அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Monday, December 14, 2015

களப்பணியே எங்கள் கழகப்பணி...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக பொதுமக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து இரு கட்டங்களாக நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.இதன் மதிப்பு சுமார் 5 இலட்சம் ஆகும்.பல நபர்கள்,குடும்பங்கள் எங்களிடம் பல நிவாரப்பொருட்களை கொடுத்தார்கள்.சுமார் 6 மூட்டை அரிசி இரு நபர்களால் கொடுக்கப்பட்டது.மதுக்கூர் பெரியச்செட்டிதெருவில் உள்ளஆயிஷா டெக்ஸ் என்ற நிறுவனத்தால் சுமார் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள ஆடைகளையும்,மதுக்கூர் மார்க்கெட் லைனில் உள்ள ரெடிமேட் சென்டர் என்ற நிறுவனம் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளையும் நிவாரணப்பொருட்களாக கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.பல பெண்கள் தங்கள் வீட்டில் இருந்த புதிய துணிகளை கொடுத்தார்கள்,ஸ்டீபன் என்ற சகோதரர் ரூ 4 ஆயிரம் மதிப்புள்ள கொசுவர்த்தீகளை வாங்கிகொடுத்தார்.பலர் தைலம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்தார்கள்.இப்படி அவரவர் சக்திக்கு உட்பட்டு நிவாரணப்பொருட்களாக கொடுத்தார்கள்,அமீரக நண்பர்களும் தங்கள் பங்கிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தார்கள்.

இவை அனைத்தையும் ஆலோசனைகள் செய்து,கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளான மமக செயலாளர் பெரியவர் மதார்ஷா பாய்,தமுமுக மாவட்ட செயலாளர் சகோதரர் ஜபார் அலி ஆகியோரின் ஆலோசனைகளின்படி பாதிக்கப்பட்ட கிராமங்களை நோக்கி சென்று மக்களை நேரடியாக சந்தித்து நிவாரணப்பொருட்களை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி கடலூர் மாவட்டத்தில் களப்பணியினை செய்து மனநிறைவுகளுடன் மதுக்கூர் வந்தடைந்தோம்.

"எல்லா புகழும் இறைவனுக்கே"


Sunday, December 13, 2015

மதுக்கூர் முக்கிய பிரமுகர்கள் பேரூர் கழக (தமுமுக) அலுவலகம் வருகை
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களை காப்பாற்றும் பணிகளிலும்,நிவாரண உதவிகள் செய்யும் பணிகளிலும் இஸ்லாமிய அமைப்புகள் இறை பொருத்தத்தை நாடி சிறப்பாக செய்துவருகின்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பாக தமுமுக & மமக தீபாவளிக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் மழையிலிருந்து தனது நிவாரணப்பணிகளை தொடர்ந்து செய்துவருகின்றது.
மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மமக சார்பாக கடந்த 08/12/2015 செவ்வாய்கிழமை முதல் கட்ட
நிவாரணப்பொருட்கள்டன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்து வந்ததை அறிவீர்கள்.சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகை மதிப்புள்ள நிவாரணப்பொருட்களுடன் இரண்டாம் கட்டமாக இன்று 13/12/2015 மதுக்கூர் பேரூர் கழக தமுமுக கடலூர் மாவட்டம் புறப்பட்டு சென்றுஅங்குள்ள நிர்வாகிகளின் ஆலோசனையின்படி நிவாரண உதவிகள் செய்துவருகின்றார்கள்.
மதுக்கூர் பேரூர் கழகத்திலிருந்து நிவாரணப்பொருட்கள் செல்வதை நண்பர்கள் வட்டம் மூலம் அறிந்த மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி தலைவர் TAKA முகைதீன் மரைக்காயர்,அவர்கள்,மதுக்கூர் காவல் ஆய்வாளர் கிங்ஸ் தேவ் ஆன்ந்த்,உதவி காவல் ஆய்வாளர் அவர்கள்,கவுன்சிலர் NPM ரியாஸ் அகமது அவர்கள்,திமுக பிரமுகர் SNS ஹாஜா முகைதீன் அவர்கள்,தமாகா பிரமுகர் புஷ்பா நாதன் அவர்கள்,தொழில் அதிபர் MSA செய்யது முகம்மது (சேனா) அவர்கள்,சமூக ஆர்வலர் A.ஜாகீர் உசேன் அவர்கள் என பலரும் அலுவலகம் வருகை தந்து நிவாரணபொருட்களை பார்வையிட்டு பணியாற்றிய செயல்வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தார்கள்.
"எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே "


Wednesday, December 9, 2015

தன்னார்வ பணிகளில் தமுமுக.............
மக்கள் சேவைகளில் மனிதநேயமக்கள் கட்சி...
 (அல்ஹம்துலில்லாஹ்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் பணியினை தூய்மையான எண்ணங்களுடன் செய்துவருகின்றார்கள்.குறிப்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக),மனிதநேய மக்கள் கட்சி (மமக) தீபாவளிக்கு முன்னர் ஏற்பட்ட மழை சேதங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவது,நிவாரண உதவிகளை மேற்கொள்வது என தனது பணியினை தொடர்ந்து இன்றுவரை ஓய்வின்றி செய்து வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்..

