இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, December 21, 2016

புதிய ஆம்புலன்ஸுக்கு நிதி தாரீர்..
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்((தமுமுக) மதுக்கூர் பேரூர் கழகம் சார்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படுகின்ற வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டு சிறப்புடன் சேவையை செய்து வருகின்றோம்.அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது பழைய ஆம்புலன்ஸை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் மூலம் சேவையை இன்னும் துரிதப்படுத்தலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக நிதி வேண்டி உங்களை எல்லாம் சந்திக்க வர உள்ளோம்.இன்ஷா அல்லாஹ்.
அள்ளிக்கொடுக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களே ஆம்புலன்ஸ் சேவைக்கான நிதி தாரீர் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)
மதுக்கூர் பேரூர் கழகம்.

Sunday, December 11, 2016

மதுக்கூர் பேரூர் கழக மனிதநேய மக்கள் கட்சி துணைச்செயலாளர்  சகோதரர் M.அப்பாஸ் அவர்களின் நிக்காஹ்.

மணமக்கள்
M.அப்பாஸ் (த/பெ முகம்மது முஸ்தபா)
B.ஆமினம்மாள் (த/பெ பகுருதீன்)

மணநாள்
ஹிஜ்ரி 1438 ரபியுல் அவ்வல் பிறை 11 (12/12/2016 திங்கள் கிழமை)

இடம் : MSA திருமண மஹால்.மதுக்கூர்.

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா ஃபீஹைர்.
(அல்லாஹ் உமக்கு அருள் வளம் புரியட்டும்.உங்கள் இருவருக்கும் சுபிட்சம் பொழியட்டும்,நன்மையில் உங்கள் இருவரையும் இணைக்கட்டும்)

அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
மதுக்கூர் பேரூர்.

Saturday, October 22, 2016



                                      சிங்கத்துரை (அல்ல)தங்கத்துரை
மதுக்கூர் அருகில் உள்ள கிராம ஊராட்சி தலைவரின் அரிய முயற்சி !
உள்ளாட்சி 21: குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!


தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள். குளங்கள் காய்ந்துக்கிடக்கின்றன. குளம் ஒன்றில் கழிவு நீர் பாய்கிறது. குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. பன்றிகள் மேய்கின்றன. பரபரப்பாக இயங்குகிறது பட்டுக்கோட்டை நகரம். இங்கிருந்து அரைமணி நேரப் பயணம். தென்னை மரங்கள் சூழ வரவேற்கிறது வேப்பங்குளம் பஞ்சாயத்து!
“வாங்க மைடியர், வாங்க...” ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்கிறார் சிங்கதுரை. வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவர். உடல்மொழியில் ஊற்றெடுக்கிறது உற்சாகம். துள்ளல் நடை. வழியில் பெண்மணி ஒருவர் வேனில் அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்த காட்சி வித்தியாசமாக இருக்கிறது. குழந்தையாக மாறிய சிங்கதுரை, ‘ஹாய் மைடியர்ஸ்... ஹாய் மைடியர்ஸ்...’ என்று குழந்தைகளின் கன்னம் வருடி அனுப்புகிறார். “நம்ம கிராமப் பஞ்சாயத்தைப் பத்தி நான் சொல்ல மாட்டேன் மைடியர். நிறையோ, குறையோ மத்தவங்கதான் சொல்லணும். நீங்க பத்திரிகையாளர்தானே, உங்கக் கடமையை நீங்க செய்யுங்க. ஊருக்குள்ள நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க... என்ன சொல்றாங்களோ அதை எழுதுங்க” என்கிறார்.
ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறது வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. காலை மணியடிக்கிறது. உற்சாகமாக ஓடுகிறார்கள் குழந்தைகள். தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார் வடிவழகி. அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “எனக்கு மூணு குழந்தைங்க. மூணு பேரும் தனியார் பள்ளியில்தான் படிச்சாங்க. இவளும் அங்கேதான் படிச்சா. சிங்கதுரை அய்யாதான் எங்கள்ட்ட பேசி அங்கிருந்து இவளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். கூடவே, குழந்தை பேருல அஞ்சாயிரம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காரு...” என்கிறார். ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிக்குள் நுழைகிறோம்.
என்ன இல்லை எங்கள் பள்ளியில்?
“1944-ம் வருஷம் தொடங்குன பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்ங்க இது. ஒருகாலத்துல இங்கிட்டு ஆயிரம் பேரு படிச்சாங்க. அப்ப எல்லாம் தனியார் பள்ளிகள் கெடையாது. எல்லாரும் இங்கிட்டுதான் படிக்கணும். சுத்து வட்டாரத்துலேயே பிரபலமாக இருந்துச்சு இந்தப் பள்ளிக்கூடம். 2000-களின் தொடக் கத்துலதான் பள்ளிக்கு ஆபத்து முளைச்சது. சுத்துவட்டாரத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா தனியார் பள்ளிகளைத் தொடங்குனாங்க.
ஊரெல்லாம் ‘இங்கிலீஷ் மீடியம்’னு போஸ்டர் ஒட்டுனாங்க. எங்க பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்குனது. இப்போ சுத்துவட்டாரத்துல சுமார் 20 தனியார் பள்ளிகள் இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி 600 பேரு படிச்ச இந்த பள்ளியில் கடந்த வருஷம் மாணவர் எண்ணிக்கை 40-க்கும் கீழே போயிருச்சு. நெருக்கியடிச்சு உட்கார்ந்த வகுப்பறைகள் எல்லாம் வெறிச்சோடியிருச்சு.
நாங்க பல வருஷமா அர்ப்பணிப்பு உணர்வோடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம். செயல்வழி கற்றலில் ஆடிப் பாடி சொல்லித் தந்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும். நாங்க பெற்றோர்கிட்ட கெஞ்சுவோம். வாதாடுவோம்.
ஆனா, ஆங்கில மோகத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடலை. இத்தனைக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் செயல்படுகிற பள்ளிக்கூடம்ங்க இது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஆறு ஆசிரியர்கள் இருக்காங்க. அதுல நாலு பேரு முதுநிலை பட்டதாரிகள். சுத்துவட்டாரத்திலேயே பெரிய வளாகம் எங்க பள்ளிக்கூடம்தான்.
கடந்த மூணு வருஷமா அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ‘இன்ஸ்பையர்’ விருது வாங்கிட்டு வர்றோம். தரமான கட்டி டங்கள் இருக்கு. தனித்தனி வகுப்பறைகள் இருக்கு. நூலகம் இருக்குது. சத்துணவுக் கூடம் இருக்கு. அதுக்கு காஸ் இணைப்பு இருக்கு. விதவிதமாக மதிய உணவு கொடுக் கிறோம். பஞ்சாயத்து சார்பில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கிறாங்க. ஓடியாட மைதானம் இருக்கு. என்னங்க எங்க பள்ளிக்கு குறைச்சல்? ஆனா, தீப்பெட்டியாட்டம் இருக்குற தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுறாங்க.
அரசுப் பள்ளியை சூழ்ந்த ஆபத்து!
இந்த சூழல்லதான் போன ஜூன் மாசம் திடீர் ஒரு தகவல் இடி மாதிரி வந்து இறங்குது. போதுமான எண்ணிக்கையில மாண வர்கள் இல்லாததால் எங்க பள்ளியை தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்க போறதா தகவல் வந்துச்சு. ஆசிரியர்களை யும் குறைச்சிடுவாங்களாம். என்ன செய்யற துன்னு தெரியாம தவிச்சு நின்னோம். இந்தத் தகவல் பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரைக் கிட்ட போனது. நேரடியா பள்ளிக்கூடத் துக்கே வந்தவர், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டார். ‘கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நான் குழந்தைகளைக் கூட்டியாறேன். என்னை நம்புங்கன்னார். மறுநாளே தனியார் பள்ளிக்கூடத்து சீருடை யோட ரெண்டு குழந்தைகளைக் கூட்டியாந்தார். ரெண்டு மாசத்துல 10 பேரை சேர்த்துட்டார். தேவையான அளவு எண்ணிக்கையும் கூடுச்சு. தரம் குறைக்கறதுல இருந்து எங்க பள்ளிக் கூடம் தப்பிடுச்சு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
உயர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை!
அரசுப் பள்ளிக்கு வரவழைக்க அப்படி என்ன செய்தார் சிங்கதுரை? கிராம சபைக் கூட்டத்தை கூட்டினார். மக்களை வரவழைத்தார். நமது குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எடுத்துச் சொன்னார். குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். குழந்தைகள் சுமையில்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும், மக்கள் மனம் மாறவில்லை. இதனால் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார்.
அரசுப் பள்ளியில் தங்களது குழந்தையைச் சேர்ப்பவர்களுக்கு அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றார். இரண்டே மாதங்களில் 10 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்கள். சொன்னபடியே பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தார். படிப்படியாக அரசுப் பள்ளியில் குழந்தைகள் சேரத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கும் ஆபத்தும் நீங்கியது.
வரும் கல்வியாண்டில் பள்ளிக் கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதாக உறுதியளித் திருக்கிறார் சிங்கதுரை. இவ்வாறு சேர்க் கப்படும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, இலவசம். தனியார் பள்ளிகள் வேன்கள் மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை கவனித்தவர், அரசுப் பள்ளிக்கும் வாடகை வேனை அமர்த்தியிருக் கிறார். வேனில் குழந்தைகளைப் பொறுப்புடன் ஏற்றி அழைத்துச் செல்ல பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலையும் மாலையும் குழந்தைகளின் வீடு தேடி வருகிறது அரசுப் பள்ளி வேன். மகிழ்ச்சியோடு வருகிறார்கள் குழந்தைகள். இது மட்டுமா?
நன்றி : தி இந்து தமிழ் (22/10/2016)

