அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, October 11, 2014

நிக்காஹ் வாழ்த்து


மணமக்கள்
A.முகம்மது இத்ரீஸ் (த/பெ A.அமானுல்லா)
S.ஷிஃபானா (த/பெ M.N.சேக் அலாவுதீன்)

மணநாள் 
ஹிஜிரி 1435 துல்ஹஜ் மாதம் பிறை 17 (12/10/2014) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 

மதுக்கூர்மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

மதுக்கூர் தமுமுக அமீரக பொறுப்பாளர் சகோதரர் பாபு (என்கின்ற) சேக் கலிபா (எஸ்.கே) திருமணம்
மதுக்கூர் தமுமுக நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர்  முகம்மது அசாரூதீன் மற்றும் 
நிசாருதீன் இல்ல திருமணம்

மணமக்கள்
M.சேக் கலிபா (த/பெ S.முகைதீன் அப்துல் காதர்)
M.ஹனான் பீவி (த/பெ A.முகம்மது மைதீன்)

மணநாள் 
ஹிஜிரி 1435 துல்ஹஜ் மாதம் பிறை 17 (12/10/2014) ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 
மதுக்கூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

Tuesday, October 7, 2014

மதுக்கூரில் கூட்டு குர்பானி
மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக கூட்டுக்குர்பானி 12 மாடுகள் கொடுக்கப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அமீரகத்திலிருந்து சேர்ந்த பங்குகளுக்காக 4 மாடுகளும்,உள்ளூர் வாசிகள் கொடுத்த பங்குகளுக்காக இன்று செவ்வாய்கிழமை 8 மாடுகளும் குர்பானி கொடுக்கப்பட்டது.இந்த பணிகளில் மதுக்கூர் தமுமுகவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்,குறிப்பாக அமீரக அன்பர்கள் சர்புதீன்,பைசல்,நிஜாமுதீன்,ஜாசிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்,
மாடுகளில் இறைச்சிகளை இஸ்லாமியபெரியோர்கள்,தாய்மார்கள் வந்து வாங்கி சென்றார்கள்.ஏழைகளுக்கு வீடு தேடி வினியோகம் செய்யப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே !

Monday, October 6, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மதுக்கூர் பட்டாணியர் தெரு முன்னாள் கவுன்சிலர் அப்துல் கனி (சமையல் மாஸ்டர்) அவர்களின் மாமனாரும்,கோழிக்கடை அப்துல் ரஷீது,கோழிக்கடை முகம்மது ஆகியோரின் தந்தையுமான கடலைக்கடை ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று 06/10/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.
மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)

Saturday, October 4, 2014

அன்பான சமுதாய சொந்தங்களுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அனைவரும் ஹஜ் பெருநாள் (தியாகத்திருநாள்) நல்வாழ்த்துக்கள்.
தங்கள் இல்லங்களில் கொடுக்கப்படும் குர்பானி பிராணிகளின் தோல்களை நமதூர் (மதுக்கூர்) தமுமுக வினரிடம் கொடுத்து காஷ்மீர் மக்களுக்கும் நமதூரை சார்ந்த ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


Wednesday, October 1, 2014

மதுக்கூர் தமுமுக வின் முன் முயற்சி
மதுக்கூரில் ஏராளமான சகோதரர்கள் ஹஜ் பெருநாளைக்கு குர்பானி கொடுக்கின்றார்கள்.அப்படி குர்பானி கொடுக்கும் பிராணிகளின் தோலை நமதூரில் செயல்படும் பல அமைப்புகள்,இயக்கங்கள் (தமுமுக உட்பட) பெற்று அவரவர் தலைமையின் வழிகாட்டலின்படி அதை உரிய வழியில் பயன்படுத்துகின்றார்கள்.அனைத்து இயக்கங்கள்,அமைப்புகளை ஒருகிணைந்து நமதூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் தலைமையில் ஓர் குழு அமைத்து குர்பானி பிராணிகளின் தோல்களை வசூல் செய்து நமதூர் ஏழைகள் பயன்படும் வகையில் அதை உரியவர்களுக்கு பங்கீட்டு கொடுக்கலாம் என்ற நோக்கில் கடந்த வாரம் மதுக்கூர் ஜாமிய மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர்,செயலாளர் ஜனாப் சதக்கத்துல்லா,மிப்தாஹுல் சங்க தலைவர் ஜனாப் அஜீஸ் ரஹ்மான்,செயலாளர் ஜனாப் ஹாஜா முகைதீன்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜனாப் ஜபருல்லா,ஆகியோரை சந்தித்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் மதுக்கூர் ராசிக்,மதுக்கூர் நகர தமுமுக தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மற்றும் நகர நிர்வாகிள் அளித்தார்கள்.
கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...