இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Thursday, December 27, 2012


மனிதநேய மக்கள் கட்சி தமிழகமெங்கும் மது மற்றும் மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.( இது மதுவுக்கு எதிரான மமக வின் இரண்டாம் கட்ட போராட்டம்)

இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் 30 தேதி தழிழகத்திலுள்ள மது ஆலைகள்,குடோன்கள்,வினியோக மையங்களை முற்றுகைவிடும் போராட்டம் நடைபெற உள்ளது.(இன்ஷா அல்லாஹ்)

மதுக்கூரில் டிசம்பர் 30 தேதி அன்று தலைமை கழக பேச்சாளர் மெளலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் தலைமையில் முக்கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுபான கடைகள் முற்றுகைப்போராட்டம் நடைபெறும்.

மதுக்கூர் செட்டித்தெரு மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும்,மர்ஹும் சு.மு.அ.அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனுமான கறிக்கடை லியாக்கத்தலி அவர்கள் இன்று 27/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Wednesday, December 26, 2012


மதுக்கூர் பேரூராட்சி 9வது வார்டு மனிதநேய மக்கள் கட்சியின் கவுன்சிலர் வார்டின் சுகாதாரம் கருதி வார்டின் முக்கிய பகுதிகளில்செய்துள்ள விளம்பரம்.




பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

மதுக்கூரில் மதுவுக்கு எதிரான பரப்புரை யுத்தம்.


மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகர கிளையின் சார்பாக மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் சிறப்பான முறையில் நடந்தது.மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்சா தலைமையிலும்,நகர நிர்வாகிகள் சகோதரர் முஜிபுர் ரஹ்மான்.நிசார் அகமது,ராசிக் அகமது ஆகியோர் முன்னிலையிலும் மதுக்கூர் வடக்கு பெரமையா கோவிலிருந்து நடைபயணமாக புறப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மதுவுக்கு எதிரான பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

முன்னதாக மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கூர் நகர கவுன்சிலர் சகோதரர் கபார் அவர்கள் மதுவின் தீமைகளைப்பற்றி எடுத்துரைத்தார்.மதுக்கூர் ஆற்றாங்கரையில் நகர நிர்வாகி நிசார் அகமது அவர்களும்,சகோதரர் பவாஸ்கான் அவர்களும்  மதுவின் தீமைகளை விளக்கி பேசினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிராக வெளியிட்டு உள்ள குறுந்தகடு பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.மதுக்கூரில் நடைபெற்ற பரப்புரை யுத்த களத்தில் பேரூந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி ஐயா எனது மருமகன் தினமும் குடித்துவிட்டு வந்து எனது மகளை மிகவும் துன்புறுத்துகின்றார்.நீங்கள் எடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என மனதார வாழ்த்தினார்கள்.

இறுதியாக பேருந்து நிலையத்தில் சகோதரர் கபார் அவர்களின் உரையுடன் மதுவுக்கு எதிரான பிரச்சாரம் இனிதே நிறைவுபெற்றது.எல்லா புகழும் அல்லாஹ்கே.

சுமார் 1500 பிரசுரங்களும் நேற்று இரண்டு மணிநேரத்தில் வினியோகம் செய்யப்பட்டது.மேலும் நாளை மதுக்கூர் முக்கூட்டுச்சாலை,சிவக்கொல்லை பகுதிகளிலும் தொடர்ந்து கிராமபுறங்களிலும் பிரச்சாரம் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்)








Saturday, December 22, 2012


மதுக்கூர் சூரியத்தோட்டம் நிஜாம் சர்பத் அப்துல் சலாம் அவர்களின் மச்சான் டைலர் முகம்மது காசிம் அவர்கள் இன்று  (22/12/2012) வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்  என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மனிதநேயமக்கள் கட்சி இரண்டாம் கட்ட போராட்டக்களத்தை வகுத்து சிறப்பாக செயல்பட்டுவருகினறது.கடந்த 2010 மார்ச் மாதம் 7 ஆம் தேதி மதுவுக்கு எதிரான் போராட்டமான மதுக்கடை மறியலை அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடத்திமுடித்தது.

மீண்டும் கூடுதல் வீரியத்துடன் டிசம்பர் 20 முதல் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிரான பரப்புரை யுத்தம் நடத்திவருகின்றது.தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றது.எல்லா புகழும் அல்லாஹ்கே.



