தாம்பரத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி
தாம்பரம் நகர தமுமுக சார்பாக நடந்த இப்தார் நிகழ்ச்சியில் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொதுச்செயலாளர். அப்துல் சமத் அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் யாகூப் , தெற்கு மாவட்ட தலைவர் ஷாஜஹான் மற்றும் நகர கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். 600 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
௦02.08.2012 அன்று தாம்பரத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூத்த தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் தமுமுக பொது செயலாளர் அப்துல் சமத் அவர்களும் கலந்து கொண்டனர் . இச்சந்திப்பின் போது சித்தாலபாக்கம் கபரஸ்தான் பிரச்சனையை மாவட்ட வருவாய் துறை நிர்வாகம் உடனே சரிசெய்து தரவேண்டும் இல்லாவிட்டால் செப்டம்பர் முதல் வாரத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். இச்சந்திப்பின் போது காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் . யாக்கூப் உடனிருந்தார்.
No comments:
Post a Comment