அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Wednesday, February 26, 2014

மனிதநேய மக்கள் கட்சி எழுச்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் கடந்த 23/02/2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் நாடளுமன்றம் நோக்கி...என்ற தலைப்பில் சமூக போராளி இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் எழுச்சிப்பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடந்தது.( புகழ் அனைத்தும் அல்லாஹ்கே)

சகோதரர் எஸ்.சாகுல்ஹமீது அவர்களின் இனிய வரவேற்புடனும் மமக மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்களின் எழுச்சி தலைமை உரையுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.மமக மதுக்கூர் பேரூராட்சி உறுப்பினர் கபார் அவர்கள் மதுக்கூரில் மனிதநேய மக்கள் கட்சி மேற்கொள்ளும் பணிகளை பட்டியலிட்டார்.அதனை தொடர்ந்து மமக கொள்கை விளக்க பேச்சாளர் சகோதரர் பழனி பாரூக் அவர்கள் உரைக்கு பின்னர் மமக மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் மன்னை செல்லச்சாமி அவர்கள் தேவர் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இருந்த சுமூக உறவுகளையும்,பல்வேறு கட்டங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களின் எளிய அனுகுமுறைகளையும் அவருக்கு உண்டான பேச்சு நடையில்  சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினர்.இறுதியாக மாநில பொதுச்செயலாளர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்கள் அய்யா நம்மாழ்வரை நல்லெண்ணத்தை எடுத்துரைத்துவிட்டு மோடி தலைமையிலான குஜராத் அரசின் வீழ்ச்சிகளை பட்டியலிட்டு கூறினார்.இறுதியாக நகர செயலாளர் சாகுல்ஹமீது அவர்களின் நன்றி உரையுடன் பொதுக்கூட்டம் சிறப்பாக முடிந்தது.


மதுக்கூர் நகர புதிய நிர்வாகிகளால் இப்பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டதை உணர்ந்த பொதுச்செயலாளர் புதிய நிர்வாகிகளை வெகுவாக பாரட்டினார்.புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பாக சிறப்பாக செயல்பட்ட முன்னாள் நிர்வாகி சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் பணி பாரட்டக்கூடியதாக இருந்தது.


Tuesday, February 25, 2014

மரண அறிவிப்பு

மதுக்கூர் புதுத்தெரு மர்ஹும் முகம்மது ராவுத்தர் அவர்களின் மகனும்,AKM காதர் மைதீன்,AKM அஜ்மல்கான்,AKM ஜமால் முகைதீன்,AKM தாஜுதீன்,AKM நஜ்முதீன்,AKM சர்புதீன்,AKM ஜியாவுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய A.K.M.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று 25/02/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Tuesday, February 18, 2014

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சிரமேல்குடி ரோடு (கீற்றுச்சந்தை) பேட்டையார் வீட்டு மர்ஹும் முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மகனும்,அஜ்மல்கான்,உபையத்துல்லா,அப்துல்பர்கான் ஆகியோரின் அண்ணனுமாகிய பசீர் அகமது அவர்கள் இன்று 18/02/2014 துபாயில் (சார்ஜா) வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, February 17, 2014

அன்பாளன்..அருளாளன் திருப்பெயரால்..

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில்

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்
நாடாளுமன்றம் நோக்கி....
அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

நாள் : 23/02/2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணி

இடம் : இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வர் அரங்கம்
       (முக்கூட்டுச்சாலை.மதுக்கூர்)

தலைமை
மதுக்கூர்  K.ராவுத்தர்ஷா அவர்கள் (மாநில அமைப்புச்செயலாளர் மமக)

சிறப்புரை

சகோதரர் M.தமிமுன் அன்சாரி MBA அவர்கள் (மாநில பொதுச்செயலாளர் மமக)
சகோதரர் R.சரவணப்பாண்டியன் MABL அவர்கள் (மாநில துணைப்பொதுச்செயலாளர் மமக)
சகோதரர் மன்னை செல்லச்சாமி அவர்கள் (மாநில அமைப்புச்செயலாளர் மமக)
சகோதரர் பழனி M.I. பாரூக் அவர்கள் (தலைமை கழக பேச்சாளர் மமக)

Saturday, February 15, 2014

மதுக்கூர் நகர தமுமுக தலைவர் மற்றும் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோருக்கு விருது 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) நகர தலைவராக இருப்பவர் சகோதரர் ஜபருல்லா.இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு குளத்தில் முழ்கிய மூன்று குழந்தைகளை தான் ஒரு ஆளாக இருந்து போராடி (அல்லாஹ்வின் கிருபையால்) காப்பாற்றினர்.இவரின் இச்செயலை பாராட்டியும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சகோதரர் நஸாருதீன் அவர்களின் சிறந்த சேவைகளை பாராட்டியும் இன்று 15/02/2014 சனிக்கிழமை மதுக்கூர் முத்தமிழ் அறிவியல் மன்றம் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டது.


