இனிய உறவுகளுக்கு இனிய ஸலாம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...இது மதுக்கூர் பேரூர் கழக தமுமுக & மமகவின் அதிகார பூர்வமான இணையத்தளம்.

Wednesday, July 4, 2012


நீடுர் - ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழா - பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா (ஆடியோ மற்றும் புகைப்படங்கள்)

நாகை மாவட்டம் நீடுர் நெய்வாசலில் உள்ள ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் 66ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நீடுரில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ஜீன் 29 30 மற்றும் ஜீலை 1 2012 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜீன் 30 அன்று நடைபெற்ற "சமுதாய ஒற்றுமை" அரங்கில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை (ஆடியோ வடிவில்)

பேரா. ஜவாஹிருல்லாஹ் தனது சிறப்புரையில்...
1 ரூபாய் முதலீட்டில் விடுதலைக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி 66 வது பட்டமளிப்பு விழாவை எட்டுவதற்கு உழைத்த உலமா பெருமக்களுக்கும், நிர்வாக பெருமக்களுக்கும், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து தனது உரையினை தொடங்கினார்.
சமுதாயத்தின் ஒற்றுமைக்கு இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு மிக அவசியம் என்பதையும், இதற்காக இஸ்லாமிய கல்விக்கூடங்கள் வளர வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினார். வரலாற்றில் அறிவின் உச்சியில் இருந்த இஸ்லாமிய மார்க்கம் பற்றிய விவரங்களை வரலாற்று நிகழ்வுகள் மூலம் எடுத்துரைத்தார்.
மேலும் சமூக புரட்சிக்கும், சமுதாய ஒற்றுமைக்கும் மதரசாக்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதை விளக்கினார். நவீன தொழில்நுட்ப சாதனங்கள் எப்படி சமுதாயத்தை சீரழிக்கின்றன என்பதையும் அதிலிருந்து நாம் விடுபட மதரஸாக்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.



(முன்னாள் கல்லூரி முதல்வர் அப்துல் கலாம் நினைவுப்பரிசு வழங்கும்போது..)










No comments:

Post a Comment

கருத்துக்களும் விமர்சனங்களும்

அன்பான வாசகர்களே உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் Comment பகுதியில் தெரிவியுங்கள்...