Wednesday, October 19, 2016

தலைமை எங்களுக்கு ஆணையிட்டால்...
தவறாமல் செய்து முடிப்போம்...இன்ஷா அல்லாஹ்.

ஷரீ அத் சட்டத்தைப் பாதுகாக்க தமுமுக தலைமை உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகின்றது.தமுமுக தலைமை இன்று அறிவிப்பு செய்தது.தலைமையின் ஆணையின்படி கையெழுத்து இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில்  17/10/2016 சகோதரிகளிடமிருந்து தொடங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.





Tuesday, October 11, 2016

வக்ப் செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
அல்லாஹ்வின் பேராருளாலும் மறைந்த பெரியவர்கள் மர்ஹும் அப்துல்லா (பஞ்சாயத்துபோர்டு),மர்ஹும் முகம்மது சாலின் (மூட்டை பூச்சி ஆலிம்ஷா) உதவியுடனும்,மறைந்த பெரியவர் மர்ஹும் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களின் சீரிய நிர்வாகத்தாலும்,உழைப்பாலும் பல முயற்சிகள் மேற்கொண்டதின் காரணமாக அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட இறை சொத்துக்களான கீழ்கண்ட சொத்துக்களூம் மற்றும் அதன் சார்பு நிர்வாகமும் தற்போது மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி வசம்வக்ப் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.




1.மதுக்கூர் இராமம்பாள் புரத்தில் உள்ள தக்வா பள்ளிவாசல் (சமீபத்தில் சகோதரர் கமாலுதீன் ஹதியா செய்த 4 குழி உட்பட மொத்தம் 28 குழி மற்றும் பயன்பாட்டில் உள்ள பொருட்கள்)
2.மதுக்கூர் இந்திரா நகரில் சகோதரர் நத்தர்ஷா அவர்கள் ஹிப்பத் மூலம் அளித்த இடம்.(தற்போதைய மக்கா மஸ்ஜித்)
3.மதுக்கூர் இடையகாடு ஷேக் நசுருதீன் (பூண்டியார்) அவர்கள் ஹிப்பத் மூலம் எழுதி கொடுத்த இடம் (தற்போதைய குர் ஆன் மதரஸா)
4.மதுக்கூர் படப்பைக்காட்டில் முகம்மது ராசுத்தர் மகன் முகம்மது தாவூத் அளித்த இடம்.
மேற்கண்ட அனைத்தும் மர்ஹும் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களால் அல்லாஹ்வின் உதவியினை கொண்டு உள்ளூர் ,வெளியூர் கொடை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களால் மிகச்சீரிய மார்க்கப்பணிக்காக உழைப்பாலும் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.இப்பணிகளுக்காக உழைத்த சகோதரர்கள் ஜமால் முகம்மது (ஆனந்த),SPN நைனா முகம்மது,VM முகம்மது இஸ்ஷாக்,மர்ஹும் ASM ஜக்கிரியா,A.ஜாகீர் உசேன்,NPMF ரியாஸ் அகமது,SMR அப்துல் ஹமீது,KNM அப்துல் மாலிக் ஆகியோருக்கு அல்லாஹ் அருள் புரியட்டுமாக.
கடந்த இரண்டு வருடங்களாக இச்சொத்துக்களை பெரியப்பள்ளி நிர்வாகத்திடம் வக்ப் செய்யப்போவதாக மறைந்த ANM முகம்மது அலி ஜின்னா அவர்கள் கூறி அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.தற்போது அன்னாரின் மறைவுக்கு பின்னர் அன்னாரின் எண்ணத்தின் பெயரில் அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து சொத்துக்களும் ஜாமியா மஸ்ஜித் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ANM முகம்மது அலி ஜின்னா அவர்களின் இல்லத்தில் வைத்து ஜாமியா மஸ்ஜித் நிர்வாகத்திடம்வக்ப் செய்யப்பட்டு உள்ளது.

