இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Tuesday, July 31, 2012


மோடி விவகாரம் - புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேரா. ஹாஜாகனி






 

ரமலான் சொற்பொழிவு கேள்வி பதில் நிகழ்ச்சி - மவ்லவி ஷேக் முபாரக் மதனி







 

Friday, July 27, 2012


ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.
வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஜவாஹிருல்லாஹ் விடையளித்த பாங்கு பாராட்டிற்குரிய ஒன்று.
தேர்தலுக்குப் பின் அரசியல் ரீதியான அவரின் நிலைப்பாடுகள், சமுதாயம் குறித்து அவர் எடுத்து செல்லும் நடவடிக்கைகள், சட்டசபை தொடர்பானவை, இயக்கம் தொடர்பானவை என்று தொலைநோக்கில் நாம் கேட்க நினைத்தவையும் அவரின் விளக்கங்களும் பரவலாய் விரிகின்றது.
அவருடனான நேர்காணல் -

கேள்வி: இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக எதைக் கருதுகிறீர்கள்? அதை எவ்வாறு தீர்க்கலாம்?
ஜவாஹிருல்லாஹ்: இந்திய அளவில் முஸ்லிம்களிடையே கல்வியறிவின்மை, வறுமை, அரசியல் விழிப்புணர்வின்மை, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லாதது ஆகிய பிரச்னைகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. அரசியல் விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது. மக்களை விழிப்பறிவுணர்வை எட்டச்செய்வதன் வாயிலாகவே இவற்றைத் தீர்க்கலாம்

கேள்வி: மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?
ஜவாஹிருல்லாஹ்: “இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.

கேள்வி: ஜெயலலிதா அரசை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?
ஜவாஹிருல்லாஹ்: எதிராகச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை; வக்ஃப் வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிப்பதற்கும், அதிகரிக்கப்பட்ட ஊதியத்தினால் ஏற்பட்ட ஊதிய வித்தியாசத் தொகையை அளிப்பதற்காகவும் சென்ற ஆண்டு ரூ3 கோடியை தமிழக அரசு வழங்கியது. இதே போல் இந்த ஆண்டு பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்காக ரூ 3 கோடி அரசு வழங்கியுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் மகளிர் குழுவிற்கு அரசின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உலமாக்களின் உதவி தொகையை ரூ750லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கின்றது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனைப் பெற்ற அப்பாவி முஸ்லிம் கைதிகள் பல்லாண்டுகளுக்குப் பின்னரும் பிணை வழங்கப்படாமல் இருக்கிறார்களே?
ஜவாஹிருல்லாஹ்: முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஏழாண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய முஸ்லிம் கைதிகளை அப்போது விடுவிக்கவில்லை. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.எங்கள் நிலைப்பாட்டின் படி, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிறைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக முதல்வருக்கு அளவுக்கதிகமாகத் துதிபாடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே. மேலும் தானே புயல் நேரத்தில் நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தலைப்பட்டதாக”ச் சொல்லியிருந்தீர்கள், அதுபற்றி?
ஜவாஹிருல்லாஹ்: ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு மனநிலை உண்டு. சிலர் விமர்சித்தால் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். இன்னும் சிலர் பாராட்டினால் மேலும் ஊக்கம் பெற்று நல்லபல திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். அவ்வகையில் நமது தற்போதைய முதல்வரைப் பாராட்டினால் மென்மேலும் ஊக்கம் பெற்று நல்ல பல திட்டப்பணிகளைத் தொடர்வார். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் முதலில் பாராட்டிவிட்டு அதன்பின்பு வேண்டிய கோரிக்கைகளை வைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்…
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தொலைநோக்குத் திட்டம் 2023 என்று திட்டம் வகுத்திருப்பது இதே போல் தமிழக இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஆனால் தமிழகத்தில் இளம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசுக்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இது எதிர்காலத்தில் வலிமையான தமிழகம் என்ற கருத்தோட்டத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டோம்..
மற்றபடி, தானே புயல் தொடர்பாக, நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஏற்றுக்கொள்கிறேன். நானும் மனிதன் தானே, அவ்வகையில் தவறிழைத்துவிட்டேன். இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.நானும் எங்கள் கட்சி ஆம்பூர் உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதில்லை; இன்ஷா அல்லாஹ் இனிமேலும் வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். இங்கே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு எம்.எல்.ஏ வாக நீங்கள் இலஞ்சம் கேட்கக் கூட வேண்டாம், எல்லா நலத்திட்டங்களிலும் எம்.எல்.ஏ பங்கு என்று அவர்களாகவே ஒரு தொகையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் அதைக் கூட பெறுவதில்லை என்பதை இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி: பர்மிய முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறையும், இன அழிப்புப் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்ற வேளையில், நமது எந்த அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லையே? தமுமுக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.?
ஜவாஹிருல்லாஹ்: இன்ஷா அல்லாஹ், விரைவில் இது பற்றி ஆலோசித்து, எங்களால் இயன்றதைச் செய்வோம்