                                 .மதுக்கூரில் மதுக்கடை யுத்த போராட்டம் சுவர் விளம்பரம் 

Friday, December 21, 2012


மதுக்கூர் முகம்மதியர்தெரு மர்ஹும் மொந்தப்பா வீட்டு முகம்மது யாக்கூப் அவர்களின் மனைவி சுபைதா பீவி அவர்கள் இன்று 21/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Thursday, December 13, 2012



20 ஆண்டுகளாய் அடங்காத நெருப்பு... 18 ஆண்டுகளாய் பற்றி எரியும் போராட்டம்....


1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. பட்டப்பகலில், அதிகார வர்க்கம் உறங்க, கரசேவை பயங்கரவாதிகள் கடப்பாரைகளால் நிகழ்த்திய ஜனநாயக படுகொலை இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்தது.

தொடர்ந்து காவி பயங்கரவாதிகள் நாடெங்கிலும் முஸ்லிம்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களால் இந்தியாவே சிவந்தது.
இந்த டிசம்பர் 6 கருப்பு நாளை கடந்த 20 வருடங்களாக சமூக நீதி ஆர்வலர்களும், மனித உரிமை போராளிகளும், சிறுபான்மை மக்களும், கருப்பு நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.

1995 முதல் தமுமுக தொடர்ந்து 18 ஆண்டுகளாய் நீதி கேட்டு போராடி வருகிறது.
1995 முதல் 1998 வரை அடக்கு முறைகளை எதிர்கொண்டு, தடைகளை உடைத்து, சிறைகளை எதிர்கொண்டு, போர் பரணி பாடியது. இவர்களை அடக்க முடியாது என்பதை உணர்ந்த அரசுகள் அதன் பிறகு 1999 முதல் நெருக்கடிகளை தளர்த்தி போராட்டங்களை அனுமதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமுமுக இவ்வருடம் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்தது.
ஜமாத் முத்தவல்லிகள், உலமாக்கள், மதரசா ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல் முற்போக்கு இயக்கங்கள், சமூக நீதி அமைப்புகள் , ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.
இறைவனின் பெரும் கிருபையினால் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
மாவட்ட தலைநகரங்கள், பெருநகரங்களில் நடத்தப்பட்ட இந்த தர்ணா போராட்டத்திற்கு அலை அலையாய் மக்கள் குவிந்து விட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, பள்ளிவாசல் தோறும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, தமிழன் தொலைக்காட்சியிலும், மக்கள் உரிமையிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டு பெரும் எழுச்சி கட்டமைக்கப்பது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் வைக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பர தட்டிகள் பாபர் மசூதிக்கான நியாயங்களை பொதுமக்களுக்கு எடுத்து கூறின.
நாகை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காவல் துறையின் இடையூறுகளை மீறி விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சில இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, VHP, உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த வன்முறை சக்திகள் போஸ்டர்களை கிழித்து தங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய போதும் முஸ்லிம்கள் அமைதி காத்தனர்.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் என 54 மையங்களில் தர்ணா போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இவ்வருடம் கை குழந்தைகளுடன், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு பிறந்த புதிய தலைமுறை மாணவர்களும், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்றது அனைவருக்கும் புதிய நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.
பல இடங்களில் பள்ளிவாசல் உலமாக்களும், ஜமாத் நிர்வாகிகளும் கண்டன உரை ஆற்றி உள்ளனர். இது பாபர் மசூதி போராட்டம் புதிய பாதையில் நகர தொடங்கி இருப்பதை வெளிக்காட்டுகிறது.
சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களில் திரண்ட பல்லாயிரக்கனக்காநோரும், பெருநகரங்களில் 1500, 1200, 1000, 800 என மக்கள் பங்கேற்ற பேரார்வமும் தமுமுகவின் 18 ஆண்டு கால போராட்டம் உயிர் துடிப்போடு வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
பாபர் மசூதி விவகாரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது தமுமுக (அல்ஹம்துலில்லாஹ்)
இதில் இவ்வருடம் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டது நீதிக்கான போராட்டத்தில் ஒரு புதிய நல்லிணக்கத்தையும் உருவாக்கியிருக்கிறது.

ஆம். எமது நீண்ட நெடிய உரிமை போராட்டம் இறைவன் அருளால் அனைத்து மக்களையும் உள்ளடக்கி ஒருநாள் வெற்றி பெரும். இது இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு, அமைதி, நல்லிணக்கம், வரலாறு ஆகியவற்றை காப்பாற்றுவதற்கான அறப்போராட்டம் என்பதை பிரகடனப்படுதுகிறோம்.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்தில் மாநில மாணவர்  அணி பொறுப்பாளர் டாக்டர் சர்வத் கான்,மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் சகோதரர் கலந்தர் மற்றும் மதுக்கூர்,அதிராம்பட்டிணம்,மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,தஞ்சாவூர்,வல்லம்,மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள்,ஜமாத்தார்கள்,பொதுமக்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.





