மதுக்கூரில் புதிய இறைஇல்லம் (இறைவன் நாடினால்)
மதுக்கூர் சூரியத்தோட்டம் (மேலசூரியத்தோட்டம்) பகுதியில் உள்ள சகோதரர் த.செ.ஜக்கரியா,சகோதரர் டைகர் ஜமால் முகம்மது இவர்களின் வீட்டின் அருகில் அம்மாக்குளத்திற்க்கு தண்ணீர் செல்பதற்க்காக நமதூர் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் ஒரு போர்வெல் (கல்கேணி)இருந்தது.நாளடையில் இது பயன்பெறாமல் போய்விட்டது.கடந்த பல வருடங்களாக இந்த இடம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் இருந்தது.இந்த இடத்தில் ரேசன் கடை கொண்டுவரவும் முயற்சிகள் செய்யப்பட்டு கைவிடப்பட்டது.இந்த இடத்தில் இருந்த போர்வெல் கட்டிடம் நேற்று 29/06/2012 இடிக்கப்பட்டது தெருவாசிகள் ஏன் இந்த கட்டிடம் இடிக்கப்படுகின்றது என்ற விபரம் தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தனர்.
இன்று காலை 30/06/2012 இறைவனின் கிருபையால் இனிதே விடிந்தது.இனிப்பான செய்தியினை கொடுத்தது.
மேற்கண்ட இடத்தில் மதுக்கூருக்கு மேலும் ஓர் இறைஇல்லம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும்.இப்பணிக்கான முழுத்தொகையும் அமீரகத்தில் உள்ள ராசல் கைமா என்னும் பகுதியில் வசிக்கின்ற அரபிஒருவர் தருவதாகவும்,பார்வையிட இன்று மதுக்கூருக்கு வருகை புரிவதாகவும் செய்திகள் உலா வந்தது.
இச்செய்திகளின் அடிப்படையில் இடத்தை பார்வையிட ஓர் அரபி வந்தார்.சுமார் 1 மணி நேரம் ஆலோசனைகள் செய்தார்.சுமார் 15 இலட்சம் தருவதாக வாக்குறுதியினையும் தந்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)
இறைவன் நாடினால் புதிய பள்ளிவாசல் அமைய உள்ள இடம்
இந்த நல்ல முயற்சிக்கு முழுமுச்சாக செயல்பட்டு கொண்டிருக்கும் அனைவருக்காகவும் துவா செய்வோம்.
No comments:
Post a Comment