இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Saturday, June 30, 2012


மதுக்கூர் சிவக்கொல்லை நவாஜ் அவர்களின் தகப்பனார் யாசின் அவர்கள் இன்று 30/06/2012 வஃபாத்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்




மதுக்கூரில் புதிய இறைஇல்லம் (இறைவன் நாடினால்)

மதுக்கூர் சூரியத்தோட்டம் (மேலசூரியத்தோட்டம்) பகுதியில் உள்ள சகோதரர் த.செ.ஜக்கரியா,சகோதரர்  டைகர் ஜமால் முகம்மது இவர்களின் வீட்டின் அருகில் அம்மாக்குளத்திற்க்கு தண்ணீர் செல்பதற்க்காக நமதூர் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் ஒரு போர்வெல் (கல்கேணி)இருந்தது.நாளடையில் இது பயன்பெறாமல் போய்விட்டது.கடந்த பல வருடங்களாக இந்த இடம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் இருந்தது.இந்த இடத்தில் ரேசன் கடை கொண்டுவரவும் முயற்சிகள் செய்யப்பட்டு கைவிடப்பட்டது.இந்த இடத்தில் இருந்த போர்வெல் கட்டிடம் நேற்று 29/06/2012 இடிக்கப்பட்டது தெருவாசிகள் ஏன் இந்த கட்டிடம் இடிக்கப்படுகின்றது என்ற விபரம் தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தனர்.


இன்று காலை 30/06/2012 இறைவனின் கிருபையால் இனிதே விடிந்தது.இனிப்பான செய்தியினை கொடுத்தது.
மேற்கண்ட இடத்தில் மதுக்கூருக்கு மேலும் ஓர் இறைஇல்லம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும்.இப்பணிக்கான முழுத்தொகையும் அமீரகத்தில் உள்ள ராசல் கைமா என்னும் பகுதியில் வசிக்கின்ற  அரபிஒருவர் தருவதாகவும்,பார்வையிட இன்று மதுக்கூருக்கு வருகை புரிவதாகவும் செய்திகள் உலா வந்தது.
இச்செய்திகளின் அடிப்படையில் இடத்தை பார்வையிட ஓர் அரபி வந்தார்.சுமார் 1 மணி நேரம் ஆலோசனைகள் செய்தார்.சுமார் 15 இலட்சம் தருவதாக வாக்குறுதியினையும் தந்தார்.(அல்ஹம்துலில்லாஹ்) 

              இறைவன் நாடினால் புதிய பள்ளிவாசல் அமைய உள்ள இடம்

இந்த நல்ல முயற்சிக்கு முழுமுச்சாக செயல்பட்டு கொண்டிருக்கும் அனைவருக்காகவும் துவா செய்வோம்.

Wednesday, June 27, 2012


விழித்துக்கொள்ளும் திருடர்கள்...உறக்கும் காவல்துறை

மதுக்கூரில் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக  நடைபெற்று வருகின்றது.அதுவும் குறிப்பாக இராமம்பாள்புரம் பகுதியில் திருட்டு சம்பவம் நாள்தோறும் அரங்கேருகின்றது.கடந்த மே மாதம் 6 தேதி மஸ்ஜித் தக்வா எதிர்புறம் உள்ள வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது.மே 13 தேதி மஸ்ஜித் தக்வா அடுத்த வீடான  சகோதரர் நாகூரார் ரபி அவர்கள் வீட்டில் சுமார் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.சமீபத்திய தேதிகளில் இடையகாடு,புதுத்தெரு ஆகிய பகுதிகளில் திருட்டு முயற்சிகள் மற்றும் சம்பவங்கள் நடைபெற்றது 