ஜபருல்லா -வீரதீர செயல்
நசாருதீன் -நல் ஓட்டுநர் விருது

எல்லா புகழும் அல்லாஹ்கே !


விருது பெற்ற சகோதரர்கள் இருவரையும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் பாராட்டினார்கள்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் (அமீரகம்) செயல்வீரர்
 சகோதரர் M.முகம்மது ஜாசிம்  இல்லத்திருமணம்.

நிக்காஹ் வாழ்த்து

இறைவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்து மனைவியரைப்படைத்தான்:நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக!உங்களிடையே அன்பையும்,கருணையும் தோற்றுவித்தான்.திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன.(திருக்குர் ஆன் 30:21)

ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லறத்தைப் போன்று வேறு எதனையும் காணமாட்டீர்கள்.(நபி மொழி)

மணமக்கள்

M.முகமம்து நயீம் (M.முகம்மது சபி)
H.சமீரா (A.ஹாஜா அலாவுதீன்

மணநாள்
ஹிஜிரி 1435 ஆம் ஆண்டு ரப்புய்யுல் ஆஹிர் மாதம் பிறை 15 (16/02/2014 ஞாயிற்றுக்கிழமை)

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக் கல்லாஹு லக வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீகைர்

(உங்கள் இருவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக,நன்மையான காரியங்கள் அனைத்திலும் உங்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைப்பானாக)


Thursday, February 13, 2014

மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் பள்ளிவாசல்தெரு பட்டுக்கோட்டை நைனா முசா அவர்களின் மகளும்,மர்ஹும் A.S.M. அப்துல் கறீம் அவர்களின் பேத்தியுமான தீனுனிசா அவர்கள் இன்று(13/02/2014) மவுத்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, February 12, 2014

மக்கள் சேவை

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக கடந்த 5 மாதங்களாக குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்தம்,போன்ற பணிகள் சிறப்புடன் செய்யப்பட்டு வருகின்றது.இன்று சுமார் ஐந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மேற்படி பணிகள் செய்து கொடுக்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ்கே !

பழைய புகைப்படம்

மதுக்கூர் நகர தமுமுக தலைவர் மற்றும் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோருக்கு விருது அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (தமுமுக) நகர தலைவராக இருப்பவர் சகோதரர் ஜபருல்லா.இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு குளத்தில் முழ்கிய மூன்று குழந்தைகளை தான் ஒரு ஆளாக இருந்து போராடி (அல்லாஹ்வின் கிருபையால்) காப்பாற்றினர்.இவரின் இச்செயலை பாராட்டியும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சகோதரர் நஸாருதீன் அவர்களின் சிறந்த சேவைகளை பாராட்டியும் வரும் 15/02/2014 சனிக்கிழமை அன்று முத்தமிழ் அறிவியல் மன்றம் சார்பாக விருதுகள் வழங்கப்படுகின்றது.

ஜபருல்லா -வீரதீர செயல்
நசாருதீன் -நல் ஓட்டுநர் விருது


எல்லா புகழும் அல்லாஹ்கே !

Monday, February 10, 2014

மரண அறிவிப்பு


அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் புதுத்தெரு ஹாஜா மைதீன் அவர்களின் தந்தையும்,மக்கள் ஸ்டோர் நிஜாம் அவர்களின் மாமனருமாகிய கருப்பூரார் வீட்டு கண்ணுமுழியார் என்கின்ற முகம்மது இபுராகீம் அவர்கள் இன்று 10/02/2014  வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, February 8, 2014

மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் (தெற்கு)மாவட்டம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி துவக்கி 5 ஆண்டுகள் நிறைவு பெற்று 6 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நேற்று பிப்ரவரி 7 ஆம் தேதி மாலை மதுக்கூர் நகரில் சுமார் 9 இடங்களில் கழக கொடி ஏற்றிவைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகிகள் முன்னிலை வசித்தனர்.நகர தலைவர் ஆற்றல்மிகு செயல்வீரர் சகோதரர் ஜபருல்லா அவர்கள் தலைமையில் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று மமக கொடியேற்றிவைக்கப்பட்டது.முன்னாள் ரியாத் மண்டல பொறுப்பாளர் அதிரை அப்துல் கபூர் மரைக்காயர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அதிரை சாகுல்ஹமீது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.சகோதரர்கள் சாதிக்பாட்சா,மதுக்கூர் அமீரக பொறுப்பாளர் அசாரூதீன்,நகர செயலாளர் இவே சாகுல்ஹமீது,முன்னாள் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான்,மாவட்ட துணைச்செயலாளர் ESM முகம்மது ராசிக்,செய்யது இபுராகீம் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.


Monday, February 3, 2014

மரண அறிவிப்பு


அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் புதுத்தெரு மாப்பிள்ளைத்தம்பி வீட்டு அப்துல்வஹாப் அவர்களின் மனைவி மரியம் பீவி அவர்கள் இன்று( 03/02/2014) வஃபாத்தாகிவிட்டார்கள்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...