அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Thursday, December 28, 2017

மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர்.முஸ்லிம்களும்,இந்துக்களும் (செட்டியார் சமூகத்தை சார்ந்தவர்களும்) நிறைந்த ஊர்.மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் என்ற ஜும்மா பள்ளி ஒன்று உள்ளது.மதுக்கூரின் இரண்டாவது பள்ளி மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்.
இப்பள்ளியினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய ஜமாத் தலைவர் முகம்மது யாக்கூப் மரைக்காயர் மற்றும் மேலவீதி சங்க முக்கிய பொறுப்பாளர் அல்லாப்பிச்சை இருவரும் சிங்கப்பூர் சென்று இப்பள்ளிக்காக பெரும் நிதி திரட்டி வந்தனர்.

20/07/1978 வியாழன் மாலை வெள்ளி இரவு 9:00 மணியளவில் பெண்களுக்கென பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டு மார்க்க அறிஞர்களால் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஹிஜிரி 1398 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 14  (21/07/1978 வெள்ளி காலை மதுக்கூரின் இரண்டாவது பள்ளிவாசல் மேலப்பள்ளி திறக்கப்பட்டது.இப்பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மதுக்கூரின் அன்றைய ஜமாத் தலைவரும்,பேரூராட்சி தலைவருமானT.A.K. முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களின் சீறிய தலைமையில் நடைபெற்றது.

S.P.N.அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்கள் முன்னிலையிலும்,மேலப்பள்ளி நிர்மாணக்கமிட்டி செயலாளர் M.M.அல்லாப்பிச்சை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும்,நீடுர் அரபிக்கல்லூரி முதல்வருமான M.முகம்மது ரஹ்மத்துல்லா ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் மதுக்கூர் மேலப்பள்ளிவாசலை திறந்து வைத்தார்கள்.

மேலப்பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக

பேராசிரியர் கா.அப்துல் கபூர்
பேராசிரியர் மெளலானா மெளலவி எஸ்.ஆர்.சம்சுல்ஹுதா ஆலிம்
மெளலானா மெளலவி ஓ.எம்.ஜெய்னுதீன் ஆலிம்
மெளலவி அப்துல் லத்தீப் ஆலிம்
மெளலவி கா.மீ.அப்துல் வஹாப் ஆலிம்
மெளலவி இ.சிராஜுதீன் ஆலிம்
மெளலவி எஸ்.முஹம்மது அப்துல் காதர் ஆலிம்

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் நத்தர்ஷா அவர்களும்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க செயலாளர் A.N.M.முகம்மது அலி ஜின்னா அவர்களும் நன்றி நவின்றார்கள்.
Saturday, November 25, 2017

மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி (29/11/2017)
மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி பல்வேறு சிறப்புகளை பெற்றது.ஆரம்ப காலத்தில் ஆரம்ப பள்ளிகூடமாக நிகழ்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தப்பட்டு இன்று சிறப்புடன் செயல்படுகின்றது.இப்பள்ளியின் கட்டிடங்கள் பழமையானதால் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கிராம கல்விக்குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆட்சியாளர்களை அனுகினார்கள்.இவர்களின் முயற்சியால் நபார்டு வங்கியின் உதவியுடன் சுமார் 2 கோடி 27 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்,இரண்டு தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்இரண்டு பள்ளிக்கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பள்ளிக்கட்டிடங்கள் வருகின்ற 29/11/2017 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைக்கின்றார்கள்.இப்புதிய கட்டிடம் வர காரணமாக இருந்த அனைவருக்கும் மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.Thursday, November 23, 2017

மதுக்கூர் தமுமுகவினரின் எழுச்சி
டிசம்பர் 6 1992 ஆம் ஆண்டு கயவர்களால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் அயோத்தியில் மீண்டும் கட்டப்படவேண்டும்.இந்தியாவின் மதச்சார்பின்மையை வலுசேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பாக டிசம்பர் 6 அன்று பல வகை போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களும் அறிந்ததே.
தமுமுக தலைமை அறிவிக்கும் அத்தனை டிசம்பர் 6 போராட்டங்களங்களிலும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மதுக்கூர் தமுமுக மிக விரியமாக செயல்படுவதும் மக்கள் மத்தியில் டிசம்பர் 6 போராட்ட செய்தியினை கொண்டு போய் சேர்ப்பதிலும் தமுமுகவினருக்கு நிகர் தமுமுக வே என்று சொல்லும் வகையில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றார்கள்.
மதுக்கூர் தமுமுகவினரின் போராட்ட விளம்பர யுக்திகளை பார்த்து மாற்றுமதத்தினரும்,மாற்று கட்சி,அமைப்பு சகோதரர்களும் வியக்கும் வண்ணம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சுவர் விளம்பரம்,ஆட்டோ பிளக்ஸ்,துண்டு பிரசுரம்,பைக் ஸ்டிக்கர்,மின் விளக்கு போஸ்டர்,பிளக்ஸ்,தெருமுனை கூட்டம்,இன்னும் ஏராளம்.அல்ஹம்துலில்லாஹ்.
டிசம்பர் 6 போராட்டங்கள விளம்பரங்களுக்கு மதுக்கூர் தமுமுகவினர் தமிழக அளவில் முன்னோடிகளாக திகழ்கின்றார்கள்.எல்லா புகழும் அல்லாஹ்கே !
வீழ்ந்து இருக்கலாம்
பாபரி மஸ்ஜித் அயோத்தியில்
எழுந்து நிற்கின்றது அதே பள்ளிவாசல்
மக்கள்இதயங்களில்....
எங்களின் எழுச்சி தனித்தவன்,தன்னிகரற்றவன் ஏக நாயன் அல்லாஹ்வின் ஆலயம் அயோத்தியில் கட்டி முடிக்கும்வரை ஒயாது.இன்ஷா அல்லாஹ்.
தமுமுக
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சாவூர் மாவட்டம்.
Image may contain: outdoor

