இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, June 26, 2014

அன்பான சகோதரர்களே ! நம் அனைவரின் மீது ஏக நாயன் அல்லாஹ்வின் அன்பும்,கருணையும் என்றும் நிலைத்து நிலவட்டுமா !

"ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்".

நம்மை நோக்கி சங்கைமிகு ரமலான் வந்து இதோ வந்துவிட்டது.சென்ற ரமலானில் நம்முடன் இருந்த நமது அன்புக்குரியவர்கள் இடம் மாறி சென்று இருக்கின்றார்கள்.இறந்தும் இருக்கின்றார்கள்.ஆனால் நமது செயல்பாட்டில் மாற்றமில்லை.காரணம் நாம் நமது மார்க்கத்தை முழுமையாக இன்னும் கடைபிடிக்கவில்லை...இன்னும் எத்தனை ஆண்டுகள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகின்றோம்.ஓர் நாள் கடுமையான வேதனைகள் நிறைந்த கப்ருவை காண இருக்கின்றோம்...நிரந்தரமானவாழ்க்கையினை உடைய மறுமையை நேசிக்க இருக்கின்றோம்.அர்ஷில் அல்லாஹ்வை காண இருக்கின்றோம் (இன்ஷா அல்லாஹ்) இவை எல்லாம் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நாம் அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காட்டிதந்த போதனைகளை பின்பற்ற மறந்துவிட்டோம்.

இந்த தவறு இந்த ஷாபானுடன் போகட்டும்.வருகின்ற ரமலான் நம்மை உண்மையான முஸ்லிமாக பக்குவப்படுத்த வேண்டும் இதற்காக அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளவேண்டும்.நிச்சயமாக நமது நல்ல முயற்சி ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நம்முடன் துணைநிற்பான்.புறம் பேசுவதை புறந்தள்ளிவிடுவோம்.அவதூறுகளை அறவே இல்லாமல் ஆக்குவோம்.வீண் பேச்சுக்களை தவீர்ப்போம்.வம்பு சண்டைகளை விரட்டுவோம்.பொய் பேசுவதை முற்றிலுமாக ஒழிப்போம்.இறையச்சம் உடைய இறை விசுவாசியாக மாறுவோம்..இறையச்சமுடைய நல்ல அடியானாக மரணிப்போம்.இன்ஷா அல்லாஹ்..

(இதுநாள் வரை எங்களின் பதிவுகளில் யாரையும் மனம் வேதனையடையும்படி பேசியதாக,எழுதியதாக கருதி இருந்தால் அன்பு கூர்ந்த சகோதரர்களை மனப்பூர்வமாக எங்களின் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...