தஞ்சாவூர் (தெற்கு) மாவட்டம் சார்பாக குறிப்பாக மதுக்கூர்,அதிராம்பட்டிணம்,பட்டுக்கோட்டை,முகம்மது பந்தர் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 5 இலட்சம் மதிப்பிளான நிவாரணப்பொருட்களுடன்.நேற்று நள்ளிரவு மதுக்கூர் நகர அலுவலகத்திலிருந்து அதிராம்பட்டிணம்,பட்டுக்கோட்டை அவசர கால ஊர்திகள் மற்றும் நிவாரண பொருட்களை ஏற்றிவந்த 4 வாகனங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை பாதுஷா,தமுமுக (தெற்கு) மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார் ஆகியோர் முன்னிலையில் கடலூரை நோக்கி பயண மேற்கொண்டோம்.

விருத்தச்சலத்தில் உள்ள நவாப் மஸ்ஜித் தமுமுக,மமக பொறுப்பாளர்கள் எந்தஎந்த பகுதிகளுக்கு உதவிகள் தேவை என கணக்கிட்டவண்ணம் இருந்தார்கள்,அவர்களின் ஆலோசனை படி மங்கலப்பேட்டை அருகில் உள்ள சமத்துவபுரத்திற்கும் மற்ற சுற்றுபகுதிக்கும் சேர்ந்து சுமார் 15 குடும்பங்களுக்கு  உணவுப்பொருட்கள் கொடுக்கப்பட்டது.தொடர்ந்து நெய்வேலி பயணித்து வாகனம் செல்லும் வழியில் அங்கங்கே மக்கள் தங்களின் கரங்களை நீட்டி எங்க பகுதிக்கு நிவாரண பொருட்கள் வேண்டு என நிவாரண வாகனங்களை கேட்ட வண்ணம் இருந்தார்கள்.

மாவட்ட (ஆட்சியர்) போல செயல்படும் மமக,தமுமுக செயலாளர்கள்
***********************************************************************************************
நெய்வேலியில் தமுமுக,மமக சார்பில் நிவாரண  பணிகள் மாவட்ட செயலாளர்கள் மதார்ஷா (மமக),ஜபார் அலி (தமுமுக),சாதிக் பாய் (நகர செயலாளர்) ஆகியோர் தலைமையில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளியை மைய இடமாக வைத்து சிறப்பாக செயல்படுவதை அறிந்து மெய்சிலித்து போனோம்.பல கிராம நிர்வாக அலுவலர்கள்,பல கட்சியினை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள்,பல கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம தலைவர்கள் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிக்கு வருகை தந்து மாவட்ட நிர்வாகிகளிடம் எங்கள் பகுதிக்கு நிவாரண உதவிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.அவற்றை மாவட்ட நிர்வாகிகள் இரண்டு சகோதரர்களை அனுப்பி பார்வையிடுகின்றார்கள்.பின்னர் தகுதியான பகுதிக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் எடுத்து சென்று வினியோகம் செய்யப்படுகின்றது.அவ்வாறு விசாரிக்கப்பட்ட பகுதிகளின் ஒன்றான சேத்தியதோப்பு பகுதியில் உள்ள மதுவானைமேடு என்ற கிராமத்திற்கு சென்றோம்.அங்கு சுமார் 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம்.பின்னர் அருகில் இருந்த பல ஆதி திராவிடர் கிராமங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினோம்.சென்ற இடங்களில் சில பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறை பாதுகாப்புடன் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மக்களுக்கு சேவை செய்ய பலர் முயற்சிகள் செய்து தங்களின் பணிகளை விட்டு களத்திற்கு வருகின்றார்கள்.ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்பு கூர்ந்து பொறுமையுடன் உங்கள் உதவிகளை பெற்று கொள்ளுங்கள்.

அண்டை வீட்டார் பசித்திருக்க தன் மட்டும் வயிறார உணவு உண்பவன் உண்மை முஸ்லிம் அல்ல என்று போதித்த இஸ்லாமிய சமுதாயத்தின் பேரியக்கம் தமுமுக,மமக தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரியட்டும்.

எல்லா புகழும் அல்லாஹ்கே.