கேள்வி: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர், மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளாரே?
ஜவாஹிருல்லாஹ்: கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறை மிகவும் தவறு. மெளலவி ஷம்சுத்தீன் காஸிமி மீதான தாக்குதலை தமுமுக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது..நான் வளைகுடா சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஊர் திரும்பி இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை அமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேலும் இது குறித்து கலகம் செய்தவர்கள் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்வோம்.

கேள்வி: மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுங்களேன்?
ஜவாஹிருல்லாஹ் - 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மே21 2007ல் சமர்பித்தது. 2009 டிசம்பரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இது வரை இந்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்க வழங்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. இது இயலாவிட்டால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையை புறக்கணித்து உ.பி. தேர்தல் வரும் வேளையில் ஒத்துமொத்தமாக 4.5 விழுக்காடு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் வகையில் முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஏமாற்று வித்தைக்கு உ.பி. முஸ்லிம்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை படித்துக் கொடுத்தார்கள்.

கேள்வி: ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு நீங்கள் பாடம் கற்ற இடம். இப்போது அந்த அமைப்பு தேசிய அளவிலான அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
ஜவாஹிருல்லாஹ்: சென்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட சில ஊர்களில் அவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.. அமைப்பு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்கு இரு தரப்புமே உதவிக் கொண்டோம்.

கேள்வி: முஸ்லிம் சமுதாயத்துக்கு உங்களால் நிறைய பலன் கிடைக்க கூடும் என்று தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒன்றும் நீங்கள் அது குறித்து பேசியதாக ஒன்றும் தெரியவில்லையே..?
ஜவாஹிருல்லாஹ் -(சிரிக்கிறார்) என் தொகுதியில் ஓட்டு போட்ட மற்ற சமுதாயத்தினரும் இது போலதான் கேட்கிறார்கள்
நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமே சட்டசபையில் பேசுவதாக தெரிகிறது. அன்றைக்கு கூட உங்கள் சட்டசபை பேச்சை கேட்டேன். 60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். நான் என்னளவுக்கு இரு சாரருக்கு பொதுமானதாகவே பேசுகிறேன். தொலைக்காட்சிகளில் சட்டசபை நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாக ஒளிபரப்பபடுவதால் நாங்கள் பேசுவது முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை.

