அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Tuesday, October 22, 2013குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/நீக்குதல்/திருத்தம் பணிகள்

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகர அலுவலகத்தில் குடும்ப அட்டையில் (ரேசன் கார்டு) பெயர் திருத்தம்,நீக்கம்,சேர்த்தல் போன்ற பணிகளுக்கு உரிய மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறையில் சமர்பிக்கப்பட்டு மேற்கண்ட பணிகள் நிறைவேற்றித்தரப்படுகின்றது..நமது கிளையின் இச்சேவை மூலம் பயனடைந்த பயனாளி ஒருவருக்கு பெயர் திருத்தம் மற்றும் சேர்த்தல் பணிகள் நிறைவு பெற்று சம்மந்தப்பட்ட பயனாளியிடம் குடும்ப அட்டையினை மதுக்கூர் நகர தலைவர் எம்.ஹாஜா மைதீன் அவர்களும்,அமீரக பொறுப்பாளர் எஸ்.பைசல்தீன் அவர்களும் ஒப்படைத்தபோது எடுத்த படம்.


Monday, October 21, 2013

மதுக்கூரில் ஆர்ஃபனேஜ் (அனாதை இல்லம்)

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) நகர கூட்டம் நேற்று (20/10/2013) மாலை மதுக்கூர் நகர அலுவலகத்தில் நகர தலைவர்  ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
 மதுக்கூரில் ஓர் ஆர்ஃபனேஜ் (அனாதை இல்லம்) ஏற்படுத்த வேண்டும் என்ற மதுக்கூர் நகர முன்னாள்,இந்நாள் நிர்வாகிகளின் நீண்ட நாள் திட்டம் தீர்மானமாக இயற்றப்பட்டது.அதற்கான முதற்கட்ட பணிகளையும் நகர தமுமுக தொடங்கியுள்ளது.ஆர்ஃபனேஜ் ஏற்படுத்துவது சம்மந்தமாக வாசகர்களின் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.மேலும் ஆர்ஃபனேஜ் ஏற்படுத்துவதற்கு வீடு  தேவைப்படுகின்றது என்பதைதெரிவித்துக்கொள்கின்றோம்.(ஏதேனும் வீடு வாடகைக்கு இருந்தால் எங்களது நகர நிர்வாகிகளிடம் தெரியப்படுத்தவும்),பொருளாதார உதவிகளையும் நகர தமுமுக உங்களிடம் எதிர்நோக்கும் இன்ஷா அல்லாஹ்...அன்பு கூர்ந்த சமுதாய சொந்தங்கள் ஆர்ஃபனேஜ் ஏற்படுத்துவது சம்மந்தமாக ஆக்க பூர்வமான ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குங்கள்.


இக்கூட்டத்தில் குர்பானி தோல் கணக்குகள்  பொறுப்பாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது

மொத்த ஆட்டுத்தோல்கள் 53 

ஒரு தோலின் விலை ரூ 300 வீதம் 52 தோல்கள் விற்க்கப்பட்டது,ஒரு தோல் சற்று சேதமடைந்து இருந்ததால் ரூ 100 க்கு விற்க்கப்பட்டது.

மொத்த மாட்டுத்தோல் 11

ஒரு மாட்டுத்தோல் ரூ 700 வீதம் விற்க்கப்பட்டது,ஒரு தோல் மட்டும் ரூ 500 வீதம் விற்க்கப்பட்டது

ஆட்டுத்தோல்52 x 300 =           15600
ஆட்டுத்தோல்1  x 100  =               100
மாட்டுத்தோல்10x700   =             7000
மாட்டுத்தோல்1 x 500   =               500
 கூடுதல் ரூ                                    23200

(குறிப்பு: மாட்டுத்தோல் ஒன்று இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மதுக்கூர் கிளையின் சார்பாக கொடுக்கப்பட்டது)

குர்பானி தோல் விற்ற பணம் முழுவதும் மதுக்கூர் வாழ் ஏழை,எளிய மக்களுக்கும்.வறியவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகர தமுமுக அலுவலகத்தில் குடும்ப அட்டை (ரேசன் கார்டில்) பெயர் சேர்த்தல்.நீக்குதல்,பெயர் திருத்தம் போன்ற பணிகள் தமுமுக நகர கிளையின் சார்பாக செய்து கொடுக்கப்படுகின்றது பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்தி கொள்ளவும்.

