இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, August 30, 2013

"மாற்றம் தேவை தான் "மதுக்கூருக்கு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து உள்ள ஊர்களில் ஒன்று மதுக்கூர்.
மதுக்கூரில் செயல்படும் பழமைவாய்ந்த  முஹல்லாகள் உள்ளது.கீழவீதி,மேலவீதி என நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்டு அவைகள் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கம்,மிப்தாஹுல் இஸ்லாம் சங்கம் என சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.இந்த இரு சங்கங்களில் செயற்குழு உறுப்பினர்களால் மதுக்கூர் பெரியப்பள்ளிவாசலை தலைமைவிடமாக கொண்டு செயல்படும் ஜாமியா மஸ்ஜித் பரிபாலனகமிட்டி செயல்படுகின்றது.

தற்போது ஜமாத் நிர்வாகத்திற்கு புதியவர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் என சிலர் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.சிலர் குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யக்கூடாது என தங்கள் பக்க கருத்துக்களை சொல்லியும் வருகின்றார்கள்.எவை எப்படி இருந்தாலும் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியில் மாற்றம் தேவை தான்.அந்த மாற்றம் எப்படி இருக்க வேண்டும்.

1.ஜமாத் மற்றும் சங்கங்களில் உறுப்பினர்கள் தொழுகையினை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
 

2.மதுக்கூரில் ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள இறை இல்லங்களில் பாரமரிப்பு  பணிகளை தொய்வின்றி செய்யவேண்டும்.
 

3.ஜமாத் மற்றும் சங்கங்களில் உறுப்பினர்கள் அவர்களின் பெயரில் அல்லது பினாமிகள் பெயரில் உள்ள கடைகளில் யார் பெயரில் கடை உள்ளதே அவர்களே வியாபாரம் செய்யவேண்டும்.உள்வாடகைகைக்கு விடுவது.பள்ளிவாசல் கடைகளை ஒத்திக்கு வைப்பது தவீர்க்கப்படவேண்டும்.
தங்களின் கட்டுப்பாட்டியில் கடை இல்லை என்றால் கடையினை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிடவேண்டும்.உள்வாடகைக்கு விடுபவர்களை குறிப்பிட்ட கால அவாகசத்தில் காலி செய்யவேண்டும்.தவறுபவர்களின் பெயர் விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.அவர்கள் ஜமாத்,சங்க உறுப்பினர்களாக இருந்தால் பதவி நீக்கம் செய்யவேண்டும்.

4.மதுக்கூர் ஜமாத்துக்கு பெரிய அளவில் சொத்துக்கள் உள்ளது.அவற்றில் முக்கிய பகுதியான கீற்றுச்சந்தையில் உள்ள சாமில் வைத்து இருப்பவர்களை காலி செய்துவிட்டு மேற்படி இடத்தில் ஜமாத் சார்பாக வாய்ப்பு இருந்தால் வக்ப் வாரியத்தில் நிதி உதவி பெற்று நமது சமுதாயத்திற்கு தகுந்தது போன்று திருமண மண்டபம் ஒன்று நிறுவ வேண்டும்.

5.ஜமாத்துக்கு சொந்தமான சந்தையில் பொதுமக்களின் அவசியம் கருதி கழிவறை வசதி ஏற்படுத்தப்படவேண்டும்.அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

6.கிராமத்துமக்கள் தங்களின் விலைபொருட்களை நமதூர் சந்தையில் விற்க குறைந்த் பட்சம் ஒரு வருடத்திற்கு வந்த கமிஷன் தொகையும் (சந்தைகாசு) வாங்ககூடாது.


7.முன்பு போல் ஆடு அறுக்கும் இடத்திற்கு பள்ளிவாசல் பணியாளர்களை (ஆலிம் பெருமக்கள்,மோதினார்)அனுப்பி ஆடுகளை அறுக்க செய்யவேண்டும்.

8.ஜமாத்துக்கு இருக்கும் சொத்துபற்றிய விபரங்களை(வாய்ப்பு இருந்தால்)அனைவரும் அறிந்து கொள்ளும் படி தெரியப்படுத்தவேண்டும்.

9.தகுதியான மாணவர்களுக்கு (படிக்க வசதியற்ற) கல்வி உதவி,ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் சிறப்பாக செயல்படுத்தப்படவேண்டும்.

இவை போன்று இன்னும் சில "மாற்றங்கள் தேவை தான்"..நமது ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டிக்கு.

திருமண மஜ்லிஸ்கள் மட்டும் தான் நமது பணி என பொறுப்புகளை குறைந்து கொள்ளாமல் நமதூர் ஜமாத் நிர்வாகம் அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட துணை நிற்போம் (இன்ஷா அல்லாஹ்..)






No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...