இத்தகைய நற்பணிக்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் என்றென்றும் அருள் புரியட்டும்.



Saturday, September 24, 2016

அதிகார பூர்வ அறிவிப்பு

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி மதுக்கூர் பேரூராட்சி வார்டுகள் ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
மதுக்கூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 3-வது வார்டு,

பெண்களுக்கு 1, 4, 8, 9, 10, 11, 12 ஆகிய வார்டுகள்.

ஆண்களுக்கு 2,5,6,7,13,14,15

அன்புடன்
தமுமுக & மமக
மதுக்கூர்.
வாழ்த்துகின்றோம்...
 

மதுக்கூர் புதுத்தெருவை சார்ந்த அன்பு சகோதரர் நத்தர்ஷா அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் (TNCSC) தஞ்சாவூர் மாவட்ட மேலாளர் பொறுப்பிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளராக (REGIONAL MANAGER of TNCSC) பொறுப்பு ஏற்க உள்ளார்கள்.
சகோதரர் நத்தர்ஷா அவர்களுக்கு 
எங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி

மதுக்கூர்.

Wednesday, September 7, 2016

உள்ளாட்சி  தேர்தல் அதிமுக தீவிரம்

இன்னும் ஒரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .உள்ளாட்சி தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றது.அதன்படி மதுக்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் கவுன்சிலர் பொறுப்புக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இன்று அதிமுக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டது.
 

  •  08 மற்றும் 15 ஆகிய வார்டுகளில் சூரியத்தோட்டம் மற்றும் மேலசூரியத்தோட்டம்  வார்டுகள்  போட்டியிட பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.ஜெ.ஆனந்தன்,

  • 11 வது வார்டு புதுத்தெருவில் முகைதீன் மரைக்காயர்,சிப்பி அப்துல் காதர்,முகம்மது யாக்கூப் 

  • 4 வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் மாரிமுத்து,முன்னாள் நகர செயலாளர் மெட்ரோ சாகுல்,சேட் வாவா என்கின்ற அப்துல்லா, 


  • 5வது வார்டில் போட்டியிட கவுன்சிலர் சுரேஷ்,

  •  
  • 6வது வார்டு மெயின்ரோடு மெளலான தோப்பு நிஜாம் ராஜா,பஷீர் அகமது, திருப்பதி ராஜ்



  • 10 வது வார்டில் போட்டியிட கவுன்சிலர்  நாகூர்கனி,

  • 12 வார்டு பள்ளிவாசல் தெருவில் முத்துமுகம்மது.வசந்தம் சாகுல் ஹமீது,ரகுமத்துல்லா,செய்யது முகம்மது.

  • 13 வது வார்டில்(பெரியச்செட்டித்தெரு) போட்டியிட திருநாவுச்சரவு,

  • 14 வது வார்டில் நகர செயலாளர் எழுத்தர் ஷரீப்,

  • 9வது வார்டில் சாகுல் ஹமீது,நாகராஜன் ஆகியோர் விருப்ப மனு கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tuesday, August 30, 2016

மதுக்கூரில்

கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தரக்கோரி இன்று விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் மமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.

மனிதநேய மக்கள் கட்சி தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் எம்.கபார்.தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா,முன்னாள் பேரூர் கழக தலைவர் ஹாஜா மைதீன் ஆகியோர்  கலந்து கொண்டார்கள்.



மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேரமருத்துவர்கள் நியமிக்க மமகவினர் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை..

மதுக்கூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர்கள் பணி அமர்த்த கோரி இன்று மாவட்ட ஆட்சி தலைவரை மனிதநேய மக்கள் கட்சியினர் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.

இக்கோரிக்கை மிக முக்கியமானது எனவும் அவசியமானது எனவும் பலதரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து.

இச் சந்திப்பில் மமக மதுக்கூர் நகர செயலாளர் ராசிக் அகமது, துனை செயலாளர் சபீர் அகமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


 

Thursday, August 25, 2016

வாழ்த்தும்..பிரார்த்தனையும்.
இளம் சாதனையாளர் விருது பெற்ற எங்கள் பாசமிகு சகோதரர்.மதுக்கூர் பேரூர் கழக பொருளாளர்,கிரசெண்ட் கன்ஸ்ட்ரசன் மதுக்கூர் Er .A முகமது இலியாஸ் BE அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்களும்.பிரார்த்தனைகளும்.


அன்புடன்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.(TMMK)
மதுக்கூர் பேரூர்க் கழகம்

Wednesday, August 24, 2016


பாதுகாப்பானதா கூடங்குளம் உலை?




அணுஉலை விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு, தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின் அடுத்தடுத்த அலகுகளை இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். அணுசக்தி தேவையா, தேவையில்லையா எனும் விவாதத்தில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்கலாம்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் அப்படி இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்நிகழ்ச்சியில் பேசுகையில், “கூடங்குளம் அணுஉலை குறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மக்களின் அச்சங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கூடங்குளம் அணுஉலை உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது” என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதே ஜெயலலிதா, கடந்த 2013 அக்டோபர் 13 அன்று, தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது “கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும். இந்தப் பிரச்சினையில் உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன்” என்று குறிப்பிட்டது இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இத்தகைய பின்னணியில் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சமீபத்திய உரையில் குறிப்பிட்டிருக்கும் ‘பாதுகாப்பு உறுதி’ எந்த அளவுக்கு உண்மையானது?
கள யதார்த்தம்
இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 1989-ம் ஆண்டிலேயே “கூடங்குளம் அணுஉலையிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளை அணுஉலை பக்கத்திலேயே சேமிக்காமல், தொலைதூரத்தில் சேமிக்க வழி காண வேண்டும்” என்று கூறியுள்ளது. 2013-ல் உச்ச நீதிமன்றமும்கூட இதை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை நடக்கவில்லை. ‘‘உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் இரு பரிந்துரைகளை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படும்’’ என்று அணுசக்தித் துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிறைவேற்றப்படாத இந்த இரண்டு பரிந்துரைகளும் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பானவை. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
நான் பல முறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன், ‘‘தமிழக அரசு அமைத்ததாகக் கூறும் நிபுணர் குழுவின் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று. இதுநாள் வரை தாக்கல் செய்யப்படவில்லை. என்ன காரணம்? கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராடும் மக்களிடம் அந்தக் குழு எவ்விதக் கருத்துக்கேட்பு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை; மக்களின் அச்சங்களைப் போக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் யாரும் ஈடுபடவில்லை. கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றி வாழும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி எதுவும் இந்நாள் வரை அளிக்கப்படவில்லை. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அருகில் ஒரு பன்னோக்கு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவுக்கு உண்மைச் சூழலைப் பிரதிபலிக்கிறது?
பாதுகாப்பு ஓட்டைகள்
2014 அக்டோபரில் கூடங்குளம் அணுஉலையில் உள்ள முதல் அலகில் டர்பைன் என்று சொல்லக்கூடிய விசையாழியின் கத்திகள் உடைந்து, அவ்விசையாழிகள் கடுமையாகச் சேதமாகியுள்ளன என்று தகவல்கள் வெளியாயின. இதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அணுஉலையின் வால்வில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஆறு ஊழியர்கள் பலத்த காயத்துக்கு இலக்கானார்கள் என்ற தகவல் வெளியானது. ஜூலை 2013-ல் கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அரைகுறையாகவே செயல்பட்டுவந்தது. இந்த இரண்டு வருடங்களில் கூடங்குளம் அணுஉலை பழுதடைந்து 32 முறை இயக்கம் நின்றிருக்கிறது என்கிறார்கள்.
இந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், “கூடங்குளம் அணுஉலையில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தரமற்றவை” என்று பகிரங்கமாக அறிவித்தார். “கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” என்றும் “அணுஉலை உபயோகத்துக்கு ஊழல்கள் நிறைந்த ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட அனைத்தும் தரமற்ற கருவிகள்” என்றும் “உடனே அலகு மூன்று மற்றும் நான்கைத் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்த வேண்டும்” என்றும் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் தலைமையிலான குழு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியது.
விஸ்வநாதனின் சப்பைக்கட்டு
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கூடங்குளம் அணுஉலையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆகஸ்ட் 7, 2014 அன்று நான் சில முக்கியமான குறைகளைச் சுட்டிக்காட்டினேன். அதற்குப் பதிலளித்த அன்றைய எரிசக்தித் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “சந்தேகப்படுவதற்கோ அல்லது ஐயமுறுவதற்கோ ஏதுமில்லை” என்று சப்பைக்கட்டு கட்டினார்.
அக்டோபர் 23, 2013 அன்று கூடங்குளம் அணுஉலை மின்இணைப்பில் சேர்க்கப்பட்டது முதல் 840 நாட்களில் 372 நாட்கள் மட்டுமே இயங்கியுள்ளது என்பது தமிழக முதல்வரின் கவனத்துக்கு வரவில்லையா அல்லது தெரிந்தும் மறைக்கிறாரா?
கூடங்குளம் அணுசக்தி நிலையத்தைச் சுற்றியுள்ள 30 கி.மீ. சுற்று எல்லையில் 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அணுஉலையில் விபத்து ஏற்பட்டால், இந்த மக்களை வெளியேற்றிக் காப்பாற்றுவதற்கு உருப்படியான திட்டம் ஏதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட அளவில், இந்த அணுஉலையின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. உலகிலேயே மிக அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணுஉலை விபத்துகள்தான். மேலை நாடுகளில் இவற்றைக் கண்காணிப்பதற்குச் சுயேச்சை அதிகாரமுள்ள அமைப்புகள் உள்ளன. இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை. எனவே, அணுஉலைகளின் பாதுகாப்பு என்பது மர்மமான இரும்புத் திரையாகவே உள்ளது.
மத்திய - மாநில அரசுகள் வளர்ச்சி என்ற மந்திரச் சொல்லால் எல்லோர் வாய்களையும் அடைத்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை இந்திய அணுசக்தித் துறையின் பெருமிதங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிராதாரப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலையில் அடுத்தடுத்த அலகுகளை விரிவாக்கும் முன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டுமே ஒழிய; மத்திய அரசின் வாயாக ஒலிக்கக் கூடாது!
கட்டுரையாளர் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்,
தொடர்புக்கு: jawahirinfo@gmail.com
கேன்ஸர் விழிப்புணர்வு நிகழ்ச்சி




