அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Friday, November 29, 2013

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30

மதுக்கூர் சிரமேல்குடிரோடு பக்குமுழிவீட்டு மர்ஹும் சேக்முகம்மது ராவுத்தர் அவர்களின் மகன் லியாக்கத்தலி அவர்கள் இன்று 29/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
 "மக்கள் சேவை " 

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக "மக்கள் சேவை " என்னும் பெயரில் ரேசன் கார்டில் பெயர் நீக்கல்/சேர்த்தல் போன்ற பணிகளை கடந்த இருமாத காலமாக சிறப்பாக செய்து வருகின்றது.கடந்த வாரம் சுமார் 10 ரேசன் கார்டுகள் கோரிக்கையாக பெறப்பட்டு அவற்றில் 6 கார்டுகளுக்கு பெயர் சேர்த்தல்/நீக்கல் பணிகள் செய்து கொடுக்கப்பட்டது.இன்று 29/11/2013 சம்மந்தப்பட்ட கார்டுக்குரியவர்களிடம் கொடுக்கப்பட்டது.
(பயனாளிகள் யாவரும் தாய்மார்கள் என்பதால் புகைப்படம் பிரசுரம் செய்யப்படவில்லை)Tuesday, November 26, 2013


டிசம்பர் 6
(மதச்சார்பற்ற இந்தியாவின் கருப்பு நாள்)


இறை இல்லத்தை மீட்பதற்காக ஒர் தலைமுறை காலமாக போராடும் ஒப்பற்ற சமுதாய பேரியக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மீண்டும் அதே கோரிக்கையினை வலியுறுத்தி டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்பாட்டம்.

நாள் : 06/12/2013 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி

இடம் :மணிக்கூண்டு எதிரில் தஞ்சாவூர் (சாந்தி & கமலா திரையரங்கம் அருகில்)

உரை :கோவை சுல்தான் (தொழிலாளர் அணி மாநில செயலாளர்)

உரிமையுடன் அழைக்கின்றது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
தஞ்சாவூர் (தெற்கு) மாவட்டம்


தமுமுக வின் 18 ஆண்டு கால போராட்ட வரலாறு

1.1995 ------மாநிலம் தழுவிய கடையடைப்பு போரட்டம்.
2.1996 ------கவர்னர் மாளிகை முற்றுகை
3.1997 ------தடையை மீறி முற்றுகை
4.1998 -----முதல்வர் வீடு முற்றுகை
5.1999----  ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம்
6.2000----   பேரணி & ஆர்ப்பாட்டம்
7.2001 -----  பேரணி & ஆர்ப்பாட்டம்
8.2002 -----  -பாபர் மசூதி வழக்கிற்கு நிதி வசூல்
9.2003 ------ பேரணி & ஆர்ப்பாட்டம்
10.2004 ----- டெல்லியில் பேரணி & ஆர்ப்பாட்டம்
11.2005 ------ மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை
 12.2006 -----கையில் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
13.2007 -------நீதி கேட்டு உயர்நீதி மன்றம் முற்றுகை
14.2008------- இரயில் மறியல் போராட்டம்
15.2009 -------பேரணி & ஆர்ப்பாட்டம்
16.2010--------தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
17.2011-------- கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
18.2012---------தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் (தர்ணா)
19.2013--------- அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்                                                                                                                         (இன்ஷா அல்லாஹ்)


தொடர்ந்து 18 ஆண்டுகளாக இப்போராட்டத்தை தமுமுக ஜனநாயக 

வழியில் முன்னெடுத்து வருகின்றது.ஜனநாயகம்,சமூக 

நல்லிணக்கம்,வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய கொள்கைகளில் 

நம்பிக்கையுள்ள நியாயவான்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் 

பங்கேற்க அழைக்கின்றோம்.மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் இராமம்பாள்புரம் தக்வா பள்ளிவாசல் அருகில் நாகூரார்வீட்டு மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,மர்ஹும் முகம்மது ரபி,உஸ்மான்,ஜமால் முகைதீன்,பஷீர் அகமது,மர்ஹும் ஜலாலுதீன்,இமாமுதீன் அவர்களுடைய தாயாருமாகிய மெத்தை வீட்டு சபுரா அம்மாள் அவர்கள் இன்று 26/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, November 20, 2013

பர்தா (ஹிஜாபு)


இன்றைய நவீன உலகில் பெண்களின் கல்வி மிகவும் இன்றியாமையாததாக இருப்பதால் பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்வது தவீர்க்க முடியாத ஒன்றாகவிட்டது.இருபாலரும் இணைந்து படிக்கக்கூடிய பெண்கள் மார்க்கம் வலியுறுத்தும் பர்தா (புர்கா) முறை பின்பற்றுவதில்லை என்பது வேதனையான விஷயம்.ஒரு சில பெண்கள் (மாணவிகள்) புர்காயை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை.இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சிலவற்றை உரிமையுடன் கேட்கும் இஸ்லாமிய பெற்றோர்.பருவம் அடைந்த தனது பெண்  படிக்கும் கல்வி நிறுவனத்தில் மார்க்கம் வலியுறுத்தும் ஹிஜாபு அணிய அனுமதிப்பதில்லை என்பதை தெரிந்தே பள்ளிகளில் சேர்க்கின்றார்கள்.ஹிஜாபு அனுமதி மறுக்கும் பள்ளிக்கூடங்களில் எத்தனை இஸ்லாமிய பெற்றோர் ஹிஜாபு எனது மகளுக்கு வேண்டும் என கேட்டுள்ளார்கள் என்றால் ஆம் நான் கேட்டேன் என பதிலுரைக்கும் பெற்றோர் அற்பமே.அதே வேலையில் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சகோதரர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மாணவிகள் அனைவருக்காகவும் ஹிஜாபை பற்றி கல்வி நிறுவனங்களில் வலியுறுத்தும்போது சில மாணவிகளின் பெற்றோர் இவர்களுக்கு ஏன் ? இந்த வேலை எனது மகள் நல்ல தான் பள்ளிக்கு சென்று வருகின்றாள் என்ற தோனியில் பஜனை செய்கின்றார்கள்.இன்றைய கால சூழலின் ஹிஜாபின் முக்கியத்தை மாற்றுமத சமுதாய பெண்கள் அறிந்துள்ளார்கள்.ஆனால் கடமையாக்கப்பட்ட நாம் அதில் கவனக்குறைவாக இருக்கின்றோம்.அன்பான பெற்றோர்களே மதுக்கூரில் செயல்படுகின்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவியர்களுக்கு ஹிஜாபு அணிய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையினை சமுதாய ஆர்வலர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.கல்வி நிறுவனங்களும் அதை நீங்கள் தானே வலியுறுத்திகின்றீர்கள் ஹிஜாபு விஷயத்தில் பெற்றோரின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து முடிவு செய்கின்றோம் என சொன்னதாக தெரிகின்றது.எனவே அன்பான பெற்றோர்களே !உறவின்முறைகளே ! மதுக்கூரில் உள்ள பள்ளிநிறுவனங்களில் ஹிஜாபு பற்றி  உங்களிடம் கருத்துரைகள் கேட்டால் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்து வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை எடுத்துரைக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல் குர் ஆன் 24:31)

 நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(அல் குர் ஆன் 33:59)உமர்(ரலி) அறிவித்தார் 

நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான். (நூல் :புகாரி 4790)
கருப்பூரார் வீடு & ஆலிம்ஷா வீட்டுத்திருமணம்

நிக்காஹ் வாழ்த்து

மணமக்கள்

M.ராஜிக் முகம்மது (த/பெ A.M.முகம்மது மைதீன்)
J.பாத்திமா சுஹானா (த/பெ M.M.A.ஜெய்னுல் ஆபிதீன்)

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 17 (21/11/2013 வியாழக்கிழமை)

மண இடம்
மணமகள் இல்லம் (மதுக்கூர்-இடையகாடு)

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்
(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)

Saturday, November 16, 2013

 வடக்கு வாழ்கிறது ! தெற்கு தேய்கின்றது ! !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர்.வாரச்சந்தைக்கு பெயர் பெற்ற ஊர்.மதுக்கூரில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும்.இச்சந்தையில் மதுக்கூர், சுற்று புற மக்கள் மட்டும் இன்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் விவசாய பெருமக்கள் தங்களின் விளைப்பொருட்களை இங்கு வந்து விற்பனைசெய்வார்கள்.

 கீற்றுச்சந்தை என நகரின் ஒரு பகுதியில் விவாசாயிகள் தங்கள் வீட்டில்,தோப்பில் இருக்கும் தென்னை ஓலைகளை பிண்ணி கீற்றாக வந்து இங்கு விற்பனை செய்வார்கள்.

கோழி சந்தை இச்சந்தை சேக்பரீது தர்ஹா எதிர்புறம் உள்ள மைதானத்தில் நடைபெறும்,

புளி,மல்லி,மிளகாய் சந்தை இச்சந்தையில் விவசாய பெருமக்களும்,மிளகாய்,மல்லி பெரும் வியாபாரிகளும் தங்களின் பொருட்களை இங்கு வந்து விற்பனை செய்வார்கள்,

கருவாடு சந்தை
அதிராம்பட்டிணம் மற்றும் கடலோரப்பகுதி கருவாடு விற்பனை செய்யும் பெண்கள் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று மதுக்கூர் சந்தையில் முகாமிட்டு தங்களின் வியாபாரத்தை வளர்த்து கொள்வார்கள்.மேலும் பொங்கல் திருநாளில் மதுக்கூரில் பிரத்யோகமாக கரும்பு,மஞ்சள்,வாழை சந்தைகள் நடைபெறும்.


இப்படி சந்தைகளில் புகழ் பெற்ற மதுக்கூரில் சமீப காலமாக சந்தைப்பகுதியில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.காரணம் சூப்பர் மார்க்கெட்டின் ஆதிக்கம் ஒருபுறம்,சந்தையில் அடிப்படை வசதிகள் தேவைகள் இல்லாதது ஒரு புறம்,
மேலும் அதிகமனோர் பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து கொண்டு சரக்கு பெட்டகம் (குடோன்) பயன்படுத்துவதால் சந்தைப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது.என பல புறங்களும் சேர்ந்து மதுக்கூர் சந்தை நிலை குலைந்து போய்விட்டது.தெற்கு தேய்துவிட்டது !பண்டிகைக்காலங்களில் மட்டும் சந்தைப்பகுதியில் சிறப்பு கடைகள் ஏற்படுத்துவதால் கொஞ்சம் மக்கள் நடமாட்டம் உள்ளது.மற்ற காலங்களில் வெறிச்சோடியான நிலைதான் உள்ளது.
பல்வேறு சிறப்புக்களை பெற்ற மதுக்கூர் சந்தை இன்று பொலிவிழந்து உள்ளது.ஆனால் பழைய மதுக்கூர் (வடக்கு) பெரமையா கோவில் பகுதி மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாக மாறி வருகின்றது.அங்குள்ள செல்வேந்தர்கள் புதிய வணிக வளாகங்களை உருவாக்கி வருகின்றார்கள்.மதுக்கூர் பேரூராட்சி எல்லை முடிவுப்பகுதியில் புதிய கடைகளை  மதுக்கூர்வடக்கு  பஞ்சாயத்து நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு (உழவர் சந்தைப்போன்று செட்) கடைகள் முறைப்படி உள்ளூர் வாசிகளுக்கு ஏலம் விடப்பட்டது.மதுக்கூர் நகரின் சந்தை தேய்ந்து வரும் நிலையில் மதுக்கூர் வடக்கு வளர்ந்து வருகின்றது.


மதுக்கூர் சந்தைப்பகுதி பொழிவுபெற வேண்டுமெனில் ஜமாத்துக்கு சொந்தமான கடைகள் உள்வாடகைக்கு விடுவது தவீர்க்கப்பட வேண்டும்.வியாபாரிகளுக்கும்,வாடிக்கையாளர்களுக்கும் தேவையான அத்தியவாசிய தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.
(ஜமாத்துக்கு சொந்தமான கடைகளை உள் வாடகைக்கு கொடுப்பவர்களின் விபரம் விரைவில்...இன்ஷா அல்லாஹ்.

