அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Tuesday, March 24, 2015

மதுக்கூரில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு
வாருங்கள் நன்மையை நாடி...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மார்க்கப்பிரிவான இஸ்லாமியப்பிரச்சார பேரவை சார்பாக வருகின்ற 03/05/2015 (இன்ஷா அல்லாஹ்) ஒருநாள் இஸ்லாமிய மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் நடத்துவது என இன்று நடைபெற்ற மதுக்கூர் பேரூர் கழக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்ற வருடம் போன்று இந்த வருடமும் தாராளமாக பொருளாதார உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன்
இஸ்லாமிய பிரச்சார பேரவை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
மதுக்கூர் பேரூர் கழகம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் புதுத்தெரு (வண்ணக்கொல்லை) தெரு நத்தர்ஷா அவர்களின் தந்தை மீராசா அவர்கள் இன்று 24/03/2015 வஃபாத்தாகிவிட்டார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Sunday, March 22, 2015

நிக்காஹ் வாழ்த்து
மதுக்கூர் தமுமுக முன்னாள் செயலாளர் சகோதரர் எஸ்.சிராஜுதீன்,தமுமுக முன்னாள் நகர தலைவர் "சிறந்த செயல் வீரர்"சகோதரர் A.பெளசூல் ரஹ்மான்.15 வார்டு செயலாளர் சகோதரர் B.புரோஸ் கான் .இல்லத்திருமணம்
மணமக்கள்
B.சபீர் அகமது (த/பெ பசீர் அகமது) அதிரை
M.சஃபானா பேகம் (த/பெ முகம்மது புகாரி)

மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 01 (22/03/2015) ஞாயிற்றுக்கிழமை


மண இடம் 
மதுக்கூர்


மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.தமுமுக அமீரக துபாய் மண்டல பொறுப்பாளர் சகோதரர் சிராஜுதீன்,SDPI மாவட்ட செயற் குழு உறுப்பினர் சகோதரர் ஹாஜி சேக் இல்லத்திருமணம்.
மணமக்கள்
J.பைசல் கான் (த/பெ ஜமால் முகம்மது)
M.மசீரா பேகம் (த/பெ ஹலீல் ரஹ்மான்)


மண நாள் 
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 01 (22/03/2015) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.

Friday, March 20, 2015

சுப்ரமணிய சுவாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களையும்,கிருஸ்தவ தேவாலயங்களையும் இடித்துவிடலாம் என்ற விஷமக்கருத்தை வெளியிட்ட பஜகா மூத்த தலைவர் "தமிழின துரோகி" சுப்ரமணிய சுவாமியைக் கண்டித்து 
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக்கழக தலைமையின் அறிவிப்பின் படிஇன்று தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இன்று (20/03/2015)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் தஞ்சாவூர் முகம்மது பாதுஷா அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க,மதுக்கூர் பேரூர் கழக செயலாளர் மதுக்கூர் பவாஸ் வரவேற்புரை நிகழ்த்தினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,முன்னாள் மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா முன்னிலையில் புரட்சி பாரத (கிருஸ்தவ அமைப்பு) நிர்வாகி எபிநேசன் இன்பநாதன் அவர்களும்,தமுமுக முன்னாள் மாநில செயலாளர்சகோதரர் தர்மபுரி சாதிக் பாட்ஷா அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்கள்.ஆர்ப்பாட்டத்தில் தமுமுக செயல்வீரர்கள்,மற்றும் சகோதர இயக்கங்களான PFI,SDPI,TNTJ,உட்பட ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.முடிவில் முன்னாள் நகர தலைவர் ஜபருல்லா நன்றியுரை நிகழ்த்தினர்.


Thursday, March 19, 2015

அல்லாஹ்வின் திருப்பெயரால்

பள்ளிவாசல்களையும்,கிருஸ்தவ தேவாலயங்களையும் இடித்து தள்ளலாம்,அவைகள் வழிபாட்டு தலங்கள் அல்ல ! என விஷம கருத்தினை வெளியிட்ட பாஜக மூத்த தலைவர் சு.சாமியை கைது செய்ய வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் :20/03/2015 வெள்ளிக்கிழமை  மாலை 5:00 மணி (இன்ஷா அல்லாஹ்..)
இடம் : முக்கூட்டுச்சாலை .மதுக்கூர்.
கண்டன உரை : தர்மபுரி Y.சாதிக் பாட்ஷா அவர்கள் (முன்னாள் மாநில செயலாளர் தமுமுக)
கயவர்களின் கருத்துகளுக்கு எதிராக களம் காண கழகம் அழைக்கின்றது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
மதுக்கூர் பேரூர் கழகம்.தஞ்சாவூர் மாவட்டம்.


Wednesday, March 18, 2015

அல்ஹம்துலில்லாஹ்

மதுக்கூர் (பெரியப்பள்ளிவாசல்) ஜும் ஆ பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.இன்று 18/03/2015 காலை சரியாக 10:00 மணியளவில் பெரியப்பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் தலைவர் முகைதீன் மரைக்காயர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள்,சங்கங்களின் நிர்வாகிகள்,ஜமாத் பெருமக்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள் கலந்து கொள்ள புதிய பள்ளிக்கான அடிக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் பணிகள் நிறைந்து முடிவு பெற துவா செய்யப்பட்டது.
Tuesday, March 17, 2015

புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டுவிழா
மதுக்கூரில் மையப்பகுதியில் அமைந்துள்ள இறைஇல்லம் பெரியப்பள்ளிவாசல்.இப்பள்ளிவாசல் 1904 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது.இப்பள்ளிவாசலை காலம்சென்ற பெரியவர் TAKA யாக்கூப் மரைக்காயர் அவர்கள் முன்புறமாகவும்,அதன் பின்னர் காலம்சென்ற TAKMஜலீல் மரைக்காயர் பக்கவாட்டிலும் (அகழ் பகுதியிலும்) விரிவுப்படுத்தி,புனரமைப்பு செய்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
நமதூர் பெரியப்பள்ளிவாசலை புதியப்பள்ளிவாசலாக கட்டவேண்டும் என்ற பலரின் எண்ண்த்தின் அடிப்படையில் தற்போது நிர்வாகத்தில் உள்ள பெரியவர்களின் முழு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.அதன் முதல்பகுதியாக கடந்த வாரம் 09/03/2015 ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள்,மதுக்கூரின் இரு கண்கள் என வர்ணிக்கப்படும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகப்பெருமக்கள்,மதுக்கூர் சேவையாற்றும் ஆலிம் பெருமக்கள் ஆலோசனை செய்து நாளை 18/03/2015 புதியப்பள்ளிவாசலுக்கு (பெரியப்பள்ளி) அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக அமையவும்,புதியப்பள்ளிவாசல் கட்டிடப்பணிகள் விரைந்து நிறைவேறவும் துவா செய்வோம்.ஒத்துழைப்போம்.

இறைஇல்ல கட்டுமானப்பணிக்கு தங்கள் அனைவரும் தாராளமாக நிதி உதவி செய்யுங்கள்.


Monday, March 16, 2015

மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக today 13/03/2015மெயின் ரோட்டில் இந்தியன் வங்கி அருகில் தமுமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ய்ன் பொறுப்பாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் கழக கொடியினை ஏற்றிவைத்தார்.உடன் நகர நிர்வாகிகள் தலைவர் பவாஸ்,முன்னாள் தலைவர் ஜபருல்லா,மாவட்ட துணைச்செயலாளர் ராசிக்,ஹாஜா மைதின்ன் மற்றும் வார்டு கிளை செயலாளர்கள் ,பொறுப்பாளர்கள்.Thursday, March 12, 2015

மதுக்கூரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி
தமுமுக மதுக்கூர் பேரூர் கழக 15 வார்டு கிளை சார்பாக சூரியத்தோட்டம் ரேசன்கடை அருகாமையில் துபாய் மண்டல பொறுப்பாளர் சகோதரர் டைகர் சிராஜுதீன் கழக கொடியினை இன்று 12/03/2015 ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமிரக பொறுப்பாளர்கள் முஜிபுர் ரஹ்மான்,சேக்ஜலால்,மதுக்கூர் ராவுத்தர்ஷா,தமுமுக நகர செயலாளர் பவாஸ்,நகர பொருளாளர் முகம்மது இலியாஸ்,முன்னாள்,இன்னாள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.15 வது வார்டு கிளை நிர்வாகிகளுக்கு பேரூர் கழக நிர்வாகிகள் நன்றியினையும்,பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துகொண்டனர்.


Wednesday, March 11, 2015

நிக்காஹ் (திருமண) வாழ்த்து

மணமக்கள்
S.ரிஃபாய்தீன் (த/பெ Z.சதக்கத்துல்லா)
M.நாஜினி (த/பெ மர்ஹும் E.முகம்மது அபுபக்கர்)

மணநாள்
ஹிஜிரி 1436 ஆம் வருடம் ஜமாதுல் அவ்வல் மாதம் பிறை 20 (12/03/2015 வியாழக்கிழமை)

மண இடம்
மணமகள் இல்லம் இராமம்பாள்புரம்,மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்
பொருள் :அல்லாஹ் உமக்கு அகத்திலும்,புறத்திலும்,பாக்கியம் நல்குவானாக .
உங்கள் இருவரையும் நல்ல காரியங்களில் ஒருங்கினைப்பானாக

வாழ்த்துக்களுடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக)
மதுக்கூர் பேரூர் கழகம்Monday, March 9, 2015

மதுக்கூர் பெரியப்பள்ளிவாசல் புதிய பள்ளி வாசல் அடிக்கல் நாடும் நிகழ்ச்சி
மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலை புதுப்பிக்கும் வண்ணம் நமதூர் ஜமாத்தார்கள்,இரு சங்க நிர்வாகிகள் இணைந்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 18/03/2015 புதன் கிழமை காலை 10:00 மணி அளவில் (இன்சா அல்லாஹ்) புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
அனைவரும் கலந்து கொள்ளவும்
மேலும் புதியப்பள்ளிவாசலுக்கு (பெரியப்பள்ளி) தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.Thursday, March 5, 2015

மதுக்கூர் அஞ்சலகம் (Post office) இடமாற்றம்
மதுக்கூர் பெரியச்செட்டித்தெருவில் இதுவரை இயங்கி வந்த மதுக்கூர் அஞ்சல் அலுவலகம்.கடந்த 01/03/2015 முதல் கொல்லைத்தெருவில் (மஹா சூப்பர் மார்க்கெட் பின்புறம்) உள்ள கேப்டன் S.N.S.M.அப்துல் அஜீஸ் காம்ப்லக்ஸில் இயங்கிவருகின்றது.

Monday, March 2, 2015

                                                      துவா செய்கின்றோம்

நாளை 05/03/2015 +2 (பனிரெண்டாம்) வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது.இன்ஷா அல்லாஹ்.
இத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ கண்மணிகளும் சிறப்புடன் தேர்வுகள் எழுதவும்.கற்ற கல்வியினை சமுதாய,சமூக முன்னேற்றத்திற்காக நல்வழியில் பயன்படுத்தவும்.பிரார்த்திக்கின்றோம்.


                                                       அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) மாணவரணி
மனிதநேய மக்கள் கட்சி.மாணவர் இந்தியா
பேரூர் கழகம்.மதுக்கூர்
கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...