அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, September 27, 2014

மதுக்கூரில் தமுமுக மாநில துணைத்தலைவர்
நேற்று 26/09/2014 வெள்ளிக்கிழமை ஒரு நாள் சுற்றுபயணமாக தஞ்சாவூர் மாவட்டம் வருகை தந்த சமுதாய பேரியக்கம் தமுமுகவின் நிறுவனரும்,மாநில தமுமுக துணைத்தலைவருமான பெரியவர் குணங்குடி அனிபா அவர்கள் மாலை 4:30 மணிக்கு மதுக்கூர் நகர் அலுவலகம் வந்தார்.அவரை மாவட்ட துணைச்செயலாளர் ராசிக் அவர்கள் தலைமையில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் பவாஸ்,மாணவர் இந்திய நகர நிர்வாகி முகம்மது மர்சுக், மற்றும் தமுமுக நிர்வாகிகள் வரவேற்றார்கள்.தமுமுக நகர நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகள் செய்தார்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி கோரியும்.தமுமுகவின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்காயர் அவர்களையும்,மதுக்கூர் பேரூராட்சி தலைவர் ஜனாப் பசீர் அகமது அவர்களையும்,சமூக ஆர்வலர்கள் அண்ணா மெடிக்கல்ஸ் ஜனாப் நத்தர்ஷா அவர்களையும்,லக்கி ஹார்டுவேர்ஸ் ஜனாப் அப்துல் காதர் அவர்களையும்,முன்னாள் அமீரக தமுமுக தலைவர் மதுக்கூர் ஹாஜா மைதீன் அவர்களையும், சந்தித்து பேசினார்.மாநில துணைத்தலைவர் அவர்களுடன் மாநில அமைப்புச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாவட்ட தலைவர் பாதுஷா,மாநில வர்த்தக அணிச்செயலாளர் கலந்தர் மற்றும் மதுக்கூர் நகர அணி நிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
Wednesday, September 24, 2014


பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு

மதுக்கூர் 3வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு (கீழக்காடு) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அதிமுகவைச்சார்ந்த திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.பேரூராட்சி செயல் அலுவலர் திரு ரமேஷ் அவர்கள் பதவி பிராணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த்,அதிமுக நகர செயலாளர் எழுத்தர் சரீப்,சிறுபான்மை பிரிவு செயலாளர் முகைதீன் மரைக்காயர்,பேரூராட்சி உறுப்பினர்கள் முருகையன்,ஆர்.சுரேஷ்.மனிதநேய மக்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கபார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)


மதுக்கூர் இடையகாடு மாப்பிள்ளைத்தம்பி வீட்டு அப்துல் ஹமீது அவர்கள் இன்று (24/09/2014) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்கின்றோம்.

மரணித்தவரைப் பார்க்கச் சென்றால் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.
‘اللَّهُمَّ اغْفِرْ لأَبِى سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ‘
பிரார்த்தனையின் கருத்து:- ‘
இறைவா! ………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒழியை ஏற்படுத்துவாயாக!’ (ஆதாரம்: முஸ்லிம் 2169)
மதுக்கூர் மாணவிக்கு தங்கப்பதக்கம்..தமுமுக பாராட்டு...
மதுக்கூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சிராணி தனது அறிவியல் ஆசிரியர் உதவியுடன் இயற்கையில் உணவை பாதுகாக்கும் முறையைக்கண்டறிந்து படைப்பாக வைத்துள்ளார்.குளிர்சாதனப்பெட்டி போன்ற இந்த படைப்பில் மின்சாரம் இல்லாமல் உணவை இயற்கையான முறையில் பதப்படுத்தி பாதுகாத்து வைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது.
இந்த முயற்சிக்கு மாணவி ஜான்சிராணிக்கு மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கின்றார்.
மாணவியின் இந்த முயற்சியினை பாராட்டும் வகையில் மதுக்கூர் தமுமுக மாணவரணி சார்பாகவும்,மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் இந்தியா சார்பாகவும் மாணவி ஜான்சிராணிக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர் முகம்மது அஸாருதீன் ,மாணவர் இந்தியா நகர துணைச்செயலாளர் முகம்மது மர்சுக்,தமுமுக நகர தலைவர் ஜபருல்லா,தமுமுக நகர செயலாளர் பவாஸ்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் நிஜாமுதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார். ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மாணவியின் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும்,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி செல்வகுமாரி ஆகியோரையும் தமுமுக நிர்வாகிகள் பாராட்டினார்கள்.
வருகின்ற 5ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ஜான்சிராணி தேசிய அளவில் நடைபெறக்கூடிய அறிவியல் போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்.Tuesday, September 16, 2014

மரண அறிவிப்பு
அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)
மரண அறிவிப்பு

மதுக்கூர் M.M.A.அப்துல் ரஜாக் ராவுத்தர் அவர்களின் மனைவியும்,M.M.A.அல்லாபிச்சை அவர்களின் தாயாருமாகிய பட்டுக்கோட்டை அம்மா என்கின்ற ஜெமீலா பீவி அவர்கள் இன்று 16/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
மரண அறிவிப்பு

அமைதி பெற்ற ஆன்மாவே ! நீ உன் இரட்சகனிடம் திருப்தியடைந்த நிலையிலும்,திருப்தி கொள்ளப்பட்டதாகவும் செல்வாயாக !
எனது அடியார்களுடன் இணைந்து கொள்.எனது சுவர்க்கத்தில் நுழைந்து கொள் ( என அந்நாளில் கூறப்படும்)
( அல்குர் ஆன் :89:27-30)

மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹும் O.P.M.அல்லாபிச்சை அவர்களின் மருமகளும்,முகம்மது அலி அவர்களின் மனைவியும்,உமர்கான் அவர்களின் தாயாரும்,மர்ஹும் N.S.A.ஜியாவுதீன் அவர்களின் மகளும்,மதுக்கூர் தங்கப்பா அவர்களின் மாமியாருமான அலியா பீவி அவர்கள் இன்று 16/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Saturday, September 13, 2014

முன்னாள் துபாய் மண்டல தமுமுக தலைவர் மதுக்கூர் S.M.ஹாஜா மைதீன் இல்லத்திருமணம்

மணமக்கள் 
முகம்மது இக்ரம் (த/பெ  ஹாஜா மைதீன்)
ஆசிக் நாச்சியா (த/பெ ஹிதாயத்துல்லாஹ்)

மண நாள் 
ஹிஜிரி 1435 துல்கஃதா பிறை 17 (13/09/2014) சனிக்கிழமை

மண இடம்
ஆழியூர்

மண வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க வஜமஅ பைனக்குமா ஃபீஹைர்

Tuesday, September 9, 2014

மரண அறிவிப்பு
மதுக்கூர் தமுமுக முன்னாள் தலைவரும்,சிறந்த செயல்வீரருமான ரெடிமேட் சென்டர் உரிமையாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் மாமனார் ஹாஜாமுகைதீன் அவர்கள் நேற்று இரவு 08/09/2014 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று 09/09/2014 மாலை 4:00 மணிக்கு பத்துக்காடு அருகில் உள்ள கரப்பங்காட்டில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...