இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, July 17, 2014

ரமலான் பரிசுப்போடி பிறை 17 விடைகள்


1.யாருடைய மரணத்தின் போது அல்லாஹ்வின் அர்ஷ் அசைந்தது ?
4870. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஅத் பின் முஆத் அவர்களின் இறப்புக்காக அளவற்ற அருளாள(னான இறைவ)னின் அரியணை (அர்ஷ்அசைந்தது.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்- 4870
2.ஆது சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி யார் ?

ஹுத் அலைஹிஸ் ஸலாம்

7:65இன்னும்ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்;அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.

 3. போர் செய்ய விலக்கப்பட்ட மாதங்கள் எத்தனை ? அவை யாவை ?
4. ரஜப்துல்கஃதாதுல்ஹஜ்முஹர்ரம்
2:194(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப்துல்கஃதாதுல்ஹஜ்முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்இதே போன்றுஎல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவேஎவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால்,உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ரமலான் பரிசுப்போட்டி பிறை 17 க்கு சரியான பதில்களை எழுதியவர்கள் மொத்தம் 12 நபர்கள்அல்பாஸ்,அப்துல் ஹாலீத்,முகம்மது பாதில்,ஹியாவுல் ஹக்,பயாத் அகமது,நிஜாமுதீன் ஜமால்,முகம்மது சுல்தான்,அஜீம் அகமது,முகம்மது தாஹா,நிசார் அகமது,சர்புதீன்,ரியாய்தீன் அகமது.நிஜாமூதின் ஜமால் அவர்கள் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கான பரிசு வழங்குபவர் சகோதரி சம்சுன்ஹார் பிவீ அவர்கள்.

ரமலான் பிறை 18 க்கான கேள்விகள் சில நொடிகளில்.....
 

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...