அதிரையில் 29/08/2016 கேன்ஸர் வளிப்புனர்வு நிகழ்ச்சி --கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program

இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?

மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம்.

கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.

கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.
காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
காணொளி விளக்கம் : டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம்.
MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.

Tuesday, August 23, 2016

கேன்ஸர் விழிப்புணர்வு நிகழ்ச்சி




அதிரையில் 29/08/2016 கேன்ஸர் வளிப்புனர்வு நிகழ்ச்சி --கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program

இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?

மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம்.

கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.

கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.
காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
காணொளி விளக்கம் : டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம்.
MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து, பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.

Monday, August 22, 2016

மரண அறிவிப்பு
மதுக்கூர் மெயின்ரோடு சேக் மைதீன் அவர்களின் தகப்பனர் ம.செ.செய்யது இஸ்மாயில் அவர்கள் இன்று 22/08/2016 வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, August 20, 2016

நெடுஞ்சாலை துறை அறிவிப்பு

பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்திற்கு சொந்தமான மதுக்கூர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டிடங்கள்,கடைகள் ஆகியவை இருந்தால் வரும் 25/08/2016 அன்றுக்குள்ளாக அப்புறப்படுத்தி கொள்ளவேண்டும்.
இல்லையெனில் நெடுஞ்சாலைத்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு அதற்குண்டான தொகை வசூல் செய்து கொள்ளப்படும் என மதுக்கூர் பகுதியில் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

Thursday, August 18, 2016

பாரக்கல்லாஹ்

மதுக்கூர் பேரூர் கழக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பொருளாளர் சகோதரர் Er.முகம்மது இலியாஸ் தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும்,சேயும் நலமுடன் வாழவும்.ஈமான் நிறைந்த குழந்தையாக வாழவும்,வளரவும் துவா செய்கின்றோம்.

Wednesday, August 17, 2016

பட்டுக்கோட்டை வட்டம்(தாலுகா)
இரண்டாக பிரிக்கப்படுகின்றது.


பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை கிழக்கு என்றும் பட்டுக்கோட்டை மேற்கு என்றும் இரண்டு வட்டமாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர்,பெரியக்கோட்டை,துவரங்குறிச்சி,தம்பிக்கோட்டை மற்றும் அதிராம்பட்டிணம் ஆகிய சரகங்கள் உள்ளடக்கி பட்டுக்கோட்டை கிழக்கு வட்டம் என ஒரு வட்டமாகவும்.
பட்டுக்கோட்டை,நம்பிவயல்,திருச்சிற்றம்பலம்,குறிச்சி மற்றும் ஆண்டிக்காடுசரகங்களை உள்ளடக்கி பட்டுக்கோட்டை மேற்கு என ஒரு வட்டமாகவும் பிரிக்க திட்டமிட்ப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் ஒரு தாலுகா பட்டுக்கோட்டையை தலைமையாக கொண்டும் மற்றொன்று மதுக்கூர் அல்லது அதிராம்பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என சொல்லப்படுகின்றது.

Sunday, August 14, 2016

மதுக்கூரில் மதுக்கடை முற்றுகை தற்காலிகமாக நிறுத்தம்

மதுக்கூர் முக்கூட்டுச்சாலை அதிரை ரோட்டில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்,பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக குடியிருப்பு பகுதியில் இருக்கின்ற அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக் கடை எண் : 7870) அகற்றக்கோரி இன்று 14/08/2016 மாலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு  பின்னர் முற்றுகைப்போராட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.இதன் காரணமாக இன்று காலை முதலே பரபரப்புடன் மதுக்கூர் காணப்பட்டது.காவல் துறை தீவிர கண்காணிப்புகளிலும் ஈடுபட்டனர்.











நேற்றுவரை மெத்தனமாக இருந்த அரசு நிர்வாகம்.மதுக்கூரில் நடைபெறும் மதுக்கடை முற்றுகை போராட்டத்திற்கு டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்து மனிதநேய சொந்தங்கள்,தமுமுக செயல்வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாக உளவுத்துறை தகவலை அடுத்து இன்று மதியம் 1:00 மணியளவில் போராட்டம் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஏற்படுத்தலாம் என்று அரசு துறை சமாதான முயற்சிகள் மேற்கொண்டதின் பெயரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமைதி பேச்சுவார்த்தையில் மூன்று மாதத்திற்குள்ளாக முக்கூட்டுச்சாலை மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என எழுத்துபூர்வமாக கொடுத்ததின் பெயரில் இன்று நடைபெறுவதாக இருந்த மதுக்கூர் முக்கூட்டுச்சாலை மதுக்கடை முற்றுகைப்போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள்.
அரசு தரப்பு :பட்டுக்கோட்டை வட்டாட்சியர்,மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர்,பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர்,மதுக்கூர் காவல் ஆய்வாளர்,கிராம அதிகாரி ஆகியோர்,

தமுமுக & மமக தரப்பு : மமக மாவட்ட செயலாளர் எம்.கபார்,நகர செயலாளர்கள் ராசிக் அகமது (மமக),பவாஸ் (தமுமுக)நகர பொருளாளர் முகம்மது இலியாஸ்,நகர துணை நிர்வாகிகள் அப்பாஸ்,புரோஸ்,முஜிபுர் ரஹ்மான்,அமீரக நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,நிசார் அகமது,சிராஜுதீன்,மாவட்ட துணைச்செயலாளர் ஜபருல்லா மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்துகொன்டார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !



Thursday, August 11, 2016

மதுக்கடையை அகற்றக்கோரி.
அறவழி ஆர்ப்பாட்டம்
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் அதிரை ரோட்டில் பொதுமக்களுக்கும்,குடியிருப்புவாசிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி (டாஸ்மாக் கடை எண் : 7870)தமிழ்நாடு முஸ்லி முன்னேற்றக்கழகத்தின் அரசியல் பிரிவு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வருகின்ற 14/08/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு கண்ட உரை நிகழ்த்த உள்ளார்கள்.
மதுவுக்கு எதிராய் போராடும் போராளிகளை போராட்டக்களத்திற்கு அழைக்கின்றது.
மனிதநேய மக்கள் கட்சி
மதுக்கூர்
தொடர்புக்கு : 9715858328,85081 02036,97891 55480


Monday, May 30, 2016

இனிதாய் முடிந்த இஸ்லாமிய இஜ்திமா...
மதுக்கூரில்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக கடந்த மூன்று வருடங்களாக மே மாதத்தில் இஸ்லாமிய மாநாடு நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி கூடிய மதுக்கூர் பொதுக்குழு மே 28 ஆம் தேதி இஸ்லாமிய இஜ்திமா வைப்போம் என தீர்மானம் நிறைவேற்றி கடந்த ஒரு வார காலமாக கடும் களப்பணிகள் மேற்கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் கடந்த சனிக்கிழமை மே 28 சிறப்புடன் நடந்தேறியது.அல்ஹம்துலில்லாஹ்.
முதல் அமர்வு
**********************
காலை 10:30 மணிக்கு தொடங்கிய மாநாட்டின் முதல் அமர்வு காயல்பட்டிணம் தாவா சென்டர் மாணவிகளால் இஸ்லாமிய கண்காட்சி மாலை 5:00 மணிவரை சிறப்புடன் நடைபெற்றது.சுமார் 500 மேற்பட்ட தாய்மார்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர் தங்களின் மார்க்க சம்மந்தமான பல வினாக்களுக்கு விடைகளை பெற்று சென்றனர்.


இரண்டாம் அமர்வு
******************************

இஜ்திமாவின் இரண்டாம் அமர்வு சரியாக 5:30 மணிக்கு சகோதரர் ESMM முகம்மது பைசல் அவர்கள் தலைமையில் தொடங்கியது.சகோதரி பர்வீன் ஆலிமா அவர்கள் இறைவசனம் ஓதினார்.தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை ஹாஜா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர்.தொடர்ந்து காயல்பட்டிணம் தாவா செண்டர் மாணவிகளின் "மனம் கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் தாங்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டதின் பின்னனிகளை குறித்து உருக்கமான உரைகள் நிகழ்த்தினார்கள்.மகரிப் தொழுகைக்காக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.


மூன்றாம் அமர்வு
***************************

மாலை 7:00 மணிக்கு தொடங்கியது.முதலில் மெளலவி இக்பால் பிர்தவ்ஸி அவர்கள் " திருக்குர் ஆனின் சமுதாயம் "என்ற தலைப்பில் மிகுந்த எழுச்சியுடன் உரை நிகழ்த்தினர்.மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் "சுய பரிசோதனை"என்ற தலைப்பிலும் மெளலவி அப்துல் மஜீது மஹ்ளரி அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும் கால சூழ்நிலைக்கு ஏற்ப உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்.முடிவில் Er.முகம்மது இலியாஸ் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
"எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே"





(மதுக்கூர் தாய்மார்கள் இயக்க,அமைப்புகள் வேறுபாடுகள் இன்றி இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்றால் மிகுந்த எழுச்சியுடன் கலந்து கொள்கின்றார்கள்.அல்லாஹ் இவர்களின் மார்க்க "இல்ம்" மை அதிகரிக்க துவா செய்கின்றோம்.

உதவிகள் செய்த எங்கள் உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

Tuesday, February 23, 2016

மதுக்கூரில் தாவா பணி


மதுக்கூர் சந்தைப்பேட்டை பகுதியில் இன்று தாவா பணி முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிஎடுத்துச்சொல்லப்பட்டது.விரும்பும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் அருள்மறை குர் ஆன் இலவசமாக கொடுக்கப்பட்டது.இஸ்லாத்தைப்பற்றி,பகுத்தறிவைப்பற்றி,அல்லாஹ்வையும்,அவனது திருத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறிய கையேடுகள் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.




கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...