Friday, December 7, 2012


டெல்டா மாவட்ட விவசாயிகள் பந்த்: மனிதநேய மக்கள் கட்சியினர் கைது


சம்பா பயிருக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த டெல்டா மாவட்ட பந்திற்க்கு மனிதநேயமக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது.இன்று 07/12/2012 மதுக்கூர் முக்கூட்டுச்சாலையிலிருந்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோதரர் ராவுத்தர்ஷா ஆகியோர் முன்னிலையில் பேருந்து நிலையம் நோக்கி சென்று மறியலில் ஈடுபட்டனர்.கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர்கள்.மறியல் செய்த அனைவரும் கைதுசெய்யப்பட்ட்டார்கள்.

மறியலில் ஈடுபட்ட மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா,சிபிஎம் ஒன்றிய செயலாளர் காசிநாதன்,சிபிஐ மாநில குழு உறுப்பினர் வேதாசலம்,நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் பிரபாகர்,தமுமுக,மமக நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான்.மமக நகர செயலாளர் முகம்மது ராசிக்,தமுமுக நகர செயலாளர் நிசார் அகமது,முன்னாள் தலைவர் பெளசூல் ரஹ்மான்,பேரூராட்சி கவுன்சிலர் கபார்,மற்றும் ஜபருல்லா,ராசிக்,ரியாஸ்,ரமீஸ்,நஸாருதீன்,சாகுல்ஹமீது,பவாஸ்,மற்றும் தமுமுக,மமக ,சிபிஎம்,சிபிஐ,நாம்தமிழர் கட்சினர் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சிவக்கொல்லை எகேஎஸ் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார்கள்.கைது செய்யப்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் ஜும் ஆ தொழுகையினை திருமண மண்டபத்தில் நிறைவேற்றினார்கள்.ஜும் ஆ உரையினை சகோதரர் ராவுத்தர்ஷா நிகழ்த்தினார்,கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 5 மணிக்கு விடுதலை செய்யப்பட்டர்கள்.









Tuesday, December 4, 2012


மதுக்கூர் இடையகாடு,பெரியார் நகர் காசிராவுத்தர் வீட்டு P.S.K.M.அல்லாபிச்சை,P.S.K.M.அப்துல்ரஜாக்,மர்ஹும் P.S.K.M.அப்துல் ஹமீது ஆகியோரின் தம்பியும்,B.நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாரும்,பாப்பநாட்டார் வீட்டு கமாலுதீன் அவர்களின் மாமனாருமாகிய பகுருதீன் அவர்கள் இன்று 03/12/2012 வஃபாத்தாகிவிட்டர்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Sunday, December 2, 2012


மதுக்கூர் கொல்லைத்தெரு மர்ஹும் மு.ரா.முகம்மது காசிம் ராவுத்தர் அவர்களின் மகனும்,மு.ரா.அப்துல்வஹாப்,மு.ரா.பகுருதீன் ஆகியோரின் சகோதரரும்.மீன்கடை ஜாகீர் உசேன் அவர்களின் மாமனாருமான மு.ரா.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 02/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம் 


நாகூரர் விட்டு ஜமால் மைதீன் அவர்களின் மனைவியும்,செய்யது இபுராகீம்,அன்வர்தீன்.அசாரூதின் ஆகியோரின் தாயாருமான மெத்த வீட்டு பென்னரசி என்கின்ற ரெய்கானபீவி அவர்கள் இன்று 02/12/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Saturday, December 1, 2012


மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் கோத்தாஜ் வீட்டு N.S.N.முகம்மது எகியா,N.S.N.கலிபுல்லா,N.S.N.ஜெகபர் அலி ஆகியோரின் தகப்பனார் N.S.நைனா முகம்மது அவர்கள் இன்று 30/11/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Sunday, November 25, 2012



இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஓடிவிட்டது.பாபர் மஸ்ஜித்துக்காக தொடர்ந்து 18 ஆண்டு காலமாக வீரியம் குறையாமல் போராடும் மக்கள் போரியக்கம் தமுமுக இந்த வருடமும் டிசம்பர் 6 அன்று மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தினை (தர்ணா) போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளது.இன்ஷா அல்லாஹ்..


இது குறித்து விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மதுக்கூரில் செய்யப்பட்டுள்ளது.