கேள்வி: தமிழக முஸ்லீம்களுக்கு என்று தனித்த ஒரு செய்தித் தாள் இல்லை. தொலைக்காட்சி சேனலும் இல்லை.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கொண்டு வரும் திட்டம் உள்ளதா?
ஜவாஹிருல்லாஹ் - அவசியமான ஒன்றுதான். கேரளாவில் கூட மாத்யம் போன்ற பிரபல செய்தி தாள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பெரும் முதலீட்டில் செய்ய வேண்டியவை. அந்தளவு இப்போது நம்மிடம் நிதி நிலைமை இல்லை. சமுதாயம் குறித்தான அக்கறையுள்ள பெரும் முதலீட்டாளர்கள் முன் வரும்போது இதெல்லாம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: கேரளாவில் இஸ்லாமிய வங்கி போன்று அல்பரகா நிதியகம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பீர்களா?
ஜவாஹிருல்லாஹ்- இல்லை கேரளாவில் நீங்கள் குறிப்பிடுகிற அல்பரகா நிதி நிறுவனம் வங்கி என்பதாக ரிசர்வ் வங்கியில் பதிவிடப்படவில்லை. மாறாக அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் அதாவது Non Banking Financial Corporation என்றே ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிப் போன்று எல்லா செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் காசோலையோ, வரைவோலையோ வழங்க விதிமுறை அனுமதிக்காது. மேலும், இந்த அல்பரகா வளைகுடா வாழ் கேரள அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம். அப்படி தமிழகம் சார்ந்த வளைகுடா அமைப்புகள் அத்தனை வலிமையாக இதனை முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்தே இதற்கு விடையளிக்கமுடியும்.
கேரளாவிலேயே முந்தைய ஆட்சியின் முதல்வர் இது குறித்து எல்லா நடவடிக்கைகளும் எடுத்து செயல்படுத்த துவங்குமுன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

கேள்வி: சக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றல் குறித்து……….
ஜவாஹிருல்லாஹ்- சமுதாயத்திற்கு பொதுவான விஷயங்களில் பிற அமைப்புகளுடன் கடந்த காலங்களில் இணைந்தே செயல்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக சென்ற திமுக ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். சமீபத்தில் 15 வயது பெண் திருமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் பங்குக் கொண்டோம்.

ஒவ்வொரு அமைச்சரும் மானியக் கோரிக்கை விவாதத்திற்க்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு யாரும் பேசக்கூடாது. சந்தேகங்கள் விளக்கங்கள் இருப்பினும் அவர் பேசி முடித்தபிறகுதான் பேசவேண்டும் என்பது அவை மரபு. அப்படி பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது அதன் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இந்துக்கள் இராமனை வணங்குவது போல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவது போல் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவது போல் .. என்று தொடரும்போதே நமது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எழுந்து “மன்னிக்கவும் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவதில்லை.அல்லாஹ்வைத் தான் வணங்குவோம் என்று குறுக்கிட்டுக் குறிப்பிட்டார். (அப்போது நான் (ஜவாஹிருல்லாஹ்) மும்பையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழுவில் இருந்தேன்) உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து முஸ்லீம்கள் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறார்கள். முகமது நபியை இல்லை. அமைச்சரின் அந்த பேச்சு சபைக்குறிப்பில் திருத்தப்பட்டுப் பதியப்படும்” என்று கூறியதாக ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.

நன்றி: www.inneram.com

Saturday, July 21, 2012

டெல்டா மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

Thursday, July 19, 2012


குடியரசு தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

1.டாக்டர் இராஜேந்திர பிரசாத்                         (26.01.1950 - 13.05.1962)
2.டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்         (13.05.1962 - 13.05.1967)
3.டாக்டர் ஜாகீர் உசேன்                                      (13.05.1967 - 13.05.1969)
4.வரகிரி வேங்கட கிரி என்ற வி.வி.கிரி         (24.08.1969 - 24.08.1974)
5.பக்ருதீன் அலி அஹமது                                 (24.08.1974 - 11.02.1977)
6.நீலம் சஞ்சீவ ரெட்டி                                         ( 25.07.1977 - 25.07.1982)
7.கியானி ஜெயில்சிங்                                         (25.07.1982- 25.07.1988)
8.ராமஸ்வாமி வெங்கட்ராமன்                         (28.07.1987 - 25.07.1992)
9.சங்கர் தயாள் சர்மா                                          (25.07.1992 - 25.07.1997)
10.கே.ஆர்.நாராயணன்                                       ( 25.07.1997 - 25.07.2002)
11.அவுல் பக்கிரி ஜெயினுல் ஆப்தீன் அப்துல் கலாம் (25.07.2002 - 25.07.2007)
12.பிரதிபா தேவிசிங் பாட்டீல்                         (25.07.2007 - 25.07.2012)
13.யார் ? 

