இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, June 6, 2012


மதுக்கூர் (வடக்கு) பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படையெடுக்கும் பெற்றோர்கள் 

தங்கள் பிள்ளைகளுக்கு அதுவும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய கல்வி கொடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் ஆண்,பெண் இருபாலாரும் இணைந்து படிக்கின்ற பள்ளிகளிலிருந்து குறிப்பாக 5 வகுப்பிலிருந்து 6 வகுப்புக்கு தேர்ச்சி பெறும் மாணவிக்கு அவர்கள் படித்துகொண்டிருக்கின்ற பள்ளிகளிலிருந்து மாற்று சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு மதுக்கூர் வடக்கில் இருக்கின்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மீடியத்தில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிகமான பெற்றோர் படையெடுக்கின்றார்கள்

ஆனால் வருகின்ற அத்தனை மாணவர்களுக்கு அங்கு சேர்த்து கொள்ள போதுமான இடவசதி இல்லை என கூறி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள்.இதனால் சிலருக்கு இடம் கிடைக்கவில்லை என்ற  ஏமாற்றமும் ஏற்படுகின்றது.

தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அதிக கவனத்துடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது பாராட்டுக்குரியது.இப்பள்ளியில் பயின்ற முஸ்லிம் மாணவிகள் அரசு பொதுத்தேர்வுகளில் இப்பள்ளியளவில் தொடர்ந்து முன்னிலையில் மதிப்பெண்கள் பெற்று வருவதும் கவனிக்ககூடிய அம்சம்.

நல்லமுறையில் கல்வி பயின்று கொடுக்கின்ற இப்பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...