Sunday, October 20, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் இடையகாடு பாய்க்கடை A.M.பாரூக்,A.சதக்கத்துல்லா ஆகியோரின் சகோதரரும்,முகம்மது அலி,ஜாகீர் உசேன்,ஜியாவுல் ஹக்,அப்துல் ஹாதி ஆகியோரின் தகப்பனாருமான A.அமானுல்லா அவர்கள் இன்று 20/10/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, October 19, 2013

கருப்பூரார்.கே.எஸ்.உதுமான் அவர்கள் இல்லத்திருமணம்

மணமகன்
U.அலி ஜலால் (த/பெ K.S.உதுமான்)

மணமகள்
R.ரஹிமா பர்வீன் ((த/பெ M.K.A.ரபீக்)

மணநாள்
ஹிஜிரி 1434 வருடம் துல்ஹஜ் பிறை 14 (20/10/2013) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
மதுக்கூர்

மண வாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்
கருப்பூரார்.கே.எஸ்.உதுமான் அவர்கள் இல்லத்திருமணம்

மணமகன்
U.அலி ஜலால் (த/பெ K.S.உதுமான்)

மணமகள்
R.ரஹிமா பர்வீன் ((த/பெ M.K.A.ரபீக்)

மணநாள்
ஹிஜிரி 1434 வருடம் துல்ஹஜ் பிறை 14 (20/10/2013) ஞாயிற்றுக்கிழமை

மண இடம்
மதுக்கூர்

மண வாழ்த்து

பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்

Friday, October 18, 2013

எல்லா புகழும் அல்லாஹ்கே !
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக குர்பானி பிராணிகளின் தோல்களை இந்த வருடம் முதன்முதலாக வசூல் செய்யப்பட்டது.அனைவரின் ஒத்துழைப்புடன்  52 ஆட்டுத்தோல்கள் வசூல் செய்யப்பட்டது.ஒரு தோல் ரூ 300 வீதம் விற்பனை செய்யப்பட்டது.இதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள தொகை முழுவதும் மதுக்கூரை சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்படும்.குர்பானி தோல் கொடுத்த சகோதர ,சகோதரிகளிடம் கணக்குகள் முறைப்படி ஒப்படைக்கப்படும்.(இன்ஷா அல்லாஹ்...)Monday, October 7, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் பெரியச்செட்டித்தெரு மர்ஹும் அ.முகம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும்,அகமது கபீர்,சேக்பரீது (முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர்) ஆகியோரின் அண்ணனும்,தாவூத் அவர்களின் தகப்பனாரும்,எஸ்,கே.முகம்மது முஸ்தபா அவர்களின் மாமனாருமான கமாலுதீன் அவர்கள் இன்று 07/10/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

(குறிப்பு :மறைந்த கமாலுதீன் அவர்கள் சமுதாய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர்.அவர் எழுப்பும் நாரே தக்பீர் !  அல்லாஹ் அக்பர்  !! என்ற முழக்கம் இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.)பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
கூட்டு குர்பானி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகரக்கிளையின் சார்பாக கூட்டு குர்பானி பங்கு ஒன்று
 ரூ 1200 /= மட்டுமே !

மேலும் நீங்கள் குர்பானி கொடுக்கும் பிராணிகளின் (ஆடு,மாடு) தோல்களை எங்களுக்கு தந்து ஏழை,எளிய மக்களுக்கு உதவிடுவீர் !


தொடர்புக்கு : 9597771520 (தாஜுதீன்),
                          9600258800 (சாகுல் ஹமீது)


Saturday, October 5, 2013

மதுக்கூர் சன் கார்டனில் கடந்த 21/02/2013 அன்று முத்தாய் மலர்ந்தது மஸ்ஜித் .இப்பள்ளி சூரியத்தோட்டத்தில் கட்டப்பட பல நல்லுள்ளங்கள் பெரும் முயற்சிகள் எடுத்து அல்லாஹ்வின் கிருபையால் வெற்றியும் பெற்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..உழைத்த நன்மக்களை நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்.

பெரும் முயற்சியில் எழுப்பப்பட்ட இப்பள்ளியில் கழிவறை வசதி சற்று குறையாகவே உள்ளது.ஏனெனில் இங்கு உள்ள இரு கழிவறைகளும் "வெஸ்டன் டைப்" கொண்டது.ஒரு கழிவறை பள்ளியின் இமாம் (ஹஜ்ரத்) பயன்பாட்டிற்காக உள்ளது.ஹஜ்ரத்தை தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது (பூட்டி இருக்கும்).மற்றொன்று பொது பயன்பாடு.இப்பள்ளியில் மற்ற பள்ளிகளில் உள்ளது போன்று சிறுநீர் கழிக்க தனி கழிவறை இல்லை (தற்காலிகமாக உளூ செய்யும் இடம் அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ளது பெரும்பாலனோர் பயன்படுத்துவதில்லை காரணம் அசுத்தமான வாடை)

கழிவறை வெஸ்டன் டைப் கொண்டுள்ளதாக இருப்பதாலும்,மிகவும் சிறியதாக இருப்பதாலும் (இருக்கின்ற இடத்தில் அமைத்துள்ளார்கள்) இக்கழிவறையில் சிறுநீர் கழிப்பவர்கள் பெரும்பாலனோர் நின்று கொண்டுதான் சிறுநீர் கழிக்கவேண்டிய நிர்பந்தமாக உள்ளது (கைலி அணிந்து இருந்தாலும்).உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் வெஸ்டன் டைப் கழிவறையில் முகம் படும் அளவில் உள்ளது.இப்பள்ளிவாசல் அமைய முயற்சி எடுத்த சகோதரர்கள் "வெஸ்டன் டை"ப்பை "இந்தியன் டைப்" கழிவறையாக மாற்றலாம்.அல்லது முழுவதுமாக ஒருகழிவறை சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கலாம்.