Wednesday, July 18, 2012

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை யின் சார்பாக பிளாஸ்டிக் பைகளின் தீமைப்பற்றிய விழிப்புணர்வு பேரணி இன்று 18/07/2012 நடைப்பெற்றது.
இப்பேரணியில் மாணவர்கள் திரளாக பங்கு கொண்டனர்.பிளாஸ்டிக் குப்பைகளால் வரும் கேடுகள் பற்றிய துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனார்.பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.





அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Tuesday, July 17, 2012


மதுக்கூரில் தொடர்ந்து திருட்டு நடைப்பெற்று வருதை நாம் சுட்டிக்காட்டி வருகின்றோம்.மதுக்கூர் காளியம்மான் கோவில் எதிரில் (செட்டித்தெரு இரண்டாவது தெரு) மர்ஹூம் ஹபீப் முகம்மது குடும்பத்தினர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு சென்று விட்டு மறுநாள் அதிகாலை (இன்று 17/07/2012) 2:30 மணிக்கு வந்துள்ளார்கள்.அவர்கள் வீடு முதல் நாளிலிருந்து அடுத்தநாள் முழுவது பூட்டியிருந்ததை கண்காணித்த திருட்டுக்கும்பல் இன்று நாள்ளிரவில் மேற்படி வீட்டில் திருட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.அதற்க்குள்ளாக நிகழ்ச்சிக்கு சென்ற சகோதரர் ஹபீப் முகம்மது குடும்பத்தினர் தங்களது வீட்டிற்க்கு வருவதை உள்ளே இருந்த திருட்டுக்கும்பல் உணர்ந்து தங்கள் கொண்டுவந்த ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டார்கள்.


வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தது அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றது.காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.வழக்கம்போல் காவல்துறை விசாரணை மேற்கொள்கின்றோம் என்றார்கள்.ஆயுதங்களையும் காவல்துறை கைப்பற்றி சென்றார்கள்


தக்க நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிற்க்கு வந்ததால் திருட்டு தடுக்கப்பட்டது.


திருட்டுக்கும்பல் மூன்று பேர் சேர்ந்த கும்பல் என்பது அவர்கள் விட்டுச்சென்ற 3 ஜோடி செருப்புகள் மூலம் தெரிகின்றது.





                                 திருட்டுக்கும்பல் விட்டுச்சென்ற பயங்கர ஆயுதங்கள்


திருடர்கள் விட்டுச்சென்ற செருப்பு ஜோடிகள்

Friday, July 13, 2012

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசலின் அறிவிப்பு



பட்டுக்கோட்டை மணிக்கூண்டு  ஹாஜி காதர் முகையதீன் வக்பு பள்ளிவாசலில் பெண்கள் தொழுவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழுகைக்கும்,ரமலான் நோன்பு திறப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே,பட்டுக்கோட்டைக்கு வரும் பெண்கள் நோன்பு திறக்க,தொழுகையினை நிறைவேற்றிட மணிக்கூண்டு பள்ளிவாசலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ஹாஜி காதர் முகையதீன் (வக்பு) பள்ளிவாசல்
மணிக்கூண்டு அருகில் 
பட்டுக்கோட்டை



அதிரைப்புலவர் அண்ணாவியார்

அதிரைப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். சுருக்கி அழைக்கப்படுவதோ அதிரை. தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்த காலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக அதிரை அறிஞர் தமிழ்மாமணி புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் ( ANNAVIYAR ) என்று அழைக்கப்படும் புலவரும் ஒருவர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முகைதீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902’ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் ( ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர் ) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை

ஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் அடிப்படை கடமை என்பதனை நன்கு உணர்ந்தார்.

அக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார்.