இன்று 27/06/2012 மதுக்கூர் இராமம்பாள்புரம் மஸ்ஜித் தக்வா வலப்புற அமைந்துள்ள துபாயில் கிளினீங் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் சகோதரர் உபயத்துல்லா அவர்களின் வீடு உள்ளது.உபயத்துல்லா அவர்களின் மனைவி கடந்த சிலதினங்களுக்கு முன் அவரின் தாயார் வீட்டிற்க்கு சென்றுள்ளர்.வீடு பூட்டி இருந்தது.வீட்டின் சூழ்நிலையினை அறிந்துகொண்ட மர்ம மனிதர்கள் இன்று வீட்டின் முகப்பு கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து,பின்னர் மெயின் டோரின் லாக்கை தனியாக உடைத்து வீட்டின் அறை கதவினை சேதப்படுத்தி பின்னர் பீரேவினை கடுமையாக சேதப்படுத்தி அதிலிருந்த சுமார் 2 பவுன் மற்றும் இரண்டு டிஜிட்டல் கேமரா,டிவிடி பிளேயர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.வீட்டில் திருட்டு நடந்துள்ள செய்தி காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.ஒரு சம்பிரதய நிகழ்ச்சியாக காவல்துறையினர் வந்து பார்த்து சென்றார்கள்.மற்றபடி எந்த விசாரனையும் மேற்கொள்ளவில்லை.

                                           இன்று கொள்ளை சம்பவம் நடந்த வீடு


                                             உடைக்கப்பட்ட மெயின்டோர் லாக்


எனவே அன்பான நமது இமெயில்,இணையத்தள சகோதரர்களை மதுக்கூரில் நடைபெறும் தொடர் திருட்டுக்கள் பற்றி நீங்களும் அங்கிருந்தபடியே கீழ்கண்ட இமெயில் முகவரிகளில் புகார் செய்யலாம்.
email: cmcell@tn.gov.in,
            spthanjavur@yahoo.com

அறிவுறுத்தல் :நிகழ்ச்சிகளில்,மருத்துவமனைகளில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வீட்டில் யாரவது தங்கக்கூடிய சூழ்நிலையினை ஏற்படுத்த சொல்லுங்கள்.கூடுமானவரை  வெளியில் தங்குவதை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.இரவு நேரங்களில் வீட்டின் முன்,பின் பக்கங்களில் குறைந்தபட்சம் 0 வேல்ட் பல்புகளையாவது எரியவிடச்சொல்லுங்கள்.

Tuesday, June 26, 2012



இலங்கையில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்- தமிழக மத தலைவர்கள் கண்டணம்




இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது: இலங்கையில் போருக்கு முன்னும், பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்படுகின்றன. தேவாலயங்களை தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களையும் கொலை செய்தும் கடத்தி சென்றும் விடுகின்றனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இலங்கை அரசினர் அடக்கு முறைகளை, உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அங்கு வாழ இனி வாய்ப்பு இல்லை.
எல்லா மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் அனைத்து கோவில்களும் தரைமட்டமாக்கப்படுகின்றன. மனித உரிமை அங்கு இல்லை. இது ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியாகும்.
மதத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், கலாசாரத்திற்கு எதிராகவும் நடக்கின்றன. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும்.
ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து இருக்கிறோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


நெல்லையில் நடைபெற்ற மமக மாநாட்டில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை... (ஆடியோ)



 

Monday, June 25, 2012


தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். ஜவாஹிருல்லாஹ் MLA பேச்சு





Saturday, June 23, 2012


நிக்காஹ் வாழ்த்து

மணமகன்
J.நிஷார் அகமது
த/பெ M.ஜபருல்லா


மணமகள் 
A.ஷிரின் பேகம்
த/பெ 
A.அக்பர்

மணநாள்
ஹிஜிரி 1433 ஆம் வருடம் ஷாபான் பிறை 3 (24.06.2012)ஞாயிற்றுக்கிழமை

மண இடம் 
A.K.S.திருமண மண்டபம்.மதுக்கூர்

வாழ்த்து
பாரக்கல்லாஹு லக்க  வபாரக்க அலைக்க வஜமஅ  பைனகுமா ஃபீகைர்


தமுமுக - மமக வின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தாயார் இன்று மேலப்பாளையத்தில் வபாத் ஆனார்கள்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....
அவர்களின் ஜனாஸா நாளை (ஜூன் 24) காலை 8.30 மணிக்கு மேலப்பாளையத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....