Tuesday, November 13, 2012


மதுக்கூர் முகம்மதியர் தெரு மர்ஹும் மு.ரா.அல்லாப்பிச்சை அவர்களின் மனைவியும்,மு.ரா.அ.ரகுமத்துல்லா,மர்ஹும் மு.ரா.அ.ஜலாலுதீன்,மு.ரா.அ.இக்பால் ஆகியோரின் தாயாரும்,சங்கேந்தியார் முகம்மது யாசின் ,மு.ரா.அப்துல் ரஜாக் அவர்களின் மாமியாருமான ஆமினாம்மாள் அவர்கள் நேற்றிரவு 12.11.2012 வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, November 10, 2012


இடையிடாது நடைபெறும் இறை இல்லப்பணி

மதுக்கூர் சூரியத்தோட்டம் அம்மாக்குளம் செல்லும் வழியில் (தோப்புக்காரவீடு ஜக்கரியா அவர்கள்-டைகர் ஜமால் முகம்மது  ஆகியோர் வீட்டிற்க்கு எதிர்புறத்தில்) மிப்தாஹுல் இஸ்லாம் சங்கத்திற்க்கு சொந்தமான இடத்தில் மதுக்கூர் மாநகருக்கு மகுடன் சூட்டுவது போன்று மேலும் ஓர் இறைஇல்லம் கட்டுமான பணிகள் விரைந்து நடைப்பெற்று வருகின்றது.

அமீரக வாழ் ஒரு சில சகோதரர்கள் குறிப்பாக சகோதரர்கள் SNA புகாரி,PTEA ரகுமத்துல்லா,SNSராவுத்தர் (எ) நைனா முகம்மது ஆகியோர் அமீரக அரபியர் ஒருவரின் எண்ண ஓட்டத்தை இறைவனின் கிருபையால் உணர்ந்து அவரின் எண்ணத்தை பிரதிப்பலிக்கும் விதமாக அவரை சந்தித்து எங்கள் மதுக்கூருக்கு இறைஇல்லம் கட்ட உதவி தாருங்கள் என்று உரிமையுடன் கேட்க அன்புடன் இசைந்த அமீரக அரபியர் இடத்தைப்பார்வைவிட வேண்டும் என கூற மதுக்கூர் மாநகருக்கு கடந்த மே மாதம் வருகை தந்து இடத்தையும் பார்வைவிட இறைஇல்லத்திற்க்கும்  நிதி உதவி செய்வதாக கூறி முதல் தவணையினையும் அடுத்த நாளே கொடுத்ததாக கூறப்படுகின்றது.

இப்படி ஆரம்பமான இறைஇல்ல ஆரம்ப பணிகள் கடந்த 28/07/2012 அன்று கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.மிகவும் சின்ன இடம் இதில்  என்ன பள்ளிவாசல் கட்டமுடியும் என அனைவரும் முனுமுனுத்து கொண்டிருக்கையில் மிகவும் அழகாக விரிவாக தனக்கு இறைஇல்லம் கட்ட கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாக செய்துகொண்டிருக்கின்றாய் சகோதர அப்துல் காதர் (லக்கி ஹார்டுவேர்ஸ்) அவர்கள்.கடும் வெயில்,மழை நேரங்களிலும் இடையிடாது நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது இறைஇல்லப்பணி (அல்ஹம்துலில்லாஹ்)இருதளம் கொண்ட இப்பள்ளிவாசல் மொத்த மதிப்பீடு சுமார் ரூ 23.50 இலட்சம் என தெரிகின்றது.

எவர் ஒருவர் இறைவனை தொழுவதற்க்காக மஸ்ஜித் கட்டுகிறார்களோ மறுமையில் இறைவன் அவர்களுக்காக சொர்க்கத்தில் ஓர் அழகிய வீட்டை கட்டுகின்றான் என்ற நபிகள் பெருமகனார் அவர்களின் கூற்றுப்படி இப்பள்ளிவாசல் கட்டுவதற்க்கு யாரல்லாம் முயற்சி கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய துவா செய்வோம்.





Friday, November 9, 2012



உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - திருச்சியில் நடைபெற்றது



திருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மமக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, மாநில செயலாளர்கள் கோவை செய்யது,ஆம்பூர்சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா சம்சுதீன் நாசர் உமரி, தருமபுரி சாதிக், மைதீன் உலவி, ராவுத்தர்ஷா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக உள்ளாட்சித் துறையில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திறம்படப் பணியாற்றிய வழக்கறிஞர் மஹபூப் அலி அவர்கள் மிகச்சிறப்பாக வகுப்பெடுத்தார். வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி பேராசிரியர் அபுல்பைசல் அவர்கள் உள்ளாட்சி சீர்திருத்தம் குறித்த கருத்துக்களை விளக்கினார்.
பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மமகவினர் தூய்மையோடு ஆற்றிவரும் அரசியல் பணிகளை சிலாகித்து, மக்கள் விரும்பும் நேர்மையான அரசியலை மமக முன்னெடுக்கும் என்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஹக்கிம், இப்ராஹிம் ஷா, பைஜிஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் புத்துணர்வு பெற்றவர்களாக தங்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமென்ற நோக்குடன் புறப்பட்டு சென்றனர்.
வெற்றிபெற்ற மமக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்காக சென்னையைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருச்சியில் இரண்டாவது பயிற்சி முகாமை நடத்தி தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tuesday, October 30, 2012