“அபாத்து”, “அத்ரமீ” என்ற பெயரால் அதிரைப்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.

அக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிரைப்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது.

“அண்ணாவியார்” என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன ( கிரியாவின் தமிழ் அகராதி )  உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.

தம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள். 





நன்றி : ஹமீத் ஜாஃபர்
தகவல் : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் ( New York )
புகைப்படம் உதவி : N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் ( New York )
நன்றி : http://adiraixpress.blogspot.in

Thursday, July 12, 2012


மதுக்கூரின் முன்னாள் ஜாமியா மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும்,பேரூராட்சி தலைவரும்,நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,வர்த்தக சங்க தலைவரும்,சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும்,சிறந்த மேடைப்பேச்சாளருமான மதுக்கூர் மரைக்காயர் ஜனாப் T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயரினை நினைவு கூறும் நிகழ்ச்சி மதுக்கூர் படப்பைக்காடு VRT திருமண மண்டபத்தில் கடந்த 10/07/2012 அன்று நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மரைக்காயர் அவர்களின் நண்பருமான M.தண்டாயுதபாணி அவர்கள் தலைமை வசித்தார்


01/02/1940 மதுக்கூரில் பிறந்த T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் 07/07/1987 ஆம் ஆண்டு உளுந்தூர் பேட்டை என்னும் இடத்தில் நடைபெற்ற கோரமான கார் விபத்தில் மரணமடைந்தார்.அந்த விபத்தில் அவருடன் சேர்ந்து மேலும் சிலர் மரணமடைந்தார்கள்.மரைக்காயர் வாழ்ந்தது 47 ஆண்டுகள் என்றாலும்  அவர் ஜமாத் தலைவராக இருந்த காலத்தில் மதுக்கூர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்தது.T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் மதுக்கூரின் பட்டமில்லாத நிதியரசராக திகழ்ந்தார்.


26/10/1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்கள் காங்கிரஸ்,அதிமுக கூட்டணியின் சார்பாகவும்,ஜனாப் S.சேகனா அவர்கள் திமுக சார்பாகவும்,மற்றும் P.துரைராஜ்,V.R.ஆனந்தராஜன் ஆகியோர் சுயேட்சையாகவும் மதுக்கூர் பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டனார்,அந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது.மரைக்காயரின் நம்பிக்கைகுரிய MM அல்லாபிச்சை(OPM),MVM அன்சாரி போன்றவர்கள் சொற்ப வாக்குகளின் வெற்றி வாய்ப்பினை இழந்தார்கள்.மனம் தளராத மரைக்காயர் வாக்கு எண்ணும் இடத்திற்க்கு (அரசு மேல்நிலைப்பள்ளி மதுக்கூர் )வராமல் நமதூர் பெரியப்பள்ளிவாசலில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.இறைவன் எனக்கு எதை நாடியிருந்தாலும் நன்னையே என பெரியப்பள்ளிவாசலில் இருந்தார்.மாலை இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது மரைக்காயர் வெற்றி பெற்றார்.இது மரைக்காயர் அவர்கள் இறை நம்பிக்கையாளர் என்பதற்க்கு சான்று.( ஆரம்பகாலத்தில் மரைக்காயர் அவர்கள் பெரியார் கொள்ளையின் பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

 தொடக்க உரை நிகழ்த்தும் முனைவர் T.A.K.A.அப்துல் காதர் மரைக்காயர்.
 மரைக்காயரின் நினைவு கூறும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் J.M.செல்வநாயகம்.
 மரைக்காயரின் நினைவு மலரை வெளியீடும் பட்டுக்கோட்டை சார்பு நீதிபதி S.பாஸ்கரன்,அதை பெற்றுக்கொள்ளும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R.ரெங்கராஜன் அவர்கள்
 மரைக்காயர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர் 
J.ஜான் தனசேகரன்
 நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் N.R.ரெங்கராஜன் 
 அதிமுக ஒன்றிய செயலாளர் துரை.செந்தில்
 பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N.இராமசந்திரன்
 நீதிபதி S.பாஸ்கரன்
 பேரூராட்சி தலைவர் N.S.M.பஷீர் அகமது 
 முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்A.V.சுப்ரமணியன்

 முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் R.மாகலிங்கம்
 வர்த்தக சங்க செயலாளர் R.பன்னீர் செல்வம்
வர்த்தக சங்க தலைவர் M.S.Aஅப்துல் ரெஜாக்
ஜமாத் தலைவர்P.S.K.N.அமானுல்லா
 கம்பன் கழக நிர்வாகி V.R.A.சரவணன்
தொழிலதிபர் S.S.B.பிரகாசம்

T.A.K.A.முகைதீன் மரைக்காயர்
இறுதியில் நடைப்பெற்ற பட்டிமன்றத்தில்S.சத்தியசீலன்,J.இராமகிருஷ்ணன்,A.அறிவொளி


இறுதியில் மரைக்காயரின் மகனார் T.A.K.M.ஆசிக் மரைக்காயர் அவர்களுக்கு விழா குழுவினரின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. 


இப்படி எல்லாத்துறைகளிலும் சிறப்பு பெற்ற மரைக்காயர் அவர்களின் இடத்தை நிரம்ப தகுதியானவர்கள் இல்லை என்பது  எதர்த்தமான உண்மை.

Tuesday, July 10, 2012


மதுக்கூர் மேலப்பள்ளிவாசல் அடிக்கல் நடும் நிகழ்ச்சி 1974 ஆண்டு நடைபெற்றதாக தெரிகின்றது.அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.

 பிரார்த்தனை செய்யப்படுகின்றது
 மேலவீதிவாசிகளின் சார்பாக T.A.K.முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களுக்கு M.M.அல்லாபிச்சை(OPM) அவர்கள் மரியாதை செலுத்துகின்றார்.
 மேலப்பள்ளி அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுமத பிரமுகர்கள் S.S.B.நாகராஜன்,அன்றைய சட்டமன்ற உறுப்பினர் கல்யாணஓடை M.தண்டாயுதபாணி,மதுக்கூர் பேரூராட்சியின் தலைவர் கோ.ராமசாமி,A.M.வாசுதேவசெட்டியார்.

 அடிக்கல் நிகழ்ச்சியினை துவங்கி வைக்கின்றார் T.A.K.M.யாக்கூப் மரைக்காயர் அவர்கள்
 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பிரமுகர்கள்
 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பிரமுகர்கள்
கட்டிட மேஸ்திரியுடன் கலந்தாய்வு செய்யும் மரைக்காயர்


மேலப்பள்ளி ஆலிம்கள் தங்குவதற்காக கட்டப்படும் கட்டிடத்தை பார்வையிடும் M.M.அல்லாபிச்சை (OPM)அவர்கள்

Monday, July 9, 2012


மதுக்கூர் மேலப்பள்ளிவாசலின் பழமையான தோற்றங்கள் இப்புகைப்படங்கள் 1974 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.



 மதுக்கூர் மேலப்பள்ளியின் பழமையான தோற்றம்
 புதிய பள்ளிவாசல் கட்டுவதற்காக இடிக்கப்பட்டபோது பார்வையிடும் முகம்மது யாக்கூப் மரைக்காயர் அவர்களும்,அல்லாப்பிச்சை(OPM) அவர்களும்.


 இடிக்கும் பணியில் பணியாளர்கள்
 மேலப்பள்ளிவாசலின் பின்புறப்பகுதி

மேலப்பள்ளிவாசலின் முகப்பு பகுதி


மேலப்பள்ளிவாசலின் புதியப்பள்ளி கட்டுவதற்காக நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் (இன்ஷா அல்லாஹ்)

Sunday, July 8, 2012



டெல்டா மாவட்ட செயற்குழுக்கூட்டம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட செயற்குழுக்கூட்டம் இன்று 07/07/2012 மதுக்கூர் சிவக்கொல்லை ஏ.கே.எஸ்.திருமண மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியின் தொடக்கமாக பொறுப்பாளர்களின் தன்மைகள் என்ற தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தப்பட்டது.