Image may contain: outdoor

Friday, September 8, 2017

மத நல்லிணக்கத்தை பேணும் மோகூர்  விநாயகா ஸ்கூல் 


மதுக்கூர் அருகாமையில் மோகூரில் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்கூல் (CBSE)அங்கு படிக்கும் இஸ்லாமிய மாணவர்களை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு தங்களின் பள்ளி வாகனத்தில் அழைத்து வருகின்றார்கள்.அதுவும் இமாம் பிம்பரில் ஏறுவதற்கு முன்பாகவே மாணவர்களை தொழுகைக்கு அழைத்து வந்துவிடுகின்றார்கள்.பல இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் அல்லது இஸ்லாமியர்கள் பங்குதாரர்களாக உள்ள கல்வி சாலைகளில் இஸ்லாமிய மாணவர்களின் தொழுகைக்கு அனுமதி அளிக்க மறுக்கும் காலத்தில் முழுக்க முழுக்க முஸ்லிம் அல்லாத சகோதரர்களால் நடத்தப்படுக்கின்ற கல்வி நிறுவனத்தில் ஜும் ஆ தொழுகைக்கு அனுமதி அளித்து மாணவர்களை தனது பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மாணவர்களை அழைத்து செல்வது தனி சிறப்பு.விநாயக ஸ்கூல் நடத்தும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்புடன்
தமுமுக & மமக
மதுக்கூர் பேரூர் கழகம்.Image may contain: outdoor

Image may contain: 11 people, people standing and outdoor


Image may contain: 9 people, people smiling, people standing and outdoor

Image may contain: 1 person, outdoor

மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கூர் தமுமுகவினர் கோரிக்கை மனு
மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளை 06/09/2017 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவர் விடுதியினையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கு சமைக்கப்படும் உணவையும் ஆய்வு செய்தார்.மதிய உணவும் உட்கொண்டார்.அங்கு சென்ற மதுக்கூர் பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான்,முன்னாள் மமக மாவட்ட செயலாளர் எம்.கபார்.இன்னாள் மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ்,மற்றும் ஹாஜா மைதீன்,நிசார் அகமது ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவை.
1.மதுக்கூர் பேரூராட்சிக்கு உடனடியாக நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்படவேண்டும்.
2.மதுக்கூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 24 மணி நேரமும்பணியாற்றும் வகையில் மருத்துவர் நியமிக்கப்படவேண்டும்.
3.மதுக்கூர் பேரூந்து நிலைய கழிவறை கழிவுகள் அருகில் உள்ள மணியாரங்குளத்தில் கலப்பதால் குளம் மாசு ஏற்படுகின்றது.எனவே உடனடியாக அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

Thursday, May 25, 2017

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக இஸ்லாமிய பிரச்சார பேரவை மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பாக கடந்த நான்கு ஆண்டு காலமாக மதுக்கூரில்
 "வாருங்கள் நன்மையை நாடி " என்ற
தலைப்பில் இஸ்லாமிய மாநாடு,பொதுக்கூட்டம்,கண்காட்சி என மார்க்க நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருகின்றோம்.அதன் ஒரு பகுதியாக 

23/05/2017 செவ்வாய் கிழமை மாலை 7:00 மணியளவில் மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெருவில் சகோதரர் S.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோதரர் M.சேக் ராவுத்தர் இறைவசனம் ஓத.சகோதரர் A,தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினர்.முதல் அமர்வில் துவக்க உரையாக சகோதரர் S.M.ஹாஜா மைதீன் அவர்கள் இப்பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்து இரத்தின சுருக்கமாக விளக்கினார்.

மெளலவி பிலால் பிர்தெளவ்ஸி அவர்கள் "மரண சிந்தனை " என்ற தலைப்பிலும்,ஆலிமா பர்வீன் பானு அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்கள்.