ஏனெனில் அதிகமான சகோதரர்கள் இப்பள்ளியில் தங்களின் இறைக்கடமையினை நிறைவேற்றுகின்றார்கள்.குறிப்பாக மார்க்கெட் பகுதியில்,மெயின்ரோட்டில் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் இங்கு தான் தொழுகைக்காக வருகின்றார்கள்.எனவே சிரமம்பாரமல் சிறுநீர் கழிக்க வசதியினை ஏற்படுத்தி தருமாறு அன்புடன் கேட்க்கொள்கின்றோம்.Thursday, October 3, 2013

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)மதுக்கூர் பெரியார் நகர் ஜமால் மளிகை மர்ஹும் செய்யது உசேன் அவர்களின் மகனும்,PSKM அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்களின் மருமகனும்,ஜமால் முகம்மது அவர்களின் அண்ணனுமாகிய சதக்கத்துல்லா அவர்கள் இன்று 03/10/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் கீழ சூரியத்தோட்டம் பூண்டியார் வீட்டு மர்ஹும் நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும்,சேக் அலாவுதீன்,இத்ரீஸ்,சலீம் ஆகியோரின் தாயாருமான பரீதா அம்மாள் அவர்கள் இன்று 03/10/2013 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, October 2, 2013

நன்றி !

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக ) சார்பாக கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி உதவிடுவீர் என்ற தலைப்பில் மதுக்கூர் மெளலானா தோப்பு நிஜாம் ராஜா ,ஜெய்லானி தம்பதியரின் மகன் சேக்பரீது (வயது15) என்ற மாணவனின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தது.இதற்கான மருத்துவ செலவுக்கு உதவி கேட்டு இமெயில் அனுப்பி இருந்தோம்.பலர் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட்ட மாணவனின் மருத்துவ செலவுக்கு நேரடியாகவும்,சிலர் நமது சமுதாய பேரியக்கம் தமுமுக மதுக்கூர் நகர கிளையின் மூலமாகவும் பொருளாதார உதவிகளை அனுப்பி இருந்தனர்.

மாணவன் சேக்பரீதுக்கு இன்னும் ஒருவாரத்தில் சிறுநீரகம் அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது.எனவே தமுமுக சார்பாக வசூல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ 34000/= இன்று (02/10/2013) மாணவன் சேக்பரீது மற்றும் குடும்பத்தினரிடம் தமுமுக மதுக்கூர் நகர பொறுப்பாளர்கள் ராசிக் அகமது,ஜபருல்லா,நாஸரூதீன் ஆகியோர் ஒப்படைக்கப்பட்டது.

தமுமுக சார்பாக உதவி செய்தவர்கள்

துபாய் பணி செய்யும் சகோதரர் (SKM சபி மூலமாக)                   5000 /=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                    5000 /=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                   2000 /=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                  1000/=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                  100/=

19/08/2013 சவூதியில் பணியாற்றும் சகோதரர் மூலமாக (வங்கி மூலமாக)         1500/=

19/08/2013 துபாய் பணியாற்றும் சகோதரர்  (வங்கி மூலமாக GCC Exchange)        4020/=

28/08/2013 துபாய் பணியாற்றும் சகோதரர் (வங்கி மூலமாக)         5250/=

துபாயில் பணியாற்றும் சகோதரர் தந்தையார் மூலமாக (தமுமுக பிரதிநிதி வசம் )10000/=

ஆக கூடுதல் ரூ 33870/= வசூலானது.என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் மாணவன் சேக்பரீது அறுவை சிகிச்சைக்கு மேலும் பொருளாதார உதவிகள் தேவை என மாணவனின் பெற்றோர் நம்மிடம் தெரிவித்து உள்ளார்கள்.யாரும் உதவி செய்ய விரும்பினால் நமது தமுமுக மதுக்கூர் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

(குறிப்பு மேற்படி மாணவனின் மருத்துவ செலவுக்காக நமதூர் பெரியப்பள்ளிவாசலில் ஆகஸ்ட் மாதம் ஒரு  ஜும்மா தொழுகையில் ரூ 9000 /=,மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசலில் ரூ 12300/= வசூல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட மாணவனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது)

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...