மாவட்ட ஆட்சியருடன் மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு
கடந்த மாதம் (ஏப்ரல் 28) மதுக்கூர் தமுமுக சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைப்பெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பொதுகூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது ஒரு சம்பிரதய நிகழ்வாக இருக்கக்கூடாது என்ற முனைப்புடன் இருந்த மதுக்கூர் நகர தமுமுக நிர்வாகிகள் தீர்மானங்கள் சம்மந்தப்பட்ட அந்தந்த துறைக்களுக்கு பதிவு தபால்கள் மூலம் அனுப்பப்பட்டது.
மேலும் தீர்மானங்களுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக கடந்த வாரம் 28/05/2012 அன்று மனிதநேயமக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்களின் தலைமையில் நகர நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனார்.இச்சந்திப்பின் போது நகர பொருளாளர் சகோ.ஹாஜா மைதீன்,மமக நகர செயலாளர் சகோ.கபார்,நகரப்பெறுப்பாளர் முகம்மது ராசிக்,மாணவர் இந்திய பொறுப்பாளர்கள் ஜபருல்லா,ராசிக்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சிய்ரை சந்தித்தை முன்னனி செய்தி பத்திரிக்கைகள் 29/05/2012 செய்தியினை வெளியிட்டது.
கோரிக்கை மனுவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
- மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இருக்கும் இரு மதுபானக்கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும்
- மதுக்கூர் அரசு மருத்துவமனையினை தரம் உயர்த்தவும்,விரிவாக்கம் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மதுக்கூர் காவல் நிலையத்தில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.
No comments:
Post a Comment