அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் தொழிற்பயிற்சிகள் . விண்ணப்பிக்க 29 ந் தேதி கடைசி நாள்
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ.) கருவி மற்றும் அச்சு செய்பவர், பொறிப்பகுதி பொருத்துனர், கம்மியர், இயந்திரப்பட வரைவாளர், கம்பியாள், பற்ற வைப்பவர், டி.டி.பி., லித்தோ ஆப்செட் மெஷின் மைன்டர், போட்டோகிராபி, விருந்தோம்பல் மேலாண்மை உள்பட பல்வேறு தொழிற்பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
விருந்தோம்பல் மேலாண்மைப் பயிற்சி உலகத் தரத்தில் அளிக்கப்படுகிறது. இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை. பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் என்.சி.வி.டி. சான்றிதழ் வழங்கப்படும். இலவச பஸ் பாஸ், ரெயில் கட்டணச் சலுகையும் பெறலாம். மேலும் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்படும்.
மேற்கண்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 29-ந் தேதி கடைசி நாள் ஆகும். பயிற்சி தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-22501530, 22501538 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கிண்டி அரசு ஐ.டி.ஐ. முதல்வர் எஸ். ஹேமலதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment