இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, November 20, 2013

பர்தா (ஹிஜாபு)


இன்றைய நவீன உலகில் பெண்களின் கல்வி மிகவும் இன்றியாமையாததாக இருப்பதால் பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்வது தவீர்க்க முடியாத ஒன்றாகவிட்டது.இருபாலரும் இணைந்து படிக்கக்கூடிய பெண்கள் மார்க்கம் வலியுறுத்தும் பர்தா (புர்கா) முறை பின்பற்றுவதில்லை என்பது வேதனையான விஷயம்.ஒரு சில பெண்கள் (மாணவிகள்) புர்காயை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை.இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சிலவற்றை உரிமையுடன் கேட்கும் இஸ்லாமிய பெற்றோர்.பருவம் அடைந்த தனது பெண்  படிக்கும் கல்வி நிறுவனத்தில் மார்க்கம் வலியுறுத்தும் ஹிஜாபு அணிய அனுமதிப்பதில்லை என்பதை தெரிந்தே பள்ளிகளில் சேர்க்கின்றார்கள்.ஹிஜாபு அனுமதி மறுக்கும் பள்ளிக்கூடங்களில் எத்தனை இஸ்லாமிய பெற்றோர் ஹிஜாபு எனது மகளுக்கு வேண்டும் என கேட்டுள்ளார்கள் என்றால் ஆம் நான் கேட்டேன் என பதிலுரைக்கும் பெற்றோர் அற்பமே.அதே வேலையில் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சகோதரர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மாணவிகள் அனைவருக்காகவும் ஹிஜாபை பற்றி கல்வி நிறுவனங்களில் வலியுறுத்தும்போது சில மாணவிகளின் பெற்றோர் இவர்களுக்கு ஏன் ? இந்த வேலை எனது மகள் நல்ல தான் பள்ளிக்கு சென்று வருகின்றாள் என்ற தோனியில் பஜனை செய்கின்றார்கள்.இன்றைய கால சூழலின் ஹிஜாபின் முக்கியத்தை மாற்றுமத சமுதாய பெண்கள் அறிந்துள்ளார்கள்.ஆனால் கடமையாக்கப்பட்ட நாம் அதில் கவனக்குறைவாக இருக்கின்றோம்.அன்பான பெற்றோர்களே மதுக்கூரில் செயல்படுகின்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவியர்களுக்கு ஹிஜாபு அணிய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையினை சமுதாய ஆர்வலர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.கல்வி நிறுவனங்களும் அதை நீங்கள் தானே வலியுறுத்திகின்றீர்கள் ஹிஜாபு விஷயத்தில் பெற்றோரின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து முடிவு செய்கின்றோம் என சொன்னதாக தெரிகின்றது.எனவே அன்பான பெற்றோர்களே !உறவின்முறைகளே ! மதுக்கூரில் உள்ள பள்ளிநிறுவனங்களில் ஹிஜாபு பற்றி  உங்களிடம் கருத்துரைகள் கேட்டால் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்து வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை எடுத்துரைக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல் குர் ஆன் 24:31)

 நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.(அல் குர் ஆன் 33:59)



உமர்(ரலி) அறிவித்தார் 

நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான். (நூல் :புகாரி 4790)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...