மதுபானக்கடை முற்றுகை போராட்டம்
மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கூர் நகர தமுமுக சார்பாக கோரிக்கை மனு கடந்த ஜுன் மாதம் 28 தேதி அளிக்கப்பட்டது.மேற்படி மனு மீது துறை ரீதியான முறையான அனுமுறை இல்லை.எனவே
பொதுமக்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கும்,பள்ளி மாணவ,மாணவியர் மிகவும் இடையூறாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் உள்ள இரு அரசு மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வருகின்ற செப் மாதம் 20 தேதி அன்று
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் முற்றுகைப்போராட்டம் நடைபெற உள்ளது.
சகோதரர்கள் தங்களின் குடும்பத்தாரையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள செய்ய ஆர்வமுட்டுங்கள்.
No comments:
Post a Comment