வழங்கப்பட்ட பொருட்கள்
1.அரிசி
2.து.பருப்பு
3.ரவா
4.சீனி
5.தீப்பெட்டி
6,மெழுகுவர்த்தி
7.கடுகு
8,S.F.ஆயில்
9.டீ தூள்
10.பால் பவுடர்
11. ஹார்லிக்ஸ்
12.குழம்பு தூள்
13.மிளகாய் தூள்
14.பிஸ்கட்
15.ரஸ்க்
16.துண்டு (டவல்)
17.நைட்டி
18.சர்ட்
19.புடவை
20.பேன்ட்
21.மாத்திரைகள்
22.தைலம் 
23.சேற்று புண்ணிற்கு மருந்து
24.பேஸ்ட்
25.ஃபிரஸ்
26.தேங்காய் எண்ணெய்
27.சிறுமி,சிறார்களுக்கான உடைகள்
28.கொசுவர்த்தி
மேலும் பல பொருட்கள் கொடுக்கப்பட்டது.

(இது மட்டுமில்லாது மதுக்கூர் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பயன்படுத்தப்பட்ட நல்ல நிலையில் உள்ள உடைகள்)
குறிப்பு : இன்றும் தஞ்சாவூர் (தெற்கு மாவட்டம் ) சார்பாக பேராவூரணி,ஆவணம் பகுதிகளிலிந்து கொடுக்கப்பட்டது.

மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக மதுக்கூரிலிருந்து இரண்டாம் கட்ட நிவாரண் பொருட்களுடன் விரைவில் செல்ல இருக்கின்றோம்.உதவி செய்ய எண்ணம் உள்ள சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும்.
A.ஃபவாஸ் 97158 58328
A.Er.முகம்மது இலியாஸ் 97891 55480
M.கபார்  9865851693

Monday, December 7, 2015

டிசம்பர் 6 2015 போராட்டக்களம்.
                                                   ***************************************************

மதுக்கூரிலிருந்து கருப்பு சட்டை அணிந்து போராட்ட களத்திற்கு புறப்பட்ட தமுமுகவினர் !
**********************************************************************************************************************************
இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் பெறுவதற்காகவும், பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் முடிக்கவும், இடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுகவினர் தமிழகமெங்கும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.அதற்காக மதுக்கூர் பேரூர் கழக செயல்வீரர்கள் கடந்த 15 தினங்களுக்கு மேலாக களப்பணிகளை தீவிரமாக செயல்பட்டார்கள்
அதிரை நகர தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இன்று தஞ்சையில் நடைபெற இருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமுமுக மாவட்ட பொருளாளர் ESM முகம்மது ராசிக்,பேரூர் கழக செயலாளர் மதுக்கூர் A. பவாஸ் ஆகியோர் தலைமையில் தலைமையில் இளம் சிறுவர்கள் உட்பட அதிரையிலிருந்து கருப்பு சட்டை அணிந்து போராட்ட களத்திற்கு 8 க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக தமுமுக மதுக்கூர் பேரூர் கழக அலுவலகத்தில் இன்று காலையில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக மறைந்த மதுக்கூர் பேரூர் கழக அமீரக பொறுப்பாளர் ஜமால் முகம்மது அவர்களின் சகோதரரும்,முகநூல் பிரபலமான சாகுல் அத்தா அவர்கள் மதுக்கூர் வடக்கு வரை வருகை தந்து வாகனங்களை வழியனுப்பிவைத்தார்.


தஞ்சாவூர் கொட்டும் மழையில் டிசம்பர் 6 போராட்டக்களம்
************************************************************************************
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பாக டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஆர்ப்பாட்டம் காலை 11:45 மணிக்கு தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேசன் அருகில் மாவட்ட தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அகமது ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார் வரவேற்புரை நிகழ்த்தினர்.
சகோதரர் மதுக்கூர் ஃபவாஸ் கண்டன கோஷங்களை எழுப்பினர்.மாநில செயலாளர் சகோதரர் கோவை உமர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.தமிழ்தேசிய இயக்க தோழர் வைகறை உரை நிகழ்த்தினர்.தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தமுமுக,மமக மாவட்ட,பேரூர்,வார்டு கிளை உறுப்பினர்கள்,சமுதாய போராளிகள்,தன்னார்வ நண்பர்கள்குழுவினர்,தாய்மார்கள்,இளைஞர்கள்,
சிறார்கள்,கொட்டும் மழையில் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பம் முதல் முடிவும் வரை கனமழை இடைவிடாத பெய்துகொண்டு இருந்தது.தாய்மார்கள் கொஞ்சமும் களையாமல் கைக்குழந்தைகளுடன் கலந்துகொண்டார்கள்.தஞ்சாவூர் நகர செயல்வீரர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


சமுதாய போராட்டக்களத்தில் சமூக பணி
*****************************************************************
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஒரு தலைமுறை காலமாக (20 வருடங்களாக) போராட்டக்களத்தை வகுத்து செயல்படும் சமுதாய பேரியக்கம் தமுமுக இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற கருஞ்ச்சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆர்ப்பாட்ட முடிவில் வெள்ளநிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது.புகழ் அனைத்தும் அல்லாஹ்கே.
 கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...