இளையான்குடியில் பாஜகவின் ரவுடித்தனத்திற்கு பாடம் புகட்டியது தமுமுக - பத்திரிக்கை செய்திகள்


பொதுக்கூட்டத்தில் மனம்போனபடி கீழ்த்தரமாகப் பேசுவதும், தட்டிக்கேட்க ஆளில்லாததால் தறுதலைப் பேச்சுகளை மென்மேலும் வளர்ப்பதும்தான் சங்பரிவாரக் கும்பலின் கடந்தகால வரலாறு.
> காமத்தில் விஞ்சியது கன்னிமேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்றெல்லாம் அருவறுப்புத் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி, தமிழகத்தில் மதவெறி நெருப்பை இந்து முன்னணி பற்றவைத்தது.
> 1995க்குப் பிறகு தமுமுக இந்தக் கயமைத்தனங்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.
> அண்மையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய சங்பரிவார பேச்சு பயங்கரவாதி மீது தமுமுக வழக்குப் பதியச் செய்தது.
> வேலூரில் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டியின் படுகொலையைக் கண்டித்து 26.10.2012 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
> இதன் ஒரு கட்டமாக (மாவட்டத் தலைநகரமல்லாத) இளையான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்துகொண்டு தனக்கே உரிய நடையில் மிகக் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். அந்த சாக்கடைப் பேச்சிலிருந்து சில வரிகள்:
> ‘‘வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டியை இடப்பிரச்சினை காரணமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் காவல்துறை கைது செய்த இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகளை ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒரு நாய் வெளியில் விடச் செய்துள்ளது. அந்த நாய் எந்தக் கட்சி (கூட்டத்தில் இருப்பவர்கள் மனிதநேய மக்கள் கட்சி) ‘மனிதநேயத்துக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம், மனிதர்களைக் கொல்றவங்கடா நீங்க... ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளையும் இந்த நாய்தான் விடுதலை செய்ய வைத்திருக்கிறது’’
> என்றும், இதைவிட இன்னும் கேவலமாகவும் எச்.ராஜாவின் பேச்சு அமைந்துள்ளது. தமுமுகவையும், மமக சட்டமன்றத் தலைவர் பேரா. டாக்டர் ஜவாஹிருல்லாவையும், தனிப்பட்ட முறையில் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேருந்து நிலையம் முன்பு பள்ளிவாசலின் அருகில் நின்று எச்.ராஜா பேசுவதை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த நகர தமுமுகவின் மக்கள் தொடர்பு அலுவலர் ஷேக் தட்டிக் கேட்டுள்ளார்.
> பாஜக மேடையின் முன்பு துணிச்சலாகப் போய் நின்று, தமுமுகவை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள், பேரா. ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாகப் பேசிய ராஜாவே மன்னிப்புக்கேள் என்று முழக்கமிட்டுள்ளார்.
> பாஜகவினர் அவரைத் தாக்கப் பாய்ந்துள்ளனர். உடனே காவல்துறை அதிகாரி ஒருவர் இவரை அழைத்து வந்துள்ளார்.
> இதோடு சென்றுவிடாமல், பாஜகவினர் மறுபடியும் வம்புக்கு வந்துள்ளனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முஸ்லிம்களை மிகக்கேவலமாக ஏசியுள்ளனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் செருப்பைத் தூக்கிக் காட்டியுள்ளார். மல்லேந்திரன், ஆபாச வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
> இது தமுமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் பொறுமையிழக்க வைத்துள்ளது.
> அருவறுக்கத்தக்க நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு சரமாரி அடி உதைகள் விழ, பாஜக குண்டர்கள் தெருத்தெருவாக ஓடியுள்ளனர்.
> ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தமுமுகவினர், உரிய பாடம் பெற்றபிறகும் தப்பி ஓடமடியாமல் தவித்த பாஜகவினரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
> 50 பேர் கொண்ட பாஜகவின் குண்டர் கும்பல் இளையான்குடியில் இப்படி ஒரு பாடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
> மமக மாநில அமைப்புச் செயலாளர் மௌலா நாசர், மாவட்டத் தலைவர் சைபுல்லா, பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.
> இனியேனும் அருவறுப்புப் பேச்சுகளை பாஜக கும்பல் நிறுத்திக் கொண்டால் நல்லது.