Tuesday, November 12, 2013

கண்டன ஆர்பாட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மதுக்கூர் நகர தலைவர் ஹாஜா மைதீன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை பேரூராட்சி உறுப்பினர் எம்.கபார்.நகர செயலாளர் ESM முகம்மது ராசிக் .கண்டன உரை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா,பங்கு கொண்டவர்கள் புனிதபாரத மக்கள் இயக்க துணைப்பொதுச்செயலாளர் சே.எபினேசர் இன்பநாதன்,தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் சதா.சிவக்குமார்,பிஎப்ஐ நகர பொறுப்பாளர் சேக் அஜ்மல்,நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பழ.சக்திவேல்,தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மதுக்கூர் நகர பொருளாளர் முகம்மது இலியாஸ்,மதுக்கூர் நகர தமுமுக செயலாளர் பெளசூல் ரஹ்மான்,மாவட்ட மாணவரணி ஃபவாஸ்,நகர பொறுப்பாளர்கள் ராசிக்,அமீரக பொறுப்பாளர்கள் ஹபிபுல்லாஹ்,சேக் கலிபா,பைசல்தீன்,ஜிபிரில்,அதிரை அப்துல் ரஹ்மான் உட்பட மற்றும் ஏராளமனோர் கலந்துகொண்டனர்.நன்றியுரை நகர துணைச்செயலாளர் எம்.ஜபருல்லாஹ்.


Monday, November 11, 2013

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுக்கூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்காக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நான்கு வார்டுகளில் போட்டியிட்டு (4,8,9,15) ஒரு வார்டில்  அதாவது 9 வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்  பேரூராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி உறுப்பினர் கடந்த ஆண்டு பேரூராட்சி உறுப்பினருக்கான கணக்குகளை மதுக்கூர் நகர நிர்வாகிகளிடம் சமர்பித்தார்.இது போல இவ்வருடமும் தனது கணக்குகளை சமர்பித்துள்ளார்.நமது மதுக்கூர் தமுமுக இமெயில் வாசகர்களுக்கு அதை  வெளியிடுகின்றோம்.


ஏக இறைவனின் திருப்பெயரால்...
நம் அனைவரின் மீதும் இறைவனின் அன்பும்,அருளும் என்றென்றும் நிலவட்டுமாக !
எல்லா புகழும் இறைவனுக்கே !
நான் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மதுக்கூர் பேரூராட்சி 9 வது வார்டு உறுப்பினர்பொறுப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.(அல்ஹம்துலில்லாஹ்).கடந்த இரு ஆண்டுகளாக பேரூராட்சி உறுப்பினர் என்ற முறையில் பேரூராட்சி தலைவர்,துணைத்தலைவர்,செயல்அதிகாரி,சக உறுப்பினர்கள்,செயல் அலுவலர்கள் மற்றும் நான் சார்ந்த அமைப்பின் செயல்வீரர்கள் உதவியுடன்என்னால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றேன். நான் உறுப்பினராக பொறுப்பேற்றதுமுதல் உள்ள எனது கோரிக்கையான மழை காலங்களில் பட்டாணியர் தெரு சாலையில் மழைநீர் பெருமளவுதேங்கிவிடுகின்றது.இது சம்மந்தமாக பலமுறை மன்ற கூட்டத்தில் பேசியிருக்கின்றேன்.கடந்த 17/06/2013நடைபெற்ற மன்ற கூட்டத்தில் எனது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது (பொருள் எண் :7).எனவே கூடிய விரைவில்பட்டாணியர்தெரு சாலை உயர்த்தி சிமெண்ட் சாலை அமைக்கப்படும்.(இன்ஷா அல்லாஹ்).

மேலும் துணைத்தலைவர் தேர்தல் முதல் இன்று வரை பேரூராட்சி வார்டு உறுப்பினர் என்றமுறையிலும்,பணிநியமன குழு உறுப்பினர் என்ற முறையிலும் நான் யாரிடமும் எதற்காகவும்நேரடியாகவோ,மறைமுகமாகவோ இலஞ்சமோ,கமிஷனோ பெறவில்லை என்ற உறுதியினை படைத்த இறைவன்மீது ஆணையாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பேரூராட்சி உறுப்பினர் பணிகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நிறைகளாக மாற்ற தகுந்தஆலோசனைகளை வழங்க் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன்
M.கபார்
9வது வார்டுஉறுப்பினர்,
மதுக்கூர் பேரூராட்சி,
மனிதநேய மக்கள் கட்சி.
செல்:98658 51693
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30


மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு அத்திக்கடையார் வீட்டு மர்ஹும் முகம்மது யூசுப் அவர்களின் மகனார் முகம்மது அலி அவர்கள் இன்று 11/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, November 5, 2013

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30

மதுக்கூர் இந்திரா நகர் 5 வது தெரு நர்கீஸ் சைக்கிள் கம்பெனி மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும்,காடைவீட்டு அப்துல்கலாம்,ஜபருல்லா,அமானுல்லா ஆகியோரின் சகோதரியுமான ஹவ்வா நாச்சியா அவர்கள் இன்று(05/11/2013) வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
 

Monday, November 4, 2013

மதுக்கூரில் விரும்பதகாத சம்பவம்
மதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) பகுதியில் வசித்துவரும் சகோதரர் சாகுல்ஹமீது அவர்கள் மதுக்கூர் சந்தைப்பள்ளிக்கூடம் எதிரில் PTM என்ற ஹோட்டல் நடத்தி வருகின்றார்.(உணவகம்)இவரின் இளைய மகன் தாரிக் வயது 23.இவர் டிப்ளமோ படித்து உள்ளார்.சகோதரர் தாரிக் தனது தந்தையின் ஹோட்டலில் அத்தாவுக்கு உறுதுணையாக அனைத்து வேலைகளையும் ஆர்வமுடன் செய்வார்.

இந்தியன் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகி மைதீன் என்பவருக்கும் ,தாரிக்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் தீபாவளி அன்று ஹோட்டல் விடுமுறை என்பதால் தாரிக் தனது நண்பர்களுடன் இடையகாடு வேலாடிப்பள்ளம் என்னும் குளக்கரையில் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றார்.அங்கே தனது நண்பர்கள் நியாஸ் அகமது,தாவூதுஷா ஆகியோருடன் வந்த மைதீனுக்கும்,தாரிக்குக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.மைதீன் வைத்திருந்த கத்தியால் தாரிக்கை குத்தியதாக தெரிகின்றது.நிலைகுலைந்த தாரிக் கீழே விழ அருகில் நின்றுகொண்டிருந்த தாரிக்கின் நண்பர்கள் இருசக்கரவாகனத்தில் தாரிக்கை ஏற்றிவைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றுள்ளார்கள்.(தீபாவளி என்பதால் எந்த மருத்துவரும் மதுக்கூரில் இல்லை) காவல் நிலையம் மூலமாக தமுமுக ஆம்புலன்ஸுக்கு தகவல் வர உடனடியாக காவல்நிலையம் சென்ற தமுமுகஆம்புலன்ஸ் படுகாயமடைந்து இருந்த தாரிக்கை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கி விரைந்தது.(இதற்கிடையில் மைதீனின் நண்பர் நியாஸ் என்பவர் தான் தான் தாரிக்கை குத்தினேன் எனக்கூறி மைதீனுடன்சென்று மதுக்கூர் காவல்நிலையத்தில்   சரண்டர் ஆகியிருக்கின்றான். படுகாயத்துடன் இருந்த தாரிக்கை ஆம்புலன்ஸில் மைதீனும் ஏற்றிவிட்டு இருக்கின்றார்)

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்கு பார்க்கமுடியாது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என கூற தஞ்சாவூர் நோக்கி விரைந்து இருக்கின்றார்கள்.ஆனால் தஞ்சாவூர் செல்லும் வழியில் பாப்பநாடு அருகில் தாரீக்கின் பல்ஸ் குறைந்துவிட்டது.தாரீக் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டார்.தஞ்சாவூர்  செல்லும் வழியில் தாரீக் இறந்துவிட்டார்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்)

தாரீக் வஃபாத்தான செய்தி மதுக்கூரில் பரவத்தொடங்கியது.யாரிடமும் எந்த பிரச்சனைக்கும் செல்லாத தாரீக் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.மதுக்கூர் வரலாற்றில் நடைபெறாத ஓர் சம்பவம் நடந்துவிட்டதே என பலரும் மனவேதனையடைந்தனர்.

பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு இரவு 10:30 மணிக்கு தாரீக்கின் உடல் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டது.சகோதரர் தாரீக்கின் வீட்டில் பெருமளவு கூட்டம் கூடத்தொடங்கியது.இரவு தாரீக்கின் தந்தை சாகுல்ஹமீது அவர்கள் மதுக்கூர் காவல்நிலையத்தில் புகார் செய்கின்றார்.மாலை தாரீக்கிற்கும்,மைதீனுக்கும் இடையே ஏற்பட்ட சம்பவங்களை  நேரில் பார்த்த  தாரீக்கின் நண்பர்கள் மைதீன் தான் கத்தியால் தாரீக்கை குத்தினார் என்ற சாட்சியினை கூறினார்கள்.மைதீனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

03/11/2013 காலை 11:00 மணிக்கு பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் தொடங்கிய பிரதேபரிசோதனை சுமார் 12:30 மணிக்கு முடிவு பெற்றது.தாரீக்கின் ஜனாஸா சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் கொண்டுவரப்பட்டது.சற்றுநேரம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட தாரீகின் ஜனாஸா மதியம் சுமார் 1:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.ஜனாஸா தொழுகையில் அதிகமனோர் பங்கு பெற்றனர்.தாரீக்கின் மறுமை வாழ்வுக்காக துவா செய்தனர்.தாரீக்கின் நல்லடக்கத்திற்கு பின்னர் கனத்த இதயத்துடனும்,கலங்கிய கண்ணீர்களுடன் கலைந்து சென்றனர்.மாலை மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்,இருசங்க நிர்வாகிகள்,மற்றும் இளைஞர் பெருமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.பலரின் கருத்துக்களை,ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட ஜமாத்தினர் நல்ல முடிவு எடுக்கின்றோம் என கூறி கலைந்து சென்றனர்.

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.(திருக்குரான் 4:29)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள்" அல்லது "பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது". அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (ஆற்றிய உரையில் பின்வருமாறு) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்" என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் கொலை செய்ய அனுமதி இல்லை.


இதுபோன்ற அல் குர் ஆனின் வசனங்களையும்,அல்லாஹ்வின் திருத்தூதரின் பொன்மொழிகளையும் பின்பற்றி அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய தவ்ஹீத் சிந்தனைவாதிகள் அதிலும் மாநில அளவில் தவ்ஹீத் அமைப்புகளில்,இயக்கங்களில் பொறுப்பில் உள்ளவர்களின் இச்செயல் மிகவும் வேதனைக்குரியது.

சகோதரர் தாரீக் படுகொலை

எங்கள் இறைவனே ! எங்களின் சகோதரன் தாரிக் மீது தாங்க இயலாத பாரத்தை சுமத்தி விடாதே ! தாரீக்கை பொறுத்தருள்வாயாக !கப்ரு வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக !தாரீக்கிற்கு மன்னிப்பு வழங்குவாயாக ! தாரீக்கின் மீது கருணை பொழிவாயாக ! நரகவேதனையிலிருந்து எங்கள் சகோதரனை காப்பாற்றுவாயாக!நல்லவர்கள் கூட்டத்தில் எங்கள் தாரீக்கை சேர்ப்பாயாக ! அர்சின் நிழலுக்குரிய இளைஞர்களின் ஒருவராக எங்கள் சகோதரன் தாரீக்கை இருக்க செய்வாயாக!
யா அல்லாஹ் யாவற்றுக்கும் நீயே பாதுகாவலனாவாய் !

யா அல்லாஹ் இனி ஒருபோதும் இதுபோன்ற ஓர் சம்பவம் எங்களுரில் நிகழ்ந்துவிடாமல் எங்கள் ஊரை பாதுகாப்பயாக!எங்கள் யாவரையும் இறைச்சமுடையோருக்கு முன்னோடிகளாய்த்திகழ செய்வாயாக !

தமுமுக 

மதுக்கூர் நகரம்.

Saturday, November 2, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் முகம்மதியர் தெரு மர்ஹும் அபுசாலிபு அவர்களின் மனைவியும்,மர்ஹும் ஜஹான்,ஷாஜஹான் ஆகியோரின் தாயாருமாகிய ஆபிதா அம்மாள் அவர்கள் இன்று 02/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூர்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மதுக்கூர் பட்டாணியர் தெரு தஞ்சாவூரார் வீட்டு முகம்மது எகியா,அஜ்மல்கான்,லியாக்கத்தலி ஆகியோரின் தகப்பனார் முகம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று 02/11/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூர்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...