இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, June 13, 2012


எண்ணெய் கிணறு தோண்டுதல் பணி :
பட்டுக்கோட்டையில் 15ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களில் எண் ணெய் கிணறுகள் அகழ்வாராய்ந்து தோ ண்டுதல் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 15ம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது.
கெயில் (இந்தியா) லிமிடெட்., கடற்கரை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு (அகழ்வாராய்ச்சி கிணறு தோண் டுதல்) காவிரி வடிகால் பிளாக் நிறுவனம் சார்பில் இந்த ஆராய்ச்சி நடைபெற உள்ளது.
 தஞ்சை மாவட்டத்தில் முழு முப்பரிமாண பூகோள சர்வே அடிப்படையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் திருவோணம் வட்டாரங்களில் அமைந்துள்ள கிராமங்களில் வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியும் இடங்களில் 4 எண்ணெய் கிணறுகளை 2 கட்டங்களில் அகழ்வாராய்ந்து தோண்டி ஆய்வு நடத்த உள்ளனர்.
இத்திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 15ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் தலைமையில் பட்டுக்கோட்டை மாரியம்மன்கோயில் ரோடு, பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள குட்டாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் நோக்கங்களை கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...