இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, December 13, 2012



20 ஆண்டுகளாய் அடங்காத நெருப்பு... 18 ஆண்டுகளாய் பற்றி எரியும் போராட்டம்....


1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. பட்டப்பகலில், அதிகார வர்க்கம் உறங்க, கரசேவை பயங்கரவாதிகள் கடப்பாரைகளால் நிகழ்த்திய ஜனநாயக படுகொலை இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்தது.

தொடர்ந்து காவி பயங்கரவாதிகள் நாடெங்கிலும் முஸ்லிம்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களால் இந்தியாவே சிவந்தது.
இந்த டிசம்பர் 6 கருப்பு நாளை கடந்த 20 வருடங்களாக சமூக நீதி ஆர்வலர்களும், மனித உரிமை போராளிகளும், சிறுபான்மை மக்களும், கருப்பு நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.

1995 முதல் தமுமுக தொடர்ந்து 18 ஆண்டுகளாய் நீதி கேட்டு போராடி வருகிறது.
1995 முதல் 1998 வரை அடக்கு முறைகளை எதிர்கொண்டு, தடைகளை உடைத்து, சிறைகளை எதிர்கொண்டு, போர் பரணி பாடியது. இவர்களை அடக்க முடியாது என்பதை உணர்ந்த அரசுகள் அதன் பிறகு 1999 முதல் நெருக்கடிகளை தளர்த்தி போராட்டங்களை அனுமதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமுமுக இவ்வருடம் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்தது.
ஜமாத் முத்தவல்லிகள், உலமாக்கள், மதரசா ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல் முற்போக்கு இயக்கங்கள், சமூக நீதி அமைப்புகள் , ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.
இறைவனின் பெரும் கிருபையினால் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
மாவட்ட தலைநகரங்கள், பெருநகரங்களில் நடத்தப்பட்ட இந்த தர்ணா போராட்டத்திற்கு அலை அலையாய் மக்கள் குவிந்து விட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, பள்ளிவாசல் தோறும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, தமிழன் தொலைக்காட்சியிலும், மக்கள் உரிமையிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டு பெரும் எழுச்சி கட்டமைக்கப்பது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் வைக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பர தட்டிகள் பாபர் மசூதிக்கான நியாயங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறின.
நாகை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காவல் துறையின் இடையூறுகளை மீறி விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, VHP, உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த வன்முறை சக்திகள் போஸ்டர்களை கிழித்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய போதும் முஸ்லிம்கள் அமைதி காத்தனர்.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் என 54 மையங்களில் தர்ணா போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இவ்வருடம் கை குழந்தைகளுடன், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு பிறந்த புதிய தலைமுறை மாணவர்களும், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்றது அனைவருக்கும் புதிய நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.
பல இடங்களில் பள்ளிவாசல் உலமாக்களும், ஜமாத் நிர்வாகிகளும் கண்டன உரை ஆற்றி உள்ளனர். இது பாபர் மசூதி போராட்டம் புதிய பாதையில் நகர தொடங்கி இருப்பதை வெளிக்காட்டுகிறது.
சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களில் திரண்ட பல்லாயிரக்கனக்காநோரும், பெருநகரங்களில் 1500, 1200, 1000, 800 என மக்கள் பங்கேற்ற பேரார்வமும் தமுமுகவின் 18 ஆண்டு கால போராட்டம் உயிர் துடிப்போடு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
பாபர் மசூதி விவகாரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது தமுமுக (அல்ஹம்துலில்லாஹ்)
இதில் இவ்வருடம் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டது நீதிக்கான போராட்டத்தில் ஒரு புதிய நல்லிணக்கத்தையும் உருவாக்கியிருக்கிறது.

ஆம். எமது நீண்ட நெடிய உரிமை போராட்டம் இறைவன் அருளால் அனைத்து மக்களையும் உள்ளடக்கி ஒருநாள் வெற்றி பெரும். இது இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு, அமைதி, நல்லிணக்கம், வரலாறு ஆகியவற்றை காப்பாற்றுவதற்கான அறப்போராட்டம் என்பதை பிரகடனப்படுதுகிறோம்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்தில் மாநில மாணவர்  அணி பொறுப்பாளர் டாக்டர் சர்வத் கான்,மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் சகோதரர் கலந்தர் மற்றும் மதுக்கூர்,அதிராம்பட்டிணம்,மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,தஞ்சாவூர்,வல்லம்,மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள்,ஜமாத்தார்கள்,பொதுமக்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...