அஸ்ஸலாமு அலைக்கும்....(இறைவா!)மதுக்கூர் பேரூர் கழக புதிய நிர்வாகிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்.தலைவராக ராசிக் அகமது அவர்கள் தேர்வு...

Sunday, November 25, 2012இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஓடிவிட்டது.பாபர் மஸ்ஜித்துக்காக தொடர்ந்து 18 ஆண்டு காலமாக வீரியம் குறையாமல் போராடும் மக்கள் போரியக்கம் தமுமுக இந்த வருடமும் டிசம்பர் 6 அன்று மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தினை (தர்ணா) போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது.இன்ஷா அல்லாஹ்..


இது குறித்து விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மதுக்கூரில் செய்யப்பட்டுள்ளது.Tuesday, November 13, 2012


மதுக்கூர் முகம்மதியர் தெரு மர்ஹும் மு.ரா.அல்லாப்பிச்சை அவர்களின் மனைவியும்,மு.ரா.அ.ரகுமத்துல்லா,மர்ஹும் மு.ரா.அ.ஜலாலுதீன்,மு.ரா.அ.இக்பால் ஆகியோரின் தாயாரும்,சங்கேந்தியார் முகம்மது யாசின் ,மு.ரா.அப்துல் ரஜாக் அவர்களின் மாமியாருமான ஆமினாம்மாள் அவர்கள் நேற்றிரவு 12.11.2012 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, November 10, 2012


இடையிடாது நடைபெறும் இறை இல்லப்பணி

மதுக்கூர் சூரியத்தோட்டம் அம்மாக்குளம் செல்லும் வழியில் (தோப்புக்காரவீடு ஜக்கரியா அவர்கள்-டைகர் ஜமால் முகம்மது  ஆகியோர் வீட்டிற்க்கு எதிர்புறத்தில்) மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்திற்க்கு சொந்தமான இடத்தில் மதுக்கூர் மாநகருக்கு மகுடன் சூட்டுவது போன்று மேலும் ஓர் இறைஇல்லம் கட்டுமான பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகின்றது.

அமீரக வாழ் ஒரு சில சகோதரர்கள் குறிப்பாக சகோதரர்கள் SNA புகாரி,PTEA ரகுமத்துல்லா,SNSராவுத்தர் (எ) நைனா முகம்மது ஆகியோர் அமீரக அரபியர் ஒருவரின் எண்ண ஓட்டத்தை இறைவனின் கிருபையால் உணர்ந்து அவரின் எண்ணத்தை பிரதிப்பலிக்கும் விதமாக அவரை சந்தித்து எங்கள் மதுக்கூருக்கு இறைஇல்லம் கட்ட உதவி தாருங்கள் என்று உரிமையுடன் கேட்க அன்புடன் இசைந்த அமீரக அரபியர் இடத்தைப்பார்வைவிட வேண்டும் என கூற மதுக்கூர் மாநகருக்கு கடந்த மே மாதம் வருகை தந்து இடத்தையும் பார்வைவிட இறைஇல்லத்திற்க்கும்  நிதி உதவி செய்வதாக கூறி முதல் தவணையினையும் அடுத்த நாளே கொடுத்ததாக கூறப்படுகின்றது.

இப்படி ஆரம்பமான இறைஇல்ல ஆரம்ப பணிகள் கடந்த 28/07/2012 அன்று கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.மிகவும் சின்ன இடம் இதில்  என்ன பள்ளிவாசல் கட்டமுடியும் என அனைவரும் முனுமுனுத்து கொண்டிருக்கையில் மிகவும் அழகாக விரிவாக தனக்கு இறைஇல்லம் கட்ட கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாக செய்துகொண்டிருக்கின்றாய் சகோதர அப்துல் காதர் (லக்கி ஹார்டுவேர்ஸ்) அவர்கள்.கடும் வெயில்,மழை நேரங்களிலும் இடையிடாது நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது இறைஇல்லப்பணி (அல்ஹம்துலில்லாஹ்)இருதளம் கொண்ட இப்பள்ளிவாசல் மொத்த மதிப்பீடு சுமார் ரூ 23.50 இலட்சம் என தெரிகின்றது.

எவர் ஒருவர் இறைவனை தொழுவதற்க்காக மஸ்ஜித் கட்டுகிறார்களோ மறுமையில் இறைவன் அவர்களுக்காக சொர்க்கத்தில் ஓர் அழகிய வீட்டை கட்டுகின்றான் என்ற நபிகள் பெருமகனார் அவர்களின் கூற்றுப்படி இப்பள்ளிவாசல் கட்டுவதற்க்கு யாரல்லாம் முயற்சி கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய துவா செய்வோம்.

Friday, November 9, 2012உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - திருச்சியில் நடைபெற்றதுதிருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மமக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, மாநில செயலாளர்கள் கோவை செய்யது,ஆம்பூர்சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா சம்சுதீன் நாசர் உமரி, தருமபுரி சாதிக், மைதீன் உலவி, ராவுத்தர்ஷா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக உள்ளாட்சித் துறையில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திறம்படப் பணியாற்றிய வழக்கறிஞர் மஹபூப் அலி அவர்கள் மிகச்சிறப்பாக வகுப்பெடுத்தார். வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி பேராசிரியர் அபுல்பைசல் அவர்கள் உள்ளாட்சி சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை விளக்கினார்.
பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மமகவினர் தூய்மையோடு ஆற்றிவரும் அரசியல் பணிகளை சிலாகித்து, மக்கள் விரும்பும் நேர்மையான அரசியலை மமக முன்னெடுக்கும் என்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஹக்கிம், இப்ராஹிம் ஷா, பைஜிஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் புத்துணர்வு பெற்றவர்களாக தங்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமென்ற நோக்குடன் புறப்பட்டு சென்றனர்.
வெற்றிபெற்ற மமக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்காக சென்னையைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருச்சியில் இரண்டாவது பயிற்சி முகாமை நடத்தி தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...