-எழில் யாசிர்
 

சென்னையை முற்றுகையிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள்: கதிகலங்கிய மத்திய மாநில அரசுகள்


தமிழக அரசே! தமிழக அரசே!
மக்களின் உயிரோடு விளையாடாதே!
திரும்பப் பெறு! திரும்பப் பெறு!
காவல்படையைத் திரும்பப் பெறு!
போடாதே! போடாதே!
பொய் வழக்குப் போடாதே!
தளர்த்து! தளர்த்து!
144 தடை உத்தரவை தளர்த்து!
இழுத்து மூடு! இழுத்து மூடு!
அணுஉலையை இழுத்து மூடு!
& விண்ணதிரும் கோஷம், உணர்ச்சிப் பெருக்குடன் குழுமிய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தால் சென்னை கடந்த 29.10.2012 அன்று ஸ்தம்பித்தது.
கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழக காவல்துறை நடத்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், அணுஉலை எதிர்ப்பாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரியும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் - ஆபத்தான ஆறு அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான 40 இயக்கங்கள் அக்டோபர் 29ல் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
போராட்ட அறிவிப்பு வெளியான உடன் தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுக சற்றே மிரண்டு போனது. போராட்டத் தேதியான 29ல் நடைபெறவிருந்த வெள்ளிவிழா கொண்டாட்டங்களைத் தள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அறிவிக்கப்படாத கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. கூட்டமைப்பின் தோழர்களைத் தொடர்புகொண்ட உளவுத்துறையினர் போராட்டக்காரர்களின் வியூகங்களை அறிந்து கொள்ள பெரிதும் மெனக்கெட்டனர்.
சட்டமன்ற முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியான உடன் வழக்கம்போல மமகவினர் களத்தில் மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். வீதியெங்கும் மமகவினர் மக்கள் உரிமையில் வெளியான அணுஉலை குறித்த செய்தியினை மறுபிரசுரம் செய்து பொதுமக் களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினர். வெகுஜன ஊடகங்களும் தங்கள் பங்குக்கு மக்களிடம் போராட்டச் செய்தியைக் கொண்டு சென்றது. வார இதழான குமுதம் ரிப்போர்ட்டர், மமகவினரின் போராட்ட வியூகங்களைப் பட்டியலிட்டு, சட்டமன்றப் போராட்டத்தை மமக தலைமையில் எழுச்சியுடன் எதிர்ப்பாளர்கள் திரள உள்ளதை எடுத்துக்காட்டியது.
இந்த பரபரப்பின் எதிரொலியாய் போராட்டம் நடந்த எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் பல்வேறு காட்சி ஊடகங்களும், நேரடியாக ஒளிபரப்பு செய்ய குவிந்திருந்தனர்.
மாற்று அரசியலை முன்னெடுத்து, அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். போராட்டப் பதாகைகளையும், கொடிகளையும் கையில் ஏந்தி, போராட்டக் களத்திற்கு வருகை தந்தவண்ணம் இருந்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் தமுமுக மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி, செயலாளர் கள் தமீம், நவீன், துணைச் செயலாளர் முஹம்மது யாசீன் உள்ளிட்ட மமகவினரும், தென்சென்னை மாவட்டத் தலைவர் சீனிமுஹம்மது, பொருளாளர் நாசர், அன்சாரி, கோரி உள்ளிட்ட மமகவினரும், காஞ்சி வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், மமக செயலாளர் சலீம் மற்றும் தொண்டர்கள், காஞ்சி தெற்கு மாவட்டத் தலைவர் ஷாஜஹான் தலைமையில் தொண்டர்களும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் ஹாரூண் ரஷீத், பொருளாளர் ஷேக் தாவூத், மமக இளைஞர் அணி செயலாளர் அமீர்கான் மற்றும் தொண்டர்கள், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல் காதர், செயலாளர் புழல் ஷேக், பொருளாளர் உசேன் அலி, துணைச் செயலாளர் ஸ்டீல் மீரான், புழல் பஷீர், அப்துல் சமது உள்ளிட்ட கழக முன்னணியினரும் போராட்டக் களத்தில் குவிந்தனர்.
காவல்துறையின் கட்டுப்பாடுகள், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலையும் மீறி ஆயிரக்கணக்கான மமகவினரும் ஏனைய அமைப்புகளின் தோழர்களும் போராட்டக் களத்தில் குவிந்தவண்ணம் இருந்தனர். ஆங்காங்கே காவல்துறை, போராட்டக் களத்திற்கு வருகைதரக்கூடிய தொண்டர்களைத் தடுத்து நிறுத்தி, கைது செய்து, கூட்டத்தைக் குறைக்க குறுக்கு வழிகளைக் கையாண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைப் புகளின் மாநில நிர்வாகிகள் கைது செய்யப் பட்டனர்.
மமக அமைப்புச் செயலாளர் ஈரோடு பாரூக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28.10.2012 அன்று கைது செய்யப்பட்டார். திருத்தணி நகர செயலாளர் இக்பால் மற்றும் திருவள்ளூர் நகர மமக செயலாளர் நசீர்கான், பொருளாளர் அலி தலைமையில் புறப்பட்ட கழகத்தின் செயல்வீரர்கள் முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இது போல் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத் துளிகள்:
போராட்டம் நடைபெற்ற எழும்பூர் பகுதியைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க சென்னையின் -நுழைவுப் பகுதிகளில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து தீவிர சோதனைகளை காவல்துறை மேற்கொண்டது.
போராட்டம் குறித்த சுவரொட்டிகளை அச்சடிக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவாக சென்னை மற்றும் சுற்றுவட்டார அனைத்து அச்சக அதிபர்களை அன்பாக(?) அறிவுறுத்தியது காவல்துறை.
போராட்டம் நடந்த பகுதியில் காலை 6 மணியளவில் இருந்து காவலர்களை அதிக அளவில் குவிக்க ஆரம்பித்தது அரசு. போராட்டக்காரர்களை கைது செய்ய மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் இருந்தன. அதிக அளவு தொண்டர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறைப் பேருந்துகள் உடனடியாக வரவழைக்கப்பட்டன.
சென்னையின் இதயப் பகுதியான அண்ணா சாலை, கோட்டை சாலை, கடற்கரைச் சாலை, அண்ணா மேம்பாலம், எழும்பூர் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் காவல் அரண் அமைக்கப்பட்டு தயார் நிலையில் காவல் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.
கண்ணீர்ப் புகை குண்டு துப்பாக்கிகளை ஏந்திய படையினரும், அதிவிரைவு படையினரும் தயார் நிலையில் நிறுத்தியிருந்தது அரசு.
அணுகுண்டையே எதிர்க்கும் ஆற்றல் பெற்றுவிட்டபோது, கண்ணீர்ப் புகை குண்டுகள் எமக்கு எம்மாத்திரம் என எதிர்ப்பாளர்கள் அலைஅலையாய் களத்திற்கு வந்தபோது, கண்ணீர்ப் புகை குண்டுகள் கோலி குண்டுகளாக மாறின.

