சந்தைப்பள்ளி அடிக்கல் விழா
மதுக்கூர் சந்தைப்பள்ளிக்கூடத்திற்கு புது கட்டிட கட்டுவதற்கான முதன் முயற்சியாக அடிக்கல் நடும் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10:00 மணிக்கு நடந்தது (அல்ஹம்துலில்லாஹ்)
இந்நிகழ்ச்சியில் துவக்கமான பெரியவர் எ.எம்.அப்துல்காதர் அவர்கள் கல்வியின் சிறப்புகளையும்,அனைவரும் ஒருங்கிணைந்து இப்பள்ளிக்கூட புதிய கட்டிடத்தை கட்டிமுடிக்கவேண்டும் எனவும் இரத்தின சுருக்கமாக பேசினார்.அதனை தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டு அடிக்கல் நடும் நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள் முகம்மது பாரூக்,அப்துல் கறீம்,சங்க நிர்வாகிகள் அஜீஸ் ரஹ்மான்,ஜபருல்லாஹ்,கமருதீன்,பாரூக்,சலீம் மெளலானா,ஹாஜா மைதீன்,அப்துல்ரெஜாக்,முகமம்து அலிஜின்னா,அப்துல்சமது, கவுன்சிலர்கள் நாகூர்கனி,கபார்,ரியாஸ் அகமது மற்றும் ஜமாத்,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய கட்டிட பணிகள் நிறைந்து நடைபெற துவா செய்வோம்.உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை தாரளமாக இப்பள்ளி கட்டிட கமிட்டியிடம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நல்ல பணி நிறைந்து முடிவு பெற துவா செய்கின்றேன்.
ReplyDeleteபைசல் அகமது