இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, July 6, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 07

கேள்விகள்

1.குர் ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழரின் பெயர் என்ன ?

2.நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு எத்தனை குழுந்தைகள் ? அவற்றில் ஆண் குழந்தை எத்தனை ? பெண் குழந்தை எத்தனை ? 

3.வஸியத்து என்றால் என்ன என  அல் குர் ஆன் கூறுகின்றது ?

(பிறை 07 க்கான பரிசை வழங்குபவர் K.T.M.நிசார் அகமது அவர்கள்)



ரமலான் பரிசுப்போட்டி 06 விடைகள்

1.பிர் அவ்னின் உடலை மறுமை நாள் வரையில் பாதுகாப்பேன் என அல்லாஹ் கூறும் வசனம் எது.

"உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம்.  (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். ( Al Quran 10 :92 ) " 

2.இல்லிய்யின் என்றால் என்ன ?

"அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.
இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?அது (செயல்கள் )எழுதப்பட்ட ஏடாகும்." ( Al Quran  83: 18-20 )

3.உங்கள் வீடு அல்லாத மற்றவர்களுடைய வீட்டில் நுழையும் போது எவ்வாறு நுழைய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (Al Quran 24 : 27)

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! 'திரும்பி விடுங்கள்!' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.(Al Quran 24 : 28)

யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.(Al Quran 24 : 29 )



ரமலான் பரிசுப்போட்டி 06 மொத்தம் 19 சகோதர,சகோதரிகள் சரியான பதிலை எழுதியிருந்தார்கள்.
அவர்களின் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்.சகோதரர் ஜவஹர் அவர்கள்

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...