இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Friday, August 31, 2012


மதுக்கூர் நூருல் இஸ்லாம் தெரு  சகோதரர் A.சலீம் (த/பெ அப்துல் அஜீஸ்)அவர்களின் இல்ல புதுமனை புகும் நிகழ்ச்சி

நாள் : 31/08/2012

சகோதரர் குடும்பத்தினருக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.
 

Wednesday, August 29, 2012

முற்றுகைப்போரட்டம்.


மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கும்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடைகளை எடுக்ககோரி மாபெரும் முற்றுகைப்போரட்டம்.

நாள்: 22/09/2012 சனிக்கிழமை காலை 11:00 மணியளவில் (இன்ஷா அல்லாஹ்)

தலைமை : எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் (பொதுச்செயலாளர் மனித நேய மக்கள் கட்சி)

அழைக்கின்றது.
மனிதநேய மக்கள் கட்சி 
மதுக்கூர் நகரம்.

நிக்காஹ் வாழ்த்து

மணமகன்
K.நத்தர்ஷா
(த/பெ M.கமாலுதீன்)

மணமகள்
A.சித்தி பர்ஸானா
(த/பெ A.அப்துல் கரீம்)

மணநாள்
ஹிஜிரி 1433 ஷவ்வால் பிறை 11 (30/08/2012) வியாழக்கிழமை

மண இடம்
நிலாதெரு,இடையகாடு,மதுக்கூர்


வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வ ஐம பைனகுமா பீஹைர்

 

இன்று மதுக்கூர் பள்ளிவாசல் தெரு தம்பிமரைக்காயர் வீட்டு திருமணம் நடைபெறுகின்றது.இத்திருமணத்தை முன்னிட்டு விருந்து உபசரிப்பு இன்று 29/08/2012 நடைபெறுகின்றது.விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச்சூழலை விளக்கும் வண்ணமும்,மரங்களின் அவசியத்தை உணர்ந்தும் வண்ணமும் மரச்செடிகள் கொடுக்கப்பட்டது.









Tuesday, August 28, 2012


T.A.S.தம்பி மரைக்காயர் இல்லத்திருமணம்

மணமகன்
T.ஷேக் அப்துல்லா
(த/பெ T.A.S.தம்பி மரைக்காயர்)

மணமகள்
A.சஜீனா 
(த/பெ K.அப்துல் கனி)

மணநாள்
ஹிஜிரி 1433 ஷவ்வால் பிறை 11 (29/08/2012) புதன் கிழமை

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜம அ பைனகுமா பீஹைர்


Saturday, August 25, 2012


கல்ஃப் டிராவல்ஸ் உரிமையாளர் சகோதரர் K.S.N.A.சாகுல்ஹமீது அவர்களின்  வீடு குடிபுகும் நிகழ்ச்சி மதுக்கூர் பள்ளிவாசல் தெருவில் 26/08/2012 அன்று நடைபெறுகின்றது.

சகோதரர் அவர்களுக்கும்,குடும்பத்தினாருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் (பாரக்கல்லாஹ்)

Thursday, August 23, 2012

 இன்று 23/08/2012 பட்டுக்கோட்டையில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மற்றும் பாளையம் ஆகிய இரு இடங்களில் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
முன்னதாக பட்டுக்கோட்டைக்கு முதன்முதலாக வருகை புரிந்த தமுமுக மூத்த தலைவருக்குபட்டுக்கோட்டை கைக்காட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


மகரிப் தொழுகைக்கு பின்னர் பட்டுக்கோட்டை பெரியப்பள்ளி ஜமாத் சார்பாக ஜமாத் தலைவர் அமானுல்லா அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் பள்ளிவாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பேராசிரியர் அவர்கள் ஜமாத்தார்கள் முன்னிலையில் சிறு உரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, August 22, 2012


மதுக்கூர் நகர தமுமுக பொறுப்பாளர் அஜீம் இல்ல நிக்காஹ்.

மணமகன்
A.ரிபாய்தீன்

மணமகள்
M.நஷிமா பேகம்

மணநாள்
23/08/2012 வியாழக்கிழமை

மண இடம்
மதுக்கூர்

மணவாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க  வ ஐஅ பைனகுமா ஃபீஹைர்

 

Tuesday, August 21, 2012

மதுக்கூரில் சுகந்திர தின நிகழ்ச்சிகள்

மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் என்.எஸ்.எம்.பஷீர் அகமது அவர்களும்,
சந்தைப்பள்ளிக்கூடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் அவர்களும்,அர் ரஹ்மான் பள்ளியில் டி.ஏ.கே.ஏ.முகைதீன் மரைக்காயர் அவர்களும் தேசியக்கொடியினை ஏற்றினார்கள்.









மதுக்கூரில் பெருநாள் தொழுகை
மதுக்கூரில் நோன்பு பெருநாள் தொழுகை பெரியப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் இஃக்லாஸ் ஆகிய இருஇடங்களில் சிறப்பாக நடைப்பெற்றது.காலை 9:00 மணிக்கு பெரியப்பள்ளிவாசலிலும்,காலை 7:15 மணிக்கு மஸ்ஜித் இஃக்லாஸிலும் சிறப்பாக நடைபெற்றது.
சகோதர,சகோதரிகள் தொழுகைக்கு பின்னர் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.










சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை - பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)


சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை டான் போஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்த பிறகு தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் இந்த இனிய நாளில் சகோதரத்துவம் மலரவும், அஸ்ஸாம் மற்றும் மியான்மர் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் மலரவும், இந்தியா அனைத்து துறையிலும் முன்னேறவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்ய வேண்டும் என்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வட சென்னை மாவட்ட துறைமுகம் பகுதி தமுமுகவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.





Wednesday, August 15, 2012


மதுக்கூர் மேலசூரியத்தோட்டம் ரோஜா மளிகை வீட்டு மர்ஹும் உ.சாகுல்ஹமீது அவர்களின் மூத்த மகன் அப்துல் வஹாப் அவர்கள் இன்று 15/08/2012 வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Tuesday, August 14, 2012


மதுபானக்கடை முற்றுகை போராட்டம்

மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக கோரிக்கை மனு கடந்த ஜுன் மாதம் 28 தேதி அளிக்கப்பட்டது.மேற்படி மனு மீது துறை ரீதியான முறையான அனுமுறை இல்லை.எனவே

பொதுமக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கும்,பள்ளி மாணவ,மாணவியர் மிகவும் இடையூறாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில்  உள்ள இரு அரசு மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வருகின்ற செப் மாதம் 20 தேதி அன்று 
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் முற்றுகைப்போராட்டம் நடைபெற உள்ளது.

சகோதரர்கள் தங்களின் குடும்பத்தாரையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள செய்ய ஆர்வமுட்டுங்கள். 

Monday, August 6, 2012


அமெரிக்கா சார்பாக சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர்கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் காயமடைந்த முத்துக்கண்ணன், பாந்துவநாதன் மற்றும் முத்து முனிராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ50 ஆயிரம் என அமெரிக்க அரசின் சார்பாக வழங்கப்பட்ட அற்பமான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது வேதனைக்குரியதும் வன்மையான கண்டனத்திற்குரியதுமாகும்.

எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் துபாயில் ஜபல் அலி துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அமெரிக்க கடற்படையினரால் மனிதாபிமானமில்லாமல் சுடப்பட்டுள்ளார்கள். அமெரிக்க கடற்படையினர் இந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பிப்பதுப் போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுகள் தங்களை நோக்கி வேகமாக வந்ததாகவும் தாங்கள் எச்சரித்தாகவும் இதன் காரணமாக தான் தாங்கள் சுட்டதாகவும் கூறியது முற்றிலும் தவறானது என்று துபாய் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் தலைமை அதிகாரி தாஹி கல்பான் தமீம் தமிழக மீனவர்கள் இருந்த படகு அமெரிக்க கடற்படை கப்பலை நோக்கி வேகமாக செல்லவில்லை என்றும் எவ்வித எச்சரிக்கையையும் இந்த படகிற்கு அமெரிக்க கடற்படை செய்யவில்லை என்றும் தங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனவே தமிழக மீனவர் சேகர் திட்டமிட்டே அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி 15 அன்று கேரளா கடல் பகுதியில் இத்தாலியின் வர்த்தக கப்பலான என்ரிக லக்சியில் இருந்து பாய்ந்த குண்டுகள் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உயிரை மாய்த்தது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதினும் கேரளா அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இத்தாலி அரசிடமிருந்து தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக பெற்று தந்ததுடன் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கையும் மேற்கொண்டது. இதற்கு நேர்மாற்றமாக அமெரிக்க அரசின் எடுபிடியாக மாறி அற்ப தொகையாக இறந்த சேகர் குடும்பத்திற்கு ரூ5 இலட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ50 ஆயிரமும் அமெரிக்காவின் சார்பாக தமிழக அரசு நேற்று ரகசியமாக வழங்கியுள்ளது வேதனைக்குரியது, வெட்க கேடானது. கேரளா அரசு இத்தாலி கொலையாளிகள் விவகாரத்தில் நடந்துக் கொண்டதுப் போல் நடக்காமல் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு தமிழக அரசு வெஞ்சாமரம்
வீசியுள்ளது ஏற்புடையது அல்ல. துபாய் அரசே இந்த விவகாரத்தில் அமெரிக்க கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் சொந்த மாநில அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தோப்பு வலசை சேகர் குடும்பத்திற்கு ரூ 5 கோடியும் காயமடைந்த மூன்று மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ1 கோடியும் பெற்று தர தமிழக முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எச்.ஜவாஹிருல்லா
சட்டமன்ற உறுப்பினர்
இராமநாதபுரம் தொகுதி
 

தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி

தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் , தெற்கு மாவட்ட தலைவர் ஷாஜஹான் மற்றும் நகர கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். 600 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
௦02.08.2012 அன்று தாம்பரத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொது செயலாளர் அப்துல் சமத் அவர்களும் கலந்து கொண்டனர் . இச்சந்திப்பின் போது சித்தாலபாக்கம் கபரஸ்தான் பிரச்சனையை மாவட்ட வருவாய் துறை நிர்வாகம் உடனே சரிசெய்து தரவேண்டும் இல்லாவிட்டால் செப்டம்பர் முதல் வாரத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். இச்சந்திப்பின் போது காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் . யாக்கூப் உடனிருந்தார்.


 

Friday, August 3, 2012


மதுக்கூர் இந்திரா நகர் 5 வது தெரு ஜெகபர் அலி,ஜாகீர்,இமாமுதீன் ஆகியோரின் தகப்பனார் அப்துல் ஹமீது அவர்கள் இன்று 03/08/2012 வஃபாத்தாகிவிட்டார்கள் 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...