அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, November 29, 2014

அமீரகத்தில் தமிழகத்திற்குபெருமை சேர்த்து தந்த அதிரை இலியாஸ் !

எதிர்வரும் அமீரகத்தின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களில் ஒன்றாக அதிரை சகோதரர் ஒருவர் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளது அமீரக வரலாற்றில் ஒன்றாகிபோனது.

நமதூரை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும் ஜாகிர் ஹீசைன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான இலியாஸ் அவர்களின் நேர்மையான ஓரு செயல் நாங்களும் அதிராம்பட்டிணம் தான் என நம்மையும் உளம்மகிழ செய்துள்ளது.

அப்படி என்ன செய்தார்!!!!!
மிகச்சில இடங்களில் சில்லறைகளுக்காக கொலை வரை செல்லும் ஒரு தேசத்திலிருந்து வந்துள்ள நமக்கு, காசு பணத்தை சம்பாதிப்பதை மட்டும் இலட்சியமாக கொண்டு கடல் கடந்து வந்துள்ள நமக்கு திடீரென ஒர் பணப்பை கிடைத்தால் இயற்கையாய் என்ன செய்வோம், குறைந்தபட்சம் மனதளவிலாவது சலனப்படுவோம் ஆனால் சகோதரர் இலியாஸ் அவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பொழுது தான் அல்லாஹ்வுக்கு பயந்தவன் என்பதை செயலில் நிரூபித்தார்.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி துபை கிளாக் டவர் அருகேயுள்ள EMIRATES NBD பேங்க் வெளிப்புறத்தில் ஒரு பையை கண்டெடுக்கின்றார், உள்ளே திறந்து பார்த்தால் 1000 திர்ஹம் நோட்டு கட்டுக்களாக 50,000 திர்ஹம் அனாதையாக கிடக்கின்றது. (சுமார் 7 ½ லட்சம் இந்திய ரூபாய்) பையுடன் பணத்தை கண்டெடுத்தவரின் கால்கள் உடன் முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது, அங்கே போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்த பின்பே நிம்மதியை உணர்ந்துள்ளார்.

2014 நவம்பர் 25 ஆம் தேதி திடீரென முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வர முரக்கபாத் போலீஸ் ஸ்டேசன் சென்றவருக்கு 43 வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் இலியாஸ் அவர்களுக்கு போலீஸ் தலைவர் (முதீர்) அவர்கள் கையால் பாராட்டு சான்றிதழும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கி கவுரவித்தனர். அன்றைய நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ஒரே வெளிநாட்டினர் இவர் ஒருவரே.

இவரது நேர்மையை கொண்டாட இந்தியனாக, தமிழனாக, தஞ்சை தரணியனாக, அதிரை மைந்தனாக ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. இஸ்லாம் கற்பித்த வழியில் பிறருக்கு முன் மாதிரியாய் அமைந்த இந்த அழகிய நிகழ்வை போற்றும் விதமாக நாமும் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

நன்றி :அதிரை நியூஸ் & அதிரை அமீன்.Friday, November 21, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் முகம்மதியர் தெரு மர்ஹும் சின்ன பூண்டியார் ஹபீப் முகம்மது அவர்களின் மகனும்,சேக்பரீது அவர்களின் தந்தையுமான மீன்கடை முகம்மது ஹனிபா அவர்கள் இன்று 21/11/2014 வெள்ளிக்கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Saturday, November 15, 2014

மதுக்கூரில் புதிய (வக்த்) பள்ளிவாசல்
மதுக்கூர் இந்திரா நகரில் இதுவரை சிறப்புடன் இயங்கி வந்த தர்பியத்துல் பனாத் குர் ஆன் மதரஸா ஒரு சில சகோதரர்களின் தொடர் முயற்சியல் இன்று 15/11/2014 சனிக்கிழமை அஸர் தொழுகையிலிருந்து வக்த் பள்ளிவாசலாக செயல்பட மாற்றப்பட்டு உள்ளது.இனிவரும் நாட்களில் தொடர்ந்து 5 வேலை தொழுகையும் மற்றும் மாணவ,மாணவியர்களுக்கு குர் ஆர் மதரஸாவாகவும் செயல்படும்.
எல்லா புகழும் அல்லாஹ்கே.
இம்முயற்சியினை முழுமனதுடன் நிறைவேற்றிய சகோதரர்களுக்கு அல்லாஹ் அதற்கான கூலியை பரிபூரணமாக வழங்க துவா செய்கின்றோம்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக வரும் டிசம்பர் 6 போராட்டக்களத்திற்காக மதுக்கூர் நகரில் சுமார் 20 மேற்பட்ட இடங்களில் மக்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.அவற்றில் சில புகைப்படங்கள்......சமுதாய சொந்தங்களுக்காக சொந்தங்களுக்காக...
Thursday, November 13, 2014

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது.கடந்த இரு தினங்களாக மதுக்கூரில் நல்ல மழை பெய்கின்றது.அவ்வபோது கனமழையும் பெய்கின்றது.இதன் காரணமாக ரோடுகளில் தண்ணீர் வெள்ளமென ஓடுகின்றது.சற்று நேரத்திற்கு முன்னர் கூட (மாலை 5:00 மணிக்கு) நல்ல மழை பெய்தது.கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...