மமக விற்கு அருந்ததியர்கள் நன்றி


 

Friday, June 22, 2012


அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் தொழிற்பயிற்சிகள் . விண்ணப்பிக்க 29 ந் தேதி கடைசி நாள்

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ.) கருவி மற்றும் அச்சு செய்பவர், பொறிப்பகுதி பொருத்துனர், கம்மியர், இயந்திரப்பட வரைவாளர், கம்பியாள், பற்ற வைப்பவர், டி.டி.பி., லித்தோ ஆப்செட் மெஷின் மைன்டர், போட்டோகிராபி, விருந்தோம்பல் மேலாண்மை உள்பட பல்வேறு தொழிற்பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
விருந்தோம்பல் மேலாண்மைப் பயிற்சி உலகத் தரத்தில் அளிக்கப்படுகிறது. இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை. பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் என்.சி.வி.டி. சான்றிதழ் வழங்கப்படும். இலவச பஸ் பாஸ், ரெயில் கட்டணச் சலுகையும் பெறலாம். மேலும் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்படும்.
மேற்கண்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். பயிற்சி தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-22501530, 22501538 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கிண்டி அரசு ஐ.டி.ஐ. முதல்வர் எஸ். ஹேமலதா தெரிவித்துள்ளார்.
 

மமக அரசியல் எழுச்சி மாநாடு - பத்திரிக்கை செய்திகள்






மதுக்கூரில் சிக்கன் கார்னர்கள் அதிகரித்து வருகின்றது என்பதை நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியீட்டு இருந்தோம்.மேலும் ஓர் சிக்கன் கார்னர் அதுவும் நமதூர் இந்தியன் வங்கி அருகில் இன்று திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது.


Thursday, June 21, 2012


அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோமா? தமிழக அரசியல் பத்திரிக்கையில் மமக தலைவர் பேட்டி...



 

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி

அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர் மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் இந்த ஆண்டின் இறுதித் தேர்வில் [1 ஆம் வகுப்பு நீங்கலாக] 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.08.2012 ஆகும். கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டிலை உரிய வடிவத்தில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
என்ற இணையதள முகவரியில் படிவங்களையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

Wednesday, June 20, 2012


இட ஒதுக்கீட்டை உயர்த்தாவிட்டால் போராட்டம்! நெல்லை கிழக்கு மாவட்ட மமக மாநாட்டில் பிரகடனம்.

கடந்த ஜூன் 17 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மமகவின் மூன்றாவது மாவட்ட மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அதன் புகைப்படங்கள்



 விரிவான செய்தி விரைவில்

மாநாட்டின் நேர்பகுதி

பெண்களுக்கு தனிப்பகுதி

இனப்படுகொலைகளுக்கு எதிரான மாணவர் இந்தியாவின் புகைப்பட கண்காட்சியை மமக மாநில அமைப்புச் செயலாளர் ஜோசப் நோலஸ்கோ திறந்து வைக்கிறார்.


இலங்கை, காஷ்மீர், ஈராக், ஆப்கானிஸ்தான், குஜராத் என உலகமெங்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்காட்சியை பார்வையிடும் மக்கள்

வீர தீர விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார் மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது.


விளையாட்டுப்போட்டிகளில் ஒரு காட்சி.


மாநாட்டில் கொடியேற்றி முழக்கமிடுகிறார் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி


சாதனை படைத்த பல்வேறு சமூகங்களை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.








தலைவர்களின் முழக்கங்கள்








மாவட்ட நிர்வாகிகள் பேசுகிறார்கள்















கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...