இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, July 9, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 10

கேள்வி
1.நபி (ஸல்அவர்களின் மனைவிகளில் அதிகம் ஸதகா  செய்தவர் யார் ?

2. மீன் வயிற்றுக்குள் இருந்த நபி யார் ?

3.ரூஹூல் அமீன் என்றால் யார் ?

(பிறை 10 பரிசுப்போட்டிக்கான பரிசு வழங்குபவர் ALFAZ COMPUTERS MADUKKUR)


ரமலான் பரிசுப்போட்டி பிறை 09 சரியான பதில்கள்

1.கனவுகளுக்கு விளக்கமளிக்க எந் நபிக்கு அல்லாஹ் கற்று கொடுத்தான் ?
நபி யூஸூப் அலைஹி வஸல்லம்

இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்துஅவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர்உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கிவைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாகஇருக்கின்றான்.” ( AL QURAN 12 :6)

(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாகவைத்துக்கொள்; ஒருவேளை இவர நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம்சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம் என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க)வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்;அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை)அறிந்து கொள்ள மாட்டார்கள்.(AL QURAN 12 : 21) “

2.பனீ இஸ்ராயீல் சமுதாயத்திற்கு எந்த கிழமை மீன் பிடிக்க  அல்லாஹ்தடைவிதித்திருந்தான் ?
சனிக்கிழமை

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து னிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பைமீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியா அறிவீர்கள். அதனால் அவர்களை ோக்கி சிறுமையடைந்தகுரங்குகளாகி விடுங்கள் என்று கூறினோம்.(AL QURAN 2 : 65 )

அவர்களிடம் உடன்படிக்கை எடுப்பதற்காக தூர் மலையை அவர் களுக்கு மேல் உயர்த்தினோம்.  ''பணிந்து,வாசல் வழியாக நுழையுங்கள்!'' என்று அவர்களிடம் கூறினோம். ''சனிக்கிழமை யில் வரம்பு மீறாதீர்கள்!'  என்றும் அவர்களிடம் கூறினோம். அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம். (4.:154 )

3.இறைவனின் வாள் என்று அழைக்கப்பட்ட ஸஹாபி யார் ?

காலித் பின் வலீத்  ( ரழியல்லாஹு அன்ஹு)

ரமலான் பரிசுப்போட்டி பிறை 09க்கு மொத்தம் 14 நபர்கள் சரியான பதில் எழுதிஇருந்தார்கள்.அவர்களில் குலுக்கல் மூலமாக சகோதரர் அப்துல் ஹாலீத் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோ.

(இப்போட்டிக்கு பரிசு வழங்க விருப்பமுள்ளவர்கள் இமெயில் மூலமாக தொடர்பு கொள்ளவும்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...