இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, July 12, 2014

ரமலான் பரிசுப்போட்டி பிறை 13

கேள்விகள்
1.நோன்பாளி நுழையும் சுவர்க்க வாசலின் பெயர் என்ன ?

2.வட்டி வாங்குபவர்கள் மறுமையில் எவ்வாறு எழுப்பப்படுவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.

3.நரகத்தின் எரிபொருள் எது எது என அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.



ரமலான் பரிசுப்போட்டி 12 சரியான பதில்கள்

1.மூஸா நபி தனக்கு உதவியாக யாரை அனுப்பி வைக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டார்கள் ? குர் ஆன் வசனம் மற்றும் அத்தியாயம் எழுதவும்.
 
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).28:34
 
எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! ( அல்குர்ஆன் 20:29,30,31,32)

2.ஹம்சா (ரலி) எந்த போரில் ஷஹீது ஆக்கப்பட்டார்கள் ?

உஹுத் போர்

3.காஃபிர்களுக்கு அல்லாஹ் யாரை உதாரணமாக கூறுகின்றான் ? குர் ஆன் வசனத்தை எழுதவும்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!" என்று கூறப்பட்டது. ( அல்குர்ஆன் 66:10)

பிறை 12 க்கு சரியான பதில் எழுதி பரிசு பெறுபவர் சகோதரர் முகம்மது பாதில் அவர்கள்

(இப்போட்டிக்கான பரிசு வழங்குபவர் சகோதரர் HRHஅக்பர் அலி அவர்கள்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...