இஷா தொழுகைக்கு பின்னர் இரண்டாவது அமர்வில் மெளலவி ஹுசைன் மன்பஈ அவர்கள் "ரமலானும் சஹாபாக்களும்" என்ற தலைப்பில் நீண்ட உருக்கமான உரையினை நிகழ்த்தினர்.ஹுசைன் மன்ப ஈ அவர்களின் உரையின் இறுதியில் தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நமது சமுதாய சொந்தங்களின் விடுதலைக்காக ரமலானில் அதிகம் அதிகம் துவா செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிகளை M.கபார் தொகுத்து வழங்கினர்.சகோதரர் A.முகம்மது இலியாஸ்,S.முஜிபுர் ரஹ்மான்,அதிரை அகமது ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சகோதரர் மதுக்கூர் A.ஃபவாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.    
Image may contain: 6 people, people standingImage may contain: 2 people, people sitting

Image may contain: 4 people


Image may contain: one or more people and crowd

Tuesday, May 16, 2017

மதுக்கூர் புதிய ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சி

மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் மர்ஹும் K.A.ஜமால் முகம்மது அரங்கத்தில் மதுக்கூர் தமுமுக சார்பாக பொதுமக்களின் பொருளாதார பங்களிப்புடன் புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்குமான புதிய ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சி தமுமுக & மமக மாவட்ட பொருளாளர் A.முகம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி,மமக அமைப்பு செயலாளர்கள் தாம்பரம் யாக்கூப்,தஞ்சை I.M.பாதுஷா,மதுக்கூர் S.M.ஹாஜா முகைதீன்,மதுக்கூர் A. ஃபவாஸ்கான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்கள்.தமுமுக ஆம்புலன்ஸ் சேவை பாராட்டி மதுக்கூர் பகுதியின் அரசியல் பிரமுகர்கள்,ஜமாத் சங்கங்களின் பொறுப்பாளர்கள்,வர்த்தக சங்க நிர்வாகிகள் என பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Image may contain: 10 people, people standingNo automatic alt text available.Image may contain: 7 people, people standingImage may contain: one or more peopleImage may contain: 3 people, people playing musical instruments and people on stageImage may contain: 5 people, people standingImage may contain: 6 people, people standing and outdoorImage may contain: 6 peopleImage may contain: 9 people, people standingImage may contain: 4 people, people on stage and people standingImage may contain: 7 people, people standing and people on stageImage may contain: 6 people, people smiling, people standingImage may contain: 7 people, people standing and people sittingImage may contain: 1 person, on stageImage may contain: 2 people, people on stage and people standingImage may contain: 4 peopleImage may contain: 2 peopleImage may contain: one or more people, people on stage and people standingImage may contain: 4 people, people playing musical instruments and nightImage may contain: 6 people, people standing

Saturday, May 13, 2017

பனிரெண்டாம் வகுப்பு முதல் மதிப்பெண் மாணவ,மாணவியர்களுக்கு பரிசு
நேற்று வெளியிடப்பட்ட +2 தேர்வு முடிவுகளில் மதுக்கூர் அளவில் உள்ள பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்களை மதுக்கூரில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்ப்பணிப்பு நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பரிசுகள் வழங்கி பாரட்டினார்கள்.
மேனிகா (காந்தி ஸ்கூல்) மதிப்பெண் 1133
அகமது ஜாசிம் (பாத்திமா ஸ்கூல்) மதிப்பெண் 1131
சங்கீதா (பெண்கள் மேல்நிலைப்பள்ளி) மதிப்பெண் 1129
சேக் அஸ்மான் (ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) மதிப்பெண் 1027
Image may contain: 5 people, people standingImage may contain: 5 people, people standingImage may contain: 3 people, people standingImage may contain: 3 people, people standing

Saturday, March 18, 2017

சட்டமன்ற உறுப்பினருடன் மமக வினர் சந்திப்பு
மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்ற 25/03/2017 சனிக்கிழமை மதுக்கூர் பேரூர் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் ஒரு நாள் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.
அதை அறிந்த தொகுதி (பட்டுக்கோட்டை )சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் அரசு நிகழ்ச்சிக்காக மதுக்கூர் வருகை தந்தபோது மனிதநேய மக்கள் கட்சியினரை சந்திக்கவேண்டும் என அழைப்பு விடுத்ததின்பெயரில் தமுமுக & மமக பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில்,மாவட்ட செயலாளர் கபார்,பேரூர் கழக நிர்வாகிகள் நிசார் அகமது,ஹாஜா மைதீன் ஆகியோர்அரசு நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு சென்ற மமகவினரை அன்புடன் வரவேற்று கோரிக்கையினை கேட்டு கூடிய விரைவில் மதுக்கூருக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படுவார் என்ற தகவலுடன் கூடுதலாக மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைஅரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என பொதுமக்கள் அனைவரின் முன்னிலையில் பேசினார். மமக வினரின் போராட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார். பேரூர் கழகத்தின் ஆலோசனைக்கு பின்னர் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும். (இன்ஷா அல்லாஹ்)
(முன்னதாக மதுக்கூரில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்களுக்கு மதுக்கூர் பேரூர் கழத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.)
Saturday, January 21, 2017

தமிழர்களின் கலாச்சார போராட்ட களத்திற்கு மத்தியில் தமிழர்களின் உயிர் நாடியான விவசாயத்திற்கான போராட்டம் "சோறுடைத்த சோழ நாட்டின் தலைநகர் தஞ்சையில் சோற்றுக்காக வழி இன்றி வாடும் விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜனவரி 19 தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகளின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்ட பத்திரிக்கை செய்திகள்.கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...