இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Sunday, July 20, 2014




ரமலான் பரிசுப்போட்டி பிறை 21
கேள்விகள்

1.கணவன் இறந்துவிட்டால் மனைவி எத்தனை நாள் இத்தா காலம் என அல்லாஹ் கூறுகின்றான்.

2.காஃபிர்களுக்கு உதாரணமாக அல்லாஹ்  யாரை சொல்கின்றான் ?

3.எந்த நேரத்து தொழுகை முனாஃபிக்களுக்கு கஷ்டமாக இருக்கும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

(பிறை 21க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் முகம்மது தாஹா அவர்கள்)



ரமலான் பரிசுப்போட்டி பிறை 19 சரியான விடைகள்

1.மத்யன் வாசிகளுக்கு அனுப்பப்பட்ட நபி யார் ? குர் ஆன் வசனம் எழுதவும்.
ஷுஐப் அலைஹிஸ் ஸலாம்
7:85மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.


2.மஹரை பற்றி அல்லாஹ் என்ன கூறுகின்றான்.
 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.(4:4)

3.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது மறைந்து இருந்த குகையின் பெயர் என்ன ?

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நாங்கள் (
இருவரும் "ஸவ்ர்" எனும்குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்தபோது, (எங்களைத் தேடிக்கொண்டிருந்த) இணைவைப்பாளர்களின் கால் பாதங்களை எங்கள் தலைக்கு அருகில் நான் கண்டேன்.
உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்" என்று (அச்சத்துடன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூபக்ர் அவர்களே! தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் இருவரைப் பற்றி என்ன கருதுகின்றீர்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book :44 
ஸஹீஹ் முஸ்லிம்  4747

சரியான விடையை எழுதியவர்கள் மொத்தம் 6 சகோதரர்கள்.அவர்களில் சகோதரர்
அல்ஃபாஸ் மதுக்கூர் அவர்கள் குலுக்கல் மூலம் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.


(பிறை 19 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் M.Y.சேக் ஜலால் அவர்கள்)



 ரமலான் பரிசுப்போட்டி பிறை 20 சரியான விடைகள்


1.மூஸா நபி (அலை) அவர்களுக்கு அல்லாஹ் எத்தனை இரவைக்கொண்டு வாக்களித்தான்.குர் ஆன் வசனம் எழுதவும்

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார். (7: 142)

2.நன்மை மற்றும் தீமைக்கு எத்தனை மடங்கு கூலி தருவதாக அல்லாஹ் கூறுகின்றான்
எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (6:160)


3.எந்த மனைவியின் வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஃபாத்தனார்கள்.
4450. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?' என்று என்னுடைய (மறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான். 
(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி), தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், 'என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள்! அப்துர் ரஹ்மானே!" என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களின் எச்சில் என்னுடைய எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள். 


சரியான விடையை எழுதியவர்கள் மொத்தம் 6 சகோதரர்கள்.அவர்களில் சகோதரர்
தாஜுதீன் அகமது உசேன் அவர்கள் குலுக்கல் மூலமாக பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுகின்றார்.


(பிறை 20 க்கான பரிசு வழங்குபவர் சகோதரர் முகம்மது தாஹா அவர்கள்)

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...