இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, July 4, 2014

ரமலான் பரிசுப்போட்டி
பிறை 05
கேள்வி
1.நுஹ் நபியின் கப்பல் எந்த மலை மீது இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.குர் ஆன் வசனத்தை எழுதவும்.
2.பிர் அவ்னின் மனைவி ஆஸியா அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை என்ன ? குர் ஆன் வசனத்தை எழுதவும்.
3.எந்த ஸஹாபியுடைய காலடி ஒசை சொர்க்கத்தில்கேட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


பிறை 04 க்கு சரியான பதில் எழுதியவர்கள் இருவர் அவர்களின் 1.முகம்மது தாஹா,2 அஸ்மா இருவரில் சகோதரி அஸ்மாஅவர்கள் பரிசுக்கான நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிறை 04 கேள்விக்கான பதில்கள்
1.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது ?
போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)
2.பஜ்ர் நேரத்தில் குர் ஆன் ஓதுவதினால் என்ன சிறப்பு கிடைக்கும் என அல்லாஹ் கூறுகின்றான் ?
பஜ்ர் தொழுகையில் ஒதக்கூடிய குர் ஆன் நமக்கு மறுமையில் சான்று கூறுவதாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.( அல்குர் ஆன் 17 : 78)
"நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.:
3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கண் தெரியாத ஓர் சஹாபி பங்கு சொன்னார்.அவரின் பெயர் என்ன
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலி அவர்கள்
பிறை 04 க்கான பரிசு பொருள் வழங்குபவர் சகோதரர் தீன் முகம்மது (சங்கேந்தியார்).வெற்றி பெற்ற சகோதரருக்கு பரிசுப்பொருள் வீடு தேடி கொடுக்கப்படும்.
(இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுக்கொடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்)
நிபந்தனை
1.இப்போட்டியில் மதுக்கூர் வாசகர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்.
2.ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான பதில் எழுதி இருந்தால் குலுக்கல் மூலமாக ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
3.சரியான விடை எழுதி பரிசு பெறுபவர் வெளி ஊரில் (அல்லது) வெளிநாட்டில் இருந்தால் அவரின் மூலமாக அவரின் மதுக்கூர் முகவரி பெற்று பரிசு மதுக்கூரில் உள்ள அவரின் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்படும்.
4.இப்போட்டிக்கான கேள்வி தினமும் காலை 10:30 மணிக்கு வெளியிடப்படும்.இரவு 8 மணிவரை வரும் பதில்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்.(அனைத்தும் இந்தியநேரப்படி)
5.இப்போட்டியினை மாற்றியமைக்க போட்டிக்குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு.
6.உங்களின் பதில்களை madukkurtmmk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும்,madukkurtmmk என்ற முகநூல் inboxக்கும் அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...