இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, June 7, 2012


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் என்னும் ஒருவித காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.அதுவும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இந்நோய்வின் தாக்கம் அதிகமாக உள்ளது.உயிர் இழப்புகளும் அன்றாடம் ஏற்படுகின்றது.இந்நோய் கொசுவிலிருந்து உற்பத்தியாகின்றது.

தோங்கி கிடங்கும் தண்ணீர்
உபயோகம் மற்ற கழிவறைகள்
பழைய பிளாஸ்டிக் பொருட்கள்
உபயோகமற்ற மாவு அறவை கல்

ஆகியவற்றிலிருந்து உண்டாகும் கொசுகளிலிருந்து டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்றது.காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றது.நமது வீட்டை சுற்றி உபயோகமற்ற பொருட்கள் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

டெங்கு காய்ச்சலை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மாநில,மாவட்ட,பஞ்சாயத்து நிர்வாகங்கள் செயல்படுகின்றது.நமதூர் பேரூராட்சி நிர்வாகமும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுவினை அழிக்கவேண்டும் என்ற முனைப்புடன் இன்று (07/06/2012) நகரின் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...