இடம் மாறியதோ கூடங்குளம்?
தடையை மீறி, காவல் படைகளை அடக்குமுறைகளைத் தாண்டி அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, சொந்த மக்களை காவு கொடுத்துவிட்டு, ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராய் போராட்டக்காரர்கள் தடையை மீறி சட்டமன்ற முற்றுகையைத் தொடங்கினர். போராட்டக்காரர்கள், எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபம் அருகில் தடுப்புகளை வைத்து முன்னேற விடாமல் தடுத்து கைது செய்தது காவல்துறை. மிகச்சரியாக பிற்பகல் 1 மணியளவில் தொடங்கிய கைதுப் படலம், மதியம் 3 மணி வரை நீடித்தது.
அடக்குமுறைக்கு எதிராக, ஒடுக்கப்பட்டோரின் குரலாகத் திரண்ட மக்களை காவல்துறை கைது செய்து அணி அணியாக வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றது. வெகுஜன மக்களின் தொண்டர்களையும், மக்கள் தலைவர்களையும் ஒன்றாக சிறையில் அடைத்தால் போராட்டம் இன்னும் வீரியமும், வளர்ச்சியும் அடையும் எனக் கருதி தனித்தனி மண்டபங்களில் அடைத்தது காவல்துறை.
கூடங்குளம் சென்னைக்கு இடம் மாறியதோ என்ற அளவில் பல்லாயிரக்கணக்கான அணுஉலை எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ஆங்கிலத்தில் ஓர் சொற்றொடர் உண்டு ‘‘When the First Ball Bowled, the Match was Won’’ அதுபோன்று போராட்டம் அறிவித்த நாளில் நடைபெறவிருந்த சட்டமன்றக் கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றிக் கொண்டார்கள். அது எங்களுக்கு கிடைத்த வெற்றி. எங்கள் கூட்டமைப்பின் தோழர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்து போராட்டத்தை அச்சுறுத்த முயன்றார்கள். ஆனால் இங்கு குழுமியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், கூடங்குளம் மக்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக குழுமியிருக்கிறார்கள். போராட்டத்தை அடக்க நினைக்கும் மக்கள் விரோத அரசுகளின் கனவு பலிக்காது. கூடங்குளத்தை இழுத்து மூடும் வரை ஓயமாட்டோம், உறங்கமாட்டோம்” என்றார்.
ஆம் திணறியது சென்னை! தலைநகருக்கு இடம்மாறியது இடிந்தகரை!

