இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, September 24, 2014

மதுக்கூர் மாணவிக்கு தங்கப்பதக்கம்..தமுமுக பாராட்டு...
மதுக்கூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சிராணி தனது அறிவியல் ஆசிரியர் உதவியுடன் இயற்கையில் உணவை பாதுகாக்கும் முறையைக்கண்டறிந்து படைப்பாக வைத்துள்ளார்.குளிர்சாதனப்பெட்டி போன்ற இந்த படைப்பில் மின்சாரம் இல்லாமல் உணவை இயற்கையான முறையில் பதப்படுத்தி பாதுகாத்து வைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது.
இந்த முயற்சிக்கு மாணவி ஜான்சிராணிக்கு மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றிருக்கின்றார்.
மாணவியின் இந்த முயற்சியினை பாராட்டும் வகையில் மதுக்கூர் தமுமுக மாணவரணி சார்பாகவும்,மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் இந்தியா சார்பாகவும் மாணவி ஜான்சிராணிக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர் முகம்மது அஸாருதீன் ,மாணவர் இந்தியா நகர துணைச்செயலாளர் முகம்மது மர்சுக்,தமுமுக நகர தலைவர் ஜபருல்லா,தமுமுக நகர செயலாளர் பவாஸ்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் நிஜாமுதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார். ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மாணவியின் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும்,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி செல்வகுமாரி ஆகியோரையும் தமுமுக நிர்வாகிகள் பாராட்டினார்கள்.
வருகின்ற 5ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி ஜான்சிராணி தேசிய அளவில் நடைபெறக்கூடிய அறிவியல் போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றோம்.



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...