்,பெரியப்பள்ளி இமாம் மக்தூம் பாகவி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சகோதரி வேதநாயகி அவர்களும்,பேரூராட்சி தலைவர் சகோதரி புனிதா ஜான் அவர்களும் கலந்து கொண்டார்கள்.பெண்கள் பயான் நிகழ்ச்சியில் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் முகைதீன் மரைக்காயர்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க பொறுப்பாளர் அப்துகாதர் ,அப்துல் ரஜாக்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்க செயலாளர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
                                                                                                           

Tuesday, October 20, 2015

தமுமுக & மமக ஆலோசனை கூட்டம்  (17/10/2015)
************************************************************************
தஞ்சாவூர் (தெற்கு) மாவட்டம் மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மமக ஆலோசனை கூட்டம் பேரூர் கழக அலுவலகத்தில் சகோதரர் A.ஜிபிரில் தலைமையிலும்,மமக நகர செயலாளர் E.S.M.முகம்மது ராசிக்,தமுமுக பேரூர் கழக செயலாளர் A.ஃபவாஸ்,பொருளாளர் பொறியாளர் A.இலியாஸ் அமீரக பொறுப்பாளர் E.S.M.பைசல்ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தீர்மானம்
***************
1.கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அனைத்து சமுதாய மக்களுக்கும் சிறப்பான சேவையினை செய்துவரும் அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) பழுதாகி வரும் நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டின் நன்மையினை கருதி புதிய ஆம்புலன்ஸ் வாங்குவது.

2. பழைய ஆம்புலன்ஸை மக்களின் பயன்பாட்டிற்காக ஜனாஸா வாகனமாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனை செய்யப்பட்டது.

3.வருகின்ற 22/10/2015 அன்று மதுக்கூருக்கு வருகைதரும் சமுதாயத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களையும்,மாநில அமைப்புச்செயலாளர்கள் அஸ்லம்பாஷா,தஞ்சை பாதுஷா ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றுவது,நகர அலுவலகம் திறப்பது .

4.நகரில் அடிக்கடி குறிப்பாக இரவு நேரங்களில் சிலபகுதிகளில் ஏற்படும் மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வுகோரி மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுப்பது

5.மதுக்கூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள மக்களிடம் குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் விழிப்புணர்வு செய்தல்.
6.அதிரையில் நடைபெறும் பெருத்திரள் பொதுக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பது

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுக்குர்பானி மற்றும் குர்பானி பிராணிகளின் தோல் குறித்த வரவு செலவு அதன் பொறுப்பாளர் சகோதரர தாஜுதீன் அவர்கள் வாசித்தார்.
நகர செயல்வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டது.
கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...