நகர்வலம்
கோஷங்களை எழுப்பிய வண்ணம் தடையை மீறி சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கிய மதிமுக, மமக, வி.சி. என வெகுஜன மக்கள் இயக்கத் தொண்டர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிய காவல்துறை, கைதானவர்களை அடைத்துவைக்க மண்டபங்கள் இல்லாமல் சென்னை நகரைச் சுற்றி வந்தனர்.
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், குணங்குடி ஆர்.எம்.அனிபா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் போராட்டப் பகுதியில் கைது செய்யப்பட்டு நீண்டநேரம் அலைக்கழிக்கப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மே 17 இயக்கத்தினரின் பதாகைகள் பெரிதும் கவர்ந்தன.
மனிதநேய மக்கள் கட்சியின் எழும்பூர் பகுதி நிர்வாகிகள் ஜாஹிர், சம்சு, ரவூப் ரஹீம் ஆகியோர், சுட்டெரிக்கும் வெயிலில் போராடிய போராளிகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் பாக் கெட்டுகளை வழங்கினர்.

போராட்டம் தொடங்கும் முன்பே
தலைகளை எண்ணிப் பார்ப்பவன் அரசியல்வாதி; எதிர்காலத் தலைமுறை களுக்கான பணி செய்பவன் சமூகவாதி. சமுதாய மக்களின் முன்னோடியான தமுமுக, போராட்டக் களங்களில் முதன்மையானது. போராட்டம் தொடங்கும் முன்பே காலை 9.45 மணியளவில் தமுமுக மாநில துணைத் தலைவர் ஆர்.எம்.அனிபா முதன்மையாக வருகைதந்து போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினார்.

சட்டமன்றமும் மமகவும்
தமிழக சட்டமன்றம் வெள்ளி விழா காணும் இத்தருணத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக வழியில் போராடும் கூடங்குளம் மக்களுக்காக சட்டமன்றத்தில் குரலெழுப்ப எந்தக் கட்சியும் முன்வரவில்லை.
போராட்டம் தொடங்கிய நாள் முதல் அக்டோபர் 29 வரை கூடங்குளம் மக்களின் தரப்பு நியாயத்தையும், அரசின் இரட்டை நிலைபாட்டையும் அதிவேகமாக விமர்சித்து வந்துள்ளது மனிதநேய மக்கள் கட்சி.
சொந்த மக்களை வஞ்சித்துவிட்டு, ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் மக்கள் விரோத அரசுகளை அடையாளம் காட்டிய ஒரே அரசியல் கட்சி மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே.

ஷமீம் அஹ்மத்


Saturday, October 13, 2012


மதுக்கூர் நகர தமுமுக சார்பாக கூட்டுக்குர்பானித்திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.கூட்டுக்குர்பானி கொடுக்க விரும்பும் சகோதரர்கள் எங்களைத்தொடர்பு கொள்ளவும்.

Sunday, September 30, 2012


நிக்காஹ் வாழ்த்து

மணமகன்
A.அப்துல் ரஹ்மான்
(த/பெ M.S.M.அஜீஸ் ரஹ்மான்)

மணமகள்
H.நஸ்ரின் பேகம்
(த/பெ மர்ஹும் M.ஹபீப் சதக்கத்துல்லா)

மண இடம்
மதுக்கூர் நடுச்செட்டித்தெரு

மணநாள்
ஹிஜிரி 1433 துல்ஃகாயிதா பிறை 13 (30/09/2012) ஞாயிற்றுக்கிழமை

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக வ பாரக்க அலைக்க வஐமஅ பைனகுமா ஃபீகைர்

 

Wednesday, September 19, 2012


மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும் அரசு மதுபானக்கடைகளை அகற்றக்கோரி மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் செப் 22 அன்று முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 13/09/2012 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டு டாஸ்மாக் அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் முற்றுகைப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவற்றை பொதுமக்களுக்கும் அறியும்வண்ணம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை.




கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...