இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, October 2, 2013

நன்றி !

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக ) சார்பாக கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி உதவிடுவீர் என்ற தலைப்பில் மதுக்கூர் மெளலானா தோப்பு நிஜாம் ராஜா ,ஜெய்லானி தம்பதியரின் மகன் சேக்பரீது (வயது15) என்ற மாணவனின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தது.இதற்கான மருத்துவ செலவுக்கு உதவி கேட்டு இமெயில் அனுப்பி இருந்தோம்.பலர் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட்ட மாணவனின் மருத்துவ செலவுக்கு நேரடியாகவும்,சிலர் நமது சமுதாய பேரியக்கம் தமுமுக மதுக்கூர் நகர கிளையின் மூலமாகவும் பொருளாதார உதவிகளை அனுப்பி இருந்தனர்.

மாணவன் சேக்பரீதுக்கு இன்னும் ஒருவாரத்தில் சிறுநீரகம் அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது.எனவே தமுமுக சார்பாக வசூல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ 34000/= இன்று (02/10/2013) மாணவன் சேக்பரீது மற்றும் குடும்பத்தினரிடம் தமுமுக மதுக்கூர் நகர பொறுப்பாளர்கள் ராசிக் அகமது,ஜபருல்லா,நாஸரூதீன் ஆகியோர் ஒப்படைக்கப்பட்டது.

தமுமுக சார்பாக உதவி செய்தவர்கள்

துபாய் பணி செய்யும் சகோதரர் (SKM சபி மூலமாக)                   5000 /=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                    5000 /=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                   2000 /=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                  1000/=

மதுக்கூரில் (தமுமுக பிரதிநிதி வசம் கொடுத்தவர்)                  100/=

19/08/2013 சவூதியில் பணியாற்றும் சகோதரர் மூலமாக (வங்கி மூலமாக)         1500/=

19/08/2013 துபாய் பணியாற்றும் சகோதரர்  (வங்கி மூலமாக GCC Exchange)        4020/=

28/08/2013 துபாய் பணியாற்றும் சகோதரர் (வங்கி மூலமாக)         5250/=

துபாயில் பணியாற்றும் சகோதரர் தந்தையார் மூலமாக (தமுமுக பிரதிநிதி வசம் )10000/=

ஆக கூடுதல் ரூ 33870/= வசூலானது.என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் மாணவன் சேக்பரீது அறுவை சிகிச்சைக்கு மேலும் பொருளாதார உதவிகள் தேவை என மாணவனின் பெற்றோர் நம்மிடம் தெரிவித்து உள்ளார்கள்.யாரும் உதவி செய்ய விரும்பினால் நமது தமுமுக மதுக்கூர் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

(குறிப்பு மேற்படி மாணவனின் மருத்துவ செலவுக்காக நமதூர் பெரியப்பள்ளிவாசலில் ஆகஸ்ட் மாதம் ஒரு  ஜும்மா தொழுகையில் ரூ 9000 /=,மஸ்ஜித் இஃக்லாஸ் பள்ளிவாசலில் ரூ 12300/= வசூல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட மாணவனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது)





No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...