அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Saturday, August 15, 2015

மதுக்கூரில் தமுமுக முப்பெரும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக  இந்திய சுகந்திர தின நிகழ்ச்சி,தமுமுக விருது 2015,சமூக நல்லிணக்க நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி 14/08/2015 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,தியாகி சசிபெருமாள் அரங்கில் தமுமுக அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் இறைவசனம் ஓத,சகோதரர் நிசார் அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாதுஷா,மாவட்ட பொருளாளர் அதிரை அகமது ஹாஜா ,பேரூர் கழக செயலாளர் பவாஸ் கான்,பொருளாளர் இலியாஸ் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர்கள்,பேரூர் ,கிளைக்கழக செயலாளர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக விருது 2015

2014 -2015 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபா அவர்களுக்கும்,மதுக்கூர் சூரியத்தோட்டம் ஊ,ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (ஒய்வு) அய்யா.ஆ.பாலசுந்தரம் ஆகியோருக்கு மாநில செயலாளர் விருதுகளை வழங்கினர்.மாணவி ஷபாவுக்காக அவரின் தந்தையார் ஆபிதீன் மரைக்காயர் விருதினை பெற்றுக்கொண்டார்,ஆசிரியர் பாலசுந்தரம் அவர்களுக்கு தமிழாக்கம் குர் ஆனும்,விருதும் வழங்கப்பட்டது.

சிறப்புரை

தமுமுக தலைமை கழக பேச்சாளர் சகோதரர் "தாங்கல்" அப்துல் காதர் அவர்கள் விடுதலைப்பேரில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றியும்,மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் பாசிசவாதிகளை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

தீர்மானம்

முன்னதாக ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அவற்றை பேரூர் கழக நிர்வாகிகள் முறையே  சகோதரர்கள் அப்பாஸ்,புரோஸ்கான்,அகமது சபீர்,பேரூர் கழக செயலாளர் பவாஸ் ஆகியோர் வாசித்தனர்.
1.தமிழகத்தில் பூரண மது விலக்கை உடனே அமல்படுத்தவேண்டும்.
2.பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை உடனே விடுதலை செய்யவேண்டும்.
3.மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தவேண்டும்
4.மத்தியில் ஆளும் அரசு மததுவேஷங்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு அனைத்து மக்களையும் அரவாணைத்து செயலாற்றவேண்டும்
5.மதுக்கூர் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் உள்ள அரசு மதுபானக்கடை உடனே அப்புறப்படுத்தவேண்டும்.

இறுதி பேரூர் கழக துணைச்செயலாளர் ராசிக் அகமது அவர்கள் நன்றியுரைவுடன் முப்பெரும் நிகழ்ச்சி சிறப்புடன் நிறைவுபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுக்கூரில் சுகந்திர தின கொண்டாடங்கள்.

பேரூராட்சி அலுவலகம்
************************
இந்தியாவின் 69வது சுகந்திர தின இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரமேஷ்,வர்த்தக சங்க தலைவர் அப்துல் காதர்,தொழில் அதிபர் சந்திரசேகரன் பேரூராட்சி துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பெரமையன்,முருகையன்,ரியாஸ் அகமது,கபார்,சுரோஷ் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் N.S.M.பசீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்.

தமுமுக அலுவலகம்
************************

மதுக்கூர் பேரூர் கழக தமுமுக அலுவலகத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் நிசார் அகமது,பேரூர் கழக பொருளாளர் இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் சகோதரர் E.S.M.முகம்மது ராசிக் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார்.நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளி)
************************************

மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சந்தைப்பள்ளியில்) பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் காதர்,கிராம கல்விக்குழு தலைவர்  பேரூராட்சி உறுப்பினர் கபார்,பெரியவர் முகம்மது அலி ஜின்னா,கவுன்சிலர் நாகூர் கனி,ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியர்களின்  பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.இதில் ஜமாத் உறுப்பினர் முத்துமுகம்மது,முகம்மது அலி ஜின்னா (ஊருட்டி),எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்திய சுகந்திர தின கொண்டாடங்கள் மதுக்கூரில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்,காவல் நிலையம்,தபால் நிலையம்,பொதுப்பணிதுறை அலுவலகம்,பொது நூலகம் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,இஸ்லாமிய இயக்க அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்கள்.


Tuesday, August 4, 2015

மதுக்கூரில் .......தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழகமெங்கும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றார்கள்.இன்று 04/08/2015 முழு அடைப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி,மதிமுக,விடுதலை சிறுத்தைகள்,அழைப்புவிடுத்து இருந்தனர்.


மதுக்கூரில் இன்று மாலை 4:45 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையில் ஏற்பாடு செய்து இருந்த மதுவிலக்கு கோரிக்கை பேரணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முக்கூட்டுச்சாலையில் நிறைவு பெற்று மதுவுக்கு எதிரான வலுவான கோஷங்கள் எழுப்பப்பட்டது.பின்னர் முக்கூட்டுச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் கபார் தலைமை வகித்தார்.மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,தமுமுக ஃபவாஸ்,ஜபருல்லா,அமீரக பொருப்பாளர்கள் முகம்மது சேக் ராவுத்தர்,நிசார் அகமது,அப்துல் ஹமீது,ஜாசிம்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லாஹ்,மதிமுக ஒன்றிய செயலாளர் சகோதரர் கரிமுத்து,சிபிஎம்  வேதச்சலாம்,சிபிஐ பாரதிமோகன்,விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செயலாளர் ந.இளந்தென்றல்,சமூக சேவகர் எபிநேசன் இன்பநாதன் உள்ளிட்டவர்கள் மதுவுக்கு எதிராக பேசினார்கள்.பேரணி,ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.விரைவில் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையினை அப்புறப்படுத்தக்கோரி முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்புடன் முடிவு பெற்றது.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...