டெல்டா மாவட்ட செயற்குழுவின் அவசியத்தினைப்பற்றி சகோதரர் கே.ராவுத்தர்ஷா எடுத்துரைத்தார்.


மருத்துவ சேவையினைப்பற்றி (ஆம்புலன்ஸ்,இரத்த தானம்,கண்சிகிச்சைமுகாம்,மருத்துவ முகாம்) ஆகியவற்றினையும்,செயலாக்கத்தினைப்பற்றியும் மாநில மருத்துவ சேவை அணியின் செயலாளர் சகோதரர் கிஃதர் அவர்கள் கூறினார்.
மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு தக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.


மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் மமகவின் செயல்திட்டக்களை இரத்தின சுருக்கமாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.அப்துல்சமது அவர்கள் தமுமுகவின் அவசியத்தையும்,அதன் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.


இறுதியாக மாநில தலைவர் மெளலவி ஜே.எஸ்.ரிபாய் அவர்கள்  பொறுப்பாளர்கள் இறையச்சத்துடன் தங்களின் பொறுப்புக்களை பேணவேண்டும் என்றும்,10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைக்கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யவேண்டி பல்வேறு கட்ட வீரியமிக்க போரட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதற்கு மாவட்ட நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் மேலும் அமைப்பின் கட்டமைப்புகள் பற்றியும் சிறப்பான உரையினை வழங்கினார்.மதுக்கூர் தமுமுக நகர செயலாளர் எஸ்.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.எல்லா புகழும் அல்லாஹ்கே.



 நுழைவு வாயிலில் செயற்குழுக்கூட்டத்திற்கு வந்தவர்களின் விபரம் பதிவு செய்யப்படுகின்றது.
 தலைமை உரை சகோதரர் கே.ராவுத்தர்ஷா










 தங்களின் கருத்துக்களை பதிவு செய்யும் மாவட்ட நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா அவர்கள்
 மாநில மருத்துவசேவை அணி செயலாளர் கிஃதர் அவர்கள்
 மமக மாநிலபொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள்
 தமுமுக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்கள்
 மாநில தலைவர் மெளலவி ஜே.எஸ்.ரிபாய் அவர்கள்





மதிய உணவு பரிமாறப்படுகின்றது



டெல்டா மாவட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.தமிழக அரசு முஸ்லிம்களுக்கான 3.5% தனி இடஓதுக்கீட்டை 7 % உயர்த்தி தருமாறு இம்மண்ட செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
2.மத்திய அரசு,நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைப்படி மத்திய அரசில் கல்வி,வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10% சதவீதமும்,இதர சிறுபான்மையினருக்கு 15 % சதவீதமும் என இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
3.சச்சார் கமிட்டி பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
4.தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும் எதிர்வரும் செப் 15 அன்று அண்ணா பிறந்த நாளையொட்டி பொதும்ன்னிப்பின் கீழ் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும்.
5.இலங்கை இரானுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்க கூடாது என மத்திய அரசை கேட்டுகொள்கின்றது.
6.தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடி,வேறு வழிகளில் வருமானத்தை உருவாக்க செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும்.
7.திருவாரூர் மாவட்ட காவல்துறை தமுமுகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
8.மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக  உள்ள அரசு மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் .
என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டெல்டா மாவட்ட செயற்குழுவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு பறிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மமக அமைப்பு செயலாளர் கே.ராவுத்தர்ஷா,நகர தலைவர் பெளசூல் ரஹமான்,தமுமுக நகர செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,துணைச்செயலாளர் ராசிக்,பொருளாளர் ஹாஜா மைதீன்,ஹபிபுல்லா,நிஷார் அகமது,பொறியாளர் இலியாஸ்,மாணவர் இந்தியாவின் பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனார். 

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...