சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பாக பெருநாள் தொழுகை - பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் பெருநாள் உரை (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)
சென்னையில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை டான் போஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்த பிறகு தமுமுக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் இந்த இனிய நாளில் சகோதரத்துவம் மலரவும், அஸ்ஸாம் மற்றும் மியான்மர் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் மலரவும், இந்தியா அனைத்து துறையிலும் முன்னேறவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்ய வேண்டும் என்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வட சென்னை மாவட்ட துறைமுகம் பகுதி தமுமுகவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment