அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம்: டிசம்பர் 6 தஞ்சாவூரில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்..

Thursday, December 28, 2017

மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர்.முஸ்லிம்களும்,இந்துக்களும் (செட்டியார் சமூகத்தை சார்ந்தவர்களும்) நிறைந்த ஊர்.மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் என்ற ஜும்மா பள்ளி ஒன்று உள்ளது.மதுக்கூரின் இரண்டாவது பள்ளி மதுக்கூர் மேலப்பள்ளிவாசல்.
இப்பள்ளியினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய ஜமாத் தலைவர் முகம்மது யாக்கூப் மரைக்காயர் மற்றும் மேலவீதி சங்க முக்கிய பொறுப்பாளர் அல்லாப்பிச்சை இருவரும் சிங்கப்பூர் சென்று இப்பள்ளிக்காக பெரும் நிதி திரட்டி வந்தனர்.

20/07/1978 வியாழன் மாலை வெள்ளி இரவு 9:00 மணியளவில் பெண்களுக்கென பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டு மார்க்க அறிஞர்களால் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஹிஜிரி 1398 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 14  (21/07/1978 வெள்ளி காலை மதுக்கூரின் இரண்டாவது பள்ளிவாசல் மேலப்பள்ளி திறக்கப்பட்டது.இப்பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மதுக்கூரின் அன்றைய ஜமாத் தலைவரும்,பேரூராட்சி தலைவருமானT.A.K. முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களின் சீறிய தலைமையில் நடைபெற்றது.

S.P.N.அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்கள் முன்னிலையிலும்,மேலப்பள்ளி நிர்மாணக்கமிட்டி செயலாளர் M.M.அல்லாப்பிச்சை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும்,நீடுர் அரபிக்கல்லூரி முதல்வருமான M.முகம்மது ரஹ்மத்துல்லா ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் மதுக்கூர் மேலப்பள்ளிவாசலை திறந்து வைத்தார்கள்.

மேலப்பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக

பேராசிரியர் கா.அப்துல் கபூர்
பேராசிரியர் மெளலானா மெளலவி எஸ்.ஆர்.சம்சுல்ஹுதா ஆலிம்
மெளலானா மெளலவி ஓ.எம்.ஜெய்னுதீன் ஆலிம்
மெளலவி அப்துல் லத்தீப் ஆலிம்
மெளலவி கா.மீ.அப்துல் வஹாப் ஆலிம்
மெளலவி இ.சிராஜுதீன் ஆலிம்
மெளலவி எஸ்.முஹம்மது அப்துல் காதர் ஆலிம்

ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் நத்தர்ஷா அவர்களும்,முஸ்லிம் இளைஞர் முன்னேற்றச்சங்க செயலாளர் A.N.M.முகம்மது அலி ஜின்னா அவர்களும் நன்றி நவின்றார்கள்.
Saturday, November 25, 2017

மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி (29/11/2017)
மதுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி பல்வேறு சிறப்புகளை பெற்றது.ஆரம்ப காலத்தில் ஆரம்ப பள்ளிகூடமாக நிகழ்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தப்பட்டு இன்று சிறப்புடன் செயல்படுகின்றது.இப்பள்ளியின் கட்டிடங்கள் பழமையானதால் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கிராம கல்விக்குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆட்சியாளர்களை அனுகினார்கள்.இவர்களின் முயற்சியால் நபார்டு வங்கியின் உதவியுடன் சுமார் 2 கோடி 27 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்,இரண்டு தளங்களை கொண்ட கட்டிடம் ஒன்றும்இரண்டு பள்ளிக்கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பள்ளிக்கட்டிடங்கள் வருகின்ற 29/11/2017 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலமாக திறந்து வைக்கின்றார்கள்.இப்புதிய கட்டிடம் வர காரணமாக இருந்த அனைவருக்கும் மதுக்கூர் பேரூர் கழக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.Thursday, November 23, 2017

மதுக்கூர் தமுமுகவினரின் எழுச்சி
டிசம்பர் 6 1992 ஆம் ஆண்டு கயவர்களால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் அயோத்தியில் மீண்டும் கட்டப்படவேண்டும்.இந்தியாவின் மதச்சார்பின்மையை வலுசேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பாக டிசம்பர் 6 அன்று பல வகை போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களும் அறிந்ததே.
தமுமுக தலைமை அறிவிக்கும் அத்தனை டிசம்பர் 6 போராட்டங்களங்களிலும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மதுக்கூர் தமுமுக மிக விரியமாக செயல்படுவதும் மக்கள் மத்தியில் டிசம்பர் 6 போராட்ட செய்தியினை கொண்டு போய் சேர்ப்பதிலும் தமுமுகவினருக்கு நிகர் தமுமுக வே என்று சொல்லும் வகையில் சிறப்பாக செயல்பட்டுவருகின்றார்கள்.
மதுக்கூர் தமுமுகவினரின் போராட்ட விளம்பர யுக்திகளை பார்த்து மாற்றுமதத்தினரும்,மாற்று கட்சி,அமைப்பு சகோதரர்களும் வியக்கும் வண்ணம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சுவர் விளம்பரம்,ஆட்டோ பிளக்ஸ்,துண்டு பிரசுரம்,பைக் ஸ்டிக்கர்,மின் விளக்கு போஸ்டர்,பிளக்ஸ்,தெருமுனை கூட்டம்,இன்னும் ஏராளம்.அல்ஹம்துலில்லாஹ்.
டிசம்பர் 6 போராட்டங்கள விளம்பரங்களுக்கு மதுக்கூர் தமுமுகவினர் தமிழக அளவில் முன்னோடிகளாக திகழ்கின்றார்கள்.எல்லா புகழும் அல்லாஹ்கே !
வீழ்ந்து இருக்கலாம்
பாபரி மஸ்ஜித் அயோத்தியில்
எழுந்து நிற்கின்றது அதே பள்ளிவாசல்
மக்கள்இதயங்களில்....
எங்களின் எழுச்சி தனித்தவன்,தன்னிகரற்றவன் ஏக நாயன் அல்லாஹ்வின் ஆலயம் அயோத்தியில் கட்டி முடிக்கும்வரை ஒயாது.இன்ஷா அல்லாஹ்.
தமுமுக
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சாவூர் மாவட்டம்.
Image may contain: outdoor

Image may contain: outdoor

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...